Tuesday, September 24, 2024

ஜெய் ஶ்ரீராம். (ஊர்மிளை என்னும் உன்னதம்..) 36 28-05-2023



Radhe Krishna 28-05-2023





Radhe KRISHNA 28-05-2023




ஜெய் ஶ்ரீராம். (ஊர்மிளை என்னும் உன்னதம்..) 36 28-05-2023


Radhe Krishna 89-05-2023 Thu, Oct 5 at 8:20 PM sudham_2000@yahoo.com From: sudham_2000@yahoo.com To: Murali Sudha , sudhavenkoba@gmail.com , Rangarao Narasimhan Sun, May 28, 2023 at 5:22 PM Radhe Krishna 28-05-2023 ஜெய் ஶ்ரீராம். (ஊர்மிளை என்னும் உன்னதம்..) 36 28-05-2023 ஜெய் ஶ்ரீராம். (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −1..) குழந்தைகள் சீதையும், ஊர்மிளையும் அவர்களின் சிறிய தந்தையும், ஜனகரின் சகோதரருமான குசத்வஜன் க்ருஹத்திற்குச் சென்றிருந்தனர். அரண்மனையில் ஆள்நடமாட்டமே இல்லாதது போல, கனத்த அமைதி சூழ்ந்திருந்தது.. அவர்கள் இருந்திருந்தால் இப்படியா இருக்கும் இந்த இடம்?.. ஜலஜலக்கும் சதங்கை ஒலி.. கலகலக்கும் சிரிப்பொலி.. சதா அரண்மனையின் இண்டு இடுக்கிலெல்லாம் எதிரொலித்துக் கொண்டல்லவா இருக்கும்! "அந்தப்புரத்தில்தான் பெண்கள் இருக்க வேண்டும்.. ஆடவர்முன் வருவதைத் தவிர்க்க வேண்டும்.. அடக்கவொடுக்கம் அவசியம்.." ....போன்ற எல்லைமீறிய கட்டுப்பாடுகளால் கட்டிப்போட்டு வைக்காமல், தனது பெண்களுக்கு முழு சுதந்திரம் அளித்திருந்தார் ஜனகர்.. ஆனாலும், ஜனகரின் மனைவி சுனைநா, குழந்தைகள் விஷயத்தில், அன்போடு கலந்து கொஞ்சம் கண்டிப்பையும் வைத்திருந்தாள்.. அவ்வப்போது, சீதையையும், ஊர்மிளையையும் தன்னருகில் அமர்த்திக் கொண்டு நீதிக்கதைகளையும், நல்ல போதனைகளையும் உபதேசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.. பெற்றோர் இருவரின் வழிநடத்துதலால், ஸ்வபாவமாகவே, குழந்தைகள் இருவரிடமும், தைரியம், தன்னம்பிக்கை இவற்றோடு, விவேகமும் ஞானமும் அபரிமிதமாக இருந்தது.. பெரும்பாலும் ஸத்விசாரங்களிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் ஜனக மகாராஜா.. இதைத் தவிரவும், அவருக்கு ஒரு விஷயத்தில் விருப்பம் இருந்தது என்று சொன்னால், அது தனது மகள்கள் இருவரையும் விழிமூடாது பார்த்துக் கொண்டிருப்பதுதான்!.. இப்பொழுது அவர்களின்றி வெறிச்சோடியிருந்த அரண்மனை, அவருக்கு வித்யாசமாக இருந்தது.. மெல்ல நந்தவனத்தை நோக்கி நடந்தார்.. "இருங்கோ..நானும் வரேன்.." ஜனகரின் மனைவி, சுனைநா பின்தொடர்ந்தாள்.. பேச்சு குழந்தைகளைச் சுற்றியே வட்டமிட்டது.. "சுனைநா.. என் பொண்ணுகள் இல்லாம, அரண்மனையே வெறிச்சுன்னு இருக்கு.. கவனிச்சயா?.." சுனைநா "களுக்" என்று சிரித்தாள்.. "ஏன் சிரிக்கறே சுனைநா?.. நான் சொன்னதிலே என்ன தப்பு?.. ஒனக்கு அப்டித் தோணலையா?.." "எல்லாம் சரிதான்... ஆனா, அவா ரெண்டு பேரும் ஒருத்தன் வீட்டுக்கு, என்னிக்கு இருந்தாலும், போக வேண்டியவாதானே.. அத நெனச்சுப் பாத்தேளா?.." மௌனமானார் ஜனகர்.. சாதாரணமாகச் சட்டென்று உணர்ச்சி வசப்படக்கூடியவர் அல்லர் அவர்.. ரொம்பவும் விவேக ஞானம் உள்ளவர்.. லோகாயதமான ஆசைகள் அற்றவர்தான்!.. ஆயிரம் இருந்தும், தன் பெண்கள் விஷயத்தில் மட்டும் அவரால், தனது ஞானத்தை ப்ரயோகிக்க முடியவில்லை.. அவர்கள் அன்புக்குத் தோற்றுப் போகின்ற சராசரித் தந்தையாகவே இருந்தார்.. "என்ன, பேச்சயே காணோம்?..நா ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?.." சுனைநாவின் குரலில், ஜனகர் மீண்டார்... "இல்ல சுனைநா.. நீ சரியாத்தான் சொல்றே.. நான்தான் மாறணும்..." பேசிக்கொண்டே வந்தவரின் செவிகளில், வெளியேயிருந்து மிதந்துவந்த "ஷெனாய்" இசை விழுந்தது.. அது ப்ரத்யேகமாக, திருமண ஊர்வலம் என்று சொல்லப்படுகின்ற "பாராத்"தில் மட்டுமே வாசிக்கப்படுகின்ற ஒரு சங்கதி.. ஜனகரை அது அசைத்தது.. "என் பொண்கள்கூட, திருமண வயச நெருங்கிட்டாளே... இன்னும் எத்தனை நாளைக்கு இவா ரெண்டு பேரையும் என்கிட்டயே வெச்சுக்க முடியும்?.." யோசனை மேலிட மனைவியிடம் பேசினார்.. "சுனைநா.. நம்ம ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ண வேண்டிய வயசு ஆயிடுத்தேமா.. ஒரு நல்ல நாளா பாத்து, அவா கல்யாண விஷயத்துக்கு உண்டான முயற்சிய ஆரம்பிக்கணும்மா..." "நானே ஒங்ககிட்டே அதபத்தி பேசணும்னுதான் நெனச்சுண்டிருந்தேன்.. எதுக்கும் நம்ம குலகுருகிட்ட அவா ரெண்டு பேரோட ஜாதகத்தையும் காட்டி, அவரோடு அபிப்ராயத்த வாங்கிண்டு அதுக்கு மேல ஆரம்பியுங்கோ.." ஜனகருக்கும் அதுவே சரி என்றுபட்டது.. எல்லா விஷயத்திலும், தன் குலகுரு அஷ்டவக்கிரரைக் கலந்து ஆலோசிக்காமல், அவர் எதுவுமே செய்ததில்லை!.. குருவின் மேல் அவ்வளவு நம்பிக்கை ஜனகருக்கு!.. அஷ்டவக்கிரரும் ஒரு சிறந்த "தீர்க்கதரிசி"!.. மிகுந்த மதிநுட்பமும், ஆச்சர்யமான ஞானமும் உடையவர்.. அவர் சொல், ஜனகரைப் பொருத்தவரையிலும், "வேத ஸத்தியம்".. "அதுவும் சரிதான் சுனைநா...நாளைக்கே நம்ம குலகுரு கிட்ட ரெண்டு குழந்தைகளோட ஜாதகத்தையும் காட்டி, அவரோட சம்மதத்தை வாங்கிக்கறேன்.." அஷ்டவக்கிரரின் திருவாக்கு, எவ்வளவு தூரம் தம்மை நிலை குலைய வைக்கப் போகிறது என்பதை அறியாதவராய், அரண்மனையை நோக்கி நடந்தார் ஜனகர்.... (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −2..) தன்னைத்தேடி தன் ஆஸ்ரமம்வரை, இவ்வளவு விடிகாலையில் வந்த ஜனகரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார் அஷ்டவக்கிர முனிவர்.. தாள்வணங்கிய சிஷ்யனைக் குளிர நோக்கினார்.. "சொல் ஜனகா!.. என்ன விஷயமா இவ்ளோ தூரம் வந்திருக்க?.." "குருநாதா..தங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்ல..என் ரெண்டு பொண்ணுக்கும் கல்யாண வயசாயிடுத்து.. சீக்ரம் அவாளுக்கு விவாகம் பண்ணலாம்னு தோணிடுத்து.. ஒங்க உத்தரவு வேணும்..." "ரொம்ப நல்ல விஷயமாச்சே இது!.. "சுபஸ்ய சீக்ரம்"னு சொல்வாளே..நடத்திடேன்.." "அதுக்கில்ல குருநாதா.. கொழந்தைகளோட ஜாதகத்தைக் கையோட கொண்டு வந்திருக்கேன்.. ஒரு க்ஷணம் நீங்க அத பாத்துட்டேள்னா, மேற்கொண்டு ஆரம்பிச்சிடுவேன்.." "அதுக்கென்ன.. கொடுப்பா...பாத்துட்டா போச்சு.. ஈஸ்வர சித்தம் ஒன் விஷயத்தில நன்னாதான்பா இருக்கும்.." பவ்யமாக ஜாதக ஓலையை, அஷ்டவக்கிரரிடம் அளித்தார் ஜனகர்.. சீதையின் ஜாதகத்தை, மேலெழுந்தவாரியாகப் பார்த்த முனிவர், சட்டென்று அதை தமது சிரசில் வைத்துக் கொண்டு, பின் கண்களில் ஒற்றி எடுத்தார்.. வியப்பு மேலிட, ஜனகர் அவரை நோக்கினார்.. "அடடா.. இது இறையம்ஸம் உள்ள ஜாதகம்..சாக்ஷாத் மஹாலக்ஷ்மியோட அம்சமாவே வந்திருக்கா ஒன் பொண்ணு.." ஜனகரின் முகம் மலர்ந்தது.. நேரம் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்தது.. இத்தனை நேரமும் வாய்மூடி இருந்த முனிவர், இப்பொழுது, "ஒன்னோட கனிஷ்ட குமாரத்தியோட(இளைய மகள்) ஜாதகத்தை கொடு.." என்று வாய்திறந்தார்.. ஜனகர் அதையும் சிரத்தையோடு, குருவிடம் சமர்ப்பித்தார்.. வெகுநேரத்திற்கு அமைதி நீடித்தது.. கண்களை மூடியவண்ணம் இருந்த குருநாதர்முன் கைகட்டி அமர்ந்திருந்தார் ஜனகர்.. முனிவர் விழிமலர்ந்தபோது, ஜனகர் தம்மையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.. "ஜனகராஜனே.. நீ ஒன் கொழந்தைகளுக்கு விவாஹத்துக்கு உண்டான ஏற்பாடெல்லாம் ஆரம்பி..பாக்கலாம்.." "க்ஷமிக்கணும்..குருநாதா.. அவாளோட எதிர்காலம் நன்னா இருக்குமோன்னோ?.." ஒரு தகப்பனுக்குரிய ஆதங்கத்துடன் முனிவரிடம் வினவினார் ஜனகர்.. "அவசியம் தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா சொல்றேன்.." "குருநாதா.. அடியேன்கிட்ட சொல்லலாம்னு ஒங்க மனசுக்குப் பட்டுதுன்னா சொல்லுங்கோ.." சிஷ்யனுக்குரிய சகல லக்ஷணங்களுடன் பதிலளித்த ஜனகரை ஏறிட்டார் அஷ்டவக்கிரர்.. மெல்ல அந்த ரகசியத்தை, ஜனகரிடம் பகிர்ந்தார்.. "அரச போகம் உண்டு; அனுபவிக்கும் யோகம் இல்லை!.." "கரம் பிடிக்கும் கணவன் உண்டு; கல்யாண சுகம்தான் இல்லை!." "தரமான சுற்றம் உண்டு; தாங்க ஓர் சொந்தம் இல்லை!.." "வரம்போலும் வாழ்வு உண்டு; வாழத்தான் விதி இல்லை!.." முனிவரிடமிருந்து வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும், ஜனகரைத் தீயாய்ச் சுட்டது.. (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −3..) மெல்ல, தன்னைச் சமாதானம் செய்துகொண்டார் ஜனகர்... "கு..ரு...நா...தா..." அதற்கு மேல் பேச இயலாமல் தடுமாறினார். அவரையும் மீறி கண்களில் நீர் வழிந்தது.. "வேந்தனே..என்ன இது?.. என் சிஷ்யன் ஒரு சிறந்த ஞானி என்று எண்ணியிருந்தேனே... இறுதியில் நீயும் ஒரு சராசரி மானிடனாய் ஆனாயோ?.." சுதாரித்தார் ஜனகர்.. "க்ஷமிக்கணும் குருநாதா... குருதியில் பந்தபாசம் இன்னமும் கொஞ்சம் ஒட்டியிருப்பதால், அடியேன் உறுதி சற்றே சரிகிறது.. தமது சிஷ்யன் என்று சொல்லிக் கொண்டு தம்மையே அவமானப்படுத்துவதாக உணர்கிறேன் குருநாதா..." தன்னிரக்கத்தோடு தலைகவிழ்ந்தார்.. மனக்கொந்தளிப்போடு இருக்கின்ற ஜனகரை, சமாதானப்படுத்தும் விதமாய், அஷ்டவக்கிரர் பேச ஆரம்பித்தார்.. "வேந்தே, எத்தனை முறை ஸத்விஷயம் பேசியிருப்போம்!.. எத்தனை முறை இந்த அழிகின்ற உடலைப் பற்றியும், அழியாத ஆன்ம ஸ்வரூபத்தைப் பற்றிய விளக்கங்களையும் கண்டிருப்போம்?.. எல்லாம் மறந்தாயோ?.. நீ ராஜாவாக இருந்தாலும், தன்னை அறிந்தவனாய் இருப்பதால்தானே, உனக்கு, "ராஜரிஷி" என்று பட்டமே சூட்டினேன்!..இந்த அஷ்டவக்கிரனின் கணிப்பும் பொய்யானதோ?.." குற்ற உணர்வோடு, முனிவரை ஏறிட்டார் ஜனகர்.. "ஜனகனே.. சாதகமாக இருக்கும் போது சிலிர்த்து எழுவதும், பாதகமாய் இருக்கும் போது பதறி விழுவதும், சாதாரண மனித ஸ்வபாவம்! ஆனால், நீ பற்றுகளை எல்லாம் விட்டொழித்தவன் என்பதை, நானே ஆராய்ந்து அறிந்திருக்கிறேன்!.. உனக்கு ஞாபகம் இருக்கிறதா?.. ஒரு சமயம், நீயும் எனது மற்ற சீடர்களும் அமர்ந்து என்னிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.. அப்பொழுது உன் வேலையாள் ஒருவன் ஓடிவந்து, உன் அரண்மனை தீப்பற்றி எரிவதாகவும், பொருள் சேதம் அதிகமாக ஆகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தான்.. அன்று அவன்மேல் உனக்கு மகாகோபம் வந்தது! "அதனாலென்ன?.. எரிந்துவிட்டுப் போகட்டுமே.. ஸத்விஷயங்களை அறிந்து கொண்டிருக்கும் என்னிடம் இதுபற்றி இந்நேரம் பேசவேண்டிய அவசியம் என்ன?.." என்று அவனைக் கடிந்து கொண்ட உன்னைப் பார்த்து, அன்று நான் உண்மையிலேயே பூரித்துப் போனேன்!.... அப்படிப் பட்டவனா, இன்று ஆசாபாச வலையில் அகப்பட்டாய்?.." "தவறுதான் குருநாதா..எங்கோ மனம் உரிமை கொண்டாடுகிறது.. "நான், என்னுடையது.." இவையெல்லாம் அடியேனைவிட்டு இன்னமும் மொத்தமாய் நீங்கவில்லை என்றே தோன்றுகிறது.. எந்தப் பரிகாரம் செய்தால், என் குழந்தைகள் இந்தச் சிக்கலில் இருந்து மீள்வார்கள் என்றறியவே, என்னுள்ளம் இப்போது விழைகிறது.. ஞானம் இருந்த இடத்தை, பாசம் வந்து மூடிக் கொண்டது குருநாதா.." அஷ்டவக்கிரர் பலமாய்ச் சிரித்தார்.. "பலகாலம் சேர்த்த வினைக்கு, பரிகாரமும் ஏது?.. விதிவழியே உன்வாழ்க்கை! மதிவெல்லுமோ உன்வழக்கை?.." "குருநாதா.. இருவர் வாழ்க்கையுமா அப்படி அமைந்திருக்கிறது?.." ஆதங்கத்தோடு வினவினார் ஜனகர்.. "இருவேறு விதமாய் இவ்விருவரின் பாதை.. இருந்தாலும் ஊர்பேசும் இவர்களது காதை!." குருநாதர் கூறுவதன் உட்பொருளை அறிய முயன்று தோற்றார் ஜனகர்.. மீண்டும் அஷ்டவக்கிரர் பேசினார்.. "ஒருத்திக்கு வனவாசம்.. ஒருத்திக்கு வெறும் ஸ்வாஸம்.. மறுமார்க்கம் இல்லையாம்! திருமார்பன் எண்ணமாம்!.." கடைசியாக முனிவர் பேசிய வார்த்தைகளில், ஜனகரின் விவேகம் மெல்லத் தலைதூக்கியது.. "அவன் தீர்மானத்தை இவன் திருத்திவிட முடியுமா என்ன?. எவ்வளவு அறிவீனனாய் ஆனேன்!.. அடியேனைப் பொறுத்தருளுங்கள் குருநாதா.." கண்ணீரோடு விண்ணப்பித்த ஜனகரை, கைதூக்கி ஆசீர்வதித்தார் முனிவர்.. (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −4..) "கட்டளை இடுங்கள் குருநாதா..இப்பொழுது அடியேன் செய்ய வேண்டியது என்ன?.." "உன்மகள் சீதைக்கு சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்.." "சுயம்வரமா?..குருநாதா... நாமே தேடிச் சென்றால், சரியான வரன் அமையாதா?.." "சரியான வரன் அமைவதற்குத்தான் சுயம்வரத்தையே நடத்தச் சொல்கிறேன் வேந்தனே.." சற்று நிறுத்தியவர், மேலே தொடர்ந்தார்.. "உன்னிடம் ஒரு சிவதனுசு இருக்கிறது பார்.. அதை எடுத்து நாண் ஏற்றுபவனுக்குத்தான் பெண்ணைக் கொடுப்பேன் என்பதை சுயம்வரத்துக்கான நிபந்தனையாக வை.." "ஆனால், குருநாதா..அதை யாராலும் அசைக்கக்கூட இயலாதே.." "நன்றாக யோசித்துப் பார் மன்னா..ஒருவரும் அதை அசைக்கவில்லையா?.." "இல்லை குருநாதா.. அந்த சிவதனுசு இருக்கின்ற பெட்டியைப் பதினைந்து வீரர்களாவது சேர்ந்தால்தான் அசைக்கவே முடியும்!.." "ஆனால் மன்னனே.. ஒரு கன்றுக்குட்டி, அதை தன் காலால் நகர்த்திப் போனதே..அது உனக்கு ஞாபகம் வருகிறதா?.." ஜனகர் யோசித்தார்.. "கன்றுக்குட்டியா?..என்ன சொல்கிறார் குருநாதர்?.." இடைவெட்டினார் அஷ்டவக்கிரர்.. "உன் வீட்டுக் கன்றுக்குட்டியைத்தான் சொல்கிறேன் மன்னா.." ஜனகருக்கு இப்போது புரிந்து போனது.. அன்றொரு நாள் சீதையும் ஊர்மிளையும் விளையாடிக் கொண்டிருந்த பந்து, நேரே சிவதனுசு இருந்த பெட்டியின் கீழே ஓடி மறைந்தது.. சீதை, விளையாட்டாய் அந்தப் பெட்டியைத் தன்காலால் நகர்த்தி, பந்தை எடுத்துச் சென்றாள்.. பார்த்துக் கொண்டே இருந்த ஜனகருக்கு பெரும் வியப்பு.. "இது எப்படி இவளுக்கு சாத்யமாயிற்று?.." இன்று வரையில் அவருக்குப் புரியாத புதிர் அது! "ஜனகனே...இப்பொழுது ஞாபகம் வந்ததா?..நல்லது!.. அவளுக்கு நிகரான ஒருத்தனைத்தானே நீ தேட வேண்டும்!.. அதற்கு இதுதான் வழி.." ஆனால், "இது நடக்குமா?...அப்படிப்பட்ட வீரனும் இருப்பானா?.." என்ற கேள்வி ஜனகரின் பார்வையில் தேங்கி நின்றது.. புரிந்துகொண்ட முனிவர் திருவாய் மலர்ந்தார்.. "வீரனொருத்தன் வருவான்! வில்லை வளைத்து விடுவான்! ஆரணங்கை வெல்வான்! அவள்கரமும் கொள்வான்!.." ஜனகர் சற்றே ஆஸ்வாசமானார்.. "குருநாதா.. அடுத்ததாக ஊர்மிளைக்கு என்ன வழி என்று கூறுங்கள்.." "முன்ஏர் போன பாதை பின் ஏரும் போகும்.. வரிசை கட்டி வருவார்.. பரிசம் போட்டு செல்வார்.." குருநாதரின் வார்த்தைகளில் நிம்மதியடைந்தார் ஜனகர்.. சிலநாட்களில் சுயம்வர மண்டபம் தயாரானது.. "மண்டபம் அழகா?, மங்கை அழகா?" என பட்டிமன்றமே நடத்தி விடலாம் போல, பார்த்துப் பார்த்து நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது சுயம்வரம் நடக்கவிருந்த இடம்.. பலப்பல தேசத்து மன்னர்களும், இளவரசர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.. வைதேஹியின் பேரழகு வெகுதொலைவு பரவியிருந்ததால், அழைக்கப்பட்டவரோடு, அழைக்கப்படாத சிலமன்னர்களும், தன்மானம் பார்க்காமல் தாமே வந்திருந்தனர்! அந்தப் பெரும் கூட்டத்தில், தாரம் இருந்தவரும் இருந்தனர்.. தூரம் இருந்தவரும் இணைந்தனர்.. வந்திருந்தவர் எண்ணிக்கையில் அதிகம் இருந்தபடியால் சுயம்வர விழா, ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப் பட்டிருந்தது.. அழகுக்கு அழகு செய்தாள் சுனைநா.. ஆனால், அத்தனை அணிகளும், சீதையின் அழகின் முன் தோற்றுத்தான் நின்றன!.. அதற்காக, துடைத்து வைத்த குத்துவிளக்காய் சபை நடுவே நிறுத்த முடியுமா?.. அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஜனகர், அஷ்டவக்கிரருடன் அந்தப்புரத்துள் நுழைந்தார்.. ஒருகணம், ஜனகரையும் ஸ்தம்பிக்க வைத்தாள் ஜானகி!... சுதாரித்தவர், "அம்மா சீதே..குருநாதரின் ஆசிகளை வாங்கிக் கொள்.." என்றார்.. அஷ்டவைக்கிரரை, வீழ்ந்து நமஸ்கரித்தாள் சீதா.. மனமார வாழ்த்தியவர், ஒருகணம் அவளையே உற்று நோக்கினார்.. "பொக்கிஷத்தை ஒளித்துவை.. போர்களத்தைத் தவிர்த்து வை.." ஜனகர் புரிந்து கொண்டார்.. சுயம்வர நிபந்தனையில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும், இவள் அழகினால் அங்கே சண்டையும் சச்சரவும் வர வாய்ப்பிருப்பதை, குருநாதர் கோடிகாட்டுகிறார்!.. "அப்படியே ஆகட்டும் குருநாதா.." அஷ்டவக்கிரரின் ஆணையின் பேரில், சீதை வெளிவராமலேயே, சுயம்வரத்துக்கான போட்டி துவங்கியது... (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −5..) ஆறுநாட்களும் கடந்து போய், சுயம்வர நிகழ்வு ஏழாம்நாளை எட்டிப்பிடித்தது.. அறிமுகம் செய்து கொள்ளும் சமயம், தன்னைத்தானே புகழ்ந்து பேசிக் கொண்ட அரசர்கள் அத்தனைப் பேரும் தோல்வியைத் தழுவி, வெளிறிய முகத்தோடு வெளியேறினர்.. ஜனகரும் முகம் வெளிறித்தான் அமர்ந்திருந்தார்.. "இன்று கடைசி நாள்.. இன்றேனும் குருநாதர் சொன்னது நடக்குமா?.." தெய்வ வாக்காக, குருவின் வாக்கைக் கொண்டாடும் ஜனகருக்கும், ஒரு லேசான கலக்கம் இருக்கவே செய்தது.. ஏதேச்சையாக உப்பரிகையில் வந்து நின்றாள் ஜானகி.. அவள் பார்வை அரண்மனை முன்னே விரிந்திருந்த வீதியில் படிந்தது.. மகரிஷியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் முன்னே நடந்து வர, அவருக்குப் பின்னே இரண்டு யுவர்கள் வந்து கொண்டிருந்தனர்.. அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவர்கள் அரண்மனையைச் சமீபித்துவிட்டனர். முதலில், கரியவனாய்த் தெரிந்தவன்தான் கண்களை ஆகர்ஷித்தான்.. அவனைத் தாண்டிக் கொண்டு, அவள் பார்வை மேலே நகரவும் மறுத்தது.. பெண்களுக்கு என்றுமே சற்று உள்ளுணர்வு அதிகம்தான்!.. "அந்தக் கரியவன்தான், எனக்கு உரியவன்!.." என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் ஜானகி! அரண்மனையுள் நுழைவதற்கு முன், தன் அகத்தில் நுழைந்த அந்த அழகனை, தன் இரு விழிகளும் விரிய தீர்க்கமாய் நோக்கியவள், அவனை அப்படியே தன்இதயசிம்மாசனத்தில் அமரவைத்து விட்டாள்!.. ஆனால் அவனோ, "அண்ணலும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்" என்ற கூற்றைப் பொய்யாக்கும் விதமாய், அவள்புறம் பார்வையைச் செலுத்தாமல், தன்முன் செல்கின்ற முனிவரைப் பின்தொடர்ந்த வண்ணம் இருந்தான்.. அதனால் என்ன?.. திருமகளின் விழியில் விழுந்தவனுக்குத் தோல்வியும் உண்டோ?.. விஸ்வாமித்ர முனிவரை, ஜனகர் சகல மரியாதைகளோடும் வரவேற்றார்.. அவையிலிருந்தோர் அனைவருக்கும் ஆச்சர்யம்!.. "இந்த ராஜரிஷியைத் தேடிக் கொண்டு, அந்த ப்ரம்மரிஷி எதற்காக வந்திருக்கிறார்?..சுயம்வரம் நடக்கின்ற இடத்தில் இவருக்கென்ன வேலை?.." தமக்குள் அனைவரும் பேசிக்கொண்டனர்.. தமக்கே உரிய பவ்யத்தோடு, விஸ்வாமித்திரரை நலம் விசாரித்த ஜனகர், சீதையின் சுயம்வர நிகழ்வைப் பற்றியும் அவரிடம் பகிர்ந்து கொண்டார்.. "அறிவேன் மன்னா!.. அறிந்தே வந்திருக்கிறேன்.. இன்றல்லவா இறுதிநாள்? உன்மகளின் மணம் உறுதியாகும் நாளும் இதுவே அல்லவா?.." இந்த வார்த்தைகள், தேனாய் ஜனகரின் செவிகளில் பாய்ந்தன.. "ப்ரம்ம ரிஷியே.. தம்மை மீண்டும் வணங்குகிறேன்.. தமது வாக்கு பலிக்கட்டும்.." சிரம் தாழ்த்தி, அவரது ஆசிகளை ப்ரார்த்தித்தார் ஜனகர்.. "சுபம் உண்டாகட்டும்!.." இப்பொழுது ஜனகரின் பார்வை, முனிவரோடு வந்த இரு யுவர்களின் மீதும் பதிந்தது.. "யார் இவர்கள்?.." என்று அவர் கேட்க நினைப்பதை அறிந்துகொண்ட விஸ்வாமித்திரர் திருவாய் மலர்ந்தார்.. "ஜனகரே.. இதோ நிற்கிறார்களே..இந்த இரண்டு யுவர்களும் அயோத்தி வேந்தன் தசரதனின் புத்திரர்கள்.. மூத்தவன் இராமன்.. இளையவன் இலக்ஷ்மணன்.. எனது யாகத்தைப் பாதுகாத்து கொடுப்பதற்காக என்னோடு வந்தவர்கள்.. இவர்கள் ஸகாயத்தில் யாகமும் நல்லபடியாய் முடிந்தது.. இந்த சுயம்வர நிகழ்வைக் கேள்விப்பட்டே இங்கு வந்தேன்.. இந்நிகழ்வில், மூத்தவன் ராமன் பங்கு கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.." "அப்படியே ஆகட்டும் மகரிஷியே..தங்கள் சித்தம் என்பாக்யம்.." என்று பதிலளித்த ஜனகர் முதன் முதலாக ராமனை பாதாதிகேசமும், கேசாதிபாதமுமாகத் தீர்க்கமாக நோக்கினார்.. "அடடா.. எப்பேர்ப்பட்ட அழகன் இவன்!.. என் மகளுக்கு ஏற்றவனாய்த் தெரிகிறானே..இவனது கம்பீரமும் தோற்றமும் என்னை ஆக்ரமிக்கிறதே!.. குருநாதர் மட்டும் இந்த நிபந்தனையை வைக்காதிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு, இவனுக்கே என்மகளை தாரை வார்த்திருக்கலாமே..." "தெய்வமே!... இவன் இந்தப் போட்டியில் வெற்றியடைய அனுக்ரஹம் செய்யேன்.." மனதுக்குள் ப்ரார்த்தித்தார் மன்னர்.. அவையிலிருந்த அரசர்கள் ஒவ்வொருவரும் தோல்வியையே தழுவினர்.. இறுதி நாளானபடியால், இந்த சுயம்வரத்தின் முடிவைப் பார்த்துவிட்டுப் புறப்படலாம் என்ற அவாவில் தத்தமது இருக்கைகளில் மீண்டும் வந்தமர்ந்தனர்.. இன்னமும் தன் திறமையைக் காட்ட எஞ்சியிருந்தது, தசரத தனயன் மட்டுமே.. இப்பொழுது விஸ்வாமித்ரர் எழுந்தார்... "மகனே ராமா!..ஜெயம் உண்டாகட்டும்.. வில்லிலே நாணேற்று.. வீரத்தை நிலைநாட்டு!.." முனிவரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான் ராமன்.. மகரிஷியின் சொல்லுக்குப் பணிந்து, வில்லுக்கு விடிவைத் தர, அடியெடுத்து வைத்தான்... பெட்டியுள், "சிவதனுசு" அவன் தீண்டலுக்காய், தவிப்போடு காத்திருந்தது... (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −6..) அன்று தூசு படர்ந்திருந்த கல்லுக்கு விடிவு தந்தவன், இன்று இத்தனைப் பேர்களின் தீண்டலினால் மாசு படர்ந்திருந்த வில்லுக்கும் ஒரு விடிவைத் தரத் தீர்மானித்து அதை நெருங்கினான்.. உள்ளே...அந்தப்புரத்தில், ஜானகியின் இடது கண் துடித்தது.. சபையில் இப்பொழுது பெருத்த அமைதி நிலவியது.. அந்த நிசப்தத்தை மீறி, ஜனகரின் இதயத் துடிப்புமட்டும் இராமனுக்கு மிகவும் துல்யமாகக் கேட்டது.. அவரது மனது ராமனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.. மெல்ல வில்லைத் தீண்டினான்.. சிலிர்த்தது தனுசு.. தொட்டு நேர்நிறுத்தினான்.. நெகிழ்ந்தது தனுசு.. பட்டுக் கயிற்றால் ஆன நாணை ஏற்றினான்.. பட்டென அவன்சரணத்தில் வீழ்ந்தது தனுசு.. அந்த சிவதனுசுவிற்கும் ஶ்ரீராமனைத் தெரிந்திருந்தது!... அதனால்தான் அது, சிலிர்த்தது.. நெகிழ்ந்தது.. வீழ்ந்தது!. மகிழ்ச்சியின் ஆரவாரம் மண்டபத்தை நிறைத்தது.. விஸ்வாமித்திரர் இருந்தவிடத்திலிருந்தே இருகரம் உயர்த்தி ஆசிர்வதித்தார்.. ஜனகரோ, இருகரம் கூப்பி, கண்ணீர் மல்க, ராமனுக்குத் தமது நன்றியை மானசீகமாகத் தெரிவித்துக் கொண்டார்.. இலக்குவனின் முகத்திலோ "என் அண்ணன்" என்கிற பெருமிதம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.. அங்கிருந்த அரசர்களின் கரவொலியோ, ஆத்மார்த்தமாய் அவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்வதை பறைசாற்றிக் கொண்டிருந்தது.. ஆரவாரம் குறைவதாகவே தெரியவில்லை.. இதற்குள் விஷயம் தாயையும் பெண்ணையும் சென்றடைந்தது.. நற்செய்தியால் உவந்து நின்றாள் மாதா.. நாணத்தால் சிவந்து நின்றாள் மங்கை.. அஷ்டவக்கிரரின் உத்தரவின் பேரில், அழகுப் பதுமை அவைக்கு அழைத்துவரப்பட்டாள்.. சபை, மேலும் சோபை அடைந்தது.. அங்கே குழுமியிருந்த ஆயிரமாயிரம் பேர்களின் விழிகளும் அவள் ஒருத்தியின் மேலேயே பதிந்திருந்தது.. அத்தனை அரசர்களும் ஒன்றுபோல நினைத்தனர்... "அடையத் தகுந்த அழகா இது?.. ஆராதிக்க அல்லவா வேணும்!.. சாக்ஷாத் அந்த மகாலக்ஷ்மியே புவி இறங்கினாற் போலல்லா தோன்றுகிறது!... இவளுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமில்லாத நாமோ சுயம்வரத்தில் பங்கு கொண்டோம்!.. என்னே அறிவீனம்!.." "இதோ நிற்கிறானே.. ஶ்ரீராமன்.. இவனல்லவா, அவள் கரம்பிடிக்க ஏற்றவன்!.. தேவியின் அழகுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இருப்பதோடு, வீரதீரத்திலும் இணையற்றவனாய் விளங்கும் இவனுக்கல்லவா உரியவள் அவள்!.. இவர்கள் சேர்த்தியைக் கண்டு களிப்பதே, வாழ்வின் பெரும் பாக்யமாகத் தோன்றுகிறதே.." தெய்வ சந்நிதானம், அத்தனைப் பேருடைய எண்ணங்களையும் தூய்மையாக்கி இருந்தது!... அஷ்டவக்கிரர் ஆசீர்வதித்துக் கொடுத்த மாலையை சீதை கரமேந்தினாள்.. சுயம்வர நிகழ்ச்சியின் வழக்கப்படி, பெண் தன்னைப் போட்டியில் வெற்றிகொண்ட ஆடவனுக்கு மாலையிட்டு மகிழ்வைத் தெரியப்படுத்த வேண்டும்.. ஆஜானுபாஹுவாய் நின்றிருந்தவனை நெருங்கினாள் ஜானகி.. கைகளிலிருந்த மாலையை, அவன் கழுத்தில் சாற்ற, சற்றே கண்களை உயர்த்தினாள்.. அண்ணலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள்.. ஒரு க்ஷணம்...ஒரே க்ஷணம்தான்.. இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தனர்.. பிரிந்தவர் கூடினால், பேசவும் வேண்டுமோ?.. அங்கே, வாய்ச் சொற்களுக்குத் தேவையில்லாமல் போனது.. "என்னுள் நுழைந்து ஆக்ரமித்தவனே.. இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?.." அவள் கண்களே பேசியது.. தனது புன்முறுவலாலேயே சமாதானம் செய்தவன், அவளது மாலையை, ஆசையோடு ஏற்றான்.. கரகோஷம் விண்ணைப் பிளந்தது.. ஜெயகோஷம் மண்ணில் நிறைந்தது.. (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −7..) தக்க சன்மானங்களோடு, அயோத்திக்கு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.. சுபச்சேதியைச் சொல்லி, தசரதரை அவரது பரிவாரங்களுடன் அழைத்துவரும்படி தனது வீரர்களுக்கு, ஜனகர் கட்டளை இட்டிருந்தார்.. விஷயத்தைக் கேள்விப்பட்ட தசரதனின் கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது.. தனது குருநாதரான வசிஷ்டரின் தீர்க்க த்ருஷ்டியை எண்ணி மெய்சிலிர்த்தார்... அவரை நமஸ்கரித்து, அவரது ஆசிகளைப் பெற்றவர், அவரது தலைமையில், விதேஹம் நோக்கிப் புறப்பட்டார்..தன்னோடு பரத சத்ருக்னர்களையும் இன்னும் சில முக்யஸ்தர்களையும் கூட்டிக்கொண்டார்.. பட்டமஹிஷிகள் மூவரும் ராமனையும் சீதையையும் வரவேற்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள அயோத்தியிலேயே தங்கிவிடும்படி ஆயிற்று.. மிகுந்த மரியாதையோடும், உற்சாகத்தோடும் தசரதரை வரவேற்றார் ஜனகர்.. ஜானகியும் ரகுநந்தனும் குலகுருவையும், தசரத மன்னரையும் நமஸ்கரித்தனர்.. சீதையைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போனார் தசரதர்.. "இவள் இனி என்பெண்.." என்று பாசத்தோடு உரிமை கொண்டாடினார்.. ஜனகர், தனது மனைவியையும், இளையமகள் ஊர்மிளையையும் தசரதருக்கும், வசிஷ்டருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.. இருவரும் பெரியவர்களை நமஸ்கரித்து அவர்களது ஆசிகளைப் பெற்றனர்.. அடுத்ததாக தனது சகோதரன் குசத்வஜன், அவரது மனைவி, அவர்களது பெண்கள் மாண்டவி, ஸ்ருதகீர்த்தி ஆகியோரையும் அறிமுகம் செய்துவைத்தார் ஜனகர்.. அவர்களும் பெரியோர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.. இப்பொழுது வசிஷ்ட முனிவருக்கு, அந்த யோசனைத் தோன்றியது.. "நல்ல குலம். பண்பிலும், அடக்கத்திலும் மேம்பட்ட குடும்பமாய்த் தெரிகிறது.. ஏன் இவர்களது மற்ற பெண்களையும், அயோத்தியின் மருமகள்களாக ஏற்கக்கூடாது?.." தன் எண்ணத்தை தசரதரிடம் பகிர்ந்தார்.. அவருக்கும் இந்த யோசனை பரம த்ருப்தியை அளித்தது.. ஆனால், எப்படிக் கேட்பது?.. ....ஏனோ கொஞ்சம் தயக்கமிருந்தது.. "கவலையை விடு தசரதா.. உன் சம்மதத்தைத்தான் எதிர்பார்த்தேன்.. உனக்கும் இந்த விஷயத்தில் உடன்பாடு இருப்பதால், மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை நானே பார்த்துக் கொள்கிறேன்.." நேரே அஷ்டவக்கிரரிடம் வந்தார் வசிஷ்டர்.. "முனிவரே.. ஒரு யோசனை....உம்மிடம் விண்ணப்பிக்கலாமோ?.." "மஹரிஷியே..அடியேனிடம் உமக்கென்ன தயக்கம்?.. எதுவானாலும் உத்தரவிடுங்கள்.." "சொல்வதற்கு தயக்கம்... கொள்வதற்கு விருப்பம்.. என்ன செய்யலாம்?.." வசிஷ்டர் கேட்கவும், அஷ்டவக்கிரர் அவர் சொல்ல வருவதைச் சட்டென்று அனுமானித்தவராய், விடையளித்தார்.. "விருப்பம் உறுதியெனில் குழப்பம் வீணன்றோ?.." "ஒற்றைப்பூவே கொள்ள வந்தோம்.. மற்றைப்பூக்களும் மணக்கிறதே.." அஷ்டவக்கிரருக்கு, இப்பொழுது வசிஷ்டரின் அவா, தெளிவானது.. "சூடிக்கொண்டால் சுகமே விளையும்! நாடி வந்ததும் நலமே முடியும்.." சாதகமான பதில்வரவும், வசிஷ்டர் அவரையே பொறுப்பேற்கக் கோரினார்.. "குருவாயிருந்து துவக்கி வைப்பீர்.. திருவாய்மலர்ந்து நடத்தி வைப்பீர்.." அஷ்டவக்கிரர் உடன்பட்டார்.. "தெய்வசித்தம் அதுதானே! செய்யவைப்பதும் அவன்தானே!.." ஜனகரிடம் இதுவிஷயமாய் பேசிவிட முடிவெடுத்தார்.. "மன்னா... பொன்னான வாய்ப்பு தன்னாலே வருகிறது; உன்னாலே ஆகும்! சம்மதம் சொன்னாலே போதும்.." குருநாதர் எதைப்பற்றி பேசுகிறார் என்பது புரியாதவராய், அவரை ஏறிட்டார் ஜனகர்.. "நம்வீட்டுப் பூவையெல்லாம் நாடிவந்து கேட்கிறார்.. உம்முடைய விருப்பமிதில் உவந்து எதிர்பார்க்கிறார்.." ஜனகருக்கு ஒருகணம் தன் செவிகளையே நம்பமுடியவில்லை.. "நிஜமா, இது நிஜமா?.." தன்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டார்.. (வளரும்..) ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −8..) எத்தனை விவேகியாக இருந்தாலும், சந்தோஷமோ, வருத்தமோ அதிகமாக வரும்போது, சிலநேரங்களில் கொஞ்சம் அசைத்துப் பார்த்துதான் விடுகிறது.. ஜனகரும் தாம் விதிவலக்கல்ல என்று நிரூபித்தார்!.. சந்தோஷம் அவர் முகத்தில் ததும்பி வழிந்தது.. அஷ்டவக்கிரர் ஜனகரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தார்.. "வேந்தே.. இன்றைய இன்பமும் நாளைய துன்பமும் அன்றே அவனும் எழுதிவைத்தானே!.." சட்டென்று ஜனகர் புரிந்துகொண்டார்.. "எப்படி மறந்தேன்?.. அன்றே குருநாதர் எல்லாவற்றையும் சொன்னாரே!.. அதன்படிதானே இதுவரை நடந்து வந்திருக்கிறது!.. எனில், பின்னால் வரவிருப்பதும் தவிர்க்க இயலாதது என்றல்லவா ஆகிறது!.. அப்படி இருக்கும்போது, இந்த தற்காலிக மகிழ்ச்சியில் தன்னிலை இழக்கலாமோ?.." சுதாரித்துக் கொண்டார்.. "க்ஷமியுங்கள் குருநாதா..தவறுதான்.. அடியேன் வெறும் கருவிதான்!.. அவனன்றோ அடியேனை இயக்குகிறான்!.." "ஒரு கருவி, இன்பம் வரும்போது ஆடுவதும், துன்பம் வரும்போது, வாடுவதும் சரியில்லையே.." "விதி வழி நடக்கின்ற செயல்களுக்கு மகிழ்வதும், வருந்துவதும் அறிவீனமல்லவா?.. தாம் எத்தனை உபதேசம் செய்திருந்தும், தமது சீடன் நிலைதடுமாறினேனே.. அடியேனைப் பொறுத்தருளுங்கள் குருவே.." "இதோ இப்பொழுதே, இதுசம்பந்தமாய் அனைவரிடமும் கலந்து பேசிவிட்டு, ஒரு நல்ல முடிவோடு தம்மிடம் வருகிறேன்.. அடியேனை ஆசீர்வதியுங்கள்.." அஷ்டவக்கிரரின் அனுமதியோடு, ஜனகர் தமது மனைவியிடமும், சகோதரர் குசத்வஜன், அவரது மனைவி ஆகியோரிடமும் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்.. மிகுந்த மகிழ்ச்சியுடன், அனைவருமே, ஒன்றுபோல தமது சம்மதத்தைத் தெரிவித்தனர்.. ஆனால், கொஞ்சம் முற்போக்கு எண்ணம் கொண்ட ஜனகரோ, பெண்களின் சம்மதம் இதில் அவசியம் என்றார்.. மாண்டவியும், ச்ருதகீர்த்தியும் தமது பெற்றோர் எந்த முடிவெடுத்தாலும், தமக்கு முழு சம்மதம் என்று கூறிவிட்டனர்.. இப்பொழுது ஜனகர், தன் பெண் ஊர்மிளையின் சம்மதத்தைக் கேட்டார்.. "தந்தையே.. மூவரில் என்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவது யாரெனத் தெரியாமலேயே, எப்படிச் சம்மதிப்பது?.. ஊர்மிளையின் இந்தக் கேள்வி, சுற்றியிருந்தவர்கள் அத்தனைப் பேருக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.. "ஒரு பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரமா?.." என்ற எண்ணம் அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது... "உன் கேள்வி ந்யாயமானதுதான் ஊர்மிளா....நான்கூட இதுபற்றி யோசிக்கவே இல்லை..நம் குருநாதர் மொத்தமாக சம்மந்தம் பேசிமுடிக்க சம்மதம் கேட்டார்..நானும் உங்கள் எல்லாரிடமும் கலந்து பேச வந்துவிட்டேன்.. இது விஷயமாய் அவரிடம் நான் இப்பொழுதே பேசுகிறேன்.. ஆனால்...ஊர்மிளா.. உனக்கு தசரதர் வீட்டு மருமகளாய் செல்வதில் விருப்பம் இருக்கிறதல்லவா?.." "தந்தையே.. எனக்கு யாரைத் தீர்மானம் செய்கிறீர்களோ, அவரிடம் நான் ஒரு சில வார்த்தை பேச ஆசைப்படுகிறேன்.. அதன்பிறகு, எனது சம்மதத்தைச் சொல்கிறேன்.." அத்தனைப் பேரும் மொத்தமாய் அதிர்ந்தனர்... "சரிம்மா.. உன்விருப்பம் போலவே ஆகட்டும்.." தன் குருநாதரிடம் அனைவரது சம்மதத்தையும் தெரிவித்த ஜனகர், ஊர்மிளையின் எண்ணத்தையும் அவரிடம் பகிர்ந்தார்.. "இது பற்றி வசிஷ்டரிம் பேசுவோம் வா..." என்று ஜனகரையும் அழைத்துக் கொண்டு வசிஷ்டர் முன் வந்து நின்றார் அஷ்டவக்கிரர்.. அந்நேரம், அவரருகில் தசரதரும் அமர்ந்திருந்தார்.. "சம்மதம் தந்தார் அனைவருமே.. சந்தோஷ நிகழ்வுகள் இனிவருமே.." இந்தச் செய்தியில், வசிஷ்டர், தசரதர் இருவருமே மிகவும் மகிழ்ந்து போயினர்.. "இனி அடுத்தது என்ன செய்ய வேணும் குருநாதா?.." வசிஷ்டரை வினவினார் தசரதர்.. அதற்குள் அஷ்டவக்கிரர் இடைமறித்தார்.. "இன்னார்க்கு இன்னாரென்று சொன்னால் அல்லவோ நன்று?.." வசிஷ்டரும் ஆமோதித்தார்.. "தசரதா.. இருபக்கமும் அவரவர் வயதிற்கேற்றவாறு திருமண பந்தத்தை ஏற்படுத்தலாம்.." "பரதனுக்கு மாண்டவி.. இலக்குவனுக்கு ஊர்மிளை.. சத்ருக்னனுக்கு ச்ருதகீர்த்தி.." இந்த ஏற்பாடு இருதரப்பு பெரியோர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது.. அவரவரும் தமது வாழ்க்கைத்துணையாய் வருபவரிடம், சற்று நேரம் பேசிக் கொள்ளட்டும் என்றும் ஏற்பாடானது.. ஜனகர், தன் பெண்ணரசியிடம் வந்தார்.. "ஊர்மிளா..உனக்கு மாலையிடப் போவது, இராமனின் நிழலாய்த் தொடர்கிறானே, அந்த லக்ஷ்மணன் மா.." என்றார்.. "அ...வ...னா?.." ஊர்மிளை எதிர்கொண்ட விதமே, வித்யாசத்தைச் சொன்னது... (வளரும்..) ராம் ராம் 🙏 9. (ஊர்மிளை என்னும் உன்னதம்...) (பகுதி−9..) இராமனுக்கு சீதை மாலையிட்ட அந்நாளிலிருந்து, கடந்த பத்து நாட்களாக, லக்ஷ்மணனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள் ஊர்மிளை.. முதன்முதலில், அவனை ராமனது சகோதரனாக அறிந்தபோது, அவளுக்குப் பெரும் வியப்பு.. அது எப்படி....ஒருவன் கருமையைப் பெருமைப் படுத்தவந்தப் பேரழகனாயும், மற்றொருவன் சிவந்தவனாய்...சற்றும் முன்னவன் அழகுக்குக் குறையாதவனாயும் இருக்கிறார்கள்?.. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளிலும், இது நிகழ்வதுண்டோ?.. தந்தையிடமே தன் ஐயத்தை வெளிப்படுத்தினாள்.. அவர் சொல்லித்தான் இருவரும் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள் என்பதையும், ராமனது தந்தைக்கு மூன்று மனைவியர் என்பதையும் அறிந்தாள்.. தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு!.. "ஏகபத்னி" வ்ரதனாய் தன் தந்தையைப் பார்த்திருந்த அவளுக்கு, இந்த விஷயம் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை.. அரசாளும் மன்னர்களின் வாழ்வில் இதுவெல்லாம் சகஜம்தான் என்றாலும், மனம் தந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தது.. ஜனகர் புரிந்து கொண்டார்.. "அம்மா..ஊர்மிளை.. அவருக்கு வெகுகாலமாய் புத்திர ப்ராப்தி இல்லாதிருந்ததாம்.. அரச பரம்பரைக்கு வாரிசு வேண்டாமா?.. அதுதான்..." தந்தையை முடிக்க விடவில்லை ஊர்மிளை.. "தந்தையே.. தமக்கும் வெகுகாலம் புத்திர ப்ராப்தி இல்லாமல்தானே இருந்தது?..." அவள் கேள்வியில் இருந்த ந்யாயத்தில், ஜனகர் வாயடைத்துப் போனார்! மிகத் தெளிவான சிந்தனைகளோடு, தமது பெண்கள் இருவரும் இருப்பதில், அவருக்குச் சற்றுப் பெருமிதம் வரத்தான் செய்தது!.. இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் ஊர்மிளைக்கு உறுத்தல் என்றில்லை! உண்மையைச் சொல்ல வேண்டுமானால், வேறொரு விஷயமும் அவளைக் குடைந்து கொண்டுதானிருந்தது.. முதன்முதலாக, தன்னை லக்ஷ்மணன் பார்த்தது, அவளுக்கு நினைவில் வந்து போனது.. இரு சகோதரர்களுக்கும், தமது மனைவியையும், மகளையும் அறிமுகப்படுத்தி வைத்தார் ஜனகர்.. சரேலென்று தலையை உயர்த்தி, அவன் அவளைப் பார்த்த அந்த நொடி.. அந்தப் பார்வை.. அவள் மனதில் அப்படியே இன்னமும் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது!. ஏறக்குறைய, ஒரு சர்ப்பம் தலையை உயர்த்திப் பார்ப்பது போல் ஒருபார்வை! "இது என்ன, இப்படி ஒரு பார்வை!.." என்று நினைத்துக் கொண்டாள்.. பின்னால் வந்த நாட்களிலும், அவளைச் சந்திக்க நேர்ந்த ஓரிரு சமயங்களிலும், அவன் அவளைத் தவிர்க்கவே செய்தான்!.. அந்த வயதில், ஒவ்வொரு பெண்ணுக்கும் வரக்கூடிய சந்தேகம், ஊர்மிளைக்கும் வந்தது... "ஏன்..நான் அழகாய் இல்லையா?..என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிற அளவுக்கு நான் அவனுக்கு ஒரு பொருட்டில்லையா?.." "யாரிடம், சகஜமாக இந்தக் கேள்வியைக் கேட்க முடியும்?.. " வெகுநேரம் யோசித்தவளுக்கு, தனது சகி "வசுதா"வின் நினைவு வந்தது.. "வசு...ஒன்கிட்ட ஒரு விஷயம் கேப்பேன்..ஒளிவு மறைவில்லாம, எது நெஜமோ, அத சொல்லணும்..சரியா?.." "என்னடி, பீடிகை எல்லாம் ரொம்ப பலமாயிருக்கு.." "நான் கேக்கறதுக்கு ஒன்னால உண்மையான பதில் சொல்ல முடியுமா, முடியாதா?.." "என் மனசுக்கு எது உண்மைன்னு படறதோ, அததான் நான் சொல்வேன்..சரியா?.." "அப்போ சொல்லு.. நான் அழகா இருக்கேனா, இல்லயா?.." கலகலவென நகைத்தாள் வசுதா... "இன்னிக்கு என்ன ஒன்னோட சந்தேகம் புதுமாதிரியா இருக்கு?.. இப்ப எதுக்கு இந்தக் கேள்வி திடீர்னு?.." "கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு வசு..எதிர் கேள்வி கேட்காத.." "ஒங்க அக்காதங்கை ரெண்டு பேருக்கும் அழகுக்கு என்னடி கொறச்சல்?.." "ஒங்கக்கா கண்டெடுத்த அழகின்னா, நீ கடைஞ்செடுத்த அழகி!.." "நான் மட்டும் ஒரு ஆணா இருந்திருந்தா, நிச்சயமா ஒன்னத்தான் கல்யாணம் பண்ணியிருப்பேன்.." ......சொல்லிவிட்டு, குறும்பாய்ச் சிரித்தாள் வசுதா.. "சீ..போடி.." என்ற ஊர்மிளைக்கு நாணத்தினால், முகம் குங்குமமாய்ச் சிவந்தது.. "அட..பாரேன்...ஒன் முகத்தில, அந்தி நேரத்து அழகெல்லாம் தெரியறது.." வசுதா கேலி செய்யவும், பொய்க் கோபத்துடன், அவளைத் தள்ளிவிட்டாள் ஊர்மிளை.. ஆகக்கூடி, தனது அழகு, இன்னொரு பெண்ணையே ஈர்க்க வல்லதாய் இருக்கிறது!.. இத்தனை இருந்தும், இவன் நம்மை வேண்டுமென்றே அலட்சியப்படுத்துகிறான்.. "ஆணவம் பிடித்தவனாய் இருப்பானோ?.. இல்லை ஏறெடுத்துப் பார்க்கின்ற தைரியம் இல்லாதவனாய் இருப்பானோ?.." "இந்த இரண்டில் எது இவன்?.." என்ற ஐயம் அவளுள் தலைதூக்கிய அதே நேரம்தான், ஜனகர், "அம்மா ஊர்மிளை.. உனக்கு மாலையிடப் போவது ராமனது நிழலாய்த் தொடர்கின்ற லக்ஷ்மணன்" என்றார்... (வளரும்..) 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕 🟣🔵🟢🟠🟡⚪🟡🟠🟢🔵🟣 ★彡꧁֍ ֍꧂彡★ (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −10..) "வாருங்கள் தேவி.." லக்ஷ்மணன் வரவேற்றது, ஊர்மிளைக்கு விசித்திரமாக இருந்தது.. "நான் ஊர்மிளை..நீங்கள் என்னைப் பேர் சொல்லி அழைக்கலாம்.. ஒருமையிலும் விளிக்கலாம்.." "தேவி..உரிமை வந்த பிறகு, ஒருமையில் அழைப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் நான்.." "என்னை உரிமை கொள்ளும் எண்ணம், தமக்கு இருக்கிறதா?.." "தேவி.. திருமண பந்தத்தில் பெண்ணின் விருப்பமே முக்கியம் என்பது என் அபிப்ராயம்... விருப்பமுள்ள பெண்ணைத் திருமணம் செய்தால், வாழ்வில் வருத்தத்துக்கு இடமில்லை அல்லவா?.." "தாம் சொல்வதும் சரிதான்.. ஆனால் இளவரசே.. என்னைப் பற்றிய தமது நிலைப்பாட்டையும் நானறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.." "தேவி.. முதலில் நான் இளவரசன் இல்லை என்பதைத் தாம் அறிந்து கொள்ள வேண்டும்.. அரச குடும்பத்தில் பிறந்ததனால், தாம் அப்படி அழைத்ததாக எடுத்துக் கொள்கிறேன்..மற்றபடி, நான் ஒரு அடிமையே!.." தூக்கிவாரிப் போட்டது ஊர்மிளைக்கு!.. "தாம் கூற வருவதன் பொருள் எனக்கு விளங்கவில்லையே.." "தேவி..நான் என் அண்ணனுக்கு அடிமை!.. அவனுக்கு சேவை செய்வதையே பரம ப்ரயோஜனமாகக் கருதுபவன்.." "அன்புக்கு நான் அடிமை" என்று சொல்லுங்கள் இளவரசே.. "இல்லை தேவி.. "அன்புக்கு" என்று சொல்லிவிட்டால், அதில் பலதரப்பட்ட அன்பும் புகுந்துவிடும்.. பெற்றோர், உற்றோர் என்று பட்டியல் நீளும்.. " "நான் சொல்வது அப்படியல்ல.. என் அண்ணனது அன்புக்கும், பண்புக்கும் மொத்தமாய்த் தோற்றுப் போனவன் நான்..அவனைப் பிரிந்து என்னால் ஒரு க்ஷணம் கூட இருக்க முடியாது.." "தமக்கு என்று ஒரு துணை வந்த பிறகும், இப்படித்தான் இருப்பீரோ?.." ஊர்மிளை, நேரடியாகவே கேட்டாள்.. "தேவி..தாம் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்பவும் அவசியம்.. என் அண்ணன் எனக்கு உயிர்!.. எனது இந்த உடல், பொருள், ஆவி அத்தனையும் அவனுக்கே சமர்ப்பணம்.. என்வாழ்வில், அவனுக்குப் பிறகுதான் எனக்கு மற்ற எந்த உறவும்!.." "இதை நன்கு உணர்ந்து கொண்டு, தாம் தமது சம்மதத்தைத் தெரிவிக்கலாம்.. இப்பொழுதும் இன்னும் காலம் கடந்துவிடவில்லை.." ஊர்மிளை கொஞ்சம் நிதானித்தாள்.. "ஒரு வேளை அவசரப்பட்டுக் கேட்டுவிட்டேனோ?..தவறு என்மீது தானோ?.." யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவள் உள்மனது அவளோடு விவாதம் செய்தது.. "இதில் என்ன தவறு?..தனக்கானவன் தன்னிடம் ஆசையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதானே!.." அவள் மனதின் ஓசை லக்ஷ்மணனை எட்டியது.. "மன்னியுங்கள் தேவி.. நான் அவனுக்கானவன்!.. இயல்பான எதிர்பார்ப்புகளுடன் என்னைத் திருமணம் செய்துகொண்டால், தாம் ஏமாந்து போய் விடுவீர்கள்..அதனால், ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுங்கள்..அதுவே நம் இருவருக்கும் நல்லது.." எதனால் ஈர்க்கப்பட்டோம் என்பது தெரியாமலேயே, ஊர்மிளை தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள்.. "அதனாலென்ன?.. உலகில் எத்தனை அண்ணன் தம்பி, அக்கா தங்கை பாசங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.. நாளாக நாளாக, எல்லாம் மாறித்தான் போகும்!.. "இது போகட்டும்..எனது "அந்த" சந்தேகத்தை இவன் முன் வைப்போம்..அதற்கு என்ன சமாதானம் சொல்கிறான் என்று பார்ப்போம்.. பிறகு ஒரு முடிவுக்கு வருவோம்.." "இருக்கட்டும் இளவரசே...இதைப் பற்றி நானும் யோசிக்கிறேன்.. ஆனால் எனக்கு வோறொரு விஷயம் தம்மிடம் பேச இருக்கிறது.. "என்ன?.." என்பதைப் பார்வையினால் வினவினான் லக்ஷ்மணன்.. "எந்தப் பெண்ணுக்கும் முதல் ஆதர்ஸ ஆண், அவளது தந்தையே.. எனக்கும் அப்படித்தான்.. அவரிடம் எல்லாமும் எனக்குப் பிடிக்கும்.." "எனக்கு அவர் அளித்திருக்கின்ற சுதந்திரம்.. அவர் என்மீது வைத்திருக்கின்ற பாசம்.. குடும்பத்தின் மீது வைத்திருக்கின்ற பற்றுதல்...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்... எல்லாவற்றையும் தாண்டி, அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்... அவர் ஒரு ஏகபத்னி வ்ரதன்.." சற்றே நிறுத்தி, லக்ஷ்மணனை ஊடுருவினாள்... அன்று பார்த்தாற் போன்றே சரேலென்று தலையை உயர்த்தி ஒரு பார்வை.. அவனுக்குப் புரிந்து விட்டது என்பதை ஊர்மிளை உணர்ந்தாள்.. தான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைச் சொல்ல இனி அவசியம் இல்லை என்பதும் தெரிந்தது.. "தேவி.. எந்தச் சூழ்நிலையிலும் ஒருத்தியைத் தவிர, என் எண்ணத்திலும் வேறொருத்தியை இருத்தேன்.. இது என் அண்ணன் மீது ஆணை!.." நிம்மதியாக இருந்தது ஊர்மிளைக்கு... "இந்த "அண்ணன்" விஷயம் மட்டுமே கொஞ்சம் நெருடல்.. பார்க்கலாம்..என்ன செய்யலாம் என்பதைச் சற்று நிதானமாகவே யோசிப்போம்.." அவளது எண்ண ஓட்டத்தை இடைமறித்தது லக்ஷ்மணனின் குரல்.. "தேவி..தாம் என்னிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?.." ஒருகணம்..ஒரே ஒரு கணம்தான் தயங்கினாள்.. "ம்....அதுவா?..தாம் ஒரு அரவம் போல் சரேலென்று தலையுயர்த்திப் பார்ப்பதை விடுத்து, கொஞ்சம் அரவணைப்பது போல் பார்த்தால், நன்றாக இருக்கும்.." சொல்லிக் கொண்டே, கலகலவென்று சிரித்தவாறு வெளியே ஓடிவந்தாள்... அங்கே.. அஷ்டவக்கிரர் நின்று கொண்டிருந்தார்!.. (வளரும்..) 🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹 ★彡꧁֍ ֍꧂彡★ 💜💙💚❤🧡💛🧡❤💚💙💜 🙏🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🙏 🏹 ஸ்ரீராமஜெயம் 🏹 ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம🙏🌺🌻🌹 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕 🟣🔵🟢🟠🟡⚪🟡🟠🟢🔵🟣 ★彡꧁֍ ֍꧂彡★ (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −11..) சுதாரித்துக் கொண்ட ஊர்மிளைக்கு மின்னலாய் ஒரு எண்ணம்.. "மனதை அரிக்கத் துவங்கியுள்ள இந்த ப்ரசன்னைக்கான தீர்வுக்கு குருநாதரையே அணுகலாமே.. தந்தையும் அப்படித்தானே செய்வார்!.." தான் நினைத்ததை வெளியே சொல்லாமல், அஷ்டவக்கிரரின் பாதம் தொட்டு நமஸ்கரித்தாள்.. கைகளை உயர்த்தி ஆசி வழங்கிய முனிவர், அவளையே சற்று உற்று நோக்கினார்... "விருப்பம் இருக்கு மனதிலே.. குழப்பம் இருக்கு முடிவிலே.. சரிதானே?.." என்றார்.. மிகச்சரியாக அனுமானித்த குருநாதரை, இருகரங்களையும் கூப்பித் தொழுதாள் ஊர்மிளை.. "தாமே எனக்கு வழிகாட்ட வேண்டும் குருநாதா.." இருவரும் நந்தவனத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த துளசிக்காட்டில் அமர்ந்தனர்.. தனக்கும் லக்ஷ்மணனுக்கும் நடந்த சம்பாஷணை மொத்தமும் சொல்லி முடித்தாள் ஊர்மிளை.. பொறுமையாக அனைத்தும் கேட்டுக் கொண்டிருந்த அஷ்டவக்கிரர் திருவாய் மலர்ந்தார்.. "அவன் அவதாரம் எடுத்ததே அவனுக்காய்.. இவன் தாரம்பின் வருவானோ உந்தனுக்காய்?.." "...எனில் குருநாதா.. இப்போது நான் என்ன செய்யட்டும்?..தாமே ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்லுங்கள்.. "கணவனுக்கு உதவிடவே கன்னியுந்தன் பிறவிஇது! கணக்கெல்லாம் பார்க்காதே! காதல் கடந்த உறவேஇது!.." ஏதோ புரிந்தாற் போலிருந்தாலும், இன்னமும் முழுதும் தெளிவடையா நிலையிலேயே இருந்தாள் ஊர்மிளை.. அஷ்டவக்கிரர் தொடர்ந்தார்.. "மணக்கப்போகும் மகராசனால் நினைக்கும் வாழ்வு உனக்கில்லை! கணக்கிட்டான் அயன்அன்றே! கட்டுப்படுவாய், உனைவென்றே!.." "கு..ரு...நா...தா.." தடுமாறியது ஊர்மிளையின் குரல்.. "அப்படிச் சபிக்கப்பட்டப் பிறவியா எனது?.." "சாபம் என்று நினைத்தாலே சங்கடம்தான் மிஞ்சுமே!.. த்யாகம் என்று கொண்டாலே தவிப்பும் துடிப்பும் கொஞ்சமே.." கண்கள் கலங்கியது ஊர்மிளைக்கு!.. "க்ஷமிக்கணும்..குருநாதா..இதற்கொரு மாற்று உண்டா?." "விதியை மாற்றவொண்ணாதே!.. வீண்ப்ரயத்தனம் செல்லாதே!.. பதிஇவனேதான், பெண்மானே, பழகிக் கொள்வாய் நீதானே!.." "சரி குருநாதா...தமது உத்தரவு... ஆனால், இந்த வலியைத் தாங்கும் பக்குவத்தை மட்டுமாவது எனக்கு அருளுங்கள்.." "மந்திரம் ஒன்று சொல்லுவேன்.. மனதில் அதைநீ கொள்ளுவாய்!.. தந்திரமாயது ப்ரயோகிக்க, துன்பக் கனல்நீ வெல்லுவாய்!.." "ஆகட்டும் குருவே.. அப்படியே.." அஷ்டவக்கிரர், அந்த துளஸி வனத்தினிடையே, ஊர்மிளைக்கு மந்திர உபதேசம் செய்தார்... "ஒருமுறையே இது உதவிடுமாம்! உன்விழைவதையும் முடித்திடுமாம்! பலமுறை எண்ணிச் செயல்படவும், பெற்றது உனக்குப் பலன்தருமாம்!.." ....அஷ்டவக்கிரர் எச்சரித்தார்.. ஊர்மிளை புரிந்துகொண்டாள்.. "நடந்தது நமக்குள் இருக்கட்டும்! நல்மனம் ரகசியம் காக்கட்டும்! கடந்திடும் உந்தன் காலமுமே! கடவுளின் அருளும் துணைவருமே!.." அஷ்டவக்கிரரை நமஸ்கரித்து விடைபெற்றவள், தன் சம்மதத்தைத் தெரிவிக்க, தெளிந்த மனதுடன், தந்தையை நோக்கி நடந்தாள்.. (வளரும்..) ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம🙏🌺🌻🌹 🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹 ★彡꧁֍ ֍꧂彡★ 💜💙💚❤🧡💛🧡❤💚💙💜 🙏🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🙏 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −12..) வலிய வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், நாணம் வெளிப்பட, தனது சம்மதத்தை தந்தையிடம் தெரிவித்தாள் ஊர்மிளை.. அவ்வளவுதான்... உடனே சகோதரிகள் மூவரும், பெரு மகிழ்ச்சியோடு ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டனர்.. சற்று நேரத்துக்கு அங்கே ஆனந்த அலை வீசியது.. பெற்றவளிடமும், சுற்றத்தாரிடமும் கூட இந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது.. அதற்குள், மேற்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைக் குறித்த பேச்சுக்களைத் துவக்கினார் வசிஷ்டர்.. அயோத்திக்கு வீரர்களை அனுப்பி, பட்டமகிஷிகள் மூவரையும் உடனே அழைத்துவருவதற்கான ஆயத்தங்கள், ஜனகர் தரப்பில் துரிதமாக நடந்தேறின.. தக்க சன்மானங்களோடு, சுபச்செய்தியை ஏந்தி, வீரர்கள் அந்தக்ஷணமே புறப்பட்டுச் சென்றனர்.. மிதிலையைப் பொறுத்தவரையில்....ஊரே விழாக்கோலம் பூண்டது.. தத்தமது இல்லத்தின் சுபநிகழ்வாக, ப்ரஜைகள் அனைவருமே உணர்ந்தனர்.. தம் இருப்பிடங்களை எல்லாம் அழகு படுத்தினர்.. வீதிகள் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டன.. வருகின்ற கூட்டத்தை சமாளிப்பதற்காக, நீர்நிலைகள் சுத்திகரிக்கப்பட்டன.. சத்திரம் சாவடிகள், அவசர கதியில் கட்டப்பட்டன.. எங்கும் வண்ண விளக்குகளின் தோரணங்கள், "தேவலோகமோ இது!" என்ற ப்ரமிப்பை ஏற்படுத்தின. திருமண வைபவத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு, ப்ரஜைகள் புத்தாடைகளையும், சற்று வசதியுள்ளவர்கள், அவற்றோடு பொன் நகைகளையும் வாங்கிக் கொண்டனர்.. ப்ரஜைகள் அனைவருக்கும் விருந்தும் கேளிக்கைகளும் இப்பொழுதிலிருந்தே துவங்கப்பட்டன.. பட்டமஹிஷிகள் வந்து சேர்வதற்கான அவகாசத்தைக் கணக்கில் கொண்டு திருமண வைபவம் பத்து நாட்கள் தாண்டிய ஒரு சுபநாளில் நிர்ணயம் செய்யப்பட்டது.. இதற்கிடையே, அரண்மனையும் தன்னை அலங்காரம் செய்து கொள்ளத் தயாரானது.. மிகக் குறைந்த அவகாசமே இருந்தபடியால், அத்தனை காரியங்களையும் குறைவறச் செய்து முடிப்பதில் இருக்கின்ற ச்ரமங்களை எண்ணி கொஞ்சம் மலைத்துப் போயிருந்தார் ஜனகர்.. அந்த நேரம், அங்கே தேவேந்திரனே வருகை தந்தான்.. வியந்து நின்றார் ஜனகர்.. "ஜனக மஹாராஜனே... தாம் திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கொஞ்சமும் கவலை அடைய வேண்டாம்.. தேவர் உலகம் முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்ளும்.. தாம் எதுவும் விட்டுப்போகாமல் இருக்கிறதா என்று சரிபார்த்துச் சொன்னால் மட்டும் போதும்.." ஆச்சர்யத்தில் உறைந்து போயிருந்த ஜனகர், மெல்ல வாய் திறந்தார்.. "தேவேந்திரா....தாமா அடியேன் வீட்டுக் கல்யாணத்தை நடத்தி வைக்கப் போகிறீர்கள்?.. அவ்வளவு பாக்யசாலியா அடியேன்?..இதற்கு அடியேனால் தமக்கு என்ன கைமாறு செய்து விட முடியும்?.." தேவேந்திரன் குரல் இடைமறித்தது.. "மன்னனே.. இது எமது கடமையுமாகும்.. தாம் ராஜரிஷியல்லவா?.. தம்மைக் கௌரவப்படுத்துவது எமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.. அதனால், தயைகூர்ந்து அனுமதியுங்கள்." ...தேவரகசியத்தை மறைத்து இந்திரன் பேசினான்.. ஜனகர் பவ்யமாய் தலையசைத்தார்.. திவ்ய தம்பதிகளின் சம்பந்தத்தினால், சகோதர, சகோதரியர் திருமணமும் விமரிசையாகக் கொண்டாடப் படுவதற்கான சௌபாக்யத்தை அடைந்தது... திருமணம் நடக்கவிருக்கின்ற மண்டபத்தின் முகத்தில் ஜய, விஜயர் என்னும் துவாரபாலகர்களே, குலையோடு கூடிய பச்சை வாழைமரங்களாக மாறி நின்றனர்.. தேவகன்னியர்கள் பலரும் மண்டபத்தில் தோரணங்களாக மாறியிருந்தனர்.. தேவலோக சிற்பியின் வரவால் திருமண மேடை வெகுநேர்த்தியாக நிறுவப்பட்டது.. ஹோமகுண்டத்தில் எழும்ப இருக்கின்ற வேள்வித்தீயில் ஆவாஹனம் ஆக, அக்னிதேவன் தயாராக இருந்தான்.. ரிஷிகள், முனிவர்களின் வேதகோஷங்கள், வீசுகின்ற காற்றில் எப்பொழுதும் கலந்தே இருந்தது.. சாக்ஷாத் அன்னபூரணியின் மேற்பார்வையில், திருமண நாளது விருந்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.. பலவிதமான காய்களும், கனிகளும், வந்து நிரம்பியவண்ணம் இருந்தன.. வாசனை மலர்களும் மாலைகளும் தேவலோகத்து நந்தவனங்களிலிருந்து அன்றன்று வந்துசேர ஏற்பாடாகியிருந்தது... மணமக்களுக்கான உயர்ந்த வாசனை த்ரவியங்கள் இமய மலைச்சாரலிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அணிவதற்குண்டான பொன்னும் மணியும் இணைந்த பட்டாடைகள் ஒருபுறம் தயாராகிக் கொண்டிருந்தன.. மணமகன்களைச் சார்ந்தவர்கள் தங்குவதற்காக, அனைத்து வசதிகளோடும் கூடிய பெரிய பெரிய மாளிகைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.. மணமக்கள் ஊர்வலம் வருவதற்கான உயர்வகை குதிரைகள் தேவலோகத்திலிருந்து வந்து இறங்கி இருந்தன.. வீணை இசைக் கச்சேரி நடத்துவதற்காக, நாரதரே வந்திருந்தார்.. ஆடலோடு பாடலுமாய் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சிகளில், ரம்பை, திலோத்தமை, மேனகை இவர்களது பங்களிப்பு ப்ரதானமாக இருந்தது.. மங்கள வாத்யங்கள் முழங்குவதற்கு வசதியாய், பலப்பல இசைக்கருவிகள் வந்து இறங்கியிருந்தன... இசைவிற்பன்னர்களின் குழாம் ஒன்றும் மண்டபத்தில் அணிவகுத்திருந்தது.. தேவ, கந்தர்வ, கின்னரர்களின் திரளால், மண்டபம் நிரம்பி வழிந்தது.. எந்த எழிலைப் பேசுவதென்றே தெரியாமல், தேவேந்திரனின் திருமாளிகையாய் ஜ்வலித்தது, மிதிலையின் திருமணமண்டபம்!... அப்படிப் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றும் வெகுநேர்த்தியாகவும் ச்ரத்தையாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.. அத்தனை ஏற்பாடுகளையும் பார்த்து வாயடைத்துப் போயிருந்தார் தசரதர்!... ஆயிற்று...பட்டமஹிஷிகள் மூவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதிலை வந்திறங்கினர்.. உடனே தத்தமது மருமகள்களைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை மூவரையுமே தொற்றிக் கொண்டது.. மணப்பெண்கள் நால்வரும் ராஜமாதாக்களை நமஸ்கரித்து எழுந்தனர்.. அயோத்தியின் மருமகள்களது அழகு, பட்டமஹிஷிகளை மிகவும் பெருமிதம் கொள்ள வைத்தது.. அவர்கள் ஒல்வொருவரையும் ஜனகர் முன்வந்து அறிமுகப்படுத்தி வைத்தார்.. அப்பொழுதுதான், சுமித்திரை வாய்திறந்தாள்.. "நான் ஊர்மிளையோடு கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்.. என் சம்மதத்தின் பேரில், அவள் லக்ஷ்மணனைத் திருமணம் செய்து கொள்ளட்டும்...." (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −13..) ஒரு கணம் அங்கே கனத்த மௌனம் சூழ்ந்தது.. பொங்கி வரும் பாலில், நீர் தெளித்தாற் போல, அத்தனை பேருடைய சந்தோஷமும் சட்டென்று வடிந்தது.. தசரதருக்கு சுமித்திரையின் போக்கு அதிர்ச்சியாக இருந்தது.. கோசலையும் கைகேயியும், வரும்வழியில்கூட, சுமித்திரை தங்களிடம் இதுபற்றி ஏதும் சொல்லவில்லையே எனப் பேசிக் கொண்டனர்.. ஜனகர்தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.. "அதற்கென்ன ராஜாமாதா, தம் விருப்பம் போல் ஆகட்டும்.." அந்த அறையில், ஊர்மிளையும், சுமித்திரையும் மட்டுமே இருந்தனர்.. கனிவோடு ஊர்மிளையை ஏறிட்டாள் சுமித்திரை.. "அம்மா ஊர்மிளை...ஒன்னோட நன்மைக்காகத்தான், நான் ஒன்கிட்டே பேசவே ஆசப்பட்டேன்.." "நான் கேக்கப்போற கேள்விகளுக்குத் தெளிவான பதிலை ஒன்கிட்ட எதிர்பாக்கறேன் மா..ஒன்னோட பதில் எதுவானாலும், நான் நிச்சயம் தப்பா எடுத்துக்க மாட்டேன்..சரியா?.." சுமித்திரையின் அணுகுமுறை, ஊர்மிளைக்குப் பிடித்திருந்தது.. "கேளுங்கோ ராஜமாதா.." சற்று நிதானித்து சுமித்திரை தொடர்ந்தாள்.. "ஒனக்கு நெஜமாவே லக்ஷ்மணனைப் பிடிச்சிருக்கா மா?.." உண்மையைச் சொல்லப் போனால், இந்தக் கேள்வியை, இந்த நேரத்தில், சுமித்திரையிடமிருந்து ஊர்மிளை எதிர்பார்க்கவே இல்லை! ஆனாலும், "பிடிச்சிருக்கு" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.. "தப்பா நெனச்சுக்காதே ஊர்மிளை... அவனோட பேசறதுக்கான வாய்ப்பு ஒனக்குக் கெடச்சுதா?.." "கெடச்சுது மாதா..." "தன்னப் பத்தி அவன் ஒன்கிட்ட ஏதாவது சொன்னானா மா?.." சற்று நேரம் ஊர்மிளை மௌனமாகவே இருந்தாள்.. "எதுவானாலும் சொல்லுமா..தயங்காதே.." சுமித்திரை தூண்டினாள்.. "ரா...ஜ...மா..தா...." "எல்லாம் தெரிஞ்சுதான் நான் இந்தத் திருமணத்துக்கு சம்மதிச்சேன்..." "தெரிஞ்சா சம்மதிச்சே?.." சற்று அதிர்ச்சியோடு வினவினாள் சுமித்திரை.. "ஆமாம் ராஜமாதா... அவருக்கு அண்ணன்தான் உலகம்னு தெரிஞ்சுண்டேன்.. கல்யாணத்துக்கு அப்புறமும் அண்ணனோட சேவையிலதான் தன்ன ஈடுபடுத்திப்பார்னு தெரிஞ்சுண்டேன்.. ஒரு மனைவிக்குத் தரவேண்டிய முக்யத்துவம் எதுவும், அவர் எனக்குத் தரப்போறதில்லைனு தெரிஞ்சுண்டேன்.." "என்ன பொண்ணும்மா நீ.. எல்லாத்தையும் சரியா தெரிஞ்சுண்ட நீ, முடிவை மட்டும் ஏன் தப்பா எடுத்திருக்கே?.." ஊர்மிளை சுமித்திரையின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தாள்.. "மாதே.. இந்த ஜன்மத்தில் அவர்தான் என் பதின்னு புரிஞ்சுண்டேன்..அதனால் எல்லாத்தயும் தாங்கிக்கற பக்குவத்தோடதான் இருக்கேன்.." "ஊர்மிளை..இது நீ சுயமா எடுத்த முடிவா..இல்ல...யாரோட கட்டாயத்திலயாவது எடுத்த முடிவா?.." "கட்டாயத்துல எடுத்த முடிவு இல்ல மாதா..தெய்வத்தோட ஸங்கல்பத்துக்குக் கட்டுப்பட்டு எடுத்த முடிவு.." "ஆனா ... இந்த வாழ்க்கையில ஒனக்கு சந்தோஷமே இருக்காதே மா.." "மாதே..எனக்கு என்ன காத்திண்டிருக்குன்னு தெரிஞ்சுண்டுதான், நான் அவர கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கேன்.." "இல்லம்மா..நீ ஏதோ வேகத்தில பேசற.. சம்மதம் இல்லனு நீ சொல்லியிருக்கணும்... இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல..அனாவசியமா ஒன் வாழ்க்கைய வீணடிச்சுக்காத மா.." "மாதே.. எதிர்த்துப் பேசறேன்னு நெனச்சுக்க வேண்டாம்.. இவர விட்டுட்டு, நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிண்டாலும், என்விதி ப்ரகாரம் தானே வாழ்க்கை அமையப் போறது.." "ஹும்.. அவனுக்குக் கல்யாணமே வேண்டாம்னு நெனச்சுண்டு இருந்தேன்.. எந்தப் பொண்ணோட வாழ்க்கையையும் பணயமாக்கறதில எனக்கு விருப்பம் இல்ல.." "ஆனா மாதா.. என்னால அவர் வாழ்க்கையில ஆக வேண்டிய காரியம் ஏதோ இருக்குனு நெனக்கறேன்.. அதனாலதான், தெய்வம் எங்கள சேத்து வெக்கறது.." "இதுக்கு மேல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?..ஒன் இஷ்டம் போல ஆகட்டும்மா.." "எல்லாம் தெய்வ ஸங்கல்பம்தான் மாதே.." என்று சொல்லிக் கொண்டே, ஆறுதலாய் அவள் கரம் பற்றினாள் ஊர்மிளை.. நெகிழ்ச்சியில் சுமித்திரையின் கண்கள் பனித்தன..அப்படியே இழுத்து ஊர்மிளையை அணைத்துக் கொண்டாள்.. முகமலர்ச்சியோடு வெளியே வந்த மகளைக் கண்டு, ஜனகரும், மற்றவர்களும் நிம்மதி அடைந்தனர்.. குறிப்பாக தசரதர், கோசலை, கைகேயி மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.. (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −14..) முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு.. சூரிய குலத்தில் உதித்த தசரத குமாரர்கள் நால்வருமே நான்கு சூரியர்கள் போல் காட்சியளித்தனர்.. அதிலும் ரகுநந்தனின் அழகு கோடிசூர்ய ப்ரகாசமாய் ஜ்வலித்தது.. வெகு நேர்த்தியுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேவலோகத்து குதிரைகளில், நால்வரும் மிதிலையின் வீதிகளில் பவனி வந்தனர்.. உதயமான சில நாழிகைக்கெல்லாம் தொடங்கிய ஊர்வலம், அந்திசாயும்வரை நீடித்தது.. சாதாரணமான ஒருத்தர் மாப்பிள்ளையாக பவனி வந்தாலே, சற்று நேரம் நின்று பார்ப்பது மனித ஸ்வபாவம்!.. ஆனால் இன்றோ, தெய்வமே திருவீதி உலாவருகிறது!.. ப்ரத்யக்ஷமாய், அனைவர் கண்களுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு... இப்படி ஓர் வாய்ப்பு, அவ்வளவு எளிதில் கிடைத்து விடக்கூடியதா என்ன?.. தமது பேரன்பைத் தவிர, வேறு ஏதும் தரவியலாத பாமர ஜனங்கள், கண்ணேறு(த்ருஷ்டி) கழிக்க, ராஜகுமாரர்களுக்கு மஞ்சள் நீர் சுற்றி, மனம் மகிழ்ந்தனர்.. சற்று வசதி படைத்தவர்கள், புஷ்பம், சந்தனம், உயர்ந்த த்ரவியங்கள் இவற்றை அரசகுமாரர்களுக்கு தமது பரிசாகக் கொடுத்து, அகமகிழ்ந்து போனார்கள்.. ஒருவழியாக ஊர்வலம் திருமண மண்டபத்தை அடைந்த போது, வானில் விண்மீன்கள் தெரிய ஆரம்பித்திருந்தது.. அடுத்தநாள் விடியலில், தங்கக் குடங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த புனித நன்னீரில், மணமக்களின் நீராடல் நிகழ்ந்தது.. அதற்குப் பிறகு, காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தேறியது.. பூரண கும்ப மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்ட ராஜகுமாரர்கள் நால்வரும், மணமேடையில் தயாராய் அமர்ந்திருக்க, மணப்பெண்கள் நால்வரும், பொன்னும் மணியும் இழைத்த பட்டாடை அணிந்து, பொன்நகைகள் பூண்டு, முகத்தை மெல்லிய திரையால் மறைத்து, பெற்றோரும், உற்றோரும் புடைசூழ, அழகு பிம்பங்களாய், மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.. ராஜகுமாரர்களின் அருகில், மணப்பெண்கள் அமரவும், கன்னிகாதான க்ரியைகள் தொடங்கின.. பிறகு மணப்பெண்கள் நால்வரும், பெரியோர்களால் ஆசீர்வதித்துக் கொடுக்கப்பட்ட கூறையுடுத்தி வந்து, ராஜகுமாரர்களின் அருகில் அமர்ந்தனர்.. அஷ்டவக்கிரர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற மகரிஷிகளாலும், மற்றும் பெற்றவர்களாலும், பெரியோர்களாலும், ஆசீர்வதிக்கப்பட்ட மங்கள(ல) நாண், ராஜகுமாரர்களின் கரங்களில் கொடுக்கப்பட்டது.. மந்திர கோஷங்களும், மங்கல வாத்யங்களும் முழங்க, மலர்களும், அட்சதையும் மழையாய்ப் பொழிய, ராஜகுமாரர்கள், மிதிலையின் இளவரசிகளை மணந்து, அவர்களை அயோத்தியின் மருமகள்களாக ஆக்கிக் கொண்டனர்.. இதற்குப் பிறகு, மாலை மாற்றுதல், பாணிக்ரஹணம், ஸப்தபதி, ஆகிய சடங்குகளும் இனிதே நிறைவேறின.. வசிஷ்டரின் பத்தினி அருந்ததி நேரிலேயே வந்திருந்ததால், தனியாக, "அருந்ததி பார்த்தல்" என்ற நிகழ்ச்சிக்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.. தம்பதியர் நால்வரும், குலகுரு வசிஷ்டரையும், அவரது பத்னி அருந்ததியையும் நமஸ்கரித்து, ஆசிகளைப் பெற்றனர்.. பிறகு, விஸ்வாமித்ரர், அஷ்டவக்கிரர் ஆகியோரது நல்லாசிகளையும் ஏற்றனர்.. அதற்கடுத்தபடியாக,, இரண்டு பக்க பெற்றோர்களையும், மற்ற பெரியோர்களையும் நமஸ்கரித்து, அவர்கள் அனைவரின் நல்வாழ்த்துக்களையும் ஸ்வீகரித்துக் கொண்டனர.. இந்த வைபவம் நடந்தேறிய நேரம், ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. மிதிலைவாசிகளுக்கு ராஜகுமாரர்களைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாததால், அவர்களை அனைரும் அறிந்து கொள்ள வசதியாய், அவர்களைப் பற்றிய நிகழ்வே நாட்டிய நாடகமாகியது.. குலகுரு வசிஷ்டரும், விஸ்வாமித்ரரும், காட்டிக்கொடுத்தபடி, நிகழ்ச்சிகள் காட்சிகளாயின.. மிதிலை மக்களுக்கு மட்டுமல்லாமல், மிதிலை இளவரசிகளுக்கும் தத்தமது கணவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் அதிகம் இருந்தது.. தசரதன் தவமிருந்து பெற்றெடுத்ததிலிருந்து ஆரம்பித்த நிகழ்ச்சி, ராஜகுமாரர்கள் வளர்ந்தது, அவர்களின் கல்வி, வீர விளையாட்டுக்கள் எனத்தொடர்ந்து, விஸ்வாமித்ரர், ராமலக்ஷ்மணர்களை காட்டுக்கு அழைத்துச் செல்வது வரையில் நாட்டிய நாடகத்தின் முதல் பகுதியாக நடந்து முடிந்தது.. இடைவேளை கொடுக்கப்பட்டு, அனைவரும் விருந்துக்குத் தயாராயினர்.. சாக்ஷாத் அன்னபூரணி, பக்குவம் சொல்லத் தயாரான விருந்து அல்லவா?.. சுவைக்குக் கேட்கவா வேண்டும்?.. இரண்டடி நீளத்திற்கு இடப்பட்ட தலைவாழை இலையில், முதல் வரிசை முழுவதும் நெய்மணக்கும் இனிப்புகள் நிறைந்திருந்தன.. அடுத்த வரிசையில், இனிப்பைச் சமன் செய்ய வந்த காரவகைகளின் அணிவகுப்பு.. அதற்கடுத்த வரிசை விதம்விதமான கனிவகைகளுக்கு.. அதற்கும் அடுத்த வரிசை காய்கறிகளுக்கு.. கடைசியாக மல்லிப்பூவாய் அரிசிச்சோறு.. கேட்டுக்கேட்டுப் பரிமாறிய பாங்கு அனைவரையும் ப்ரமிக்க வைத்தது!.. பந்தியில், தேவேந்திரனுக்குக் கொடுக்கப்பட்ட அதே மரியாதை, தெருக்கோடி ஜனங்களுக்கும் சமமாக அளிக்கப்பட்டதில், ஜனகரின் மாண்பு மேலும் பளிச்சிட்டது.. (வளரும்..) (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −15..) ஒருவழியாக விருந்து நடந்து முடிந்து, நாட்டிய நாடகத்தின் இரண்டாவது பகுதி துவங்கியது.. விஸ்வாமித்ரருடன் ராம லக்ஷ்மணர் இருவரும் யாக ரக்ஷணத்துக்காக, வனம் வருகின்றனர்.. வேள்வித்தீ கொழுந்து விட்டெரிய, விஸ்வாமித்ரர் அதன்முன் அமர்ந்திருக்கிறார்.. எங்கிருந்தோ பெருஞ்சப்தமும் ஆரவாரமும் கேட்கிறது.. சற்றைக்கெல்லாம் கோரமான ரூபத்துடன், அதிபயங்கரமான கோஷத்துடன் தாடகை. யாகத்தைக் கெடுக்க அங்கே வருகிறாள்.. வில்லும் அம்புமாக இரு சிறுவர்கள் நிற்பதுதான் அவள் கண்களில் முதலில் படுகிறது.. "யாரடா நீங்கள்..மனிதப் பதர்களே.." என்ற கூச்சலுடன் முதலில் ராமனை நோக்கித்தான் அவள் பாய்கிறாள்.. "ரா...ம....ண்ணா...ஜாக்ரதை...." ஊர்மிளையின் அருகில் அமர்ந்திருந்த லக்ஷ்மணன், உரத்துக் கூவிக்கொண்டே, அதிவேகமாக எழுந்தான்.. நாட்டிய நாடகத்தில், தம்மை அனைவரும் ஈடுபடுத்திக் கொண்டிருந்த படியால், லக்ஷ்மணனின், இந்த அனிச்சை செய்கையை, நல்ல வேளையாக ஒருவரும் பார்க்கவில்லை! "சௌமித்ரரே.. சற்று அமருங்கள்...தமது சகோதரர் அருகில்தான் இருக்கிறார்.. அங்கே பாருங்கள்.. ஜானகியிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறாரே..." ....ஊர்மிளை, கரம் பற்றி லக்ஷ்மணனை அமர வைத்தாள்.. அடுத்த காட்சி... தாடகை வதம் முடிந்து, அகலிகை சாப விமோசனத்துக்காக, ராம லக்ஷ்மணர்களை அழைத்துச் செல்கிறார் விஸ்வாமித்திரர்.. முனிவரின் ஆணைப்படியே, வெகுகாலமாய் காற்றிலும், மழையிலும், வெயிலிலும் அனாதரவாகக் கிடந்த அந்தக் கல்லைத், தன் பாதங்களால் ராமபிரான் தீண்டுகிறான்.. அகலிகை, கௌதமர் இட்ட சாபம் நீங்கப் பெற்று, பெண்ணாக உருமாறுகிறாள்.. "ரகுவீரரே...தாம் கல்லை எல்லாம் பெண்ணாக்குவீரோ?.." அருகில் அமர்ந்திருந்த ராமனை, குறும்பாகக் கேட்டாள் சீதை.. "ஜானகி... முனிவருக்காகவே கல்லைப் பெண்ணாக்கினேன்.. ஆனால், என் மனைவிக்காகப் புல்லையும் போர் ஆயுதமாக ஆக்குவேன்... தெரியுமா?.." ....கூறிக்கொண்டே, ராமன் அவளைப் பார்த்த பார்வையில், சீதை குங்குமமாகச் சிவந்தாள்.. இப்படியாக, சுயம்வர மண்டபம் அடையும்வரை நீண்ட நாட்டிய நாடகம், ராமன் சிவதனுசுவை முறித்து, சீதை மாலையிடும் காட்சியோடு நிறைவேறியது.. பரவசத்தில் உறைந்து போயிருந்த அத்தனைப் பேரும் சுயநினைவு வருவதற்கே, சற்று நேரம் பிடித்தது.. தாம்பூலப் பை, பக்ஷணங்கள் எல்லாம் குறைவற அளிக்கப்பட்டு, அனைவரும் மரியாதையோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.. திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டிருந்தன.. வந்திருந்த உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கிளம்பி விட்டிருந்தனர்.. இப்பொழுது, தசரதர் குடும்பத்தினர் மட்டுமே அரண்மனையில் இருந்தனர்.. மெல்ல தசரதர், தாம் அயோத்திக்குக் கிளம்ப வேண்டிய தருணம் வந்துவிட்டதை ஜனகரிடம் தெரியப்படுத்தினார்.. பிரியவே மனமில்லை அவருக்கு!.. ஆனாலும், வேறுவழியில்லாததால், தம்மை நிதானப்படுத்திக் கொண்டு, அவர்கள் கிளம்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டார்.. சகல சீர்வரிசைகளோடும், தசரதர் குடும்பம் புறப்படும் தருணம் வந்தது.. பெற்றவர், உற்றவர், மற்றவர்..என எல்லாமுமாக இருந்த தந்தையைப் பிரியவே மனம்வரவில்லை பெண்களுக்கு.. மனதின் தாபம் தீர, இருவரும் அவர் தோள்களில் சாய்ந்து, தம்மைத் தேற்றிக் கொண்டனர்.. தாயை எண்ணும் போது, பெண்களுக்கு விழிநீர் வழிந்தது.. "வெறும் தாய்மட்டும்தானா அவள்?.. அரும் ஆசானாய் இருந்து எத்தனை விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கிறாள்?.." தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பெண்களை ஆசுவாசப்படுத்தினாள் தாய்!.. அழுகையினுடே, "மாதே.. உங்க பேருக்குக் களங்கம் வராத மாதிரி நாங்க நடந்துப்போம்.." என்று இருவரும் ஒரே குரலில் சொல்லவும் சுனைனா, நெகிழ்ந்து போனாள்.. அதே நிலையில்தான், மாண்டவியும், ஸ்ருதகீர்த்தியும், அவர்களது பெற்றோர்களும் கூட இருந்தனர்.. ஒருவழியாக ரதங்கள் புறப்பட்டன.. அவை கிளப்பிச் சென்ற புழுதி, அரண்மனை வாயிலையே மறைத்தது... பௌர்ணமிக்கு அடுத்த நாளே அமாவாசை வந்தாற்போல், திடீரென்று, அரண்மனையே இருள் அப்பியதாக, பெற்றோர்கள் உணர்ந்தனர்.. (வளரும்..) 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕 🟣🔵🟢🟠🟡⚪🟡🟠🟢🔵🟣 ★彡꧁֍ ֍꧂彡★ (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி − 16..) விதேஹத்திலிருந்து புறப்பட்ட ரதங்கள் எல்லாம் அயோத்தியை நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவை ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமரால், இடையில் வழிமறிக்கப்பட்டன.. சிவதனுசை முறித்ததில் பெரும் சீற்றம் அவருக்கு இருந்தது.. அதனால் அதற்கு காரணம் ஆனவர் யாரோ, அவர் தன்னிடமிருந்த விஷ்ணு தனுசிலும் நாணேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.. ராமன் அந்த விஷ்ணு தனுசை, பரசுராமரிடமிருந்து வாங்கி, அதிலும் நாணேற்ற, பரசுராமர் தமது சீற்றம் தணிந்து, ராமன் சாக்ஷாத் விஷ்ணுவின் அவதாரமே என உணர்ந்து, தனது தவவலிமை யாவற்றையும், ராமனுக்கே தாரை வார்த்து, விடை பெற்றார்.. இந்த நிகழ்வுக்குப் பின், எந்தத் தடையுமின்றி ரதங்கள் அயோத்தி வந்தடைந்தன.. அயோத்தியின் கோலாகலங்கள் மிதிலை இளவரசிகளை ப்ரமிக்கச் செய்தன.. "மிதிலையில்தான் இருக்கிறோமோ?" என்ற அவர்களது சந்தேகத்தை, ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த கோசல தேசத்துக் கொடிகள், காற்றில் ஆடிஆடி, "இல்லை, இல்லை" என்று பதில் கூறி, தீர்த்து வைத்தன.. தசரதர் மேலும், இளவரசர்கள் மீதும், ப்ரஜைகள் வைத்திருந்த ப்ரீதியை, நகரம் அலங்கரிக்கப்பட்ட நேர்த்தியிலிருந்து அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.. தேவேந்திரனின் உதவி இல்லாமலேயே, தேவலோகமாய் அயோத்தி ப்ரகாசித்தது.. வாண வேடிக்கைகளும், வாத்யக் கச்சேரிகளுமாய், நகரின் வீதிகள் நிரம்பி இருந்தன.. இந்த சந்தோஷத்தை முன்னிட்டு, அவரவர்களும் அன்னதானம் வேறு செய்து கொண்டிருந்தனர்.. செவிக்கும் உணவு.. வயிற்றுக்கும் உணவு.. ....என்பதாய் அயோத்தி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது! ஊர்ந்து ஊர்ந்துதான், ரதங்கள் அரண்மனையை அடைய முடிந்தது.. தேவ சிற்பியான மயனின் உதவியோடு, சுமந்திரர், புதிதாக, மிக அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு மாபெரும் மாளிகையை நிர்மாணம் செய்திருந்தார்.. அயோத்தி மக்களை மட்டுமல்லாமல், அண்டை நாட்டு அரசர்களையும், அதற்குள்ளாக, சுமந்திரரே அழைத்திருந்தார்.. தசரதருக்கு மிகநெருக்கமான தேவலோக வாசிகளும், தேவேந்திரனும் கூட விருந்தாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள்.. ஆசி வழங்குவதற்காக அழையாமலே வந்திருந்த முனிவர்களையும், ரிஷிகளையும் பார்த்து, தசரதரின் மாண்பை மிதிலை இளவரசிகள் புரிந்து கொண்டனர்.. அயோத்தி வந்து சேர்ந்த இரண்டாம் நாள் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.. உதயத்திலிருந்தே அனைவரையும் சந்தோஷம் தொற்றிக் கொண்டது.. சாரிசாரியாக வந்தவர்கள் அனைவருமே, அழகாக வரிசையில் அமர்த்தப்பட்டனர்.. வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையை ரகுநந்தன் புறக்கணித்தான்.. "மேடையில் நாம் நான்கு ஜோடிகளும் அமர்ந்து கொண்டோமானால், இத்தனை திரளாய் வந்திருக்கும் அனைவரும் நம்மைக் காண மிகவும் ச்ரமப் பட்டுப் போவார்கள்...வேண்டாம்.. நாமே நடந்து சென்று ஒவ்வொருவரின் ஆசியையும் பெறுவோம்..வரிசையில் அமர்ந்திருப்பதால், அவர்கள் அனைவருமே நம்மை அருகில் காணலாம்.." தம்பிகளுக்கும் அண்ணன் கூறுவதே சரியெனப்பட்டது.. ராமனும் சீதையும் முன்னே செல்ல, மீதி மூன்று ஜோடிகளும் பின்தொடர்ந்தனர்.. முதல் வரிசை ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.. அவர்கள் அனைவரையும் நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றதும், அடுத்தடுத்த வரிசைகளில் அமர்ந்தவர்களை நோக்கி நான்கு ஜோடிகளும் நகர்ந்தனர்.. இரண்டு கரங்களையும் அழகாகக் குவித்து, இதழில் புன்னகையை அள்ளித் தெளித்து, ஈரவிழிகளால் அனைவரையும் குளிர அணைத்து, இராமனும் சீதையும் வருகின்ற அழகில், குழுமியிருந்தோர் அனைவரும் பரவசத்தின் எல்லையைக் கண்டனர்.. அண்ணனை அடியொற்றி தம்பிமார்களும் தத்தமது பத்னிகளுடன் சென்ற அழகு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது.. தம்மிடம் வருவதற்கு முன், முன்னழகை அனுபவித்தவர்கள், தம்மைத் தாண்டிச் சென்றதும் பின்னழகை அனுபவித்தனர்.. பின்வரிசைக்கு அவர்கள் நகர்ந்தபோது, முன்வரிசையில் இருந்தவர்கள், தமது பார்வையிலேயே அவர்கள் இருக்கும் வண்ணம், மாறி அமர்ந்தார்கள்! மொத்தத்தில், நான்கு ஜோடிகளும் நகரநகர, அமர்ந்திருந்தவர்கள் அத்தனைப் பேரின் விழிகளும், அவர்களோடு இம்மியும் மாறாமல் கூடவே நகர்ந்தன.. அந்த ப்ரம்மாண்டமான மாளிகை முழுவதும் வலம்வந்து முடித்த போது, மாலையாகி விட்டிருந்தது.. கண்களுக்கு பெரும் விருந்தாக இவர்களது காட்சிகளே இருந்ததால், தயாரித்து வைத்திருந்த விருந்தை உண்ண ஒருவருமே முன்வரவில்லை... அவர்களை எல்லாம் கட்டாயப்படுத்தி, விருந்துண்ண வைப்பதற்குள், தசரதரின் சேவகர்களுக்குப் போதும்போதும் என்றாகிவிட்டது!., (வளரும்..) 🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹 ★彡꧁֍ ֍꧂彡★ 💜💙💚❤🧡💛🧡❤💚💙💜 🙏🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🙏 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕 🟣🔵🟢🟠🟡⚪🟡🟠🟢🔵🟣 ★彡꧁֍֍꧂彡★ (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி − 17..) ஆரவாரமெல்லாம் அடங்கி அரண்மனை இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது.. சிரிப்பும் சீண்டலுமாய்... களிப்பும் காதலுமாய்... ஜோடிகள் வளைய வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு முகத்திலும், பூரிப்பும் புன்னகையும் தேங்கி இருந்தன.. ஆனால், ஊர்மிளையின் முகத்தைப் பார்த்து சுமித்திரையால், அவள் சந்தோஷமாக இருக்கிறாளா என்று அனுமானிக்க முடியவில்லை.. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், அவளை ஒருநாள் கேட்டேவிட்டாள்... "ஊர்மிளை....நீ சந்தோஷமா இருக்கயா மா?.. என்பிள்ள உன்ன சந்தோஷமா வெச்சுண்டிருக்கானா மா?.." ஒரு நிமிடம் மௌனமாக இருந்தவள், மெல்ல வாய்திறந்தாள்.. "மாதே..என்ன தப்பா நெனச்சுக்க வேண்டாம்.. என்னோட சந்தோஷத்த, ஒங்க பிள்ள எப்டி எனக்குத் தர முடியும்?.." "சந்தோஷம், துக்கம் எல்லாமே, நம்ம மனச பொருத்த விஷயம்தானே மாதே!.. எதிர்பார்ப்பு பூர்த்தியானா வர சந்தோஷமும், அது நிறைவேறாம போயிடுத்துன்னா வர துக்கமும், நம்மகிட்டயேதானே இருக்கு!.." "என்னப் பொருத்தவர, நான் என்னோட மனச எந்த சஞ்சலமும் நொழையாம பத்ரமா பாத்துண்டு இருக்கேன் மாதே.. அதனால, என்ன எதுவுமே பாதிக்காது..." ஸ்தம்பித்து நின்றாள் சுமித்திரை!.. "இது எப்டி இவளுக்கு சாத்யமாறது!.. வயசில எவ்ளோ சின்னவ இவ!.. என்னோட வயசுக்கு, எனக்கே சிலநேரம் இது சாத்யமாகாம போயிடறதே.." ...ஊர்மிளையைக் கேட்டே விட்டாள்.. "மாதே..வயசு சம்பந்தப்பட்ட விஷயமா, பக்குவம்கிறது?.." "ஒரு பாறையக்கூட உளியால தட்டித்தட்டிதானே பக்குவப்படுத்தறா!.... அதபோலதானே மாதே, நம்ம விதிவழியா வர ஒவ்வொன்னும், நம்மள கொஞ்சம் கொஞ்சமா பக்குவப்படுத்தறது!.., "அதோட இல்லாம, குருவருளும் திருவருளும் இருந்தா, எந்த வயசிலயும் எதுவும் சாத்யம்தானே மாதே?.." ....வியப்பின் எல்லையிலிருந்தாள் சுமித்திரை!.. "எப்பேர்ப்பட்ட பெண்இவள்!.. இவளை மருமகளாக அடையும் தகுதி எனக்கிருக்கிறதா?.. என்மகனுக்கு இவளை மனைவியாய் அடையும் தகுதியும் இருக்கிறதா?.." சுதாரிப்பதற்கே அவளுக்குச் சற்றுநேரம் பிடித்தது... "அம்மா ஊர்மிளை.. ஒனக்கு இந்த வயசில இருக்கற பக்குவம், எனக்கு இப்பவும் இல்லயேம்மா.." விழியோரத்தில் நீர்துளிர்க்க அவள் பேசியதும், ஊர்மிளை சட்டென்று, அவளைப் பார்த்து ஒரு புன்னகையை வீசினாள்.. "மாதே..தெய்வ ஸங்கல்பம் என்னவோ, அதுதானே நடக்கும்!..எதுக்கும் கவலப்படாதீங்கோ.." ஊர்மிளையின் குறையைக் கேட்டு, ஏதாவது சமாதானம் சொல்லலாம் என்று வந்த சுமித்திரை, இப்போது, அவளுடைய பேச்சில், தான் சமாதானமாகிப் போனாள்!.. "ஊர்மிளை...ஊர்மிளை.." அவசரமாகக் கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்தான் லக்ஷ்மணன்.. ஏதோ சித்திரம் வரைந்து கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.. "வா...கொஞ்சம் வெளியே போயிட்டுவரலாம்.." "இன்றென்ன அதிசயம்?.." என்பதுபோல் அவனை ஏறிட்டாள் ஊர்மிளை.. "ராமண்ணாவும் சீதாமாதாவும் சரயுநதியோரம் இருக்கற வனத்துக்குப் போகப் போறாளாம்.. நாமும் போலாம் வா.." ஊர்மிளைக்கும், ஒரு மாறுதலுக்குச் சற்று வெளியில் போய்வர வேண்டும்போல் இருந்ததால், உடனே கிளம்பிவிட்டாள்.. ப்ரமிக்க வைத்தாள் சரயு!.. சுழித்து சுழித்து அவள் ஓடிவருகின்ற வேகம் கொஞ்சம் அச்சுறுத்துவதாய் இருந்தது.. கரையோரம், காலாற நடந்துவிட முடியாதபடி, சேறும் சகதியுமாய் இருந்தது.. அருகிலிருந்த வனத்திலிருந்து, நீர் அருந்துவதற்காக அவ்வப்போது வந்துபோன பலவிதமான மிருகங்களின் காலடிச்சுவடுகளும் அங்கு காணப்பட்டன.. தொலைவிலிருந்து யானையின் பிளிறலும், துஷ்ட மிருகங்களின் உறுமலும் கேட்டவண்ணம் இருந்தது... அண்ணனும் தம்பியும் இரண்டடி முன்னே செல்ல, சீதையும், ஊர்மிளையும் பின்தொடர்ந்தனர்.. வனம் கண்ணில் பட்டதும்தான் தாமதம்... சீதை மெய்மறந்தாள்.. "ரகுவீரரே...பார்த்தேளா.. எவ்வளவு தினுசுதினுசா பூக்கள்!... இந்தக் காத்திலதான் எவ்ளோ விதவிதமான வாசனை கலந்துருக்கு!.. பச்சைபசேல்னு எவ்ளோ குளிர்ச்சியா இந்த இடம் இருக்கு!.." பரவசத்தில் குழந்தையாய் குதூகலித்தாள்... "ஊர்மிளை..வாயேன்.. கொஞ்சதூரம் உள்ளபோய் பாத்துட்டு வரலாம்.. ஏதோ அருவி விழற சத்தம் நன்னா கேக்கறது.. கிட்டப்போய் பாக்கலாம் வா.." "சீதே... உள்ளேந்து துஷ்ட மிருகங்களோட குரல் ஒனக்குக் கேக்கலயா?.." "நாம ஏன் அதுக்கெல்லாம் பயப்படணும் ஊர்மிளை?.. ராகவ சிம்மனும், லக்ஷ்மண வேழமும் நம்ம கூடவே இருக்கச்சே, நமக்கு எதுக்கு பயம்?.." ...கலகலவெனச் சிரித்தாள் சீதை.. அவளது சந்தோஷத்தைப் பார்த்து, ராமன், லக்ஷ்மணன் இருவருமே மகிழ்ந்தனர்.. "வா ஊர்மிளை.. ஒன்னும் பயமில்ல..நாங்க இருக்கோம் இல்ல.." சொல்லியவாறு, லக்ஷ்மணன், ஸ்வாதீனமாக, அவளோடு கைகோர்த்து நடந்தான்.. அவன் ஸ்பரிசம், அவளுள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கவே செய்தது!... (வளரும்..) 🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹🔆🔹 ★彡꧁֍ ֍꧂彡★ 💜💙💚❤🧡💛🧡❤💚💙💜 🙏🌹🌺🌹🌺🌹🌺🌺🌹🙏 ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −18..) ஒரே ஒருகணம்தான்... நிலைதடுமாறினாள் ஊர்மிளை. பின்னர் மெதுவே, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.. "இந்தச் சிலிர்ப்பும் களிப்பும்...இதோ இந்த சரயூ நதியின் ஓட்டமாய், சற்றைக்கெல்லாம் ஓடிவிடத்தான் போகிறது... இதற்கா நான் மயங்குகிறேன்?.. எத்தனை உபதேசம் ஆகியிருந்தும் என்னபயன்?.. மனம் என்வசத்தில் இல்லையே.." தன்னையே நொந்து கொண்டவள், அண்ணனின் ஒவ்வொரு அடியையும் உன்னிப்பாய் கவனித்த வண்ணமிருந்த சுமித்திரை மகனின் பிடியிலிருந்த தன்கைகளை, விடுவித்துக்கொண்டாள்!.. ஆனால், அவனோ அதையும் உணர்ந்தான் இல்லை!.. வெள்ளி நாணயங்கள் விழுந்தோடுவது போன்ற சீதையின் கலகலவென்ற சிரிப்பொலி, அவளை நினைவுகளின் சுமையிலிருந்து மீட்டெடுத்தது.. எதையோ கணவனுக்குக் காண்பித்து, அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.. அவனும் ஆர்வமாய் அவள் காட்டிய இடத்தைப் பார்ப்பது தெரிந்தது.. அது என்னவென்று ஊர்மிளைக்குப் புரிபடும் முன்னரே, லக்ஷ்மணன் குரல் கொடுத்தான்.. "ராமண்ணா....நீங்க வேண்டாம்...இங்கயே இருங்கோ...நானே போய் கொண்டுவரேன்..." சொல்லிக்கொண்டே வேகவேகமாய் போனவன், சட்டென்று உயர்ந்திருந்த அந்த மரத்தின் மீதேறினான். திரும்பி வந்தவன் கைகளில் ஒரு தூக்கணாங்குருவியின் காலியான கூடு இருந்தது!.. பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக இருந்த அந்தக்கூடு, ஜானகியைக் கவர்ந்ததில் வியப்பில்லை!.. லக்ஷ்மணனிடமிருந்து அதை வாங்கி, மிகவும் ஆர்வத்தோடு ஆராயத் துவங்கிய சீதையை, வைத்தகண் வாங்காமல், ரகுநந்தன் பார்த்துக் கொண்டிருந்தான்.. ஏதேதோ சந்தேகங்களை கேட்டவண்ணம் இருந்த சீதையின் கவனம், சற்றைக்கெல்லாம் வேறு ஒன்றின் மீது திரும்பியது.. கூட்டை அப்படியே கீழே போட்டவள், சிறு குழந்தை போல, இருகரங்களையும் தட்டி, சந்தோஷமாய் கூவினாள்.. அவள் காட்டிய இடத்தில் பலவிதமான வண்ணங்களில், பலவிதமான வடிவங்களில் புஷ்பக்காடே இருந்தது.. "மாதே... இருங்கள்.. நான் பறித்துக் கொண்டு வந்து தருகிறேன்.." சிட்டாய்ப் பறந்தான் லக்ஷ்மணன்... தனது மேல் அங்கவஸ்திரம் நிறைய புஷ்பங்களை அள்ளிக் கொண்டுவந்தவன், அப்படியே சீதையின் கரங்களில் கொடுத்தான்.. அவள் முகமும் பூவாக மலர்வதைப் பார்த்து அண்ணனும் தம்பியும் மகிழ்ந்து போயினர்.. "ஹே ஊர்மிளை.. அங்கயே ஏன் நிக்கற?..இந்தப் பூவெல்லாம் எவ்ளோ அழகா இருக்குப் பார்..வா... ஒனக்கு எதுவேணுமோ எடுத்துக்கோ.." சீதையைச் சங்கடப்படுத்த விரும்பாமால், அவள் குரலுக்குக் கீழ்ப்படிந்தாள் ஊர்மிளை.. அந்த நேரம், எங்கிருந்தோ ஒரு சிறிய மான்குட்டி ஒன்று ஓடி வந்தது.. பாவம்...அது இவர்களை எதிர்பார்க்கவில்லை போலும்!.. மிரட்சி கண்களில் வழிந்தது.. திரும்பி ஓடிவிட யத்தனிப்பதற்குள், லக்ஷ்மணன் ஒரேதாவலில் அதைப் பிடித்து விட்டான்!.. கைகொட்டி, குழந்தையாய்ச் சிரித்தாள் சீதை!.. அந்த மான்குட்டியைத் தடவித்தடவிக் கொடுத்தாள்.. தன்கைகளில் ஏந்தி குழந்தை போலும் அதைக் கொஞ்சினாள்.. ராமனுக்கு அவளது செய்கைகள் சிரிப்பையே வரவழைத்தது!.. அண்ணன் முகத்தில் சிரிப்பைப் பார்த்த லக்ஷ்மணன் முகத்திலும் ஆனந்தம்!.. ரொம்பவும் தனியளாய் ஆனது போல் உணர்ந்தாள் ஊர்மிளை.. "எதற்காக நான் இங்க வந்தேன்?..ஏன் இப்படி செய்தேன்?.." தன்னையே கேட்டுக்கொண்டாள்.. ராமன் சீதையின் அந்யோன்யம், தனக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுமோ என்ற அச்சம் அவளுக்குத் தலைதூக்கியது.. "இனிமேல், இவாளோட நான் வரக்கூடாது..இந்தத் தப்ப இனி ஒருதரம் செய்யக்கூடாது.." தனக்குத்தானே கட்டளை இட்டுக் கொண்டாள்... (வளரும்..) ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −19..) அரண்மனைக்குத் திரும்பி வெகுநேரம் ஆகியும், லக்ஷ்மணன் கண்களில் தென்படவே இல்லை.. வழக்கம்போல் தனித்திருந்த ஊர்மிளை, கிளம்பும்போது, தான் பாதி வரைந்து விட்டிருந்த ஓவியத்தை கைகளில் எடுத்துப் பார்த்தாள்.. "இந்த ஓவியமும், என் மனசயே ப்ரதிபலிக்கிறதோ?.." என்று தன்னையே கேட்டுக் கொண்டாள்.. அந்தச் சித்திரத்தில், ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு ஒற்றை மரம் நின்று கொண்டிருக்கிறது.. அந்த மரத்தின் கீழே, தனியாக ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்... அவள் முகத்தில், தனிமை வரிவரியாகக் கோலமிட்டிருந்த காட்சி, நிதர்சனமாய்... "யார் இவள்?.. என்னப் போலயே இருக்காளே.. பேசாம என்பேரயே இவளுக்கு வெச்சுடலாமா?.." பிறகு, தன் யோசனையைத் தானே நிராகரித்தாள்.. "வேணாம்.. பின்னாடி அது விமர்சனங்களுக்கு எடமாயிடும்.. இவளுக்கு "அனாமிகா"னு (பெயரில்லாதவள்) பேர் வெச்சுடறேன்.. அப்பதான், நாளைக்கு எந்தவிதமான சர்ச்சைக்கும் ஆளாகாது.." தூரிகையை எடுத்தவள், முழுவதும் தீட்டி முடித்தாள்.. சித்திரத்தின் மேலே, முத்து முத்தான தன்கையெழுத்தில், "அனாமிகா" என்று எழுதினாள்.. சித்திரத்தின் கீழே, "உனக்குத் துணை நீயேதான்.. உயிருள்ளவரை, உன்நிலை இதுதான்.." என்று எழுதினாள்.. அந்தச் சித்திரத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், சற்றைக்கெல்லாம் அதை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தாள்.. சிறிது நேரத்தில், கண்கள் செருக அப்படியே உறங்கியும் போனாள்.. விடிகாலை கண்விழித்த போது, லக்ஷ்மணன் எங்கோ கிளம்பிச் செல்ல தயாரக இருப்பதை கவனித்தாள்.. "சௌமித்ரரே... இவ்வளவு அதிகாலையில கிளம்பறேளே..ஏதாது அவசர வேலையா?...இன்னும் பொழுது கூட சரியா விடியலயே.." "அ...ஆமாம் ஊர்மிளை... அண்ணாவோடயும், சீதா மாதாவோடயும் கொஞ்ச நாழி பேசிட்டு வரலாம்னு கெளம்பறேன்.." "நேத்து ராத்திரி ரொம்பநாழி அவாளோடதான் பேசிண்டு இருந்தேன்.. சீதா மாதாவுக்கு எவ்ளோ விஷயம் தெரிஞ்சிருக்கு தெரியுமா?.. நெறய கதை, உபதேசம் எல்லாம் சொல்றா.. கேக்கறதுக்கே ரொம்ப ரம்யமா இருக்கு... நீயும் வேணா வரயா?.." அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் பதில் கூறியவன், தான் கிளம்புவதிலேயே குறியாய் இருந்தான்.. சட்டென்று அவன் மேல், ஊர்மிளைக்கு கோபம் வந்தது.. "என்னதிது!..இங்கிதமே தெரியாம இப்படி இருக்காரே.. அவாளுக்குனு கொஞ்சம் நேரமாவது இவர் தர வேணாமா?.. எப்போ பாத்தாலும், இவர் அங்க போய் ஒக்காந்துண்டிருந்தா நன்னாவா இருக்கும்?.." மனதில் பட்டதை, அவனிடத்தில் அப்படியே சொன்னாள்.. ஆனால், லக்ஷ்மணன் அவள் கூறியதை, அப்படியே நிராகரித்தான்.. "ஊர்மிளை..எனக்கு சீதா மாதா வேற...சுமித்திரை மாதா வேற இல்ல.. ராமண்ணாவோ எனக்கு தந்தையோட ஸ்தானம்.. ஒரு அப்பாஅம்மாவ பாக்கறதுக்கு, கொழந்தை அடிக்கடி போறதில என்னதப்பு?.. அதுவும் இல்லாம, எந்த ஒரு அப்பா அம்மாவும், தன் கொழந்தய எடஞ்சலா நெனக்கவே மாட்டா.." "அடக்கடவுளே.. இல்வளவு விவரமில்லாதவரா இருக்காரே.." உள்ளுக்குள்ளேயே பொருமினாள் ஊர்மிளை.. "கொஞ்சம் நான் சொல்றத கேளுங்கோ... ஒங்க சீதா மாதா சொல்ற கதையும், உபதேசமும் எனக்கும் நன்னாத் தெரியும்.. எல்லாம் எங்க அம்மா சொல்லிக் கொடுத்ததுதான்.. அத கேக்கறதுக்கு, இவ்ளோ காலங்காத்தால நீங்க அங்க போறது சரியாப்படலே.. நேத்தி ராத்திரியும், அவா நேரம் கழிச்சுதான் படுத்துண்டிருப்பா... சொல்றத, புரிஞ்சுக்கோங்கோ.. நாம அடுத்தவாளுக்குத் தொந்தரவா இருக்கக்கூடாது..." "அதெல்லாம் நான் பாத்துக்கறேன்..நீ தேவயில்லாம, ஒன்னையும் குழப்பிண்டு, என்னயும் குழப்பாதே ஊர்மிளை.." .....போயே போய்விட்டான்!.. "ஹும்.. நான்,சொல்லி, இவர் எதுவுமே கேக்கப் போறதில்ல..நான் எதுக்கு இவர் விஷயத்தில தேவையில்லாம தலயிடணும்?.. அண்ணனாச்சு..தம்பியாச்சு.." நினைத்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தவள், நேரே பெட்டியைத் திறந்து, தான் நேற்று பத்திரப்படுத்தியிருந்த "அனாமிகா"வை கைகளில் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள்... "இனிமே, ஒன்னோடதான் என்பொழுதெல்லாம் போகப் போறது அனாமிகா.... என் உணர்ச்சிகளோட வடிகாலே இனி நீதான்.." சொல்லிக் கொண்டே, அடுத்த ஓவியத்தில், "அனாமிகா"வை எப்படி நிறுத்த வேண்டும் என்ற கற்பனையில் ஆழ்ந்து போனாள்.. (வளரும்..) ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி − 20..) அனாதரவாக இருந்தவளின் பொழுது, அனாமிகாவோடு கரைய ஆரம்பித்தது... ஊர்மிளையின் அனாமிகா, நிறைய அவதாரம் எடுத்தாள்.. ஆள்அரவமில்லாத ஒரு ஒற்றையடி பாதையில், தனியளாய் போய்க் கொண்டிருப்பாள்... வெண்ணிலவு தவழும் இரவின் மடியில், இந்தப் பெண்ணிலவு, வானில் ஒளிர்கின்ற விண்மீன்களை எண்ணிக் கொண்டிருப்பாள்.. சுழலிலே சிக்கிய ஒரு சிறுபடகில், அவள் மட்டுமே இருப்பாள்! அமானுஷ்யமான வனாந்திரத்தில், அபலையாய் நிற்பாள்!.. மொத்தத்தில், ஊர்மிளையின் சுயபச்சாதபத்தின் சுவடுகளாகவே, அனாமிகா மாறிப் போயிருந்தாள்! தன்னால் உருவாக்கப்பட்ட பாத்திரமே அனாமிகா என்பதும், ஒரு காலகட்டத்தில், ஊர்மிளைக்கு மறந்து போயிருந்தது.. அவளை ஏதோ உயிருள்ள ஒரு பெண்ணாகவே கற்பனை செய்துகொண்டு, அவளிடம் ஆறுதல் வார்த்தைகள் பேசிவரலானாள்.. அந்த வார்த்தைகள், அனாமிகாவுக்கு ஆறுதல் அளித்ததோ இல்லையோ, ஆனால் நிச்சயமாய் ஊர்மிளையின் காயங்களுக்கு மருந்திட்டன!.. லக்ஷ்மணனுடன் தனக்குத் திருமணம் ஆனதைக்கூட ஒரு தற்செயலான நிகழ்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொண்டாள்.. அவனிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், தனித்திருக்க, தன்னைப் பழக்கிக் கொண்டாள்.. குற்ற உணர்ச்சியில் குறுகிப் போயிருந்த சுமித்திரையின் மனஉறுத்தலைக் குறைக்க தன்னால் இயன்ற அளவு முயற்சிகளையும், அவ்வப்போது செய்து வரலானாள்.. அடிக்கடி அவளைப் போய்பார்த்து, பேசுவதை வழக்கமாகவும் கொண்டிருந்தாள்.. அப்படி ஒரு சமயம், சுமித்திரையின் அறையில் ஊர்மிளை இருந்த போது, தாயைப் பார்ப்பதற்காக வந்த லக்ஷ்மணன், அன்னையோடு இவள் இருக்கக் கண்டு, புருவத்தை உயர்த்தினான்... "இங்க என்ன பண்ற ஊர்மிளை?.." அவள் வாய் திறப்பதற்குமுன், சுமித்திரை முந்திக் கொண்டாள்.. "ஓ... பரவாயில்லயேப்பா... ஒனக்கு இவளோட பேர்கூட ஞாபகத்திலே இருக்கே.." "மா....தே.... நீங்க என்ன சொல்ல வரேள்னு புரியலயே..." "இதுமட்டுமா?..ஒனக்கு நெறய விஷயம் புரியாமதானே இருக்கு!.. அதில இதுவும் ஒண்ணுனு வெச்சுக்கோப்பா.." சுமித்திரையின் குத்தல் பேச்சுக்குக் காரணம் ஊர்மிளைதான் என்பதாக அனுமானித்தவன், "ஊர்மிளை... ஒனக்கு இங்கென்ன வேலை?.. இங்க வந்து எதுக்கு சுமித்திரா மாதாவைத் தொந்தரவு பண்ணறே?.." என சினம் மேலிட வினவினான்.. தன் தவறை மறைக்க, அவன் பேசுவது, ஊர்மிளைக்குப் புரிந்தது.. "சௌமித்ரரே.. தப்பா நெனச்சுக்காதீங்கோ.. மாதாவுக்குப் பேச்சுத்துணைக்காகத்தான் வந்தேன்.. ராஜாங்க கார்யங்களோட சுமையால, மன்னராலே, மாதாவுக்கு நேரம் ஒதுக்கமுடியல.. மாதாவ பாக்கறதுக்கு ரொம்பப் பாவமா இருந்தது.. அதனாலதான்...." ....ஊர்மிளை முடிக்காமல் இழுத்ததைப் பார்த்ததும், சுமித்திரை நெகிழ்ந்து போனாள்.. "இந்தப் பெண்ணுக்கு, இங்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதே..எங்கு சென்றால், எம் பாவங்கள் எல்லாம் கரையும்?.." தன்னைத்தானே வினவிக் கொண்டவளின் விழிகள் நனைந்தன.. ஆறுதலாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்த ஊர்மிளை, அங்கிருந்து அகன்றாள்.. இத்தனை நாளும் நெஞ்சில் கொந்தளித்துக் கொண்டிருந்ததை, இன்று லக்ஷ்மணனிடம் கொட்டித் தீர்த்தாள் சுமித்திரை.. "ஏன் இப்படி அவளுக்குத் துரோகம் செய்யற லக்ஷ்மணா?. ஒனக்கே இது ந்யாயமா படறதா?.. பெண்பாவம் பொல்லாதுனு ஒனக்குத் தெரியாது?.." துடித்துப் போனான் லக்ஷ்மணன்!.. "மாதே.. ஒங்க மனசு எனக்குப் புரியறது.. ஆனா, ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?.. ஊர்மிளை கிட்ட இதுவிஷயமா, கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தேன் மாதே.. யோசிச்சு முடிவு எடு..பின்னாடி வருத்தப்படாதேன்னு சொல்லியும், அவ ஏன் என்னக் கல்யாணம் செஞ்சுண்டானு தெரியல.." "என்னால என்ன மாத்திக்க முடியல மாதே.. எனக்கு ராமனிடம் இருக்கும் ஈர்ப்பு, மீதி எந்த விஷயத்திலயும் இல்ல.. என்ன கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கோ மாதே.." "நான் ஏன் இப்டி இருக்கேன்னு ஒரு பெத்தவளா ஒங்களால சொல்லமுடியலைனா பரவாயில்ல.. ஆனா, எல்லாரும் ஒங்கள தீர்க்கதரிசின்னு சொல்றாளே.. அதனால ஒங்கள கேக்கறேன்...நான் ஏன் இப்டி இருக்கேன்?.. நீங்களே சொல்லுங்கோ மாதா.. என்னால என்ன மாத்திக்க முடியலயே.." கண்ணீரோடு, தாயின் மடியில் முகம் புதைத்தான் தனயன்.. சுமித்திரைக்கும் விழிதிரண்டது.. தன்னை மீறிய செயலாய், ஆறுதலாய் அவனைத் தடவி கொடுத்தாள்.. லக்ஷ்மணன் சென்ற வெகுநேரத்திற்குப் பிறகும், அவள் மனம் அவனையே சுற்றிச் சுற்றி வந்தது... எத்தனை யோசித்த போதும், ஊர்மிளைக்கு லக்ஷ்மணன் செய்கின்ற துரோகம், சுமித்திரைக்கு மலையாகத்தான் தெரிந்தது!... "சரி.. இதற்கானத் தீர்வை ராமனிடமே கேட்போம்... அவன் எடுத்துச் சொன்னாலாவது, இவன் மாறுகிறானா பார்ப்போம்.." என்று மனதில் தீர்மானித்தவள், ராமனிடம் பேசுவதற்கான சரியான தருணத்திற்காகக் காத்திருந்தாள்.. (வளரும்..) ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −21..) குலகுரு வசிஷ்டரோடும், முக்யமான மந்திரிகளோடும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்காக தசரதர் ஆலோசித்துக் கொண்டிருந்த விஷயம், எப்படியோ வெளியில் கசிந்திருந்தது.. அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத தகவல் என்பதால், அவரவரும் கூடிக்கூடி ரகசியமாய்ப் பேசிக் கொண்டனர்.. மன்னர் வாயினால் அறிவிக்கப்பட்ட சேதியானால், பேசுவதற்கு எந்தத் தடையுமில்லை.. ஆனால் இது இன்னமும் வெளியிடப்படவில்லை! அதனால், அதை பேசுவதற்கு அனைவருக்கும் தயக்கம் இருந்தது.. இந்த நிலையில்தான், மன்னர், ப்ரஜைகளை ஒரு முக்யமான விஷயத்திற்காக அழைத்திருக்கிறார் என்ற சேதி வந்து சேர்ந்தது.. மக்கள் அனைவரையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.. குறிப்பிட்ட நாளும் வந்தது.. நேரமும் வந்தது.. அவ்வளவு பெரிய திரளும், மன்னரின் வாயிலிருந்து வருகின்ற செய்திக்காக ஆசையோடு காத்திருந்தது.. மக்களிடம் ராஜ்ய பரிபாலனம் சரியாக நடந்து வருகிறதா, ஏதேனும் குறைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறதா, போன்றவற்றை முதலில் கேட்டறிந்தார் தசரதர்.. அதன்பிறகு, வயோதிகத்தின் காரணமாக, தம்மால் முன்போல் இயங்கமுடியவில்லை என்றும், அதனால் தனது மூத்த குமாரன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யலாம் என உத்தேசித்திருப்பதையும் கூறியவர், ப்ரஜைகளின் சம்மதத்தையும், இந்த விஷயத்தில் கோரினார்.. அவ்வளவுதான்...கூட்டம் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தது.. "சீக்கிரம் செய்யுங்கள் மன்னா..அப்படியே செய்யுங்கள்.." ஒரே கூரலில் அனைவரும் உடனடியாக சந்தோஷத்தோடு சம்மதம் தெரிவித்தது, தசரதருக்கு அவர்கள் இந்தச் செய்திக்காகவே வெகுகாலமாய் காத்திருக்கிறார்களோ என்ற எண்ணத்தை உண்டாக்கியது!... அங்கே, அவ்வளவு சந்தோஷ அலை வீசியது!.. இனி மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை குலகுருவிடம் ஆலோசித்தார் தசரதர்.. முதலில் பட்டாபிஷேகத்துக்கான நாள் அடுத்த சுபமுஹுர்த்தத்திலேயே குறிக்கப்பட்டது.. மீதி ஏற்பாடுகள் எல்லாம் வசிஷ்டரின் அறிவுறுத்தலின்படி சுமந்திரரே மேற்கொண்டார். தன்வாயினால் இந்த இனிய சேதியை, தமது மனைவிகள் மூவருக்கும், சொல்ல ஆசைப்பட்டார் தசரதர்.. முதலில், கோசலையிடமும், சுமித்திரையிடமும் இந்த சந்தோஷ சமாசாரத்தைப் பகிர்ந்தார்.. சேதி கேட்டு, கோசலையைவிட, சுமித்திரையே அதிக ஆனந்தம் அடைந்தாள்!.. "நல்ல முடிவு அரசே! தமது மேற்பார்வையில், ராமன் நாடாளட்டும்!.. தமக்கு மங்களம் உண்டாகட்டும்!.." என்று தன் மனதைத் திறந்தாள் அவள்.. கடைசியாகத்தான், தசரதர் தனது காதல் மனைவியான கைகேயியின் அந்தப்புரத்துக்குச் சென்றார்.. "மற்றவர்களிடம் விஷயத்தைச் சொல்வது வேறு.. என் கைகேயியிடம் சொல்வது வேறு.. ராமன் அவள் மகன் அல்லவா?.. அவளுக்குத்தான் அனைவரை விடவும் ஆனந்தம் அதிகமிருக்கும்!.. ஏற்கனவே பூவாய் மலர்ந்திருக்கும் அவள் முகம், இந்த விஷயம் கேட்டால் என்ன ஆகும்?.. சந்தோஷத்தில் என்னை அணைத்துக் கொண்டு தட்டாமாலை சுற்றுவாளோ?.. இல்லை, நெகிழ்ச்சியில் அழுதே விடுவாளோ?.." ஆயிரம் யோசனைகளோடும், எதிர்பார்ப்புகளோடும் உள்ளே நுழைந்தவர், பின் நடந்த நிகழ்வுகளால், அரை உயிராய், நினைவுதப்பி, அங்கேயே விழுந்து கிடந்தார்.. கைகேயிதான், துணிச்சலோடு சுமந்திரரை வரவழைத்து, தனது கட்டளைகளை ராமனுக்குச் சொல்லி அனுப்பினாள்! நேற்று இரவு வரையில் இருந்த அரண்மனையா இது?.. ஒவ்வொருவர் முகத்திலும் துக்கம் அப்பிக் கிடந்தது.. ராமனுக்குப் பட்டாபிஷேகம் இல்லை என்ற சேதியை விட, ராமன் பதினான்கு வருஷகாலம் வனவாசம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு, ஒவ்வொருவர் உதிரத்தையும் கொதிக்க வைத்தது! விஷயம் அறிந்த லக்ஷ்மணன், விஷப்பாம்பாய்ச் சீறினான்.. அவனை நெருங்கவே அனைவரும் அச்சப்பட்டனர்! மரவுரி தரித்து வந்த ராமனையும் சீதையையும் கண்டவனின் கண்கள், ஆறாகக் கண்ணீரைப் பெருக்கின.. "ராமண்ணா...எங்கே கிளம்பிட்டேள்?. வனத்துக்கா?.." துக்கம் தொண்டையை அடைக்க வினவினான்.. "ஆமாம் லக்ஷ்மணா.. தந்தை கட்டளை அதுதானே!.." "....அ...ண்...ணா.... நான் மட்டும், இங்க இருப்பேன்னு நெனச்சேளா?.." "நீ இங்கதான் இருக்கணும் லக்ஷ்மணா... நம்ம மூணு மாதாக்களையும், தந்தையையும் பாத்துக்கற கடமை ஒனக்கிருக்கு.. அதுவும் இல்லாம, ஒன்ன நம்பி ஊர்மிளை இருக்கா.. அவள மறந்தயோ?.." ராமனின் இந்த வார்த்தை, சுமித்திரையை கலங்க வைத்தது.. "இவன்கிட்டதான், லக்ஷ்மணன் விஷயம் பேசணும்னு நெனச்சுண்டு இருந்தேன்.. ஆனா...அதுக்குள்ள என்னவெல்லாமோ நடந்துடுத்தே..." அவள் எண்ண ஓட்டத்தை தடைசெய்வது போல, அழுகையோடு கூட லக்ஷ்மணன் இப்போது பேசினான்... "இல்லண்ணா....என்னால ஆகாது.. நீங்க இல்லாம ஒரு க்ஷணம் கூட நான் இங்க இருக்க மாட்டேன்.. எனக்கு ஒங்களத்தவிர, வேற யாருமே வேண்டாம்.. நீங்க என்ன ஒங்களோட கூட்டிண்டு போகலைனா, அப்பறம் என்ன உயிரோட பாக்கவே முடியாதுண்ணா...." உடைந்து போய் அழுதவனை, தேற்றக்கூடத் தெரியாமல், அனைவரும் விக்கித்து நின்றனர்! அந்த நேரம், லக்ஷ்மணனின் தோள்களை, ஒருகை ஆதரவாய்த் தாங்கியது.. கண்ணீர் மறைக்கின்ற கண்களின் வழியே பார்த்தவனுக்கு, தன்னை அரவணைப்பது, ஊர்மிளைதான் என்பது புரிந்தது.. "ஊ...ர்...மி...ளை...." சிறுகுழந்தையாய் அவள் மார்பில் முகம் புதைத்து, தேம்பித் தேம்பி அழுதான்.. அவளது ஆறுதல், இப்பொழுது அவனுக்கு இதம் அளித்தது! அவனது அந்தச் செய்கை, "இப்பொழுதேனும், இவன் அவளை மனைவியாக அங்கீகரித்தானே!.." என்று சுமித்திரையை, ஒருகணம் எண்ண வைத்தது!.. தனது சேலைத் தலைப்பால் அவன் முகத்தை மெல்லத் துடைத்தாள் ஊர்மிளை.., கைத்தாங்கலாக, அவனைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.. வருத்தத்தில் இருக்கின்ற குழந்தை, தனது தாயின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு, பின்தொடர்வது போல், ஊர்மிளையைத் தொடர்ந்தான் லக்ஷ்மணன்... (வளரும்..) [3:02 AM, 5/25/2023] Mohan SriRaghavendrar Kulithalai: ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −22..) "சௌமித்ரரே.. எதுக்கு இவ்ளோ வருத்தப்படறேள்?.. இப்போ என்ன ஆயிடுத்து?.. ஒங்க சகோதரரோட நீங்களும் போகணும்... அவ்ளோதானே?.." சரேலென்று நிமிர்ந்தான் லக்ஷ்மணன்.. "ஊ..ர்...மி..ளை... அப்போ நானும் வனம் போறது ஒனக்கு சம்மதமா?.." ஒருகணம் அவனை ஆழமாக ஊடுருவினாள் ஊர்மிளை.. "சௌமித்ரரே..நான் கேக்கறேனேனு தப்பா நெனச்சுக்காதீங்கோ.. என்னோட சம்மதத்த கேட்டா இதுவரையிலும் நீங்க நடந்துண்டு இருக்கேள்?.. " குற்ற உணர்ச்சியில் தலைகவிழ்ந்தான் லக்ஷ்மணன்.. "ப்ச்.....விடுங்கோ..இப்போ அத பேசறதுல ஒரு லாபமும் இல்ல.. விஷயத்துக்கு வருவோம்.. ஒங்களுக்கு ஒங்க சகோதரர் இல்லாம இருக்க முடியாது.. அவரோட ஒங்களுக்குப் போயே ஆகணும்.. அதுக்கு நான் தடையாயிடுவேனோனு பயப்படறேள்..அதானே?.." நேரிடையாக ஊர்மிளை கேட்ட கேள்வியில், வாயடைத்து நின்றான் லக்ஷ்மணன்.. "கவலப் படாதீங்கோ சௌமித்ரரே.. ஒங்க வழியில நான் உபத்திரவமா குறுக்க வரமாட்டேன்.. நீங்க தாரளாமா ஒங்க சகோதரரோட புறப்படலாம்.." "ஊர்மிளை...நெஜமாவா சொல்ற?.." விரக்தியாக சிரித்தாள் ஊர்மிளை.. "சௌமித்ரரே.. எனக்கு இழப்புனு பெரிசா ஒன்னும் இல்ல!.. அக்னி சாட்சியா அன்னிக்கு என்ன கல்யாணம் பண்ணிண்டதோட சரி.. இன்னிவரைக்கும் எனக்குள்ள எரியற அக்னிய நான் தனியாதான் சமாளிச்சுண்டு இருக்கேன்.." "அதோட இல்லாம ஓரமா இருந்தே ஒங்கள பாத்து பழகிட்ட எனக்கு, நீங்க தூரமா போறதால, பெரிசா ஒன்னும் பாதிப்பு ஏற்படப் போறதில்ல.." "இதெல்லாம் சொல்லிக் காமிக்கணும்னு சொல்லல.. ஆனா, நீங்க புதுசா எனக்கு எதுவும் தண்டனை தரப்போறதில்லைனு தெரிஞ்சுக்கறதுக்காக சொல்றேன்.." "நீங்கதான், நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே, நீங்க ஒங்க சகோதரருக்கு அடிமைன்னு சொல்லிட்டேளே.. ஒரு அடிமைக்கு வாழ்க்கப்பட்ட நான், என்னோட உரிமையப்பத்திப் பேசக்கூடாது இல்லயா?.." எத்தனைதான் கட்டுப்பாட்டோடு இருந்தாலும், அவளையும் மீறி, விழிகள் உடைப்பெடுத்துக் கொண்டன.. ஒருவிதமான இயலாமையோடு லக்ஷ்மணன் பார்த்துக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில், இயல்பு நிலைக்கு மாறினாள் ஊர்மிளை.. கண்களைத் துடைத்துக்கொண்டவள், மனப்புண்களையும் மறைத்துக் கொண்டாள்! "சௌமித்ரரே, போய்ட்டு வாங்கோ...தமக்கு மங்களம் உண்டாகட்டும்.." இரண்டு கரங்களையும் கூப்பினாள்.. கொஞ்சம் தயக்கத்தோடு லக்ஷ்மணன் ஊர்மிளையைப் பார்த்தான்..மென்று விழுங்கினான்.. "ஊ..ர்...மிளை...நான் ஒன்ன ஏமாத்தினதா நெனக்கறயா?.." இதழோரம் ஒரு கேலிப்புன்னகையைத் தவழவிட்டாள் ஊர்மிளை.. "சௌமித்ரரே... நீங்க என்ன ஏமாத்தல..நானும் ஏமாறல..நம்மளோட தலையெழுத்துதான் நம்ம ஏமாத்திடுத்து!..." "விதிவசம்"னு சொல்வாளே..அது இதுதான்!. நீங்களும், நானும் என்ன பண்ணமுடியும்?.." நெகிழ்ந்து போனான் லக்ஷ்மணன்!.. இப்போது, அவன் கண்களில் நீர்துளிர்த்தது.. "எவ்வளவு பெரிய உதவி செய்யறதுக்கு தன்ன கொடுத்துருக்கா!.. இவளுக்கு நான்தான் எவ்ளோ கடமைப்பட்டிருக்கேன்!.." தன் எண்ணத்தை அவளிடம் வெளிப்படுத்தினான்.. "ஊர்மிளை.. ஒன்னோட இந்த பேருபகாரத்துக்கு, நான் என்ன கைமாறு செய்யப்போறேன்?.." "இது உபகாரம் இல்ல சௌமித்ரரே.. இதவிட்டா, நம்ம ரெண்டுபேருக்குமே வேறவழி இல்லை.. தம்மால், தமது சகோதரரைப் பிரிந்து உயிர்வாழ முடியாது.. என்னால், ஒரேயடியாக தம்மைப் பிரிந்துவிடமுடியாது.. எங்கயோ நீங்க இருக்கேள்னு நெனச்சுண்டு, காலத்த ஓட்டிடுவேன்.." தன்னையுமறியாமல், அவளைச் சட்டென்றுத் தழுவிக் கொண்டான் லக்ஷ்மணன்.. துள்ளி விலகினாள் ஊர்மிளை!.. "சௌமித்ரரே.. பெண்ணாகவே இருந்தாலும், எனக்கும் உணர்ச்சிகள் உண்டு.. போகிற போக்கில் நீங்கள் பத்தவைத்துவிட்டுப் போற ஒரு சிறு பொறி, காட்டுத்தீயா மாறி, என்ன கொள்ளை கொண்டு போக்கூடாது.. இத்தனை நாளாய் செஞ்சுண்டிருக்கிற தவத்தில, எந்த இடையூறையும் நான் விரும்பலை.. நீங்க போய்டு வாங்கோ.." கரங்களைப் பற்றி, அவனை அறைக்கு வெளியே கொண்டுவந்து விட்டவள், எல்லாக் கதவுகளையும் அறைந்து மூடினாள்.. "ராமண்ணா... ஊர்மிளை...என்னயும் ஒங்களோட கெளம்பச் சொல்லிட்டா.. அதனால, நானும் ஒங்களுக்குத் துணையா வரேன்.." "சுமித்ரா மாதே..என்ன ஆசீர்வாதம் பண்ணுங்கோ.." என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானித்த சுமித்திரை, இனி பேசி எதுவும் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.. "பதினாலு வருஷம் கழிச்சுதான் மறுபடியும் பாக்க முடியும்..நல்லபடியா அனுப்பி வெப்போம்.." அன்னையாய், அவனுக்கு ஆசி வழங்கினாள்.. ஆனால், ஒரு பெண்ணாய் அவள் மனது, ஊர்மிளைக்காக உருகியது.. நீருக்குள் மீன் அழுதால் எப்படி வெளியே தெரியாதோ, அது போன்று, இப்பொழுது அனைவரும் ராமன் மனைவியோடும், தம்பியோடும் வனம் ஏகுவதை எண்ணி ஆற்றாமை தாங்காமல் அழுத அழுகையில், சுமித்திரையின் ஊர்மிளைக்கான கண்ணீரும் கலந்து மறைந்தது.. (வளரும்..) [3:06 AM, 5/25/2023] Mohan SriRaghavendrar Kulithalai: ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −23..) கங்கை கரையில், குகனுடைய ப்ரதேசத்தில் அன்றைய பொழுது கழிந்தது.. குகனோடு இரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்ததால், லக்ஷ்மணனுக்கு அன்று உறக்கம் வரவில்லை.. விஸ்வாமித்ர முனிவரிடமிருந்து, "பலை, அதிபலை" ஆகிய மந்திர உபதேசங்கள் ராமலக்ஷ்மணர்களுக்கு, ஆகியிருந்த படியால், பசி, தாகம், சோர்வு முதலிய உபாதைகள் லக்ஷ்மணனைத் தீண்டவில்லை.. குகனுடைய உதவியால் கங்கையைக் கடந்து, வனத்திற்குள் ப்ரவேசமும் செய்தாயிற்று.. அன்றைய பகல் பொழுதுக்கு, ராமனுக்கும் சீதைக்குமாக, சில கனிவகைகளை ஆகாரமாக, லக்ஷ்மணன் சேகரித்துத் தந்தான்.. உண்டபிறகு, சற்று நேரம் அவர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அன்றைய இரவைக் கழிப்பதற்காக வேண்டி, லக்ஷ்மணன் ஒரு தற்காலிகமான குடிலை அமைத்தான்.. அதற்குள் அந்தி சாய்ந்து, இரவும் கவிந்திருந்தது.. துஷ்ட அரக்கர்களும், ம்ருகங்களும் நடமாடும் ப்ரதேசம் ஆனதால், தான் இரவெல்லாம் காவல் காக்க இருப்பதாகக் கூறிய லக்ஷ்மணன், குடிலுக்கு வெளியிலேயே தங்கிக் கொண்டான்.. நள்ளிரவைத் தாண்டிய நேரம்.. கடந்த இரு தினங்களாக உறக்கமற்று இருந்த லக்ஷ்மணன் விழிகள், உறக்கத்துக்காக கெஞ்சின.. குடிலைச் சுற்றிச்சுற்றி வலம்வந்து பார்த்தான்.. குளிர்நீரால் கண்களைக் கழுவியும் பார்த்தான்.. என்ன செய்தும், இயற்கையின் நியதியைத் தடுத்துவிட முடியுமா என்ன?.. கண்கள் அவனையும் மீறி செருக ஆரம்பித்தன.. "அச்சோ..நான் என்ன செய்வேன்?.. வந்த ஓரிரு நாட்களுக்குள்ளாகவே எனக்கு இரவு உறக்கம் தேவைப் படுகிறதே!.. யஜமானனுக்கு சேவகம் செய்வதுதானே, ஒரு வேலைக்காரனின் கடமை?.. அதைவிடுத்து, யஜமானனுக்குச் சரியாக, உண்டு உறங்கி எழுந்தால், அது எந்தவிதத்தில் ந்யாயமாகும்?.. பிறகு, யஜமானனுக்கு, இந்த வேலைக்காரனின் தேவைதான் என்ன?.." சிந்தனை வயப்பட்டான் லக்ஷ்மணன்.. "இது ஒருநாள், இருநாள் வந்து போகக்கூடிய ப்ரச்சனையில்லை.. இது இனி தினமும் எனக்குப் பெருந்தொல்லையாகவும், மிகப்பெரிய சவாலாகவும் இருக்கப் போகிறது... என்ன செய்வது?.." தீவிரமாக யோசித்தவனுக்கு, ஒரு சிறு நம்பிக்கை பிறந்தது.. "நாம் ஏன் உறக்கத்திற்கு அதிதேவதையான நித்ராதேவியிடமே, இதற்கு ஒரு தீர்வைக் கேட்கக் கூடாது?.." எண்ணிய வேகத்திலேயே, செயல்படவும் செய்தான் லக்ஷ்மணன்.. நித்ராதேவியைக் குறித்த மந்திரத்தைக் கூறி, அவளை அழைத்ததும், அவள் உடனே ப்ரஸன்னமானாள்.. இருகரம் குவித்து, சிரம் தாழ்ந்து வணங்கினான், லக்ஷ்மணன்.. "சொல் சௌமித்ரா!.. எதற்காக என்னை அழைத்தாய்?.." "தேவி..தம்மால் அடியேனுக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..அதற்கு தமது அனுக்ரஹத்தை யாசிக்கிறேன்.." "என்னவென்று சொல்வாய் லக்ஷ்மணா.." "தேவி..தந்தை சொற்படி பதினான்கு வருஷ வனவாசத்திற்காக அடியேனது சகோதரன் ராமன், தனது பத்னியுடன் வனம் வந்திருக்கிறான்.. அவர்களுக்குக் காவலாக அடியேனும் உடன் வந்திருக்கிறேன்.. ஆனால், இந்தக் காவலாளிக்கு, இரவானால் உறக்கம் வந்துவிடுகிறது தேவி..." நித்ராதேவி சிரித்தாள்.. "இது இயற்கைதானே சௌமித்ரா.. இதற்குப் போய் என்னை ஏன் அழைத்தாய்?." "தேவி.. சற்று அடியேனது ப்ரச்சனையைக் கேட்டு, தாமே அதற்கு ஒரு தீர்வையும் தர வேண்டுகிறேன்.." "சொல்.." "தேவி..தாம் அறியாததல்ல.. கானகம் என்பது துஷ்ட அரக்கர்களும், துஷ்ட ம்ருகங்களும் சுற்றித் திரியும் ப்ரதேசம்..அதுவும் இரவில்தான் இவைகளின் சஞ்சாரமும் அதிகம்.. இந்த சமயத்தில், சகோதரனைக் காவல் காக்க வேண்டிய அடியேனும், அவனோடு சேர்ந்து உறங்கினால், வந்த நோக்கமே வீணாகிவிடாதா?.." "சரியே...அதற்கு...நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?." "தேவி..தாம் நினைத்தால், இந்த பதினான்கு வருஷகால வனவாசமும், அடியேனுக்கு உறக்கமே இல்லாமல் செய்துவிட முடியாதா?.." வாய்விட்டே சிரித்தாள் நித்ராதேவி.. "இது என்ன லக்ஷ்மணா.. இயற்கைக்கு விரோதமாகப் பேசுகிறாய்!.. உலகின் ஜீவராசிகள் அனைத்தும் உறங்கி எழவேண்டும் என்பதுதானே விதி!.. பக்ஷிகளும், ம்ருகங்களும்கூட இதற்கு விலக்கல்லவே.." "புரிகிறது தேவி.. இந்த இயற்கைக்குக் கட்டுப்பட்டால், அடியேன் ராமனுக்குக் கைங்கர்யம் செய்ய முடியாமல் போய்விடுமே...தாமே இதற்கு ஒரு மாற்றுவழி கூறுங்கள் தாயே... இயலாதவனாய், இந்த லக்ஷ்மணன் தம்முன் நின்று, தம் சகாயத்தை ப்ரார்த்திக்கிறேன்.." மனம் இரங்கினாள் நித்ராதேவி.. "ஹும்....ராம கைங்கர்யம் என்கிறாய்.. என்னால் ஆன சகாயத்தையும் கோருகிறாய்.. ஆனால், அப்படி மொத்தமாக உறக்கத்திலிருந்து உனக்கு விலக்கு அளிப்பதுதான் சாத்யமாகப் படவில்லை..." "தேவி..என்னைக் கைவிட்டு விடாதீர்கள்.. இந்த எளியவன்மேல் கருணை வையுங்கள்.." மன்றாடினான் லக்ஷ்மணன்.. இன்னும் சற்று இரங்கிவந்தாள் நித்ராதேவி.. "சரி.. இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.. உனது உறக்கத்தை யாராவது வாங்கிக் கொள்ள முன்வருவார்களா?.. அப்படி இருந்தால் சொல்!.. அவர்கள் உனக்காக உறங்க, நீ விழித்திருக்க இயலும்!.." மலைத்து நின்றான் லக்ஷ்மணன்.. "தே...வி..." தடுமாறினான்.. "ஆமாம் லக்ஷ்மணா.. இந்த ஒரே வழிதான் இருக்கிறது.. உனக்காக த்யாகம் செய்ய யார் இருக்கிறார்கள் என்று யோசித்து, பதிலைச் சொல்.." "த்யாகம்" என்ற வார்த்தையைக் கேட்டதுமே, லக்ஷ்மணனுக்கு, ஊர்மிளையின் ஞாபகம்தான் வந்தது.. அவன் முகத்தில் சட்டென்று ஒரு சின்ன ப்ரகாசம் தோன்றியது.. (வளரும்..) ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி − 24..) லக்ஷ்மணன் முகம் சட்டென்று ப்ரகாசம் அடைவதைக் கவனித்தாள் நித்ராதேவி.. "என்ன சௌமித்ரா, உனக்குப் பதிலாக உறங்க விருப்பம் தெரிவிக்கும் நபரை, கண்டறிந்தாயா?.." லக்ஷ்மணன், முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, பதிலிறுத்தான்.. "ஆம் தேவி.. என் பத்னி ஊர்மிளை, எனக்காக இந்தக் காரியத்தை நிச்சயம் செய்வாள்.. தாங்கள் தைரியாமாக எனது உறக்கத்தை அவளுக்குத் தந்துவிடலாம்.." அவனது பரபரப்பைப் பார்த்த நித்ராதேவியின் இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகை தவழ்ந்தது.. அதை, கவனித்துவிட்டான் லக்ஷ்மணன்!.. "ஏன் தேவி.. இதில் தவறொன்றும் இல்லையே.. தன் கணவனுக்காக , ஒரு பத்னி இதை ஏற்கலாம் அல்லவா?.." சிறிது சினம் வெளிப்பட, நித்ராதேவி பேசினாள்.. "அதை நீ முடிவு செய்யக்கூடாது லக்ஷ்மணா.. அவள் உனக்குப் பத்னியாகவே இருந்தாலும், உன்சார்பில் உண்ணுவதையும், உறங்குவதையும், அவள் விருப்பம் அறியாமல், அவள்மேல் திணிக்க முடியாது.. அது தர்மமும் அல்ல!.. இந்த விஷயத்தில் எனக்கு அவளது விருப்பம் அவசியம்!.." விக்கித்து நின்றான் லக்ஷ்மணன்.. "....எனில் தேவி...இதற்கு முடிவுதான் என்ன?.. அண்ணனை இந்த வனத்தில் தனியாக விட்டுவிட்டு, மீண்டும் அயோத்தி சென்று, ஊர்மிளையின் சம்மதம் பெற்று வருவது என்பது மிகவும் ச்ரமமான காரியமாயிற்றே..." கவலை தோய்ந்திருந்த அவன் முகத்தைப் பார்க்க, நித்ராதேவிக்கு, கொஞ்சம் பரிதாபமாக இருந்தது... "அந்தக் கவலை உனக்கு வேண்டாம் லக்ஷ்மணா.. நானே நேரில் சென்று அவளைப் பார்த்துப் பேசிக் கொள்கிறேன்.. அவள் தனது சம்மதத்தை தெரிவித்தாளானால், இந்த விஷயம் உன்விருப்பம் போல நிறைவேறும்!.." "ஆகட்டும் தேவி..தமது சித்தம் அடியேனது பாக்யம்.." கைகூப்பி விடையளித்தான் லக்ஷ்மணன்.. நிச்சயம், ஊர்மிளை, இதற்கு சம்மதிப்பாள் என்றே அவனுக்குத் தோன்றியது! இங்கே, அயோத்தியில் காரிருள் சூழ்ந்திருந்தது.. சகோதரர்கள் வனமேகிய மறுநாளே, தசரதர் விண்ணுலகம் எய்திவிட்டார்.. அன்றைக்கெல்லாம் சுமித்திரைக்கு ஆறுதலாய், அவளை விட்டு அகலவேயில்லை ஊர்மிளை!.. அடுத்தநாள் விடியலில் தன்னை அறியாமல் சுமித்திரை உறங்கியிருந்தாள்.. அவளைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், தன் அறைக்குத் திரும்பினாள் ஊர்மிளை.. அதன்பிறகு, சுமித்திரைக்கு கொஞ்சம் தனிமை தேவை என்பதை உணர்ந்தவளாய், மீண்டும் அவளைக் காணச் செல்லவில்லை.. இதோ...இன்றோடு, நான்கு நாட்களாகிறது, ஊர்மிளை உறங்கி!.. நள்ளிரவு தாண்டிய நேரம்.. ஏனோ லக்ஷ்மணன் நினைவு, அவளை இன்று அதிகம் வாட்டி எடுத்தது!.. இத்தனைக்கும் லக்ஷ்மணன், அவளை ஒரு மனைவியாய், என்றுமே பார்த்ததில்லை! இருந்தும், "அவன் உடன் இருக்கிறான்" என்ற நினைவே, அவளை இத்தனைக் காலமும் நடத்திக் கொண்டிருந்தது!.. இப்பொழுது அவனில்லாத அந்த அறை, அவள் மனப்புழுக்கத்தை மேலும் அதிகரிப்பதாக இருந்தது.. சற்றுக் காலார நடந்து வரலாம் என்ற எண்ணத்தில், நந்தவனம் நோக்கி நடந்தாள் ஊர்மிளை.. வானில் பௌர்ணமி நிலவு பாலாய்க் காய்ந்து கொண்டிருந்தது.. புஷ்பங்கள் மலர்ந்தும், மலராத நிலையில், மணத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தன.. நிசப்தமான அந்த இரவில், எங்கோ தூரத்திலிருந்து மிதந்து வந்த மெல்லிய ஷெனாய் இசை, அவளை ஹிம்ஸிப்பதாகவே இருந்தது!.. "வேண்டாம்...இந்த இசை என் செவிகளில் விழவேண்டாம்.." என்று எண்ணியவளாய், நந்தவனத்தில் இன்னும் கொஞ்சதூரம் நடந்தாள்.. வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு, பௌர்ணமி நிலவும் அவளுக்குத் துணையாக வந்து கொண்டிருந்தது.. பன்னீர் புஷ்பங்களை ஏந்திக் கொண்டிருந்த அந்த மரம், அவளை ஈர்த்தது.. அதன் அருகே சென்றவள், மெதுவாக அந்த நிலவொளியில், அதை அண்ணாந்து பார்த்தாள்.. இலைகளை விட, புஷ்பங்களாலேயே நிறைந்திருந்தது அது!.. "ஹும்..செடி கொடிகள்கூட புஷ்பித்து, தமது சந்தோஷத்தைச் சொல்லிக் கொள்கின்றன.. ஆனால் நான்?... இந்த மரம் செடி கொடிகளுக்கு இருக்கின்ற ஏற்றம்கூட, எனக்கு இல்லையே.." அவளையறியாமல், கழிவிரக்கத்தில் கண்ணீர் வழிந்தது.. மிகவும் தளர்ந்தவளாய், அப்படியே சரிந்து அந்த மரத்தின் அடியில் அமர்ந்தவள், தனது முழங்கால்களுக்கிடையில், முகம் புதைத்துத் தேம்பினாள்.. துக்கம் தீர, தனிமையில் அவள் அழுது கொண்டிருந்த அந்த வேளையில், ஒருகரம் அவளது தோளைத் தீண்டியது... சிலீரென்று ஒரு அச்சம் உடல் முழுவதும் வ்யாபிக்க,, தலைநிமிர்ந்தாள் ஊர்மிளை.. அவள்முன் நின்றுகொண்டிருந்த பெண்ணை, அவள் இதுவரை பார்த்ததில்லை!.. "நீ.....யார்?.. ஒனக்கு...இங்க என்ன வேலை?.." தட்டுத்தடுமாறி, பதட்டத்தில் வாய்குழற அவளை வினவினாள் ஊர்மிளை.. பதிலாக, அந்தப் பெண் ஆறுதலாய் புன்னகைத்தாள்.. "பதறாதே ஊர்மிளை.. நீ தனியா இங்க அழுதுண்டு இருக்கறத பாத்துட்டு, ஒனக்கு ஆறுதலா, நாலு வார்த்த சொல்லலாம்னு வந்தேன்..பயப்படாதே.." அவள் பதிலில், ஊர்மிளையின் படபடப்பு, சற்று அடங்கியது.. "நீ...நீ...இந்த அரண்மனையில வேலை செய்யறயா?.. எதுக்காக என்பின்னாடி வந்த?.. கொஞ்சம் தனிமை வேணும்னுதானே, நான் இந்த ராத்திரி நேரத்தில இங்க வந்தேன்.. அப்படியிருந்தும், இப்டி தொந்தரவு செய்யறயே.. ஒனக்கே இது நன்னா இருக்கா?.." சற்றுக் கோபமாகவே கேட்டாள் ஊர்மிளை!.. (வளரும்..) [4:34 AM, 5/26/2023] Mohan SriRaghavendrar Kulithalai: (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −25..) "தனிமையில இங்க வந்து ஒக்காந்துண்டா மட்டும் ஒன்னோட துக்கம் போயிடுமா?.." அந்தப் பெண் எதிர் கேள்வி கேட்கவும், ஊர்மிளைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.. இயலாமையால், கோபம்தான் வந்தது.. "இங்க பாரு.. நீ யாருன்னே எனக்குத் தெரியாது.. தெரிஞ்சுக்கணும்னும் நான் விரும்பல..தயவுசெஞ்சு நீ மொதல்ல இங்கேந்து கெளம்பு.." "கெளம்பறதுக்காக நான் இங்க வரல ஊர்மிளை.. ஒன்கிட்ட பேசி, ஒன் துக்கத்த எப்டி கொறைக்கலாம்னு பாக்கறதுக்குத்தான் நான் வந்துருக்கேன்.." "ஹும்...யாராலேயுமே என்னோட துக்கத்த கொறக்கமுடியாது.. நீ வீணா என்ன தொந்தரவு பண்ணாத.. இங்கேந்து கெளம்பற வழிய பாரு.." "ஒனக்கு நல்ல வழி காட்டலாம்னு வந்தா, என்ன தொறத்தறதுலயே இருக்கயே.. கொஞ்சம் நான் சொல்லப் போறத காது கொடுத்து கேளு.." இப்போது ஊர்மிளைக்கு எரிச்சல்தான் வந்தது.. "ஐயோ, யார்நீ?.. இப்டி என் உயிர வாங்கறயே.. இங்கேந்து நீ போக மாட்டயா?.." "போயிடறேன்.. அதுக்கு முன்னாடி ஒன் புருஷன், ஒன்கிட்ட ஒரு விஷயம் கேட்டுண்டு வரச் சொல்லியிருக்கான்.. அதுக்குப் பதில தெரிஞ்சுண்டு இங்கேந்து கெளம்பிடறேன்.." இதழோரத்தில் ஏளனச் சிரிப்பைத் தவழவிட்டாள் ஊர்மிளை... "யாரு, என் புருஷன் ஒன்ன அனுப்பியிருக்காரா?.. ஏன் இந்த அர்த்த ராத்திரியில வந்து இப்படி ஒளரிண்டிருக்க?.. என்புருஷன் கங்கையை எல்லாம் தாண்டிப்போய், ஏதோ ஒரு கானகத்தில வாசம் செஞ்சுண்டு இருக்கார்.. அவர் ஒன்கிட்ட சேதி சொல்லி அனுப்பினார்னு சொல்றயே.. இத என்ன நம்பச் சொல்றயா?.." "நீ சொல்ற அதே கானகத்துலேந்துதான் நான் வரேன் ஊர்மிளை... ஒன்னோட புருஷன், தனக்கு ஒதவறதுக்காக என்ன கூப்பிட்டான்.. அவனுக்கு நான் ஒதவி செய்யணும்னா, அதுக்கு ஒன்னோட சம்மதம் எனக்கு வேணும்.." சட்டென்று, ஊர்மிளையை சினம் ஆக்ரமித்துக் கொண்டது.. "நீ ஒன்னப்பத்தி என்ன நெனச்சுண்டிருக்க?.. என்புருஷன் ஒன்னோட ஒதவிய கேட்டாரா?.. போயும் போயும் ஒரு பெண்ணோட ஒதவிய கேக்கற அளவுக்கா, என்னவர கேடு கெட்டவரா நெனச்சே?.." அவளைத் தன் விழிகளாலேயே எரித்து விடுவது போல ஊர்மிளை பார்த்த அதே நேரத்தில், அந்தப் பெண், தன் சுயரூபம் எடுத்தாள்... அதிர்ந்தே போனாள் ஊர்மிளை... "நீ.....நீங்...கள்... யார்?.." நடுங்கும் குரலில் வினவினாள்.. கலகலவெனச் சிரித்தபடியே, அவள் பதிலிறுத்தாள்... "ஊர்மிளை..நான்தான் "நித்ரா தேவி!.." வியப்பும் நடுக்கமும் மேலிட ஊர்மிளை அவளை வணங்கினாள்.. "மன்னியுங்கள் தேவி...தாம் யாரென அறியாமலே, தம்மோடு வாதம் செய்துவிட்டேன்..எனது பிழையைப் பொறுத்தருளுங்கள் மாதே.." "போகட்டும் ஊர்மிளை..இப்பொழுது நான் கூறுவதை எல்லாம் நன்றாகக் கேட்டுக் கொண்டு, உனது எண்ணத்தைச் சொல்வாய்... உன்னவன் என்னை உன்னிடம் அனுப்பி வைத்திருக்கிறான்.. மந்திரத்தால் அவன் என்னை அழைத்திருந்தான்.. நான் அங்கு சென்ற போது, தன் கஷ்டத்தை என்னிடம் கூறி, தனக்கு உதவுமாறு கோரினான்...." "என்னவருக்கு கஷ்டமா?..ஏன்..என்ன ஆச்சு?.." பதற்றத்தோடு, இடைமறித்தாள் ஊர்மிளை.. "ஆமாம் ஊர்மிளை.. உறக்கத்தைத் தவிர்க்க இயலாமல், ரொம்பவும் கஷ்டப்படுகிறான்.." ஊர்மிளை குறுக்கிட்டாள்.. "அவர் கிளம்பிச் சென்றதிலிருந்து உறக்கம் இல்லாமல் நான் அவஸ்தைப் படுகிறேன்.. ஆனால், அங்கே, அவருக்கு உறக்கத்தைத் தவிர்க்க முடியவில்லையாமா?." இகழ்ச்சியாகக் கேட்டாள் ஊர்மிளை.. "ஊர்மிளை..காதல் வயப்பட்ட மனது உன்னுடையது.. கடமைக்கு வசப்பட்ட மனது அவனுடையது!.. இந்த வித்யாசம்தான் உங்கள் உறக்கத்திலே எதிரொலிக்கிறது!.." "தேவி..தாம் கூறுவது எனக்கு விளங்கவில்லையே.." "சொல்கிறேன் ஊர்மிளை.. கடமையின் சுமைதாங்காமல் சோர்ந்து போகின்ற உன்னவனுக்கு உறக்கம் வருகிறது.. ஆனால், காதலின் வேட்கையினால், இமைமூடாமல் இருக்கின்ற உனக்கு, உறக்கம் வர மறுக்கிறது.. சரிதானே, நான் சொல்வது?.." நித்ராதேவியின் பேச்சிலிருந்த நிஜம் சுடவும், வாய்மூடி தலைகுனிந்தாள் ஊர்மிளை.. "இருக்கட்டும்... நான் வந்த விஷயத்தைச் சொல்கிறேன் கேள் மகளே... உன்னவன், தன் சகோதரனின் கைங்கர்யத்துக்காக, பதினான்கு வருஷமும், தனக்கு உறக்கமே வரக்கூடாது என என்னிடம் ப்ரார்த்தித்திருக்கிறான்.. இயற்கைக்கு விரோதமாக செயல்பட முடியாதெனினும், இதற்கு ஒரு விதிவிலக்கு இருப்பதாக நான் அவனிடம் சொல்லி வந்திருக்கிறேன்.." ஊர்மிளை, தன்னை உற்றுக் கவனிப்பதை உறுதி செய்துகொண்டு, நித்ராதேவி தொடர்ந்தாள்.. "அவனது உறக்கத்தை, யாரேனும் ஒருவர் விரும்பி ஏற்றுக்கொண்டால் மட்டுமே, இந்த பதினான்கு வருஷகாலமும் அவனால் விழித்திருக்க இயலும் என்று கூறினேன்.. உடனே அவனுக்கு உன் ஞாபகம்தான் வந்தது.." "ஓ... இப்பொழுது..... என் நினைவு வந்ததோ?.." ஊர்மிளையின் எதிர்கேள்வியில் தொனித்த ஓராயிரம் அர்த்தங்களையும், ஒரு நொடியில் உணர்ந்து கொண்டாள் நித்ராதேவி.. "சொல் ஊர்மிளை, உனக்கு சம்மதமானால் மட்டுமே இது நிகழும்!.. நீ சம்மதம் தெரிவிக்கின்ற பட்சத்தில், உன் உறக்கத்தோடு, அவன் உறக்கத் தையும் சேர்த்து நீ உறங்கியாக வேண்டும்.. அதாவது, இந்த பதினான்கு வருஷமும், பகலும் இரவுமாக நீ உறங்கியபடியே இருக்க வேண்டும்.. இது ச்ரம சாத்யமான காரியம்தான்.. அதனால்தான், உன் விருப்பத்தை அறிய இங்கே வந்தேன்.." "தேவி..தமது வருகையின் நோக்கம் முழுவதும் இப்பொழுது உணர்ந்தேன்.. தனிமையின் கோரப்பிடியில் துவண்டு போயிருக்கும் எனக்கும் இந்த உறக்கம் ஒரு வரப்ரசாதமாகவே அமையும்.. ஆனால், இதை ஏற்பதற்குமுன், தம்மிடம் எனக்கு இரண்டு கோரிக்கைகள் இருக்கின்றன தேவி.. தாம் அதற்கு, இந்த அபலைக்கு அனுக்ரஹம் செய்வீர்களா?.." ஊர்மிளை அணுகியவிதம், நித்ராதேவியை நெகிழச் செய்தது.. "சொல் மகளே...வரம்புக்கு உட்பட்டதாக இருந்தால் நிச்சயம் செய்கிறேன்.." "பாக்யவதியானேன் தேவி.. முதல் கோரிக்கை.. எனக்கு அமையப் போகின்ற இந்த உறக்கத்தில், கனவில்கூட, என்கணவரது நினைவு என்னைத் தீண்டாதிருக்க, தாம் கடாக்ஷிக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை.. இந்தப் பதினான்கு வருஷ உறக்கத்தில் பசி, தாகம் உள்ளிட்ட இயற்கை உபாதைகள் எதுவுமே எனக்கு இருக்கக் கூடாது.. அன்னை உமது மடியில், அத்தனையும் மறந்து, ஆழ்ந்த உறக்கத்தில் நானிருக்க வேண்டும்.." "அப்படியே ஆகட்டும் ஊர்மிளை... உனது கோரிக்கைகள் இரண்டையுமே நான் ஏற்கிறேன்.." "சந்தோஷம் தேவி.. தம்மிடம் ஒரு முஹுர்த்த காலம் அவகாசம் மட்டும் இப்போது வேண்டுகிறேன்.. அதன்பிறகு தமது மடியில் என்னைத் தாம் ஏற்கலாம் தேவி.." "காத்திருக்கிறேன் மகளே..." நித்ராதேவியின் அனுமதியோடு, அரண்மனை நோக்கி நடந்தாள் ஊர்மிளை.. (வளரும்..) [4:35 AM, 5/26/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −26..) தனது அறைக்கு வந்த ஊர்மிளை, தான் கடைசியாக வரைந்திருந்த "அனாமிகா"வின் சித்திரத்தை எடுத்தாள்.. அதையே சற்று நேரம் உற்றுப் பார்த்தாள்.. அதில்.... நிலவெரிக்கின்ற நள்ளிரவில், பஞ்சணையைப் புறக்கணித்திருந்த அனாமிகா, தன் நெஞ்சணையில், ஒரு சித்திரத்தை அணைத்துக்கொண்டு, கண்ணீர் சிந்திய வண்ணம், சாளரத்தின்ஊடே, வெளியே வெறித்த பார்வையுடன், நின்று கொண்டிருந்தாள்.. சட்டென்று, ஊர்மிளை, அதன்கீழே அழகாக எழுதினாள்.. "வேண்டாதபோதும் வந்தவொரு தெய்வம் நீண்டதான நித்திரை நங்கையெனக்கீந்தது.. ஆண்டாடுகள் ஆனாலென்? அபலைக்கேது வருத்தமே? ஈண்டிதுவே என்பரிசு! இல்லைஇனி உறுத்தலே!.." த்ருப்தியோடு அதை ஒருமுறை பார்த்தவள், மற்றவர் கண்படுமாறு அந்தச் சித்திரத்தை, அருகிலிருந்த விளக்குமாடத்தில் நிறுத்தி வைத்தாள்.. பஞ்சணையில் சாயுமுன்... படைத்தவனை நினைக்கவில்லை! பெற்றவரை நினைக்கவில்லை! உற்றவனை நினைக்கவில்லை! மற்றெவரையுமே நினைக்கவில்லை!.. குருநாதர் அஷ்டவக்கிரரை மட்டுமே ஸ்மரித்தாள்.. இரண்டு கரங்களையும் குவித்து ப்ரார்த்தித்தாள்.. "குருநாதா.. தாம் காட்டிய பாதையில்தான், இதுவரை மிகுந்த ச்ரமங்களோடு பயணித்து வந்தேன்.. இப்பொழுது, தானாய் வந்த வாய்ப்பொன்றைப் பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன்.. எனக்கு அனுமதி அளியுங்கள் குருநாதா..." மனம் உருக வேண்டியவள், மெல்ல பஞ்சணையில் சாய்ந்தாள்.. அதற்கே காத்திருந்த நித்ராதேவி, அவளை மெதுவாகத் தீண்டினாள்.. ஏனோ, தேவியின் மனமும் கனத்து, விழியோரம் நீர்துளிர்த்தது.. இங்கே... ஒரேநாளில், லக்ஷ்மணனுக்கு, இரவும், பகலும் பேதமற்றுப் போனது.. அவனால் வெகு லகுவாக, எந்நேரமும் விழித்திருக்க முடிந்தது.. உறக்கத்தின் சுவடற்றவனாய், உற்சாகத்தின் இருப்பிடமாய் மாறிப்போயிருந்தான்.. இந்த மாற்றத்துக்கான காரணம், அவனுக்குப் புரியவும் புரிந்தது!.. ஊர்மிளை இருக்கின்ற திக்கு நோக்கி, நெகிழ்ச்சியோடு வணங்கினான்... காலையிலிருந்தே ஊர்மிளையின் அறைக்குப் போவதும், வருவதுமாக தாதியர்கள் இருந்தனர்.. "என்ன ஆச்சு.. இத்தன நேரமெல்லாம் இளவரசி தூங்க மாட்டாங்களே.. ஒடம்பு ஏதும் சரியில்லயா?.." தமக்குள் பேசிக் கொண்டனர்.. இருந்தாலும் அருகே நெருங்கி, அவளைத் தீண்டத் தயங்கினர்.. சூரியன் உச்சிக்கு வருகின்ற நேரம் சமீபித்துக் கொண்டிருந்தது.. "இனியும் தாமதிக்கறது நல்லதில்ல..ராஜமாதாவிடம் விஷயத்தைச் சொல்வோம்.." என்று எண்ணியவர்கள், நேரே சுமித்திரையிடம் வந்தார்கள்.. அவர்கள் தயக்கத்தைப் பார்த்த சுமித்திரைக்கு, ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.. "சொல்லுங்கள் தாதியரே.. என்ன விஷயமாய் என்னிடம் வந்தீர்கள்?.." வந்திருந்தவர்களில் ஒருத்தி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு, மெல்ல வாய்திறந்தாள்.. "ராஜமாதா... வழக்கமா விடிகாலைல எழுந்துடற ஊர்மிளை தேவி, இன்னிக்கு இதுவர எழுந்திருக்கலை.. ஏதாது ஒடம்புக்கு அசௌகர்யமானு தெரியலை.. கிட்ட நெருங்கிக் கூப்டாலும், எழுந்திருக்கல..நீங்க வந்து ஒருமுறை பார்த்தா நல்லது மாதா.." தூக்கிவாரிப் போட்டது சுமித்திரைக்கு.. "என்னது?.. இத்தன நேரமா எழுந்திருக்கலையா?.. ஏன் முன்னாடியே நீங்க வந்து சொல்லல?.." தாதியரைச் சினந்து கொண்டவள், பதைபதைப்பு தொற்றிக்கொள்ள, ஓட்டமும் நடையுமாய் ஊர்மிளையின் அறைக்கு வந்து சேர்ந்தாள்.. அங்கே... நிச்சலனமாய் உறங்கிக் கொண்டிருந்தாள் ஊர்மிளை.. அறைவாசலிலிருந்தே, "ஊர்மிளை..அம்மா ஊர்மிளை..கொஞ்சம் எழுந்துரு மா...இவ்ளோ நாழியெல்லாம் தூங்க மாட்டயே.. ஏன்மா?..ஒடம்புக்கு ஏதாது முடியலயா?.." என்று கேட்டுக்கொண்டே, அவளை நெருங்கினாள்.. அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே, சட்டென்று குனிந்து அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.. உடல்சூடு சாதாரணமாக இருந்தது.. மூச்சும் சீராகவே இருந்தது.. ஒன்றும் புரியாதவளாய், அவள் அருகே அமர்ந்த சுமித்திரை, மெல்ல ஊர்மிளையின் சிரத்தை எடுத்து தன்மடியில் வைத்துக் கொண்டாள்.. சலனமில்லாத சந்திரனாய் ஒளிர்ந்த அந்த கள்ளம்கபடற்ற முகத்தில், ஒருவிதமான அசாதாரண அமைதி குடிகொண்டிருந்ததை, சுமித்திரையால் உணரமுடிந்தது.. "என்ன ஆயிற்று இவளுக்கு?.." விஷயம் புரிபடாத காரணத்தால், அரண்மனை வைத்தியரை, உடனே அழைத்துவரும்படி கட்டளையிட்டாள்.. ஆனால், அவள்மனம் மட்டும், "இது சாதாரண உறக்கம் இல்லை.." என்று சொல்லிக் கொண்டே இருந்தது.. வைத்தியர் வருவதற்குள், இவளது இந்த நிலைக்கு தனக்கு ஏதேனும் துப்பு கிடைக்குமா என்றறிய, அறையைச் சுற்றுமுற்றும் ஒரு நோட்டம்விட்டாள்... அப்பொழுதுதான், வித்யாசமாய், விளக்குமாடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தச் சித்திரம், அவளைக் கவர்ந்தது... (வளரும்..) [4:38 AM, 5/26/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −27..) அந்தச் சித்திரத்தைக் கையிலெடுத்துப் பார்த்தாள் சுமித்திரை.. வார்த்தைகளின் தேவையின்றி வெகு அழகாக, ஒரு பெண்ணின் சோகத்தை, அது பகிர்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள்.. மேலே, "அனாமிகா" என்று பெயரிடப்பட்டிருந்ததையும், கீழே தகவலைத் தருகின்ற ஒரு சேதியையும் பார்த்தவள், உடனே, இது ஊர்மிளையின் கைவண்ணமே என்பதை ஊகித்துவிட்டாள்.. அப்பொழுது அங்கே வந்த தாதியரும், சுமித்திரையின் ஊகத்தை உறுதிப்படுத்தினர்.. "ராஜமாதா...எல்லாமே ஊர்மிளை தேவி வரஞ்சதுதான் மா.. தினமும் அவங்களோட பொழுதுபோக்கே இதுதான் மா.. இங்க பாருங்க... இந்தப் பெட்டி நிறைய, அவங்க எவ்ளோ வரஞ்சு வெச்சுருக்காங்கனு.." "இவ்ளோ சித்திரங்களா?.." அதிசயித்தாள் சுமித்திரை.. "அனாமிகா"வாலேயே நிரப்பப் பட்டிருந்தது பெட்டி.. ஒரு பெண்ணாய், சுமித்திரைக்கு, ஊர்மிளையின் மனதை, "அனாமிகா"வில் படிக்க முடிந்தது.. இப்பொழுது, கடைசியாக அவள் தந்திருக்கின்ற சேதியிலிருந்து, ஏதோ ஒரு தெய்வம் அனுக்ரஹிக்க, இந்த நீள்உறக்கத்தை, அவள் வரமாகப் பெற்றிருக்கிறாள் என்பதையும் உணரமுடிந்தது.. "ஆண்டாடுகள் ஆனாலென்?.." என்று ஊர்மிளை எழுதியதிலிருந்து, அவள் நித்திரை கலைய நிறைய வருடங்கள் ஆகும் என்கிற அதிர்ச்சியான நிஜம், சுமித்திரையை முகத்தில் அறைந்தது!.. ஒருகணம், அவளையுமறியாமல் விழிகள் நீரைப் பெருக்கின.. "இந்த அயோத்திக்கு மருமகளாக வந்ததிலிருந்து, எந்தச் சுகமும் காணவில்லையே, இந்த அப்பாவிப் பெண்!.." அவள் மனது கிடந்து அங்கலாய்த்தது.. அரண்மனை வைத்தியர், அரக்கப்பரக்க, வந்து சேர்ந்த அந்த நேரம், சுமித்திரை அழுது கொண்டுதானிருந்தாள்.. "சொல்லுங்கள் ராஜமாதா... ஊர்மிளைக்கு என்ன ஆயிற்று?.." "வைத்தியரே...அதைத் தாம்தான்.... சொல்ல வேண்டும்!..எனக்கு..... மிகவும்.... கவலையாக இருக்கிறது..." படபடப்பில் வாய் குழறியது.. "கவலைப் படாதீர்கள் மாதா.. சரிசெய்து விடலாம்..பெரிதாக ஒன்றும் இருக்காது.." ஆறுதல் கூறிய வைத்தியர், ஊர்மிளையை நீண்ட நேரம் பரிசோதித்தார்.. அவரால் எதுவும் அனுமானிக்க இயலவில்லை என்பதை சுமித்திரை மெல்ல உணர ஆரம்பித்தாள்.. "சொல்லுங்கள் வைத்தியரே...தாம் என்ன கண்டறிந்தீர்கள்?.. ஊர்மிளைக்குப் பெரிதாக ஒன்றுமில்லையே?.." நம்பிக்கையே இன்றிதான் வினவினாள் சுமித்திரை.. வைத்தியர் உதட்டைப் பிதுக்கினார்.. "என்னை மன்னியுங்கள் ராஜமாதா.. என்னால் எதுவும் கண்டறிய முடியவில்லை.. நாடித் துடிப்பு துல்யமாக இருக்கிறது..அதில் ஒரு குறையுமில்லை.. நல்விதமாய் சுவாசமும் இருக்கிறது..அதிலும் குற்றமில்லை.. ஆனால், எழுப்ப இயலாத உறக்கத்தில், இவர்கள் ஆழ்ந்திருப்பதுதான், ஏன் என்று புரிபடவில்லை.. இந்த விஷயம் மிகவும் சவாலான ஒன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது..." தனது இயலாமையை ஒப்புக் கொண்டவரைப் பார்த்து, சுமித்திரை மீண்டும் வினவினாள்.. "சரி..இதைச் சொல்லுங்கள் வைத்தியரே..அவளுக்கு எப்பொழுது விழிப்பு வரும்?.." "தெரியலை ராஜமாதா... வாரங்கள் ஆகலாம்... மாதங்கள் போகலாம்.. ஏன், வருஷங்கள் கூட உருண்டோடலாம்.. நம் கையில் எதுவுமே இல்லை!.." "....எனில் வைத்தியரே, அன்ன ஆஹாரமின்றி இவளை எப்படிப் பேணுவது?.." துக்கம் தொண்டையை அடைக்கக் கேட்டாள் சுமித்திரை.. "கவலை வேண்டாம் ராஜமாதா.. இமயமலைச்சாரலில் கிடைக்கின்ற சில மூலிகைகளின் பெயரைச் சொல்கிறேன்..தாம் அவற்றை வரவழைத்துக் கொடுங்கள்.. அதைக்கொண்டு நான் இவருக்கு ஒரு மூலிகைப் படுக்கை தயார் செய்து விடுகிறேன்.. அதில் இவர்கள் ஒரு வருஷ காலம் உறங்கலாம்.. பசி, தாகம், போன்ற உபாதைகளும் இருக்காது.. பொலிவும் குன்றாது.. ஒரு வருஷ கால முடிவில், மீண்டும் புதிய படுக்கை தயார் செய்து, அதில் இவரைக் கிடத்தலாம்.. இந்த விதத்தில், இவருக்கு மூச்சு உள்ளவரையில், எத்தனை வருஷங்கள் வேண்டுமானாலும், இவரை நம்மால் பாதுகாக்க முடியும்.." "இதுவாவது ஒரு வழி இருக்கிறதே.." என்று சற்றே ஆறுதல் அடைந்தாள் சுமித்திரை... வைத்தியரின் அறிவுரைப்படி அதிவேகமாகச் செயல்படவும், மூலிகைப் படுக்கை, சீக்கிரமாகவே தயார் செய்யப்பட்டுவிட்டது.. ஊர்மிளையும், வெகு ஜாக்ரதையாக அதில் கிடத்தப்பட்டாள்.. "இதோ இன்று எழுவாள்.. இதோ இப்பொழுது கண்விழிப்பாள்.." என்ற நம்பிக்கையில், ஒவ்வொரு நாளும், ஊர்மிளையின் அறைக்கு நடையாய் நடக்கலானாள் சுமித்திரை... (வளரும்..) [4:39 AM, 5/26/2023] Mohan SriRaghavendrar Kulithalai: ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −28..) கேகயத்திலிருந்து பரத சத்ருக்னர்கள் முதல்நாள் மாலை அயோத்தி திரும்பியிருந்தனர்.. தசரதருக்கான அந்திம க்ரியைகளுக்கான ஏற்பாடுகள் குலகுரு வசிஷ்டரின் தலைமையில், ஒருபுறம் நடக்க ஆரம்பித்திருந்தது.. விடிந்தும் விடியாததான அதிகாலை நேரத்தில், மிதிலையிலிருந்து ஜனகரும், அவரது சகோதரர் குசத்வஜனும் வந்து சேர்ந்தார்கள்.. அத்தனை பேர்களின் கண்ணீருக்கிடையில், மளமளவென்று ஆகவேண்டிய காரியங்கள் அனைத்தும் நடந்து முடிந்தன.. மரியாதை நிமித்தம், அண்டை நாடுகளிலிருந்து வந்திருந்த மன்னர்களும், ப்ரதிநிதிகளும், மீண்டும் தத்தமது இடம்நோக்கிப் புறப்பட்டனர்.. குடும்ப உறுப்பினர்களோடு நெருங்கிய சொந்தங்கள் சிலர் மட்டும், அரண்மனைக்குத் திரும்பி வந்திருந்தனர்.. தான் முடி சூடிக் கொள்வதைத் தீர்மானமாக மறுத்த பரதன், இப்பொழுது, வசிஷ்டர், சுமந்திரர், இன்னும் சில மிக முக்கிய மந்திரிகளோடு, ராமனைத் திரும்ப அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.. மூன்று பட்டமகிஷிகளுமே இந்த விஷயங்களிலெல்லாம் ஈடுபடவில்லை.. கோசலை, கணவனை ஒருபுறமும், மகனை ஒருபுறமும் பிரிந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.. கோசலையோடு கூடவே தங்கியிருந்த சுமித்திரைக்கும் ஏறக்குறைய கோசலையின் நிலைதான் என்றாலும், உபரியாக ஊர்மிளையின் கவலை வேறு அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது.. மகனால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கைகேயியோ, யாரெதிரும் வருவதற்கு விருப்பம் இல்லாதவளாய், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாள்.. இந்த நிலையில்தான், ஜனகர், கோசலையையும் சுமித்திரையையும் தாம் காண விரும்புவதாகக் கூறி, தாதியர்மூலம் அனுமதி கோரியிருந்தார்.. அவ்வளவுதான்... ராஜாமாதாக்கள் இருவரையுமே பதற்றம் தொற்றிக்கொண்டது.. "ஜனகரை எப்படிச் சமாளிப்பது?.. அவர் பெற்ற இருமகள்களையுமே நம்மால் சரியாகப் பாதுகாக்க முடியவில்லையே.. "என் மகள்களை, உமது மகள்களாக அரவணைப்பீர்கள் என்று நம்பித்தானே உங்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தேன்.. இப்பொழுது, இப்படிச் செய்து விட்டீர்களே..." என்று அவர் கேட்டுவிட்டால், என்ன செய்வது?.." இந்தக் கேள்வி அவர்களை ஆதியோடு அந்தம் நடுங்க வைத்தது.. "வேறுவழியில்லை.. "அவரைச் சந்தித்தே ஆக வேண்டும்.. என்ன நடந்தாலும் சரி.." ஒருவாறு தம்மைச் சுதாரித்துக் கொண்டு, முகத்தைத் திரையிட்டு மறைத்தவாறு, உடல் குறுக, உள்ளம் கூச, இருவரும் ஜனகரின் முன் வந்து நின்றனர்.. "ஒரு பெற்றவனாய், அவர் கேட்கப் போகின்ற ந்யாயமான கேள்விகளுக்கு, நம்மிடம் பதில் இல்லையே..." மனது இருவருக்கும் படபடவென அடித்துக் கொண்டது.. அவர்களது நிலையை, மகா ஞானியான ஜனகர் சட்டென்று ஊகித்தார்.. "ராஜமாதாக்களுக்கு நமஸ்காரம்... தாம் இருவரும் மிகவும் பதற்றமாக இருப்பது, பார்த்தாலே தெரிகிறது..ஆனால், தேவிகளே... இது அவசியமில்லாதது!.." "விதிவசம் எல்லாம் நடக்கும்போது, வீண் விவாதங்களால் என்ன பயன் வந்துவிடப் போகிறது?.." "முன்னவள் வனவாசம் சென்றதற்கும், பின்னவள் வெறும் ஸ்வாசத்தோடு வீழ்ந்து கிடப்பதற்கும், தாம் இருவரும் எப்படிப் பொறுப்பேற்க முடியும்?.. அவரவர்களும் வாங்கிக் கொண்டு வந்த வரம் அப்படி!.." "இல்லையென்றால், அரியணை ஏறவேண்டியவன், ஆரண்யம் செல்வானா?.." "ஒருத்தி நிழலாய்த் தொடர்ந்ததும், ஒருத்தி நினைவின்றிப் படர்ந்ததும், தம் இச்சையிலா நிகழ்ந்தது?.. இது "அவன் திருவிளையாடல்" தேவியரே!... அதனால், தாமிருவரும் குற்ற உணர்ச்சி இன்றி இருக்க ப்ரார்த்திக்கிறேன்.." அவ்வளவுதான்...... ஜனகரின் இந்த ஆறுதல் மொழிகளைக் கேட்ட மாத்திரத்தில், கோசலையும், சுமித்திரையும் தம்மையும் மீறி, "கோ"வெனக் கதறி அழுதனர்.. இத்தனை நாளும் அரித்துக் கொண்டிருந்த மனத்தின் ரணத்துக்கு, ஜனகர் என்னும் மாமனிதரின் வார்த்தைகள், அங்கே மருந்தாய் அமைந்தது.... சிறிது நேரம் அவர்கள் மனபாரம் இறங்கும்வரை ஜனகர் காத்திருந்தார்... "தேவியரே.. தாம் இருவருமே ஞானத்தில் சிறந்தவர்கள் என்பதை அடியேன் நன்கறிவேன்.. ஆதலால், தம் இருவருக்கும் ஒன்றை நினைவு படுத்த விழைகிறேன்.. இந்த உலகில் பெரும்பாலும், எந்த நிகழ்வும் நாம் விரும்புவதுபோல நடந்து விடுவதில்லை!.. "அவன்" என்ன நினைக்கிறானோ, அதுவேதான் எப்பொழுதும் நடந்தேறுகிறது!.." "நாம் அனைவருமே, அவன்கைப் பாவைகளே!.. அப்படி இருக்கும் போது, நாம் ஏன் நடந்து போன நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்?.. தாம் இருவரும் எல்லாவற்றையும் மறந்து விட்டு, சகஜமாக இருங்கள்.." இன்னமும் கண்களில் நீர் பெருகியபடி இருக்க, நெகிழ்ச்சியோடு, ராஜமாதாக்கள் இருவரும், ஜனகரை இருகரம் குவித்து வணங்கினர்.. அந்த நேரம் சுமந்திரர் அங்கே வந்து சேர்ந்தார்.. மூவரையும் சிரம்தாழ்த்தி வணங்கியவர், ராஜமாதாக்கள் இருவரையும் பார்த்து, "மாதாக்கள் இருவருக்கும் ஒரு நற்செய்தி... இராமனை மீண்டும் அயோத்தி அழைத்து வருவதற்காக, இளவரசர் பரதர் அதிவேகமாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார். . நாம் அனைவரும், நாளை மறுநாள், வனம் நோக்கி பயணிக்கிறோம்.. தம் இருவருக்கும் வருவதற்கு விருப்பமானால், நான் வந்து அழைத்துச் செல்கிறேன்.. இப்பொழுது, செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருப்பதால், பின்னர் வந்து, இது விஷயமாய், தம் இருவரையும் சந்திக்கிறேன். எனக்கு விடைகொடுங்கள்.." பணிவோடு சொல்லி நகர்ந்தார்... அவர் சென்ற பிறகு, சுமித்திரை ஜனகரை நோக்கி, மெல்ல வாய்திறந்தாள்.. "ராஜரிஷி...தமக்கும் விருப்பமானால், எங்களோடு கானகம் வரலாம் அல்லவா?.." பதில் கூறாமல் மௌனமாக இருந்தார் ஜனகர்.. அவர் மனதில், அஷ்ட வக்கிரர் சொன்ன விஷயங்கள் எதிரொலித்தன... "அரச போகம் உண்டு; அனுபவிக்கும் யோகம் இல்லை!.." "வரம்போலும் வாழ்வு உண்டு; வாழத்தான் விதியில்லை!.." "ஒருத்திக்கு வனவாசம்.. ஒருத்திக்கு வெறும் ஸ்வாசம்.." அதனால், மறுதலிப்பாகத் தலை அசைத்தார் ஜனகர்!.. "எப்படி இருந்தாலும், குருநாதர் வாக்கு நிச்சயம் பலிக்கத்தான் போகிறது.. எதற்கு வீணாக மனதை வருத்திக் கொள்ள வேண்டும்?.," என்று அவர் சிந்தை ஓடியது.. மீண்டும் சுமித்திரை வலியுறுத்தினாள்.. "தம்மைப் பார்த்தவுடன், ராமன் நிச்சயம் மனது மாறுவான் என்று எனக்குத் தோன்றுகிறது..அதனால், தாம் எங்களுடன் வர ப்ரார்த்திக்கிறேன்.." சோகமான புன்னகையுடன், ஆனால் அதே சமயம் தீர்கமான உறுதியுடன், ஜனகர் பதிலளித்தார்.. "என்னை மன்னியுங்கள் ராஜமாதா.. மணக்கோலத்தில் என் இரு பெண்களையும் பார்த்ததை, இன்னமும் என் கண்களிலும், நினைவிலும் சேமித்து வைத்திருக்கிறேன்.. அது கலைந்து போவதில் எனக்கு விருப்பமில்லை.. இப்பொழுது என்நெஞ்சில், என் இரு பெண்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை!.. அதனால், என்னை வற்புறுத்தாதீர்கள்.." "தாம் நினைப்பது நிறைவேற, இறைவன் திருவுளம் இரங்கட்டும்.." துக்க வீட்டுக்கு வந்தவர்கள், "போய் வருகிறேன்" என்று சொல்லும் வழக்கம் இல்லையாதலால், சட்டென்று திரும்பி நடந்தார் ஜனகர்... கண்களை மறைக்கின்ற விழிநீர் ஊடே, அந்த "பெண்களைப் பெற்றவன்" தொய்ந்த நடையுடன் வெளியேறுவதை, ராஜமாதாக்கள் இருவரும் மனம் வலிக்க, பார்த்துக் கொண்டு நின்றார்கள்.. (வளரும்..) ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −29..) தாதியர்களின் பொறுப்பில், ஊர்மிளையை விட்டுவிட்டு, ராஜமாதாக்கள் மூவரும், ராமனை அழைத்துவர பரதனுடன் கானகம் சென்றனர்.. ஆனால், முடிவு சாதகமில்லாமல் போயிற்று.. அவரவரும் கனத்த மனத்துடன் மீண்டும் அரண்மனை வந்துசேர்ந்தனர்.. சுமித்திரையைப் பொறுத்தவரையில், அவளுக்கிருந்த "ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து, அவர்கள் மூவரும் அயோத்தி திரும்பிவிட மாட்டார்களா?.," என்கிற சிறு எதிர்பார்ப்பும் தோல்வியைத்தான் தழுவியது.. தினமும், ஊர்மிளையைப் பார்ப்பதும், ஏக்கப் பெருமூச்சு விடுவதுமாகத்தான் சுமித்திரையின் காலம் நகர்ந்தது.. ஆனால், ஒரு குறையும் நேர்ந்து விடாமல், ஊர்மிளையை மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வருவதில் மட்டும், சுமித்திரை கொஞ்சமும் அசரவில்லை! இப்படியே... நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக உருண்டோடின.. யார் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, சுமித்திரை ஒவ்வொருநாளும், ராமலக்ஷ்மணர்களின் வரவை ரொம்பவும் எதிர்பார்த்து காத்திருந்தாள்.. அவர்கள் திரும்பி வந்துவிட்டால், ஊர்மிளை நிச்சயம் எழுந்து விடுவாள் என்று அவளது உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.. முதலில், தன் மகனோடு சந்தோஷமாய் ஊர்மிளை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவள், இப்பொழுது ஒரு சாதாரண வாழ்க்கையாவது, மற்றவரைப் போல, அவள் வாழ வேண்டும் என்று தாபப்பட்டாள்.. ஊர்மிளையைப் பார்க்கும் போதெல்லாம் அப்படியே உருகிப் போகலானாள் சுமித்திரை!.. "பாவிப்பெண்!.. இப்படி அனுபவிக்கிறாயே....இது என்ன பாவம்டி!..," என்று வாய்விட்டே புலம்புவாள்.. சற்று நேரத்துக்கெல்லாம், "இல்ல, இல்ல... இது ஒன்னோட பாவம் இல்ல.. என்னோட பாவம்டி!.." "தங்கக் கிளி மாதிரி வந்தவ, இப்போ சிறகொடிஞ்ச கிளி மாதிரி கிடக்கறது என்னோட பாவமேதான்!.." என்று புலம்பி, துக்கம் தாளாமல், தலையில் அடித்துக் கொண்டு, சிலநேரம் அழுவாள்!.. சில சமயங்களில், அவள் தலையை, தன் மடியில் கிடத்திக் கொண்டு, ஆறுதலாய் கோதி விடுவாள்.. சற்றும் பொலிவு குன்றாமல் இருக்கின்ற அந்த முகத்தைப் பார்த்து, ஒரு சிறு நிம்மதியும் அடைவாள்.. சில நாட்களில், உறங்குகிற ஊர்மிளைக்கு செவி கேட்கும் என்று நினைத்துக் கொண்டு, அவள் காதருகில், "இன்னும்..........மாசம்தான் பாக்கி இருக்கு...சீக்கிரம் லக்ஷ்மணன் வந்துடுவான்... அவன் வந்துட்டான்னா, ஒன்ன இந்த தூக்கத்திலேந்து மீட்கறதுக்கு, நிச்சயமா ஏதாது வழி பண்ணுவான்.." என்று குழந்தையைப் போலப் பேசுவாள்.. இப்படியே, அங்கலாய்ப்பதும், ஆறுதல் கூறுவதுமாய், ஆண்டுகளை நகர்த்திக் கொண்டிருந்தாள் சுமித்திரை,.. நீண்ட காலத்திற்குப் பிறகு....அன்று... சுமித்திரை மிகவும் சந்தோஷமாய் இருந்தாள்.. ராமன் ஊர் திரும்புவதற்குச் சரியாக இன்னும் மூன்று நாட்களே மீதமிருந்தன.. ஓடிவந்தாள் ஊர்மிளையிடம்!.. தன்னை மீறிய உற்சாகம் அவளிடம் இருந்தது.. ஊர்மிளையின் தலையை எடுத்து, தனது மடியில் வைத்துக் கொண்டவள், மெல்ல அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.. பிறகு, அவள் காதோரம் மெல்ல கிசுகிசுத்தாள்.. "ஊர்மிளை...ஒன்னோட இந்த கோரமான தூக்கம் ஒரு முடிவுக்கு வரப் போறது.. லக்ஷ்மணன் இன்னும் மூணே நாள்ல இங்க வந்துடுவான்.. நீ வேணா பாரேன்.. நிச்சயமா, அவன் ஒனக்கு ஏதாது நல்ல வழி பண்ணுவான்.." தனது அரண்மனை வைத்தியர் மீது இல்லாத நம்பிக்கை, தான் பெற்ற மகன் மீது, அவளுக்கு அபரிமிதமாக இருந்தது!.. நாட்களைக் கணக்குப்பண்ணிக் கொண்டிருந்தவள், இப்பொழுது மணித்துளிகளை எண்ண ஆரம்பித்திருந்தாள்.. நேற்றுதான் வனவாசத்தின் கடைசி நாள்.. சுமித்திரையின் கணக்குப்படி, இன்று உச்சிப்போதுக்குள் அவர்கள் வந்து சேர்ந்துவிட வேண்டும்.. ஆனால், அந்தி சாய்ந்தும் அவர்கள் வரவில்லை... கால்கடுக்க உப்பரிகையிலேயே, அவர்களை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தவளுக்கு, பசி, தாகம், தூக்கம் எதுவுமே ஏற்படவில்லை.. இரவு கவிந்துவிட்ட பொழுதும், அவள் எதிர்பார்ப்பு மட்டும் குறையவே இல்லை... "இதோ...இன்னும் சிறிது நேரம்..இன்னும் சிறிது நேரம்தான்...."என்று சொல்லிச்சொல்லியே, வீதியின் ஒல்வொரு அசைவையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.. கிட்டத்தட்ட நடுஜாமம் ஆனபோது, இரண்டு சேவகர்கள் குதிரையில் வந்து இறங்கினார்கள்.. வாயிற்காப்பாளினிடம் அனுமதி பெற்று, அவர்கள் உள்ளே வருவதற்குள், சுமித்திரை மூச்சிறைக்க, கீழே இறங்கி வந்திருந்தாள்.. அவள் கேட்பதற்கு முன், சேவகர்கள் முந்திக் கொண்டார்கள்.. "ராஜமாதாவுக்கு நமஸ்காரம்.. நம் இளவரசர்கள் நால்வரும், சீதா மாதா, குரு வசிஷ்டர் ஆகியோருடன் நாளைக் காலையில் வருவதாக, கைகேயி தனயன், தமக்கு சேதி அனுப்பி இருக்கிறார்.." இத்தனை நேரமும் சிந்தனை வயப்பட்டிருந்தவளுக்கு, இந்த செய்தியால், இப்பொழுதுதான், சற்று ஆறுதல் பிறந்தது.. "....எனில், இப்போது ராமலக்ஷ்மணர்கள் எங்கு இருக்கிறார்கள்?.." சுமித்திரை கேட்ட கேள்விக்கு, சேவகர்கள் பொறுப்புடன் பதிலளித்தார்கள்.. "ராஜமாதா. . இன்று அஸ்தமிக்கும் நேரம்தான், ராமலக்ஷ்மணர்கள், நந்தி க்ராமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.. அதனால், சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், அனைவரையும் காலையில் புறப்படச் சொல்லி இருக்கிறார் குரு வசிஷ்டர்.. காட்டு வழிப்பாதையில், இரவு நேரப் பயணத்தை அவர் விரும்பவில்லை.. ஆனால், தாம் காத்திருப்பீர்கள் என்று தெரிந்தே, தம்மிடம் எங்களை அனுப்பி வைத்தார்,.." ....ஒரு நிம்மதிப் பெருமூச்சு சுமித்திரையிடமிருந்து வெளிப்பட்டது.. "அப்பாடா.. இனியேனும் அயோத்திக்கு நல்விடியல் அமையட்டும்.." தன்னைப் போலவே இவ்வளவு நேரமாய்த் தவித்துக் கொண்டிருக்கும் கோசலையிடமும், கைகேயியிடமும் இந்த நற்செய்தியைப் பகருவதற்காக, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விரைந்தாள் சுமித்திரை... இத்தனை காலமும் இருள் அப்பிக்கிடந்த அயோத்தியை, தனது பொன்னான கிரணங்களினால், நன்றாக விளக்கிக் கொண்டு உதித்தான் ஆதவன்.. இரவெல்லாம் உறங்காமல் இருந்த ராஜமாதாக்கள் மூவரும், விடியலிலேயே, தமது ஸ்நானம், பூஜை இவைகளை முடித்துக் கொண்டு, அரண்மனை வாயிலுக்கே வந்து காத்துக் கிடந்தனர்.. சுமந்திரரின் உத்தரவின் பேரில், வெகுநாட்களுக்குப் பிறகு, அயோத்தி விழாக்கோலம் பூண்டிருந்தது.. எல்லோர் மனதிலும் உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.. திடீரென்று அனைவரையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.. மங்கல வாத்தியங்கள், மண் அதிர முழங்கின.. "ஜெய ராம" கோஷம் விண் அதிர எழுந்தது... வெகு காலமாய் பசியோடிருந்த அத்தனை விழிகளுக்கும், ஒருசேர அமிர்தம் பாய்ச்சுவது போல, அயோத்தியின் கிழக்கு வானில் ஒரு புஷ்பக விமானம் ஒளிர்ந்தது... (வளரும்..) [2:56 AM, 5/27/2023] Mohan SriRaghavendrar Kulithalai: ஸ்ரீராமஜெயம் (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −30..) புஷ்பக விமானத்திலிருந்து, ரகு குல சூரியன் உதயமாகி, தரை இறங்கவும், மரியாதை நிமித்தம் காரணமாக, வானுலாவும் ரவி, தன் கிரணங்களின் தீக்ஷண்யத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டான்.. அந்த நேரம், மந்த மாருதம் வீசவும், சூழல் மேலும் ரம்யமாகியது.. ராமனுக்குப் பின்னே, அவன் நிழலாய், ஜானகிதேவி தோன்றினாள்.. அவளது வதனத்தைக் காணும் போதில், இரவில் வரவேண்டிய திங்கள், ஒரு மாறுதலாய், பகலில் வருகை தந்ததோ என எண்ண வைத்தது.. இந்தத் திவ்ய தம்பதிகளின் பின்னாலேயே, லக்ஷ்மணன், அவர்களின் பாதுகாப்பு கவசமாய்த் தொடர்ந்து வந்தான்.. அவனுக்குப் பின்னால் பரத, சத்ருகனரும், குலகுரு வசிஷ்டர் உள்ளிட்ட முக்கியமானவர்களும் அணிவகுத்தனர்.. வெற்றி முரசு கொட்டவும், பேரிகை முழங்கவும், ராமன் அரண்மனையுள் ப்ரவேசிக்க ஆயத்தமானான்.. பொற்கலசங்களை எழில்மடந்தையர் ஏந்தி நிற்கவும், மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது.. மாதாக்கள் மூவரையும், நான்கு சகோதரர்களும், ஜானகியும் நமஸ்கரித்து எழுந்தனர்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகான இந்த சந்திப்பில், வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்பட, விழிநீர் வெள்ளமே பெருக்கெடுத்தது.. பிறகு, மெல்ல அனைவரும் சுதாரித்துக் கொண்டனர்.. பரஸ்பர விசாரிப்புகள் தொடங்கின.. ஒவ்வொருவர் கேள்வியையும் உன்னிப்பாகக் கவனித்து, பதிலளித்து வந்தாலும், ராமனுக்கு, கூடவே நிற்கின்ற லக்ஷ்மணனிடம் ஏதோ வித்யாசம் தெரிவது புரிந்தது.. லக்ஷ்மணனது விழிகள் மட்டுமின்றி, அவனது மனமும் அலைபாய்ந்து கொண்டிருப்பதை, ராமனால் உணரமுடிந்தது.. தனது முகக்குறிப்புணர்ந்து செயலாற்றக்கூடிய தம்பியின் அகக்குறிப்பை, இப்போது படித்தான் ராமன்.. சுற்றியிருந்த திரளை ராமனது கண்கள் துழாவின.. "எங்கே ஊர்மிளை?.." ".....அவளைக் காணவில்லையே... ஓ...அதுதான் இளவலின் தடுமாற்றத்துக்கான காரணமோ?.. சரி...யாரைக் கேட்பது?.." அப்பொழுதுதான் சுமித்திரா மாதா, தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தான் ராமன்... அவள் தன்னிடம் ஏதோ சொல்ல விழைவதையும் ராமன் புரிந்து கொண்டான்.. ஆம்...இராம தரிசனத்தால், சுமித்திரை மாதாவை இத்தனைக் காலமாய் பீடித்திருந்த கலக்கங்கள் அத்தனையும் அப்பொழுது விடைபெற்றிருந்தன!.. "என்ன அறிவீனம் எனக்கு!.. எப்பேர்ப்பட்ட துக்கத்தையும் தவிடுபொடியாக்க வல்ல என்ராமன் அருகில் இருக்கும் போதா, ஊர்மிளையைப் பற்றி நான் கவலைப் படவேண்டும்?.. அவனை விடுத்து, இந்த விஷயத்தில் நான் அடுத்தவரை நாடுவதாவது?.." என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் அவள்!. மனம் உறுதியாய் நின்றதும், வார்த்தை வெளிவந்தது... "ரா..மா... கொஞ்சம் என்னோட வாப்பா...ஒன்னாலே ஆகவேண்டிய காரியம் ஒன்னு எனக்கிருக்கு.." "ஆகட்டும் மாதே...இதோ..." உடன் புறப்பட்ட லக்ஷ்மணனை, கண் அசைவாலேயே தடுத்து நிறுத்தினான் ராமன்.. சுமித்திரை மாதாவை தொடர்ந்து சென்றவன், தன்னை அவள் எங்கு அழைத்துச் செல்கிறாள், என்ன சேதி என்று அறியும் ஆவலில் வினவினான்.. "சொல்லுங்கோ மாதே... என்ன விஷயம்?.." "சொல்றேன் ராமா.. குறையெல்லாம் ஒன்கிட்டே சொல்லலைனா, வேற யார்கிட்ட போய் சொல்றது?..ஒன்னாலதான் எனக்கு துக்க நிவிருத்தி ஆகணும்.." ராமன் ஆறுதலாய் அவளது கரங்களை வருடிக் கொடுத்தான்.. "எதுவானாலும் நான் இருக்கேன் மாதே..கவலப்படாம சொல்லுங்கோ.." சற்று ஆஸ்வாசம் அடைந்த சுமித்திரை தொடர்ந்தாள்.. "அன்னிக்கு, கல்லாய் கெடந்த ஒரு பெண்ண, நீ எழுப்பினது எனக்கு ஞாபகம் இருக்கு ராமா... அதுனால, இப்போ, கட்டையா கெடக்கற ஒரு பெண்ண எழுப்பற விஷயத்தில ஒன்னோட ஒத்தாசை எனக்குத் தேவைப்படறதுப்பா.." புரியாமல் அன்னையை ஏறிட்டான் ராமன்.. சுமித்திரை மெதுவாக விளக்கினாள்.. "நீங்கள்ளாம் வனத்துக்குப் போன நாலஞ்சு நாள் கழிச்சு ஒறங்க ஆரம்பிச்ச ஊர்மிளை, இந்தப் பதினாலு வருஷமா, இராப்பகலா தொடர்ந்து ஒறங்கிண்டு இருக்காப்பா...அவள எழுப்பறதுக்கான என்னோட எல்லா முயற்சியும் தோத்துப்போச்சுப்பா.. அன்ன ஆகாரம் எதுவும் கெடையாது.. மூலிகைகளோட ஒதவியாலேதான், இத்தன நாளா, அவள நான் பத்ரமா பாதுகாத்துண்டிருக்கேன்.." ....துக்கம் தொண்டையை அடைக்க, சுமித்திரையின் குரல் கம்மிக்கொண்டே போனது.. அதிர்ந்தான் ராமன்!.. "மா....மா..தா... நீங்க என்ன சொல்றேள்?..பதினாலு வருஷமா தொடர்ந்து ஒறக்கமா?...என்னால நம்பவே முடியலயே.." "என்னாலும் நம்ப முடியல ராமா...அரண்மனை வைத்தியரும் கை விரிச்சுட்டார்..அவ எப்போ எழுந்துப்பான்னு சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டார்.. கடைசியில, அவரோட அறிவுரைப்படி, மூலிகையெல்லாம் தருவிச்சு, அதுல ஒரு படுக்க செஞ்சு, இத்தன வருஷமா அவள நான் காப்பாத்திண்டு இருக்கேம்பா.." குலுங்கிக் குலுங்கி அழுகின்ற சுமித்திரையின் தோள்களை ஆறுதலாகப் பற்றினான் ராமன்.. "கவலப் படாதீங்கோ மாதா.. ஊர்மிளைக்கு சரியாயிடும்..நான் அவள பாக்கலாமா?.." "அதுக்குத்தான் நான் உன்ன கூட்டிண்டு வந்தேன் ராமா...இ...இதோ....இந்த அறைக்குள்ளதான் இருக்கா..." "நீ போய் பாரு..நீ வர வரைக்கும், நான் இங்கயே காத்துண்டு இருக்கேன்.." அழுதுகொண்டே கைகாட்டியவளை, சமாதானம் செய்துவிட்டு ராமன் அந்த அறையுனுள் நுழைந்தான்... அங்கே... ஒரு படுக்கையில்... ஜனகனின் வாரிசு, தரையில் விழுந்த பூங்கொடி போல படர்ந்திருந்தது.... மெல்ல ராமன் அவள் பெயரை உச்சரித்தான்... "ஊர்மிளை...உறக்கம் நீங்கி எழுந்திரு.." முப்பது முக்கோடி தேவர்கள் உட்பட, எந்த பரப்ரம்மத்தை, எல்லோரும், "உத்திஷ்ட நரஸார்தூலா..." என்றும், "அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்வாயே.." என்றும், இன்று வரை கூறி துயில் எழுப்புகிறார்களோ, அந்த பரப்ரம்மம், தனது சரித்திரத்தில் முதன் முறையாக, தன் திருவாய் மலர்ந்து, ஊர்மிளையை, துயில் நீங்கி எழுந்து கொள்ளப் பணித்தது. வளரும்.. குப்புசாமி🙏🏻 [3:02 AM, 5/27/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −31..) பல நாட்களாய், இந்த உலகத்தில் உறங்கிக் கிடப்பவர்களுக்கும், பல விஷயங்களிலும் பேதையாய் உறங்கிக் கிடப்பவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வைத் தரவேண்டுமானால், அது அந்த எம்பிரானாலேயே ஆகும்!.. அப்படித்தான், ஊர்மிளையும், ராமனின் அனுக்ரஹத்தினால், இத்தனை நீண்ட வருடத்துத் துயில் நீங்கி, ஒரு நொடிப் பொழுதில், ஒரு பூவானது தன் இதழை விரிப்பது போல, மெல்லக் கண் திறந்தாள்.. ஏதோ, நேற்று இரவு படுத்து, இன்று விடியலில் எழுந்தது போன்று, அவள் உறக்கம் நீங்கி எழுந்தது வெகு இயல்பாய் இருந்தது.. சாதாரணமாகவே, விழித்தெழும்போது, மங்கல வஸ்துகளைக் காணவே எவரும் விரும்புவர்.. ஆனால், ஊர்மிளைக்கோ, அனைத்து மங்கள(ல)ங்களின் இருப்பிடமே, அவள் கண்முன்னே நின்று காட்சியளித்தது!.. தூங்கி எழுந்தவளின் விழிஇரண்டும், அந்தத் தீர்த்தனின் தரிசனத்தால், தம்மை விளக்கிக் கொண்டன! உடல் அவயவங்கள் யாவும், அந்த உத்தமனின் த்ருஷ்டி வைபவத்தால், தளர்வு நீங்கி, தெம்படைந்தன.. ஒரு கணம் நிதானித்தவள், சட்டென்று எழுந்து தன்னைத் திருத்திக் கொண்டாள்.. இருகரம் குவித்தவள், வெகு சகஜமாக, "சீதாபதே..தாம் சௌக்யமாக இருக்கிறீரா?.." என்று ராமனை வினவினாள்.. புன்னகையோடு தலையசைத்த ராமன், ஊர்மிளையின் இந்தப் பெருந்தவத்துக்கு ஒரு பரிசு கொடுக்க எண்ணினான்.. ஒரு கணம்... ஒரே கணம்.. தனது நிஜமான ஸ்வரூபத்தை, சீதையோடான சேர்த்தி சேர, காட்டிக்கொடுத்தான்.. அவ்வளவுதான்... ஊர்மிளையின் உடல் உயிர்த்தது.. உயிர் சிலிர்த்தது... "ப்...ர...போ.." மேலே பேச இயலாமல், மொழி மறந்தது.. விழி நிறைந்தது... "சொல் ஊர்மிளை.. உன் தவம் பலித்ததா?.." ராமன் வினவியும், ஊர்மிளை, பேச்சின்றி வாயடைத்து நின்றாள்.. "என்ன ஊர்மிளை..என் கேள்விக்குப் பதில் இல்லையே.." ஒரு விடையை அவளிடமிருந்து எதிர்பார்த்தவன், அவளுக்குப் பேசுகின்ற சக்தியையும் கொடுத்தான்... கொட்டித் தீர்த்தாள் ஊர்மிளை... "ப்ரபோ..... இந்தப் பேதையை தமது காருண்யத்தால், க்ஷமித்து அருளுங்கள்.." "தம்மை இத்தனைக் காலமும், சௌமித்ரரின் சகோதரராகவே எண்ணியிருந்தேன்.. ஆனால் தாமோ, சாக்ஷாத் அந்த "பரமாத்ம ஸ்வரூபம்" என்பதை, இன்று கண்டுணர்ந்தேன்.." "அது போலவே, சீதையை எனது முன்னவள் என்றே நினைத்திருந்தேன்.. ஆனால், இந்த மூல ஸ்வரூபத்தின் "கண்" அவள் என்று இப்போது அறிந்தேன்.." "என்னே எனது பாக்யம்!.. தாம் இருவரும் அவதாரம் செய்துள்ள இடத்தில், இந்த ஈனப் பிறவிக்கும் ஒரு தொடர்பு இருக்கும்படி அனுக்ரஹம் செய்துள்ளீர்கள்.. இதற்கெல்லாம் அடியேன் தகுதியானவள்தானா?.." கண்களில் நீர்வழிய நின்றவளைப் பார்த்ததும், ராமனுக்கு மனம் மேலும் கனிந்தது.. "ஊர்மிளை.. உனக்கா தகுதியில்லை என்கிறாய்?.. எப்பேர்ப்பட்ட உத்தமி நீ!.. எவ்வளவு பெரிய த்யாகத்தை, ப்ரதிபலன் கருதாமல், அனாயாசமாய் செய்து முடித்திருக்கிறாய்!.. உன் பெருமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதல்லவா?.." இராமன் சொல்லச் சொல்ல, தன் இரு செவிகளையும் இறுகப் பொத்திக் கொண்டாள் ஊர்மிளை... "இல்லை... இல்லை.. இல்லை...ப்ரபோ...நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை... எந்தப் பெருமையும் எனக்கு ஏற்புடையதும் அல்ல.. தமது திவ்ய கடாக்ஷத்திற்கெல்லாம் எனக்கு எந்த விதமான அருகதையும் இல்லை!.." .....கண்ணீர் குளமாகக் கண்இரண்டும் காட்சியளிக்க, "தன்னிலை" விளக்கம் தந்தாள் ஊர்மிளை! ஆச்சர்யத்தோடு அவளை நோக்கினான் ராமன்... "நீ...நீ என்ன சொல்கிறாய் ஊர்மிளை?.." "நிஜத்தைச் சொல்கிறேன் ப்ரபோ... எனது "முழு சுயநலத்தை" என்னால் மறக்கவும் முடியாது...மறுக்கவும் முடியாது.. அப்படியிருக்கும் போது, அதை "த்யாகம்" என்று சொல்வதை, என்னால் எப்படி ஏற்க முடியும்?.." "ஊர்மிளை.... ....எனில், உனது இந்த பதினான்கு வருஷ உறக்கம் "த்யாகம்" இல்லை என்றா சொல்கிறாய்?.." "ஆம் ப்ரபு.. அது "த்யாகம்" இல்லை!.. "தன் நலம்" ப்ரபு...அத்தனையும் "தன் நலம்!" என்னைப் பற்றிய தமது புரிதல் மிகவும் தவறாக இருக்கிறது ப்ரபு.." "நீ என்ன சொல்ல வருகிறாய் ஊர்மிளை?.." நீர்வழியும் கண்களைத் துடைத்துக் கொண்டவள், நிமிர்ந்து ராமனை தீர்க்கமாய் நோக்கினாள்.. "உப்புக்கும் ப்ரயோஜனப்படாத என்பிறவியை, தாம் "ஒப்பிலாத பிறவி" என்று உயர்வாகப் பேசுவதைத் தவறு என்கிறேன் ப்ரபு..." (வளரும்..) [3:03 AM, 5/27/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −32..) "நான் உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்கிறாயா ஊர்மிளை?.." ராமன் கேட்டதும்தான் தாமதம்.. ஊர்மிளை ஒரு கேலிப் புன்னகையை இதழோரம் தவழவிட்டாள்.. "அனைத்தும் அறிந்தவர் நீர்! உள்ளும் புறமும் ஒவ்வொருவரையும் உணர்ந்தவர் நீர்! ஆனாலும், ஒன்றும் அறியாதவராய் நடிக்கிறீர்.." "என்னைப் பற்றி, என் வாயாலேயே, தாம் அறிய விழைகிறீர் போலும்.." "நான் உண்மையைப் பேசுகிறேனா இல்லை பொய்யான புகழ்ச்சியை ஏற்றுக் கொள்கிறேனா என்று என்னை சோதிப்பதாய் தெரிகிறது.." "அதனால் என்ன?.. நானே சொல்கிறேன் ப்ரபு.. அனைத்தையும் கேட்டுவிட்டு, தமது தீர்ப்பைச் சொல்லுங்கள்.." "சொல் ஊர்மிளை.. உன் மனதில் இருப்பதை எல்லாம் என்னிடத்தில் கொட்டி விடு..உனக்கும் அது ஆறுதலாய் அமையும்.." ராமனின் வார்த்தைகள் ஊர்மிளையை உளம் திறக்கச் செய்தது.. "ப்ரபு.. நான் தியாகம் செய்தேன் என்று தாமும் சொல்வதுதான் எனக்குப் பெரும் வியப்பாக இருக்கிறது.." "நீங்கள் மூவரும், இந்த பதினான்கு வருஷமாய் வனத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்! ஆனால் நான்?.. மனத்தளவில் கூட கஷ்டப்படத் தயாராக இருக்கவில்லை!.." "என்னைத் தமது சகோதரரது பிரிவு, உண்மையில் மிகவும் பாதித்தது ப்ரபோ.." "வனவாசம் செய்வதற்கு அவர் முடிவு செய்த போது, அவர் மீது எந்த அளவுக்கு எனக்கு வருத்தம் இருந்ததோ, அந்த அளவுக்குக் கோபமும் இருந்தது.. அதனால்தான், அப்பொழுது, அவர் மனம் காயப்படும்படி பேசினேன்.." "அந்த நேரம் அவர் மீது தோன்றிய வெறுப்பில்தான், அவர் வனவாசமே செய்து கொள்ளட்டும் என்று ஒதுங்கிக் கொண்டேன்.. ஆனால் அவர் சென்ற பிறகு, என்னை அவரது பிரிவு மிகவும் வாட்டி வதைத்தது.." "அப்பொழுதுதான், எனது குருநாதர் அஷ்டவக்கிரர் எனக்கு உபதேசித்த மந்திரம் எனக்கு ஞாபகம் வந்தது.. அதைக் கொண்டு, எனது துன்பத்துக்கு ஆறுதல் தேடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.." "ஆனால், என் நல்ல நேரம்... அப்போது, "நித்ரா தேவி" எனக்கு தரிசனம் தந்து, சௌமித்ரர், உமது கைங்கர்யத்துக்காக இரவும் விழித்திருக்க விரும்புவதாகவும், அவர் உறக்கத்தை நான் வாங்கிக் கொள்வதானால், அவரது எண்ணம் நிறைவேறும் என்றும் கூறி, எனது சம்மதத்தைக் கேட்டார்.." "தேவி என்னை சம்மதம் கேட்டது, எனக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆயிற்று.." "எல்லாவற்றையும் மறந்து உறக்கத்தின் பிடியில் ஆட்பட, என்னை நானே வலிந்து தந்தேன்.." சொல்லுங்கள்...இதில் எங்கிருந்து "தியாகம்" வருகிறது?.. இதை தமக்குச் செய்கின்ற கைங்கர்யமாகவும் நான் எண்ணிச் செய்யவில்லை.. தமது சகோதரருக்குச் செய்கின்ற சகாயமாகவும் நான் உணர்ந்து செய்யவில்லை.." "மொத்தமும், என் நலத்துக்காகவே, நான் இதை விரும்பி ஏற்றேன்.. அது உங்களுக்கெல்லாம் ஏதோ ஒருவகையில் பயன்பட்டதோ என்னவோ, நானறியேன்..ஆனால் ப்ரபு...இந்த உறக்கத்தின் பிண்ணனியில் எனது சுயநலமே புதைந்திருக்கிறது.." "ஒருவேளை..நித்ரா தேவி எனக்கு இந்த வரத்தை வழங்கியிருக்கவில்லை என்றாலும், நான் அன்று அஷ்டவக்கிரர் உபதேசித்த மந்திரத்தைப் பயன்படுத்தி இருப்பேன்.." "இப்பொழுது முடிவுக்கு வாருங்கள்.. தமது புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு நான் ஏற்றவளா?.. தன்னலமே ப்ரதானமான செயலைத் தாம் எப்படி, "த்யாகம்" என்று போற்றலாம்?.. என் மனம் ஒப்பவில்லையே ப்ரபு.." வேகவேகமாக பேசிக் கொண்டுவந்தவளின் கண்கள், கழிவிரக்கத்தினால், கண்ணீர் சிந்தின.. ஒரு கணம் மலைத்தான் ராமன்! "ஜனகனின் வாரிசு அல்லவா?.. வேறெப்படி இருக்க முடியும்?..ஸத்யத்தைத் தவிர வேறொன்று பேசாதே..." என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றி மறைந்தது.. "ஊர்மிளை!.. உண்மையாகவே, பண்பிலே நீ மிக உயர்ந்து நிற்கிறாய்! எத்தனை உன்னதமானவள் நீ!.. இந்த உலகமே உன்னைக் கொண்டாடக் காத்திருக்கும்போது, "எந்தப் பாராட்டுகளுக்கும் நான் தகுதியானவள் இல்லை.." என்று நீயே வலிய முந்திக் கொண்டு விலகப் பார்க்கிறாய்!.." "இதுவே, உன்னிடத்தில் வேறோருவர் இருந்திருந்தால் இப்படி நடந்து கொள்வரோ என்பது சந்தேகத்துக்கு உரியதே.. நீ ராஜரிஷி ஜனகரின் வார்ப்படம் என்பதை நிரூபித்திருக்கிறாய்!.." "உன் தரப்பு வாதங்களும் சரியாகவே தோன்றுகிறது.. ஆனாலும், உனது மேம்பட்ட குணநலன்களுக்கு நானே இப்போது தோற்றுப் போய் நிற்கிறேன் ஊர்மிளை.. உனக்கு ஏதேனும் நன்மை செய்ய, எனது மனம் மிகவும் விழைகிறது..என்ன செய்யலாம்?..நீயே சொல்லேன்.." பதிலாக ஊர்மிளை கேட்டது, ராமனை ஒருகணம் ஸ்தம்பிக்க வைத்தது... (வளரும்..) [2:57 AM, 5/28/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −33..) "சீதாபதே.. தாம் உண்மையிலேயே எனக்கு ஏதேனும் நன்மை செய்ய விழைந்தால், நான் விரும்புகின்ற ஒரு வரத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.." "சொல் ஊர்மிளை.. உன்மனம் விரும்புவதைக் கேள்.." "பின்னாளில், இந்த உலகம் தமது ராம காதையைப் பேசும் போது, அதில், எனது பாத்திரத்துக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் இருக்கக் கூடாது..." "எந்தத் தியாகமும் செய்யாத என்னை இந்த உலகம் புகழுவதை, நான் விரும்பவில்லை ப்ரபோ.." வியப்பின் எல்லைக்கே சென்றான் ராமன்.. "உன்னதம்!..அதி உன்னதம்! ஊர்மிளை, இப்படி உத்தம குணமே உருவாக, நீ இருப்பது, எனது ஆனந்தத்தை மிகவும் அதிகரிக்கிறது.." "வேறு எதற்காக நீ கொண்டாடப்படாமல் போனாலும், இந்த உலகம், நமக்குள் இப்பொழுது நடந்த இந்த சம்பாஷனையை அறிந்துகொண்டு, அதற்காகவேனும், உன்னைக் கொண்டாட வேண்டும்!.. இது என்விருப்பம்!.." "சீதாபதே... என்னை மன்னியுங்கள்.. நான் அறிந்த வரையில், இதில் கொண்டாடுவதற்கான விஷயமே எதுவும் இல்லையே.. என்னை இந்த உலகம் தவறாகப் புரிந்து கொண்டுவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.. அவ்வளவுதானே?.. அதற்கு மேல், இதைப் பற்றிப்பேச என்ன இருக்கிறது?.." வாயடைந்து நின்றான் ஶ்ரீராமன்!.. "சரி..ஊர்மிளை..உன் விருப்பம் போலவே ஆகட்டும்... நீ இப்பொழுது என்னோடு வா.. வெளியே, சுமித்திரை மாதா, "நீ எழுந்து வந்து விடுவாய்" என்ற நம்பிக்கையோடு, வெகு நேரமாய் காத்திருக்கிறார்கள்.. அவர்கள் உன்னைக் கண்டு மகிழட்டும்.." ராமனைத் தொடர்ந்து வெளியே வந்த ஊர்மிளையைப் பார்த்து, சுமித்திரை கொஞ்சமும் வியப்படையவில்லை.. ஆனால், அகமகிழ்ந்து போனாள்.. ஊர்மிளையை ஆரத்தழுவி, தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியவள், ராமனைப் பார்த்து ஒற்றை வரியில் சொன்னாள்.. "ராமா...இந்தக் காரியம் ஒன்னால முடியாம போயிருந்தா தான், நான் ஆச்சர்யப்பட்டிருப்பேன்.." "சுமித்திரை மாதே..தமது ஆசையும், ஆசியும்தான் காரியம் செய்தது.. என்னால ஆனது ஒன்னுமில்ல.." "ராமா...ஒனக்கு ஒன்னு தெரியுமா?.. ஒன்னப் பத்துமாசம் வயித்தில சொமக்கலயேன்னு நான் நெறைய நாள் ஏங்கி இருக்கேன்.. இப்போ அப்படி ஒன்னச் சுமக்காதது, எனக்குத் தீராத கொறயாவே போயுடுத்துப்பா.." "ஒங்க வயத்தில பொறந்தா தானா மாதே?.. நா என்னிக்கும் ஒங்களுக்கும் பிள்ளதானே?.." ஆனந்தத்தில் சுமித்திரையின் விழிகளில் நீர்துளிர்த்தது.. அத்தனைப் பெரிய திரளில் இருந்தவர்களில், ராமனோடு வருகின்ற ஊர்மிளையை, முதலில் பார்த்தது லக்ஷ்மணன்தான்!.. மனதுக்குள் அவளைப் பார்த்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், தான் அவளுக்கு, இத்தனைக் காலமும் துரோகம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு, அவளை நேருக்கு நேர் பார்ப்பதை, தவிர்க்க வைத்தது.. தொலைவிலிருந்தே லக்ஷ்மணனை அடையாளம் கண்டுகொண்டாள் ஊர்மிளை.. வனம் செல்வதற்குமுன், தான் அவனிடம் நடந்து கொண்ட விதம் நினைவில் வரவும், தன்னை அறியாமல், அவள்விழிகளில் நீர் திரையிட்டது... "எந்த முகத்தைக் கொண்டு, இப்போது அவரிடம் பேசுவது?.. அன்று எத்தனை துடிக்கத் துடிக்கப் பேசினேன்!.. என்னை மன்னிப்பாரா?.." இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஆசையும், அன்பும் இருந்தாலும், இடையே இரும்புத் திரையாய் விழுந்திருந்த அவரவர் குற்றஉணர்வு, இருவரையுமே நெருங்கவிடாமல் தடுத்தது.. இந்த இடைவெளியை, இராமனும் கவனித்தான்.. "என்னால் ஏற்பட்ட இந்த ப்ரச்சனையை, நானே தீர்த்து வைப்பேன்.." மனதுள் ஸங்கல்பம் செய்து கொண்டான் ஶ்ரீராமன்!.. வாஸ்தவத்தில், எவர் ஒருவருடைய வாழ்க்கையும் இடர் நீங்கி, சுடர்விட்டு ப்ரகாசிக்கவும், இன்னல் ஒழிந்து, இன்பம் நிறைந்து மிளிரவும் வேண்டுமென்றால், அது இறைவனின் ஸங்கல்ப மாத்திரத்தாலேயே நிகழும்! இத்தனை காலத்திற்குப் பிறகு, ஊர்மிளையின் இடர் களைய, இராமன் எண்ணம் கொண்டுவிட்டான்... (வளரும்..) [3:00 AM, 5/28/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −34..) யோசனையில் ஆழ்ந்திருந்த ராமனை, குலகுரு வசிஷ்டரின் குரல், யதார்த்த நிலைக்குக் கொண்டுவந்தது.. "ராமா... இங்கயா இருக்க?.. ஒன்ன எங்கெல்லாம் தேடிண்டிருக்கேன்.." சட்டென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான் ராமன்.. "சொல்லுங்கோ குருநாதா.. அடியேன் ஏதாது செய்யணுமா?.." "இல்ல ராமா.. ஒன்கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.. நாள மறுநாள் ஒனக்குப் பட்டாபிஷேகம்.. நீயும் சீதையும், நாளைக்கு விடிகாலைல ஸ்நானத்தை எல்லாம் முடிச்சுண்டு, தயாரா இருங்கோ.. நீங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டிய க்ரியைகள் எல்லாம் நெறய இருக்கு.." "இந்த முறையாவது, இந்தக் காரியம் தடை இல்லாம நடைபெறணும்.." கவலை ரேகை படர, பேசுகின்ற குருநாதரை ஏறிட்டான் ராமன்.. "ஆனா..குருநாதா.. அதுக்குள்ளவா?.. இப்பதானே வனத்திலேந்து திரும்பி இருக்கேன்..பரதனே இன்னும் கொஞ்ச நாளைக்கு ராஜாவா இருக்கட்டுமே.." அவனை தீர்க்கமாக ஒருமுறைப் பார்த்தார் வசிஷ்டர்.. வேறு எதுவும் சொல்லாமல், "ராமா..கொஞ்சம் என்பின்னாடி வா.." என்றார்.. குருவைப் பின்தொடர்ந்தான் ராமன்.. ஆச்சரியமூட்டும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு மாபெரும் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார் வசிஷ்டர்.. மண்டபத்தின் ப்ரம்மாண்டத்துக்கு ஏற்றாற்போல், முகப்பில் இருந்த பெரிய "ஸ்வாகதம்", கண்களைக் கூசவைக்கின்ற ஒளியோடு ப்ரகாசித்தது.. தொவைவிலிருந்து வெறும், "ஸ்வாகதம்" மட்டுமே தெரிந்த கண்களுக்கு, அருகில் வந்ததும், அந்த எழுத்துக்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட "ராம"நாமங்கள் ஒளிந்திருப்பது புலப்பட்டது.. "ராமா.. இந்த மாளிகையில் செய்யப் பட்டிருக்கின்ற அலங்காரங்கள் ஒவ்வொன்றையும் கொஞ்சம் நிதானமாக உற்றுப் பார்.. அதன் பிறகு, உனது கோரிக்கைக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை நீயே நிர்ணயம் செய்!.." அவ்வளவு நேர்த்தியுடன் அந்த மண்டபம் எதற்காக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான வினாவை எழுப்பாமலேயே, ராமன் குருநாதரின் கட்டளைப்படி, ஒவ்வொரு இடத்தையும் நன்றாக ஆராய்ந்தான்.. எத்தனையோ நாட்களின் உற்சாகத்தோடு கூடிய உழைப்பு, ஒவ்வொரு மூலையிலும் பளிச்சிட்டது.. தொங்குகின்ற தோரணங்கள் எல்லாம் "ராம" நாமத்தோடு, அசைந்தசைந்து ஆடிக் கொண்டிருந்தன.. "ராம, ராம" என்று மின்னுகிற வண்ணம் மணிகளைக் கோர்த்து, தூண்களை வடிவமைத்திருந்தார்கள்.. ஒவ்வொரு "ராம" நாமமும் ஒரு மொழியில் இருந்தது!.. அயோத்தியைத் தாண்டி, அடுத்த தேசங்களிலிருந்தும், வேலைப்பாடுகளோடு கூடிய அந்தத் தூண்கள் வந்திறங்கியிருந்ததை, ராமன் புரிந்துகொண்டான்!. சுற்றுச் சுவர்களிலெல்லாம் ராமனைக் குழந்தையாக பார்த்ததிலிருந்து தொடங்கி, அவனின் எல்லா பருவங்களையும் வரிசைப் படுத்தியிருந்தார்கள்.. அவன் அரண்மனையின் பரந்த தரையில், தனது முழங்கால்கள் தேயத் தவழ்ந்தது... தசரதர், முன்னழகையும், பின்னழகையும் மாறிமாறிக் காண்பதற்கு ஏதுவாக, வந்தும் போயும் அவன் நடையழகைக் காட்டியது... வசிஷ்டரிடம் குருகுலவாசம் செய்தது.. வில்லேந்திய வீரனாய், எழில்மேவ நின்றிருந்தது... விஸ்வாமித்ரரின் பின்னால் லக்ஷ்மண சகிதமாய் வனம் ஏகியது.. மிதிலையின் இளவரசி ஜானகியோடு, அயோத்திக்குத் திரும்பி வந்தது.. அயோத்தியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ராமன் அந்தப் பெருந்திரளில் இருந்த ஒவ்வொருவரிடமும், சீதையோடு சென்று, நேரில் ஆசிகளைப் பெற்றது.. "ராமன் நாடாளப் போகிறான்" என்ற செய்தி கேட்டு, அயோத்தியின் ப்ரஜைகள், அவனைத் தோளில் சுமந்துகொண்டு, ஆரவாரம் செய்தது.. அடுத்ததாக, "அரியாசனம் இல்லை, ஆரண்யம்தான்" எனத்தெரிந்து, மரவுரி தரித்து, அயோத்தி நீங்கியது.. கடைசியாக... நேற்று அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் திரும்ப வந்து இறங்கியது.. அந்தச் சித்திரம் மட்டும், அப்போதுதான் முடித்ததற்கு சாட்சியாய், ஈரம்கூடக் காயாமல் இருந்தது.. ப்ரமித்தே போனான் ஶ்ரீராமன்!.. அடுத்ததாக விழா மேடை.. இருபுறமும், முகப்பில் எழில் மங்கையரின் உருவங்கள் நிற்கவைக்கப்பட்டிருந்தன.. அவர்களின் கரங்களில், "ஜெய் ஶ்ரீராம்" என்ற வேலைப்பாடுகளுடன் கூடிய பதாகைகள் பொலிந்தன! மேடையில், விலையுயுர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த இரண்டு கவின்மிகு அரியாசனங்கள் கண்களை ஈர்த்தன!. உற்று நோக்கினால், அந்த அலங்காரங்களிலும் பல இடங்களில், "ராம, ராம" என்ற எழுத்துக்களாய், வைரவைடூரியங்கள் மின்னன.. அந்த அரியாசனங்களில், தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மன்னனுக்கும் மகாராணிக்குமான பேரெழில் மிகுந்த இரண்டு க்ரீடங்கள் ஜ்வலித்துக் கொண்டிருந்தன.. விழாமேடைக்கு அருகே, பல புண்ணிய நதிகளிலிருந்தும் கொண்டு வந்திருந்த நீரை ஏந்திய நூற்றிஎட்டுப் பொற்குடங்கள்.. யாகத்தீயை வளர்ப்பதற்காக, அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள்.. பட்டாபிஷேகத்துக்காக சேகரித்து வைக்கப்பட்டிருந்த த்ரவியங்களின் விதம்விதமான நறுமணம்.. இப்படி தெய்வீக எழிலோடு கூடிய சூழல், ஒரு இன்ப மயக்கத்தைத் தருவதாய் அமைந்திருந்தது.. இதைத் தவிரவும், பார்வையாளர்கள் அமர்வதற்கான பலத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.. ஸ்தம்பித்து விட்டான் ராமன்!.. "கு..ரு...நாதா... அடியேன் நேற்றுதானே அயோத்திக்கே வந்தேன்!..அதற்குள் எப்படி இத்தனை ஏற்பாடுகளும் ஸாத்யமாயிற்று?.." வசிஷ்டர், அர்த்தபுஷ்டியோடு, ராமனைப் பார்த்துப் புன்னகைத்தார்.. "ராமா.. நீ என்னிக்குமே, "ஜெய ராமன்"பா.. உனக்குத் தோல்வி என்பதே கிடையாதே.. வனம் சென்ற நீ, வெற்றி வீரனாத்தான் திரும்புவாய்னு எல்லாருக்கும் உறுதியா தெரியும்.. அதோட விளைவுதான் பா இது.." "இன்னிக்கு நேத்திக்கு இல்ல.. இங்க இருக்கற ஒவ்வொருத்தரோட கனவும், ஒன்ன அரியாசனத்தில ஒக்கார வெச்சுப் பாக்கறதுதான்.." "நீ என்ன, ஒன்னோட பரதன்மட்டும்தான் இதுக்கு ஆசைப்பட்டான்னு நெனக்கறயா?. இந்த பாரதமே, நீ அரியாசனம் ஏறுகிற அழகைப் பாக்கத்தான் காத்துண்டிருந்தது.." "மத்த விஷயங்கள்ல ஒனக்கு "ஜெயம்" நிரந்தரமா இருக்கலாம்.. ஆனா, இத்தனப் பேரோட அன்புக்கும், நீ தோத்துப் போய்தான் ஆகணும்!.. ஒனக்கு வேற வழியே இல்ல.. அதனால, ஆக வேண்டிய காரியத்தப் பாரு.." (வளரும்..) [3:03 AM, 5/28/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −35..) வசிஷ்டர் அறிவுறுத்தியபடியே, ராமனும் சீதையும் ஸ்நானாதிகளை முடித்துவிட்டு, விடிகாலையில் தயாராக இருந்தார்கள்.. வசிஷ்டரைப் பின்தொடர்ந்து, இருவரும் யாகசாலைக்குள் நுழைந்தனர்.. வேதம் ஓதுகின்ற அந்தணர்கள், அங்கே குழுமி இருந்தனர்.. வசிஷ்டரது இசைவின்பேரில், வேதமந்திரங்களை அவர்கள் ஓதத் துவங்கினர்.. ராகத்தோடு, சாமவேத பாராயணமும் தொடர்ந்தது.. நண்பகலைத் தாண்டியும், க்ரியைகள் தொடர்ந்த வண்ணமிருந்தன. பயபக்தியோடு, ராமனும் மந்திரங்களை உச்சாடனம் செய்தான்.. நிறைய தானங்களை சீதையைக் கொண்டு, ராமன் வேதம் ஓதியவர்களுக்கு த்ருப்தியாக வழங்கினான்.. வயிராற அவர்களுக்கு அன்னமிட்டு, தக்ஷிணை, தாம்பூலங்களும் கொடுத்து மரியாதையும் செய்தான்.. இதற்குள் அந்தி சாய்ந்து விட்டிருந்தது.. முதல்நாளைப் போலவே, விடிகாலையிலேயே, அடுத்த நாளும், ராமனும் சீதையும் தயாராக இருந்தார்கள்.. குலதெய்வ ஆராதனைக்குப்பிறகு, வசிஷ்டர், அவர்களை ரத்தினங்களால் இழைக்கப்பட்டிருந்த அரியாசனத்தில் அமரவைத்தார்.. இந்த வைபவத்தை நேரில் கண்டு மகிழ, ஈசன், அயன், தேவ, கந்தர்வ, கின்னரர்கள் அனைவரும் தத்தமது குடும்பத்துடன் வருகை தந்திருந்தனர். அத்தனைப் பேருமே, "திவ்ய தம்பதிகள் தத்தமது அரியாசனத்தோடு, விண்ணுலகம் விட்டு, மண்ணுலகம் வந்தனரோ!.." என்று வியந்து நின்றனர். சுபமுஹூர்த்த நேரம் நெருங்கியது.. துந்துபி முழங்கியது.. பேரிகை கொட்டியது.. ஜெய கோஷம் விண்ணையும் பிளந்தது.. முதன்முதலில் குலகுரு வசிஷ்டர், சுகந்தம் வீசுகின்ற புண்யதீர்த்தத்தால், தமது திருக்கரங்களால் அபிஷேகம் செய்தார்.. அவரைத் தொடர்ந்து வாமதேவர், ஜாபாலி, கஸ்யபர், காத்யாயனர், கௌதமர் போன்ற மகரிஷிகளும், ராமனுக்கு அபிஷேகம் செய்தனர்.. அதன்பின்னர், ரித்விக்குகளும், அந்தணர்களும், வேத மந்திரங்களோடு, அபிஷேகம் செய்தனர்.. இப்படியாக, அபிஷேகங்கள் ஒரு முடிவுக்கு வந்ததும், வம்சாவளியாக வந்த, "மனு, திலீபன்" போன்ற அரசர்கள் அணிந்த மகுடத்தை முதலில் ராமனுக்குச் சூட்டினார் வசிஷ்டர்.. அதன்பிறகு, ப்ரத்யேகமாக இந்த வைபவத்திற்கென்றே தயார் செய்து வைத்திருந்த விலையுயுர்ந்த ரத்தினங்களால் ஆன க்ரீடத்தை, வசிஷ்டர் ராமனுக்கு அணிவித்தார்.. வசிஷ்டர் ஆசீர்வதித்துக் கொடுத்த மற்றொரு க்ரீடத்தை, ராமன் சீதைக்கு அணிவித்தான்.. மகிழ்ச்சிக் கடலில் அத்தனைபேரும் ஆழ்ந்திருந்தார்கள்.. கந்தர்வர்கள் தேவகானம் இசைக்க, அப்ஸரஸ்கள் ஆடிப் பாடினார்கள்.. பரத சத்ருக்னர்கள், வெண்கொற்றக்குடையைப் பிடித்திருக்க, அனுமனும், விபீஷணனும் வெண்சாமரம் வீசினர். நூறு தங்க புஷ்பங்களால் கோர்க்கப்பட்ட ஒரு ஜ்வலிக்கின்ற மாலையையும், விஷேஸமாக விலையுயர்ந்த ரத்னங்களால் உண்டாக்கப்பட்டிருந்த ஒரு ஹாரத்தையும் தேவேந்திரன் ராமனுக்குத் தனது காணிக்கையாகச் சமர்ப்பித்து மகிழ்ந்தான்... பட்டாபிஷேக வைபவத்தை ஒட்டி, ஆயிரக்கணக்கான கன்றோடு கூடிய பசுக்களையும், காளைகளையும், குதிரைகளையும், சத்பாத்திரங்களுக்கு, ராமன் தானமாக வழங்கினான்.. வந்திருந்தவர்க்கெல்லாம், கணக்கில்லாத அளவில், தங்க நாணயங்களையும், ஏராளமாகத் தானம் செய்தான் ராமன்.. விலையுயர்ந்த ரத்தினங்கள், வஸ்திரங்கள், பலவிதமான ஆபரணங்கள் இவற்றோடு, மணிகளால் கோர்க்கப்பட்டு, கோடி சூர்ய ஒளியோடு ப்ரகாசித்த ஒரு தங்க மாலையையும், ராமன் சுக்ரீவனுக்கு ஆசையாகக் கொடுத்தான்.. வாலிமைந்தன் அங்கதனுக்கு இரண்டு தங்கக் கடயங்களைக் கொடுத்தான்.. விபீஷணனுக்கு, தனது குலதெய்வமாகக் கொண்டாடப்பட்டு வந்த, அனந்தஸயனனான, ரங்கநாதனையே தூக்கிக் கொடுத்தான் ராமன்.. தனது பத்னி சீதைக்கு, மணிகள் கோர்த்து உத்தமமாக இருந்த ஒரு முத்துமாலையை, ராமன் ஆசையோடு அளித்தான்.. வந்திருந்த வானரர்கள் அத்தனைப் பேருக்கும், அவரவர்கள் விரும்பிய ஆபரணங்கள் வழங்கப்பட்டன... வைத்த கண்வாங்காமல், ராமனையும் சீதையையும் பார்த்துக் கொண்டிருந்தான் அனுமன்.. அவனுக்கு எந்தப் பரிசும் அளிக்கப்படவில்லையே என்று சீதையின் மனது துடித்தது.. ராமனிடம் வாய்விட்டுக் கூறவும் கூறினாள்.. "அனுமனுக்கு எந்தப் பரிசும் வேண்டாம்" என்றான் ஶ்ரீராமன்! ஆனால், சீதைக்கு மனது தாங்கவில்லை.. அவள் வருத்தத்தைக் காணச் சகியாத ராமன், "உனக்கு என்ன கொடுக்க வேண்டுமெனத் தோன்றுகிறதோ, அதையே கொடு சீதே.." என்றான்.. அனுமனை அருகில் அழைத்தவள், சட்டென்று, சற்றுமுன், ராமன் தனக்களித்திருந்த முத்துமாலையைக் கழற்றிக் கொடுத்தாள்.. ஒரே கணம்தான்..அனுமனின் கரங்களில் அந்த மாலை இருந்தது.. அடுத்த கணம், அதை பிய்த்தெறிந்துவிட்டான்.. சீதைக்கு ஆறவே இல்லை மனசு!., "என்ன ஆஞ்சனேயா?.. ஏன் இப்படி நடந்துண்டே?.," என்று சற்றுக் கோபத்தோடே வினவவும், ராமன் அவளைப் பார்த்து சிரித்தான்.. அது அவள் சினத்தை மேலும் அதிகரிப்பதை உணர்ந்த அனுமன், சட்டென்று அவளுக்குப் பதில் அளித்தான்.. "மன்னியுங்கள் மாதா... அந்த மாலைகளில் என் ராமனை என்னால் காண முடியவில்லை..அதனால் எறிந்து விட்டேன்.." "...உன் ராமனை, நீ அவ்வளவு ஆராதிக்கிறாயோ?.." "ஆம் மாதா..சந்தேகமே வேண்டாம்.." "இதோ..இங்கே பாருங்கள்..தங்களோடு, எனது இதய சிம்மாசனத்தில் ராமன் வீற்றிருப்பதை.." தனது யோக சக்தியால், தன் நெஞ்சிலிருக்கும் ராமனை சீதைக்குக் காட்டிக் கொடுத்தான் அனுமன்! அகமகிழ்ந்துபோன சீதை, மனப்பூர்வமாய் அவனை ஆசீர்வதித்தாள்.. லக்ஷ்மணன் பிடிவாதமாய் மறுத்துவிட்ட படியால், "யுவராஜனாய்" பரதனுக்குப் பட்டம் சூட்டி கௌரவித்தான் ராமன்.. மாண்டவி, சத்ருக்னன், ச்ருதகீர்த்தி ஆகியோரையும் தகுந்தபடி, பரிசுகளைத் தந்து கௌரவித்தான் ராமன்.. மொத்தத்தில் பட்டாபிஷேகத்திற்கு வருகை தந்திருந்த அனைவருமே, திரும்பி அவரவர் இடம் செல்லும் போது, செல்வந்தர்களாகத் திரும்பிச் சென்றனர்!.. சுக்ரீவன், தனது படைசூழ, கிஷ்கிந்தைக்கும், விபீஷணன் லங்கைக்கும், மற்றவர் அனைவரும் தத்தமது இருப்பிடமும் புறப்பட்டுச் சென்றுவிட, எஞ்சியிருந்தது, லக்ஷ்மணனும், ஊர்மிளையும் மட்டுமே... (வளரும்..) [3:06 AM, 5/28/2023] Mohan SriRaghavendrar Kulithalai: 🏹 ஸ்ரீ ராமஜெயம் 🏹 (ஊர்மிளை என்னும் உன்னதம்..) (பகுதி −36..) "லக்ஷ்மணா..நான் "ராஜா"ராமனாகணும்னு நீ எப்பவோ ஆசப்பட்டே.. அது இப்போதான் நிறைவேறி இருக்கு... ஒனக்கு சந்தோஷம் தானே?.." ராமனின் கேள்விக்கு, முகமெல்லாம் பூரிப்போடு, லக்ஷ்மணன் பதிலளித்தான்.. "ராமண்ணா.. இதவிட என்வாழ்க்கையில ஒரு சந்தோஷ நாள் இருக்கவே முடியாதுண்ணா.." "ஆனா லக்ஷ்மணா.. வெறும் "ராஜா" ஆயி்ட்டா மட்டும் போறுமா?.. ப்ரஜைகள் சந்தோஷப்படற மாதிரியான ராஜாவா நான் இருக்கணுமேன்னு கவலயா இருக்கு.." "அண்ணா... நீங்க வேணா பாத்துண்டே இருங்கோ.. "ராம" ராஜ்யத்துல ப்ரஜைகளுக்கு ஒரு குறையும் இருக்கப் போறதில்ல.." "அதெல்லாம் இருக்கட்டும் லக்ஷ்மணா.. இப்போ நான் கேக்கற சந்தேகத்துக்கெல்லாம், நீ பதில் சொல்லிண்டே வா.. அப்போதான் நான் ராஜாவா எப்படி நடந்துக்கணும்னு எனக்கு ஒரு தெளிவு கெடைக்கும்.." "அ..ண்...ணா... ஒங்க சந்தேகத்த தீர்த்து வெக்கற அளவுக்கு எனக்கு ஞானமும் இருக்கா?.. என்னப்போய் கேக்கறேளே.." "ஒன்ன பத்தி நன்னா தெரிஞ்சுண்டுதான் கேக்கறேன் லக்ஷ்மணா.. குறுக்க எதுவும் பேசாம, நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.." ஒருபக்கத்தில், சீதையும், ஊர்மிளையும், பழைய கதைகளை எல்லாம் பேசிக்கொண்டு, தம்மை மறந்திருந்தார்கள்.. ராமன் அவர்களையும் அழைத்தான்.. "சீதே..ஊர்மிளை..நீங்க ரெண்டு பேரும் இங்க வந்து கொஞ்ச நாழி ஒக்காருங்கோ..நான் லக்ஷ்மணன் கிட்ட சில சந்தேகம் எல்லாம் கேக்கப் போறேன்..அவன் அதுக்கெல்லாம் பதில் சொல்லப்போறான்.. தேவைப்பட்டா, ஒங்களையும் கேள்வி கேப்பேன்..நீங்களும் பதில் சொல்லும்படி இருக்கலாம்.." ராமனை, ஆழமாக, ஊடுருவிப் பார்த்தவாறே சீதை வந்தமர்ந்தாள்.. ஒன்றுமே புரியாமல், ஊர்மிளையும் வந்து அமர்ந்து கொண்டாள்.. "சொல்லுங்கோண்ணா... எனக்கு பதில் தெரிஞ்சா சொல்றேன்.." "லக்ஷ்மணா... என்னோட மொதல் கேள்வி... ஒரு ராஜாவோட முக்யமான கடமை என்ன?..". "அண்ணா...ப்ரஜைகளை நல்லபடியா பாதுகாக்கறது..அதுதான் ரொம்ப ரொம்பமுக்யம் அண்ணா.. ஒரு ராஜாவோட ஆட்சியில, அந்த ராஜாவால, எந்த ப்ரஜைக்கும், துக்கமோ, வருத்தமோ, வரவே கூடாதுண்ணா.." சரி..அடுத்தபடியா, ஒரு ப்ரஜையோட கடமை என்ன?.. "அண்ணா...ராஜாவுக்கு கீழ்படிந்து நடக்கறதுதான், ஒவ்வொரு ப்ரஜைக்கும் இருக்கற பெரிய கடமை அண்ணா.." "உத்தமமான ராஜா, ப்ரஜைகள உத்தமமான வழியிலதான் கூட்டிண்டு போவான்..அதனால, அப்படிப்பட்ட ராஜாவ மதிச்சு நடக்கறதுதான், ஒரு ப்ரஜையோட கடமைண்ணா.." "இப்போ, சீதே..நீ சொல்லு.. ஒரு குடும்பம் எப்படி இருக்கணும்?.." "ரகுவீரரே..ஒரு குடும்பத்தில, குடும்பத் தலைவர்தான் ராஜா.. அவர் சொல்றத, குடும்பத்தில இருக்கற மொத்தப்பேரும் கேட்டு நடக்கணும்..அப்பதான், அந்தக் குடும்பம் நாலுபேர் மெச்சறா மாதிரி இருக்கும்.." "ரொம்ப சரி..சீதே.. ராஜரிஷியோட பொண்ணு இல்லயா?.. ஒன்னோட பதில் வேற எப்படி இருக்கும்?.. அது சரி.. இதுக்குப் பதில் சொல்லு.. ஒரு குடும்பத்தில இருக்கற பதி, பத்னி இவாளோட ஒறவு எப்படி இருக்கணும்?.." "ரகுவீரரே...இதுக்குப் பதில் ஒரே வரியில சொல்லணும்னா, "விட்டுக் கொடுத்துப் போகறதுதான் தம்பதிகளோட ஒறவை மேம்படுத்தும்"னு சொல்லிடலாம்.." இப்பொழுது ராமன் குறுக்கிட்டான்.. "சீதே.... பதியா?..பத்னியா?..யார் விட்டுக்கொடுத்துப் போகணும்?.." "ரகுவீரரே..இது என்ன கேள்வி?.. ரெண்டு பேருக்கும் பரஸ்பரம் இருக்க வேண்டிய குணம்தானே இது!.." "பத்னிகிட்டே ஆசையிருந்து, அவ "முக்யம்"னு நெனச்சா, பதி விட்டுக் கொடுத்துப் போகணும்.." "அதே மாதிரி, பதிமேல காதல் இருந்தா, பத்னி விட்டுக் கொடுத்துப் போகணும்.." "சரி சீதே.. பத்னிய பாதுகாக்க வேண்டிய ஒரு பதி, அவள கவனிக்காம விட்டுட்டானா, அவனுக்குத் தண்டனை உண்டா?.." சரேலென்று ஒரே நேரத்தில், லக்ஷ்மணன், ஊர்மிளை இருவரும் ராமனை நிமிர்ந்து பார்த்தார்கள்.. "சொல்லு சீதே.. அந்த "பதி"க்கு தண்டனை உண்டா?.." "ரகுவீரரே.. நிச்சயம் தண்டனை உண்டுதான்.. அக்னி சாட்சியாய், கரம்பிடித்தவள, கண்டுகொள்ளாம கைவிட்டான்னா, அவன் தண்டிக்கத் தகுந்தவனே.." "ஆனா, அந்த தண்டனைய அவனுக்குத் தரதுக்கு, அவனோட "பத்னி"க்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கு..இந்த விஷயத்தில, அவதான் முடிவு எடுக்க வேண்டியவ.." ஜானகியின் இந்தப் பதிலைக் கேட்ட லக்ஷ்மணன் முகம் இருண்டது.. ஊர்மிளைக்கோ, தர்ம சங்கடமாய் இருந்தது.. ராமன் இப்பொழுது, ஊர்மிளையின் பக்கம் திரும்பினான்.. "சரி..ஊர்மிளை..இப்ப நீ சொல்லு.. தன்னை சரியா நடத்தாத பதிக்கு, பத்னி என்ன தண்டன தரலாம்?.." ஊர்மிளை வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை.. மாறாக, அவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகியது.. "ஹேய் ஊர்மிளை..அதுக்கேன் நீ அழற?.." ....பதைபதைத்துக் கேட்டாள் சீதை... தன்னைச் சுதாரித்துக் கொண்ட ஊர்மிளை பதில் சொன்னாள்.. "சீதே..ஒன்னோட பதி, என்ன தண்டன தரலாம்னு கேக்கறார்!.. தன்ன சரியா நடத்தாத பதியால, அந்தப் பொண்ணோட வாழ்க்கையே சூன்யமாயிடறதே!.. அதுக்கு மேல அந்த " பதி"க்கு தண்டன கொடுத்தா என்ன, கொடுக்காட்டாதான் என்ன?.." பேசிக்கொண்டே வந்தவள், கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.. ஒரு கணம் சீதைக்கு ஒன்றும் புரியாமல் போனாலும், ஒரு பெண்ணாய், அவளால் ஊர்மிளையின் நிலையை ஊகிக்க முடிந்தது.. சட்டென்று சீதை பேசினாள்.. "ரகுவீரரே.. எந்த ஒரு ப்ரச்சனைக்கும் தீர்வு உண்டு.. சில சமயத்தில தண்டனயெல்லாம் தேவைப்படாமயே, வெறும் அறிவுரையாலேயே, ஒரு நல்ல முடிவைக் கொண்டுவரலாம்.." ராமன் புரிந்து கொண்டான்.. "லக்ஷ்மணா.. நான் இந்த அயோத்திக்கு ராஜா.. இப்போ சொல்லு..இந்த அயோத்தியில, நீ யார்?.." "அ...ண்...ணா... நான் இந்த அயோத்தியோட ப்ரஜை.." "ஒரு உத்தமமான ராஜா, ப்ரஜைகள உத்தமமான வழியிலதான் கூட்டிண்டு போவான்..அப்படிப்பட்ட ராஜாவ, மதிச்சு நடக்கறதுதானே, ஒரு ப்ரஜையோட கடமை?.." "ஆ...மாண்...ணா..." "அப்போ...இதோ இருக்காளே ஊர்மிளை.. இவளுக்கு ஒன் பதில் என்ன?.." வாய்மூடி மௌனமாய் இருந்தான் லக்ஷ்மணன்.. "லக்ஷ்மணா..மொதல்ல ஒனக்கு அண்ணனா பேசறேன்...கேட்டுக்கோ.. ஊர்மிளை உத்தமி!.. உன்னதமான மனசு படைச்சவ!.. அவளுக்குத் துரோகம் செய்யாதே.. அது மஹா பாவம்.. அதுக்குப் பரிகாரமே கெடையாது.." "அடுத்ததா, இந்த அயோத்தியோட மன்னனா பேசறேன்..அதையும் கேட்டுக்கோ.. காரணமே இல்லாம, ஒரு அபலைப்பெண், என் ராஜ்யத்துல, கண்ணீர்விட்டு அழும்படி ஆச்சுன்னா, அது என் தேசத்தோட நலனையே பாதிக்கும்.. அதுக்கு காரணமானவன் யாரோ, அவன் எனக்கு பதில் சொல்லியே ஆகணும்..." "இப்போ சொல்லு.. நீ என்ன செய்யப் போற?.." "அ...ண்...ணா... நீங்க என்ன சொன்னாலும், அது எனக்கு வேத வாக்குண்ணா... ஒங்க பேச்ச நான் என்னிக்கு மீறிருக்கேன்? ." லக்ஷ்மணன் கண்களில் நீர்துளிர்த்தது.. "அப்படியானால் லக்ஷ்மணா...இனிமே, ஊர்மிளை கண்ணுலேந்து விழற ஒவ்வொரு சொட்டு நீரும், ஆனந்தக் கண்ணீராவே இருக்கணும்..இது இனிமே ஒன் பொறுப்பு.." "ஆகட்டும்ணா.. ஒங்க மனசு கோணாம நடந்துக்கறேண்ணா.." கதறிக்கொண்டு, ஓடிவந்து ராமனின் கால்களில், விழுந்தாள் ஊர்மிளை!.. புதுவாழ்வைத் துவங்க இருக்கின்ற லக்ஷ்மணனும், ஊர்மிளையோடு சேர்ந்து அண்ணனின் கால்களில், விழிநீர் மல்க விழுந்தான்.. லக்ஷ்மணன் புதிதாக "ஜனனம்"" எடுத்திருக்கிறான் என்பது ஜானகிராமனுக்குப் புரிந்துவிட்டது.. இனி ஊர்மிளையும், ஒரு உல்லாசப் பறவையே.... (நிறைந்தது.) ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம🙏🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏🙏 ராம ராம ராம ராம🙏🙏 : நிறைவு பெற்றது 🙏 ----------------------------------------------------------------------------------- Sun Infra's Mantralayam No.3, F2, First Floor, Arimuthu Achari Street Triplicane Chennai - 600 005 Mobile: 09884212021 www.muralisudha.blogspot.com www.radhekrishna2011.wordpress.com www.aanmigam-deiveegam.blogspot.com/ www.hareramahareramaramaramaharehare.blogspot.com authentic Traditional Cooking authentic Traditional Cooking

No comments: