Sunday, October 29, 2023

சனாதன தர்மம் - பாகம்-49



Radhe Krishna 29-10-2023





Radhe KRISHNA 29-10-2023




சனாதன தர்மம் - பாகம்-4929-10-2023

சனாதன தர்மம் - பாகம்-49 29-10-2023


Radhe Krishna 29-10-2023 சனாதன தர்மம் - பாகம்-49 Radhe Krishna 29-10-2023 🌹 சனாதனம்...! சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்... *ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்* அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம் இந்த உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர் : *விநாயகர்* ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம் : *விநாயகர்* அக்கால அணுகுண்டு : *பிரம்மாஸ்திரம்* கலப்பு திருமணம் :*முருகன்* அன்றே பெண்ணுக்கு சம உரிமை : *அர்த்தநாதீஸ்வரர்* கணவன் சொல்லை மீறியதன் விளைவு : *தாட்சாயிணி* எல்லை தாண்டியதன் விளைவு : *சீதா* கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர் : *சபரி* தான் அணிந்த மாலையை தந்தவர் : *ஆண்டாள்* அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : *விதுரர்* அதையும் விரும்பி உண்டவர் : *பார்த்த சாரதி* ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம் : *விஸ்வாமித்திரர்* ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகலாம் : *பரசுராமர்* தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலை கொய்தவர் : *பரசுராமர்* ஓர் பட்டியலினத்தவர் மிகச்சிறந்த நாயன்மார் ஆகலாம் : *நந்தனார்* ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம் : *கண்ணப்ப நாயனார்* *ஓர் திருடனும் இதிகாசம் எழுதலாம் : *வால்மீகி* அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது விலங்கானலும் , மனிதரானாலும், இராட்சசனானாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு : *வாலி, துட்சாதணன், இராவணன், இந்திரன்* கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம் : *பீஷ்மர்* செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது : *கர்ணன்* தர்மத்தை காக்க சாரதியாகவும் : *கண்ணன்* கண்ணனும் , இராமனும் ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி பிடிவாதமாக : *ஹனுமன்* தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்ப்பது : *ஹனுமன்* வேடுவனும் , விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணதிருப்பது : *இராமன்* தனது அண்ணனுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது. : *இலட்சுமணன்* இந்த பரதத்தை விட என் பரந்தாமனின் பாதசுவடுகளே எனக்கு முக்கியம் : *பரதன்* தன் கணவன் காணாததை தானும் கான விரும்பேல் : *காந்தாரி* பக்தியால் பரந்தாமனை கட்டுற செய்தவன் : *சகாதேவன்* பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் : *ஹனுமன்* தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறிவன் : *விபூஷ்ணன்* தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன். : *கும்பகர்ணன்* நண்பணின் மனைவியினை அபகரித்து சென்றவனை மறைந்திருந்து தாக்கியவன். : *இராமன்* தன் மனைவியை அபகரித்து சென்றவன் நிராயுதபாணியாக நிற்கும் பொழுது இன்று போய் நாளை வா என்று கூறிவன். : *இராமன்* தன்னை நூறு முறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் : *கண்ணன்* பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன்: *நரசிம்மன்* அன்றைய TEST TUBE BABY : *தோரோணாச்சாரியார்* அன்றைய incubator : *கமண்டலம்* வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் : *சுக்கிராச்சாரியார்* வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம் செய்தவன் : *கர்ணன்* தன் மனைவியும் தன் நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்த்ததில்லை : *துரியோதனன்* கருவறையில் போர் அறிவு பெற்றவன் : *அபிமன்யு* எதிரியே ஆனாலும் தன் தொழிலில் நேர்மை தவறாதவன் : *சகாதேவன்* உலகை காப்பவனே ஆனாலும் தன் திருமணத்திற்காக கடன் வாங்கியவன் : *சீனீவாசன்* கடவுளுக்கே கடன் தந்தவன் : *குபேரன்* தன் திறமையை நிருபிக்க பறவையின் கண்ணை கொய்தவன் : *அர்ஜுனன்* மாலை நேரம் பறவையின் வாயில் உணவு உள்ளது அது நிச்சயம் தன் குஞ்சுகளுக்கு உணவினை எடுத்து செல்வதாக தோன்றுவதால் என்னால் தாக்கயிலாது : *கர்ணன்* அன்றைய அதி நவீன போர் விமானம் : புஷ்பக விமானம் அடுத்தவர் மண் மீது ஆசை பட்டால் : *மகாபாரதம்* அடுத்தவர் பெண் மீது மோகம் கொண்டால் : *இராமாயணம்* 🙏🏼🙏🏼 *'சனாதன தர்மம்'* 🙏 என்றால் என்ன? *அதை ஏன் கடை பிடிக்க வேண்டும்❓* நம் முன்னோர்கள் உலகின் முன்னோடிகளாக... வழிகாட்டியாக திகழ்ந்தவர்கள். 🎯 உண்ணும் உணவு தானியங்களில் *'நவதானியங்கள்'* என்று ஒன்பது தானியங்களை நிர்மாணித்தார்கள்... அந்த தானியங்களுக்கு அதிபதியாக *'நவக்கிரகங்கள்'* என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தான். நெல் - சந்திரன் கோதுமை - சூரியன் துவரை - செவ்வாய் பாசிப்பயறு - புதன் கொண்டைக்கடலை - குரு மொச்சை - சுக்கிரன் எள் - சனி உளுந்து - ராகு கொள்ளு - கேது இவ்வாறு நவதானியங்களை ஒன்பது என நிர்மாணித்த தமிழன் *திசைகளை எட்டாக* பிரித்தான்... கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வட கிழக்கு வட மேற்கு தென் கிழக்கு தென் மேற்கு திசையை எட்டாகப் பிரித்த தமிழன் *இசையை ஏழாக* கொடுத்தான்... *ச ரி க ம ப த நி* இசையை ஏழாக கொடுத்த தமிழன், *சுவையை ஆறாக* பிரித்தான்... இனிப்பு கசப்பு கார்ப்பு புளிப்பு உவர்ப்பு துவர்ப்பு சுவையை ஆறாக பிரித்த தமிழன், *நிலத்தை ஐந்தாக* பிரித்தான்... குறிஞ்சி (மலைப்பகுதி) முல்லை ( வனப்பகுதி) நெய்தல் ( கடல் பகுதி) மருதம் ( நீர் மற்றும் நிலம்) பாலை ( வறண்ட பகுதி) நிலத்தை ஐந்தாக பிரித்த தமிழன், *காற்றை நான்காக* பிரித்தான்... தென்றல் வாடை கோடை கொண்டல் கிழக்கிலிருந்து வீசும் காற்று... *கொண்டல்* தெற்கிலிருந்து வீசும் காற்று... *தென்றல்* மேற்கிலிருந்து வீசும் காற்று... *கோடை* வடக்கிலிருந்து வீசும் காற்று... *வாடை* காற்றை நான்காக பிரித்த தமிழன், *மொழியை மூன்றாக* பிரித்தான்... இயல் இசை நாடகம் மொழியை மூன்றாக பிரித்த தமிழன், *வாழ்க்கையை இரண்டாக* வகுத்தான்... *அகம்* *புறம்* கணவன் மனைவி வாழும் வாழ்க்கை அக வாழ்க்கை... வெளியில் இருக்கும் வியாபாரம் மற்றும் சுய ஒழுக்கம் எல்லாம் புற வாழ்க்கை... இவற்றை அகநானூறு, புறநானூறு என்று இலக்கியத்தில் தெளிவாக அறியலாம். வாழ்க்கையை இரண்டாக வகுத்த தமிழன், *ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக* வைத்தான்... 🙏 அதோடு, அதை... *உயிரினும் மேலாக* வைத்தான். 🎯 இதைத்தான் அய்யன் வள்ளுவர் இரண்டு அடியில் அழகாகச் சொன்னார், *"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்* *உயிரினும் ஓம்பப் படும்"* அந்த ஒழுக்கங்கள் தான் *'சனாதன தர்மம்'* 🙏 'சனாதனம்' என்றால்... *என்றுமே நிலைத்திருக்கும் தன்மை* என்று பொருளாகும். இதை *'அனந்தம்'* என்றும் கூறலாம். *'தர்மம்'* என்பது ஒரு சட்டம். அதாவது, ஒரு நெறிமுறை... ஒழுக்கம்... *நியதி* உதாரணமாக நாம் சாலையில் சென்றோமானால் இந்தியாவில் இடது பக்கமாக செல்ல வேண்டும். இதுவே அமெரிக்காவில் நாம் வலது புறமாகத் தான் செல்ல வேண்டும். இந்தியாவில் இது தர்மம். அமெரிக்காவில் அதுவே தர்மம். ஆக... என்றும் நிலையான... என்றும் மாறாத... *'இயற்கையின் நியதி'* தான்... *'சனாதன தர்மம்'*🙏 இது தான், சரியான வாழ்வியல் நெறிமுறை... *ஒழுக்கம்.* இதை கடைபிடித்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதாவது, 'இயற்கையின் நியதிகளான ஒழுக்கங்களை... சனாதன தர்மத்தை கடைபிடித்தால் தான் வாழ்வில் உயர்வு கிடைக்கும். அந்த ஒழுக்கங்களை... சனாதன தர்மத்தை உயிரின் மேலாக போற்ற வேண்டும்.' என்றுரைத்துள்ளார் நம் திருவள்ளுவர். இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால்... இன்று சமூகத்தில் பலவிதமான சூழ்நிலைகள் உள்ளன. இன்றைய சமூகத்தை நமது முந்தைய தலைமுறையினரின் சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்றுள்ள சமூகம் நாளை வேறுமாதிரி இருக்கும். இதைப் போல மனித வாழ்க்கையில் மாறிக் கொண்டேயிருக்கும் விசயங்களுக்கு ஒருவிதமான தர்மங்களை அதாவது சட்டங்களை நாம் வகுத்துள்ளோம். அதைக் கையாளுவது என்பதும் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக் கொண்டேயிருக்கும். ஏனென்றால் சூழ்நிலைகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால்... நம் உயிரோடு சம்மந்தப்பட்ட *'உள்தன்மை'* அதாவது இயற்கையின் நியதிகள் என்ற ஒழுக்கங்கள் என்றுமே மாறாதது. இது நிதர்சனமான உண்மை. இதை தான் சனாதன தர்மம் என்கிறோம். எது என்றுமே மாறாத உண்மையான ஒழுக்கங்களாக உள்ளதோ அதை நோக்கிச் செல்லுதல். மற்றும் அதை அடைவதற்கான வழிமுறைகளை உருவாக்குதலே சனாதன தர்மமாகும். அனைத்திற்கும் ஒவ்வொரு தர்மமுண்டு. ராஜ தர்மம், குடும்ப தர்மம், கணவன் தர்மம் மற்றும் மனைவி தர்மம் என்று கூறலாம். அதே போல அந்த வெளிச் சூழல் தொடர்பான பல தர்மங்கள் உள்ளன... அனைத்தும் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் நம் உயிரோடு தொடர்புடைய *'ஸ்வதர்மம்'* மட்டும் என்றுமே மாறுவதில்லை. இதை தான் சனாதன தர்மம் என்கிறோம். இதனை 'வாழ்வியல் நெறிமுறைகளாக...' ஒழுக்கங்களாக வகுத்து... உலகின் தலைசிறந்த பண்பாடு, கலாச்சாரத்தை கடைபிடித்து சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். இன்று நாம் கூறும் 'எங்கள் மதம், உங்கள் மதம்' என்பதெல்லாம் தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு தான் தோன்றியுள்ளது. அதற்குமுன் உன் மதம் என் மதம் என்பதில்லை. பிறந்த ஒவ்வொரு உயிரும் இறுதியில் *முக்தி* யடைவதே நோக்கமாகும். இது நமது *அந்தராத்மாவிலேயே* (அக ஜீவனிலேயே) உள்ளது. இதற்காகவே மனிதருக்குள் 'தேடல்' என்பது இயற்கையாக படைக்க பட்டுள்ளது. அந்தத் தேடலுக்கு ஒரு சரியான நோக்கத்தை அமைப்பதே *ஆன்மீகமாகும்.* 🙏 நாம் நமது *பிழைப்பிற்கான தேடலில்* உள்ள போது, 'உணவு உணவு' என்றும்... "பொருள், பணம்" என்றும் மனம் சிந்திக்கிறது. அந்தத் தேடல் நிறைவடைந்து விட்டால் 'சுதந்திரம்' என்ற தேடல். அடுத்தாக 'பேரானந்தம்' என தேடல் விரிவடைகிறது. அது அனைவருக்குமே இயற்கையாக அக ஜீவனில் உள்ளதாகும். அதாவது... நாம் தற்பொழுதுள்ள நிலையை... 'தற்பொழுதுள்ள வளையத்தைத் தாண்டி வளர வேண்டும்' என்ற எண்ணம் எல்லா மனிதனுக்கு இயற்கையாக உள்ளது. அந்த நோக்கத்திற்கு சரியான வழிமுறைகளை அமைத்து கொடுத்தது தான் நமது *இந்து கலாச்சாரமாகும்.* 🙏 சைவம் மற்றும் வைணவம் போன்ற பல வகையான பிரிவுகள் இருப்பதால் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. திருநீறு, திருமண், சந்தனம், குங்குமம்... என்று அவரவர் விருப்பப்படி வைத்துக் கொள்ளலாம் . எதுவும் வைக்காமலும் இருக்கலாம். இருப்பினும், நமது நோக்கம் ஒன்றே... அது மனிதனுடைய ஆத்ம 'வளர்ச்சி.' அதாவது, *பிறவி பயன்* 🎯 மனிதன் எவ்வாறு வளர்ச்சியடைகிறான்? மனிதன் வளர்ச்சியடைய அவனவன் திறமைக்கேற்றவாறு... *நான்கு விதமான யோகங்கள்* உள்ளன. 1. நமது உடல் பலமாக இருக்குமேயானால் செயலில் முழுமையாக செயல்பட்டு முழு ஈடுபாட்டுடன் மனிதன் வளர்ச்சியடைய முடியும். இதற்குப் பெயர்தான் *கர்மயோகா.* 🙏 2. புத்தி கூர்மையாக இருந்தால் புத்தியையே பயன்படுத்தி வளர்ச்சியடையலாம். இதற்கு *ஞானயோகா* 🙏 3. ஒருவேளை நாம் மனதளவில் உணர்வுப்பூர்வமாக இருப்போமேயானால்... *பக்தியோகா* மூலமாக வளர்ச்சியடையலாம். 🙏 4. மனிதனின் 'பிராணசக்தி' வளமாக இருந்தால்... இதன் மூலமாக வளர்ச்சியடைந்தால்... அதற்கு *கிரியாயோகா* என்று பெயராகும். 🙏 மொத்தத்தில் நான்கு விதமான யோகங்கள் மட்டுமே உள்ளன. அனைத்து மதங்களுமே இந்த நான்கு யோகங்களுக்குள் அடங்கியுள்ளன. அதாவது, *உடல், புத்தி, உணர்வு, சக்தி* இந்த நான்கு வாய்ப்புகள் தான் உள்ளன. 'சைவம், வைணவம்' என பல வகையான வழிபாட்டு முறைகளில் பல விதமான பயிற்சிகள் உள்ளன. 'பக்தி அலை' தோன்றிய போது இந்தியாவில் வைணவ தர்மம் மேலோங்கியது. பக்தி என்பது உணர்வு... இந்த உணர்வை பயன்படுத்தி வளர்வது தான் பக்தி அலை. நமது பாரதத்தில் அவ்வாறுதான் இந்த வைணவ பக்தி அலை வளர்ந்தது. இதற்கு, "கிருஷ்ணா, ராமா" சொன்னாலே போதும். அல்லது பாடினாலே போதும் . இதற்கு முக்கியமாக ஈடுபாடே தேவை. எந்தவொரு பயிற்சியும் தேவையில்லை. இப்படி உணர்வுப் பூர்வமாகவே நாம் வளர்ச்சியடைய முடியும் என்றொரு வழிகாட்டப்பட்டது வைணவ தர்மம். 'இந்த யோக முறை தான் சரி... அந்த யோக முறை தவறு' என்றெதுவுமில்லை. நமக்கு எந்த யோக முறை எளிதாக உள்ளதோ... அந்த யோக முறையை கடைபிடிக்கலாம். முதலில் இதை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களது தந்தை யோகப் பயிற்சி செய்பவராக இருக்கலாம். உங்களுக்கு அந்தத் திறமை இல்லாது போனால்... நீங்கள் பக்தி நெறியில் வளர்ச்சியடையலாம். அல்லது... உங்களது புத்தி 'நூறு கேள்விகள்' கேட்குமேயானால் நீங்கள் ஞானயோகத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நான்கு விதமாக யோகங்களை தனியொரு மனிதன் தனது தேவைக்கேற்றார் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக... 'சனாதன தர்மமென்பது முக்கியமாக நமது உயிருக்கும் உள்ளத்திற்கும் சம்மந்தப்பட்ட நியதிகள்... (இயற்கை சட்டங்கள், ஒழுக்கங்கள்) என்னவென்று புரிந்து கொண்டு... அதனுடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொண்டு... நாம் பிறவி பயனை அடைய வேண்டும்' என்பதாகும். அடிப்படையை உணர்ந்து கொண்டால் தானே இந்த வளர்ச்சி சாத்தியமாகும். இந்த அடிப்படை தன்மையை தான் *சனாதன தர்மம்* என்கிறோம். 🙏 ஆகவே, உலகில் உன்னதமான... நமது இந்திய வாழ்வியல் அறநெறிகளான... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *சனாதன தர்மத்தை கடைபிடிப்போம்...*🙏 *வாழ்வை நலமுடன், வளமாக வாழ்வோம்.* 🎯 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ரங்கராஜ் பாண்டேவிற்கு அளித்த பேட்டியில் விளக்கமாக காண👇 சனாதன தர்மம் என்றால் என்ன? சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம் | ரங்கராஜ் பாண்டே சனாதன தர்மம் என்றால் என்ன? சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம் | ரங்கராஜ் பாண்டே சனாதன தர்மம் - பாகம்-1 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! தவசியே {வைசம்பாயனரே}, துரியோதனனும், போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்த பிறகு, செய்தியை அடைந்த மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்?உயரான்ம குரு மன்னனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன் என்ன செய்தான்? எஞ்சிய மூவரான கிருபரும், மற்றவர்களும் என்ன செய்தனர்? . வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் திருதராஷ்டிரன், தனது நூறு மகன்களையும் இழந்த பிறகு, அதன் காரணமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, உற்சாகமற்றவனாக, கவலையில் மூழ்கி, பேசும் சக்தியை இழந்தவனாகக் கிளைகள் ஒடிந்த மரத்தைப் போலத் தெரிந்தான் .. பெரும் ஞானத்தைக் கொண்டவனான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, அவனிடம், "ஓ! ஏகாதிபதி, நீர் ஏன் வருந்துகிறீர்? துயரம் எக்காரியத்தையம் செய்யாது. ஓ! மன்னா, பதினெட்டு {18}அக்ஷௌஹிணி போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். வெறித்துப் போயிருக்கும் பூமியானது இப்போது கிட்டத்தட்ட வெறுமையாகவே இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும், உமது மகனுடன் சேர்ந்து தங்கள் உயிரை விட்டனர். இப்போது விதிப்படி செய்ய வேண்டியது, உமது தந்தைமார், மகன்கள், பேரப்பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் ஆசான்களுக்கான ஈமச் சடங்குகளே ஆகும்" என்றான் {சஞ்சயன்}". . "மகன்கள், அமைச்சர்கள் மற்றும் தன் நண்பர்கள் அனைவரையும் இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தான்.( {அப்போது} திருதராஷ்டிரன், "மகன்கள், அமைச்சர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் இழந்த நான், நிச்சயம் கவலையுடன் பூமியில் திரியப் போகிறேன். முதுமையால் பீடிக்கப்பட்டு, சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோரை இழந்து, சிறகுகளற்ற பறவைக்கு ஒப்பாக இருக்கும் எனக்கு உயிர் வாழும் தேவை என்ன இருக்கிறது? ஓ! பெரும் ஞானியே, கண்களை இழந்தவனான நான், ஒளியிழந்த நட்சத்திரத்தைப் போலவே இப்போது நாட்டை இழந்து, சொந்தங்களை இழந்து ஒளியில்லாமல் இருக்கிறேன். நண்பர்களும், ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தெய்வீக முனிவரான நாரதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்} ஆகியோரும் ஆலோசனைகளைச் சொன்ன போது, அவற்றை நான் பின்பற்றவில்லை. சபைக்கு மத்தியில் வைத்து கிருஷ்ணன், "ஓ! மன்னா, பகைமைகளை நிறுத்துவோம். உமது மகனே {துரியோதனனே} மொத்த நாட்டையும் எடுத்துக் கொள்ளட்டும். (பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை மட்டுமே கொடுப்பீராக)" என்று எனக்கு நன்மையானதைச் சொன்னான். மூடனான நான் அந்த அறிவுரையைப் பின்பற்றாததால் இப்போது, எரிச்சலூட்டத்தக்க இந்தக் கவலையை அடைந்தேன். பீஷ்மரின் நீதிமிக்க ஆலோசனைகளை நான் கேட்கவில்லை. ஐயோ, ஒரு காளையைப் போன்ற முழங்கும் துரியோதனனின் படுகொலையைக் கேட்டும், துச்சாசனனின் மரணம், கர்ணனின் அழிவு, துரோணச் சூரியனின் மறைவு ஆகியவற்றைக் கேட்டும் என் இதயம் துண்டுகளாக நொறுங்காமல் இருக்கிறதே. ஓ! சஞ்சயா, முந்தைய நாட்களில் நான் செய்த எந்தத் தீச்செயலின் விளைவாக இன்று துன்புறுகிறேன் என்பதை என்னால் நினைவுகூரமுடியவில்லை. விதிவகுக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, இந்த அளவுக்குத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள விதித்திருக்கிறான் என்றால் நான் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. என் சொந்தங்கள் அனைவரின் இந்த அழிவும், என் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரின் இந்த நிர்மூலமும், விதியின் பலத்தாலேயே இந்த முதிர்வயதில் என்னை வந்தடைந்திருக்கிறது. இழிந்தவனான என்னைவிட இந்த உலகத்தில் வேறு எந்த மனிதன் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறான்? நிலை இவ்வாறு இருப்பதால், உறுதிமிக்கத் தீர்மானத்துடன், பிரம்மலோகத்திற்கு இட்டுச்செல்லும் நீண்ட வழியில் நான் செல்வதை(காட்டிற்குச் சென்று மரணத்திற்குத் தயாராகும் தன் விருப்பத்தை) இந்த நாளே பாண்டவர்கள் பார்க்கட்டும்"என்றான்". "மன்னன் திருதராஷ்டிரன் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது துயரத்தை அகற்றுவதற்காகப் பின்வரும் வார்த்தைகளைச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது துயரத்தைக் கைவிடுவீராக. பெரியோரின் உதடுகளின் மூலம் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்கள் மற்றும் புனிதமான ஆகமங்களின் தீர்மானங்களையும் நீர் கேட்டிருக்கிறீர். சிருஞ்சயன், தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனிடம் தவசிகள் சொன்ன அந்த வார்த்தைகளையும் நீர் கேட்டிருக்கிறீர். உமது மகன் {துரியோதனன்}, இளமையில் பிறக்கும் {தோன்றும்} செருக்கை {கொழுப்பை} அடைந்தபோது, நலன்விரும்பிகளால் உமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை நீர் ஏற்க மறுத்தீர். கனியை விரும்பிய நீர், உமக்கான உண்மையான நன்மை எதுவோ, அதைப் பேராசையினால் செய்யாமல் இருந்தீர். {அந்த} உமது அறிவே ஒரு கூரிய வாளைப் போல {இப்போது} உம்மைக் காயப்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே தீய நடத்தை கொண்டோரின் துணையையே நீர் நாடினீர். உமது மகன் {துரியோதனன்}, தன் ஆலோசகர்களாகத் துச்சாசனன், தீய ஆன்மாவான ராதையின் மகன் {கர்ணன்}, அதே அளவுக்குத் தீயவனான சகுனி, மூட புத்தி கொண்ட சித்திரசேனன், சல்லியன்[2] ஆகியோரையே கொண்டிருந்தான். உமது மகன் (தன் சொந்த நடத்தையினாலேயே) மொத்த உலகத்தையும் தன் எதிரியாக்கிக் கொண்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, குருக்களின் மரியாதைக்குரிய தலைவரான பீஷ்மர், காந்தாரி, விதுரர், துரோணர், சரத்வான் மகனான கிருபர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், நுண்ணறிவு கொண்ட நாரதர், இன்னும் பல முனிவர்கள் மற்றும் அளவிடமுடியாத சக்தி கொண்ட வியாசர் ஆகியோரின் வார்த்தைகளுக்கு உமது மகன் கீழ்ப்படியவில்லை. உமது மகன் {துரியோதனன்} ஆற்றல் படைத்தவனாக இருப்பினும், அவன் சிறு மதி கொண்டவனாகவும், செருக்குடையவனாகவும், எப்போதும் போரை விரும்புபவனாகவும், தீயவனாகவும், வெறிகொண்ட மூர்க்கனாகவும், நிறைவற்றவனாகவும் இருந்தான். நீரோ கற்றறிந்தவராகவும், நுண்ணறிவு கொண்டவராகவும், எப்போதும் உண்மை பேசுபவராகவும் இருக்கிறீர். உம்மைப் போன்ற நேர்மையாளர்களும், அறிவாளிகளும் துயரத்தால் ஒருபோதும் திகைக்கமாட்டார்கள். உமது மகன்களில்} எவரும் அறங்கருதவில்லை. போர் என்ற ஒற்றை வார்த்தையே அவர்களது உதடுகளில் இருந்தன. அதன் காரணமாகவே க்ஷத்திரிய வகையினர் முற்றாக அழிக்கப்பட்டு, உமது எதிரிகளின் புகழ் பெருகியிருக்கிறது. நடுவருக்கான இடத்தில் இருந்த நீரோ, நலம்பேணும் அறிவுரை என ஒரு வார்த்தையும் சொல்லாதிருந்தீர். அப்பணிக்குத் தகாத நீர், தராசுகளைச் சமமாக நிறுத்தவில்லை. ஒவ்வொரு மனிதனும், தான் ஏற்கனவே செய்த ஏதோ ஒன்றுக்காக வருந்த வேண்டிய தேவையில்லாமல் தொடக்கத்திலிருந்தே நன்மையான செயல்களையே {முறைப்படி} செய்ய வேண்டும் ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் நீர் அவனுக்கு ஏற்புடையதையே செய்தீர். அதற்காகவே இப்போது நீர் வருந்த வேண்டியிருக்கிறது. எனினும், நீர் துயரத்துக்கு ஆட்படுவது உமக்குத் தகாது. பள்ளத்தைக் கவனியாமல் தேனை நோக்கி மட்டுமே கண்களைச் செலுத்தும் மனிதன், தேனின் மீது தான் கொண்ட பேராசையின் மூலமே அழிவை அடைகிறான். அத்தகு மனிதன் உம்மைப் போலவே வருந்த வேண்டியிருக்கும். துயரப்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை. துயரப்படுவதால் ஒருவன் தன் ஆசைகளின் கனிகளையே இழக்கிறான். மேலும் நமது விருப்பத்திற்குரிய பொருட்களை அடைவதற்கு அந்தத் துயரமே தடையாக இருக்கிறது. துயரத்தில் மூழ்குபவன் தன் முக்தியையும் {விடுதலையையும்} இழக்கிறான். எரியும் கரியைத் தன் உடுப்பில் மறைக்கும் ஒரு மனிதன், அதற்குள் முடுக்கப்படும் நெருப்பினால் எரிக்கப்பட்டுத் தான் அடைந்த காயங்களுக்காக வருந்துவானானால், அவன் மூடன் என்றே அழைக்கப்படுவான். நீரும், உமது மகனும், உங்கள் வார்த்தைகளால் பார்த்த-நெருப்பை {அர்ஜுன நெருப்பைத்} விசிறி, உங்கள் பேராசையின் விளைவால் உண்டான செயல்களால் தெளிந்த நெய்யை {அந்நெருப்பில்} ஊற்றி, அந்நெருப்பைச் சுடர்விட்டெரியச் செய்து, அஃதை எரிக்கும் தழல்களாக்கினீர்கள். அந்நெருப்பு இவ்வாறு சுடர்விட்டபோது, உமது மகன்கள் பூச்சிகளைப் போல அதில் விழுந்தனர். எனினும், எதிரியின் கணைகள் எனும் நெருப்பில் எரிந்தவர்களான அவர்களுக்காக இப்போது நீர் வருந்துவது தகாது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நீர் கொண்டிருக்கும் அழுகைக்கறை கொண்ட முகமானது, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படவோ, நல்லோரால் புகழப்படவோ இல்லை. நெருப்புப் பொறிகளைப் போன்ற இந்தக் கண்ணீர்த்துளிகள் யாருக்காகச் சிந்தப்படுகின்றனவோ, இறந்தோரான அவர்களையே அவை எரிக்கும். உமது துயரை அறிவினால் கொன்று, உமது பலத்தால் எழுவீராக" {என்றான் சஞ்சயன்}. இவ்வாறே உயரான்ம சஞ்சயனால் அம்மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றப்பட்டான்.🙏நன்றி இந்து மதம் Whatsup groups 🙏 சனாதன தர்மம் - பாகம்-2 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, விதுரன், திருதராஷ்டிரனிடம் சொன்ன அமுதம் போன்ற எந்த வார்த்தைகள் திருதராஷ்டிரனை மகிழ்ச்சியடைச் செய்தனவோ அவற்றைக் கேட்பாயாக. விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா! எழுவீராக. ஏன் பூமியில் கிடக்கிறீர்? உம்மைத் தாங்கிக் கொள்வீராக. ஓ! மன்னா, இதுவே உயிரினங்கள் அனைத்தின் இறுதி முடிவாகும். ஒன்றாகத் திரளும் அனைத்தும் முடிவில் அழிவையே அடைகிறது; உயர்ந்து செல்லும் அனைத்தும் விழப்போவது உறுதி. சேர்வது முடிவில் பிரிவது உறுதி; உயிரானது முடிவில் இறப்பது உறுதி. ஓ! பாரதரே, வீரன் மற்றும் கோழை ஆகிய இருவரையும் யமன் இழுத்துச் செல்கிறான். ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, பிறகு ஏன் க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள்? போரிடாதவனும் மாள்வதைக் காண்கிறோம். மேலும், போரிடுபவன் உயிர் தப்புவதையும் காண்கிறோம். எனினும், ஓ! மன்னா, நேரம் வரும்போது எவரும் தப்ப முடியாது. வாழும் உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை முதலில் {ஆதியில்} இருப்பிலில்லை. இறுதியில் மீண்டும் அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இதில் {நடுவில் மட்டுமே இருக்கும் ஒன்றில்} துயர் கொள்ள என்ன இருக்கிறது? துயரில் ஈடுபடும் மனிதன் இறந்தவனைச் சந்திப்பதில் வெல்வதில்லை. துயரில் ஈடுபடுவதாலேயே ஒருவன் தானே சாவதில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்? அனைத்துயிர்களையும், ஏன் தேவர்களையும் கூடக் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது. புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலமும் அனைத்து உயிரினங்களையும் தன் வசப்படுத்துகிறது. ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. (அனைத்தையும் காலன் சந்திக்கும்போது) அவன் {காலன்} எவரை முதலில் சந்திக்கிறான் என்பது பெரிய காரியம் இல்லை {எவனுக்குக் காலம் வருகிறதோ அவன் முந்திச் செல்கிறான்}. போரில் கொல்லப்பட்டவர்களைக் குறித்துத் துயருறுவது உமக்குத் தகாது. சாத்திரங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருக்குமெனில், அவர்கள் அனைவரும் உயர்ந்த முடிவையே அடைந்திருக்க வேண்டும். அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது? (பிறப்பதற்கு முன்பு) அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அறியப்படாத அவ்விடத்தில் இருந்து வந்த அவர்கள் மீண்டும் காணப்படாமலேயே கண்ணுக்குத் தெரியாமல் போகிறார்கள். அவர்கள் உம்முடையவர்களல்ல; நீரும் அவர்களுடையவரல்ல. பிறகு இத்தகு மறைவால் என்ன கவலை ஏற்பட முடியும்? கொல்லப்பட்ட ஒருவன் சொர்க்கத்தை வெல்கிறான் {அடைகிறான்}. கொலையைச் செய்தவனால் புகழ் வெல்லப்படுகிறது {அடையப்படுகிறது}. நம்மைப் பொறுத்தவரை, இவ்விரண்டும் {சொர்க்கமும், புகழும்} பெரும் தகுதியையே {புண்ணியத்தையே} தருகின்றன. எனவே, போரானது பலனற்றதில்லை. இந்திரன், அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல உலகங்களை அவர்களுக்குக் கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. ஓ! மனிதர்களில் காளையே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாவர். போரில் கொல்லப்பட்ட வீரர்கள் சொர்க்கத்திற்குச் செல்வதைவிட, அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, கல்வியாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு வேகமாகச் செல்ல முடியாது. வேள்வி நெருப்பைக் கொண்டிருக்கும் பகைவீரர்களின் உடல்களில் அவர்கள் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிகிறார்கள். பெருஞ்சக்தி கொண்ட அவர்கள், பதிலுக்கு (தங்கள் எதிரிகளால் அவர்கள் மீது ஊற்றப்படும்) கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொள்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன். அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர். ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது. இவ்வுலகில் ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். அவர்கள் யாருடையவர்கள்? நாம் யாருடையவர்கள்? கவலையில் இருந்து நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான காரணங்கள் எழுகின்றன. அந்த ஆயிரக்கணக்கான காரணங்களும் அச்சத்தையே உண்டாக்குகின்றன. எனினும், இவை அறியாமை கொண்டோரையே பாதிக்கும்; ஞானியருக்கோ அவை ஒன்றுமில்லை. ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவரோ, வெறுப்புக்குரியவரோ எவருமில்லை. அனைவரையும் சமமாகவே காலம் இழுத்துச் செல்கிறது. காலமே அனைத்துயிரையும் வாழச் செய்கிறது. காலமே அனைத்தையும் அழிக்கவும் செய்கிறது. அனைவரும் உறங்கும்போது, காலம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. காலம் தடுக்கப்பட முடியாததாகும். இளமை, அழகு, உயிர், உடைமைகள், உடல்நலம், நண்பர்களின் தோழமை ஆகிய அனைத்தும் நிலையற்றவையே. ஞானியாக இருப்பவன் இவை எவற்றிலும் ஒருபோதும் நாட்டங்கொள்ள மாட்டான். உலகளாவிய {அனைவருக்கும் பொதுவான} ஒன்றுக்காக வருந்துவது உமக்குத் தகாது. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் இறக்கலாம். ஆனால் துயரமானது, அதில் ஈடுபடுவதால் ஒருபோதும் கனமற்றதாகாது. நீர் உமதுதுயரைக் கனமானதாக உணர்ந்தால், அதில் ஈடுபடாமல் அதற்குப் பதலடியைக் கொடுக்க வேண்டும். துயரத்தில் ஈடுபடாமல் இருப்பதே துயரத்திற்கான மருந்தாகும். அதிலேயே வசிப்பதால் ஒருவன் அதைக் குறைக்க முடியாது. மறுபுறம் அதில் ஈடுபடுவதால் அது வளரவே செய்கிறது. தீமை நேரும்போதோ, அன்புக்குரிய ஒன்றை இழக்கும் நிலையிலோ துயரில் மனம் பீடிக்கப்படுபவர்கள் சிறுமதி கொண்டோரே. உமது இதயம் எதில் வசித்திருக்கிறதோ {எதை விரும்புகிறதோ}, அது பொருளோ, அறமோ, இன்பமோ கிடையாது மனநிறைவற்றவர்கள், செல்வத்தை அடைவதில் நேரும் திருப்பத்தின் இணக்கத்தில் திகைப்படைகிறார்கள். ஒருவனது உடலின் துயரமானது, மருந்தால் கொல்லப்படுவதைப் போலவே, அவன் மனத்துயரத்தை ஞானத்தால் கொல்ல வேண்டும். ஞானமே இந்தச் சக்தியைக் கொண்டிருக்கிறது. எனினும், மூடர்களால் மன அமைதியை அடையவே முடியாது. முந்தைய வாழ்வின் செயல்பாடுகள் ஒரு மனிதனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவன் எங்கே கிடக்கிறானோ அங்கேயே கிடந்து, எங்கே தங்குகிறானோ அங்கேயே தங்கி, அவன் ஓடும்போது அவனுடனேயே ஓடுகிறது. வாழ்வின் அச்சூழல்களில் ஒருவன் நல்லதாகவோ, அல்லதாகவோ செயல்பட்டிருந்தால், அவன் அதே போன்ற சூழ்நிலைகளில் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான். ஒருவன் செயல்களைச் செய்யும் (உடல் அமைப்புகளில்) அவ்வடிவங்களில் அவன் அதேபோன்ற வடிவங்களின் பலன்களால் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான். ஒருவன் தானே தனது நண்பனாவான், அதே போலவே அவனே அவனுக்கு எதிரியுமாவான். ஒருவன் தானே தன் நல்ல மற்றும் தீய செயல்பாடுகளின் சாட்சியாக இருக்கிறான். நற்செயல்களில் இருந்து இன்பநிலையெழுகிறது, தீச்செயல்களில் இருந்து பாவகரச் செயல்களே எழுகின்றன. ஒருவன் எப்போதும் தன் செயல்பாடுகளின் கனிகளையே அடைவான். ஓ! மன்னா, உம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள், அறிவால் அங்கீகரிக்கப்படாததும், அடிவேரையே (அறம் மற்றும் இன்பத்தைத்) தாக்குவதுமான பாவகரமான பெருங்குற்றங்களில் ஒருபோதும் மூழ்குவதில்லை" என்றான் {விதுரன்}. .. ........தொடரும்..🙏🙏நன்றி இந்து மதம் Whats up group🙏 சனாதன தர்மம் - பாகம்-3 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "ஓ! பெரும் ஞானியே, உன் வார்த்தைகளால் என் துயரம் விலகுகிறது. எனினும், நீ மீண்டும் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், தீயவை சேர்வதாலும், விருப்பத்திற்குரிய பொருட்களை இழப்பதாலும் பிறக்கும் மனத்துயரத்தில் இருந்து ஞானியர் எவ்வாறு விடுபடுகின்றனர்" என்று கேட்டான். விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஒருவன் துயரம் மற்றும் மகிழ்ச்சியில் இருந்து எவ்வழிகளில் தப்ப முடியுமோ அவற்றின் மூலமே, துயரம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் அடக்கி ஒரு ஞானி அமைதியை அடைகிறான். {திருதராஷ்டிரரே}, எந்தப் பொருட்களுக்காக நாம் கவலையடைகிறோமோ அவை அனைத்தும், குறுகிய காலத்தைக் கொண்டவையே {நிலையில்லாதவையே}. இவ்வுலகம் பலத்தைப் பொறுத்துக்கொள்ளாத ஒரு வாழை மரத்தைப் போல இருக்கிறது. ஞானி மற்றும் மூடன், பணக்காரன் மற்றும் ஏழை ஆகியோர் அனைவரும், சதை இழந்த உடல்களுடனும், வெறும் எலும்புகளுடனும், வாடி வதங்கிய தசைகளுடனும் {நரம்புகளுடனும்}, கவலையற்றுச் சுடலைகளில் {சுடுகாடுகளில்} உறங்கும்போது, அவர்களில் எவரின் தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டு அவர்களின் பிறப்பு மற்றும் அழகின் தன்மைகளை உயிர்பிழைத்திருப்போரால் உறுதிசெய்ய முடியும்? (மரணமடைந்ததும் அனைவரும் சமமே எனும்போது), எப்போதும் (இவ்வுலகப் பொருட்களால்) வஞ்சிக்கப்படும் அறிவைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் பதவி மற்றும் நிலைகளில் {அந்தஸ்துகளில்} ஏன் ஆசை கொள்கிறார்கள்? மனிதர்களின் உடல்கள் வீடுகளைப் போன்றன எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். காலம் வரும்போது இவை அழிக்கப்படுகின்றன. எனினும், ஒருவன் {ஆன்மா} அழிவில்லாதவனாக இருக்கிறான். ஒரு மனிதன், பழையதாகவோ, புதியதாகவோ இருக்கும் தன் ஆடையைக் களைந்து, மற்றொரு ஆடையை அணிவதைப் போலவே உடல்படைத்த அனைவரின் உடல்களும் அவர்களால் களையப்படுகின்றன. {திருதராஷ்டிரனே}, உயிரினங்கள் இன்பம் அல்லது துன்பத்தைத் தங்கள் செயல்களின் கனியாகவே அடைகின்றன. மண்குடங்களில் சில, குயவனின் சக்கரத்தில் இருக்கும்போதே நொறுங்குகின்றன, சில ஓரளவே வடிவங்கொள்ளும்போதும், சில நல்ல வடிவத்தை அடையும்போதும், சில சக்கரத்தில் இருந்து அகற்றும்போதும், சில கொண்டு செல்லப்படும்போதும், சில கொண்டு செல்லப்பட்ட பிறகும், சில ஈரமாக இருக்கும் போதும், சில உலர்ந்திருக்கும்போதும், சில சுடப்பட்ட பிறகும், சில உலையில் இருந்து எடுக்கப்படும்போதும், சில உலையில் இருந்து எடுக்கப்பட்ட பிறகும், சில பயன்படுத்தப்படும்போதும் நொறுங்குவதைப் போலவே உடல்படைத்த உயிரினங்களின் உடல்களும் அழிகின்றன. சிலர் கருவறையில் இருக்கும்போதே அழிவை அடைகின்றனர், சிலர் கருவறையை விட்டு வெளியேறியதும், சிலர் வெளியேறிய அடுத்த நாள், சிலர் அரை மாதம் சென்றோ, ஒரு மாதத்திலோ, சிலர் நடு வயதிலும், சிலர் முதிர் வயதிலும் அழிவை அடைகின்றனர். உயிரினங்கள் தங்கள் முந்தைய வாழ்வுகளில் செய்த செயல்களுக்கு ஏற்பவே பிறக்கவோ, இறக்கவோ செய்கின்றனர். உலகத்தின் வழி இவ்வாறு இருக்கும்போது, நீர் ஏன் துயரத்தில் ஈடுபடுகிறீர்? மனிதர்கள், நீர்விளையாட்டில் நீந்தும் போது, சில வேளைகளில் மூழ்குவதையும், சில வேளைகளிலும் மேலெழுவதையும் போலவே உயிரினங்களும் வாழ்வெனும் ஓடையில் மூழ்கி மேலெழுகின்றன. ஞானம் குறைந்தவர்கள், தங்கள் செயல்களின் விளைவாலேயே துன்புறவோ, அழிவடையவோ செய்கின்றனர். எனினும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறம் நோற்கும் ஞானியர், இவ்வுலகில் உயிரினங்களுடைய தோற்றத்தின் உண்மையான இயல்பை அறிந்து, இறுதியாக உயர்ந்த முடிவை அடைகின்றனர்" என்றான் {விதுரன்}. .. ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-4 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "கடமைகளெனும் அடர்க்காட்டைப் பாதுகாப்பாகக் கடக்க அறிவாற்றும் வழிமுறைகள் குறித்த அனைத்தையும் எனக்கு விபரமாகச் சொல்வாயாக" என்று கேட்டான் விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "தான்தோன்றியை {பிரம்மனை} வணங்கி, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வாழ்வெனும் அடர்க்காட்டைக் குறித்துப் பெருந்தவசிகள் என்ன சொல்கின்றனர் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன். பேருலகில் வாழும் ஒரு குறிப்பிட்ட பிராமணன், ஒரு சந்தர்ப்பத்தில், அடைவதற்கரியதும், இரைதேடும் விலங்குகள் நிறைந்ததுமான ஒரு பெரிய காட்டை அடைந்தான். அஃது உரக்க முழங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்கள், புலிகள் மற்றும் யானைகளைப் போலத் தெரியும் பிற விலங்குகள் ஆகியவற்றால் அனைத்துப் பக்கங்களிலும் நிறைந்திருந்தது. யமனே அச்சங்கொள்ளும் வகையில் அந்தக் காடு பயங்கரத் தன்மையை அடைந்திருந்தது. ஓ! ஏதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே} அந்தக் காட்டைக் கண்ட அந்தப் பிராமணரின் இதயம் அதிகக் கலக்கத்தை அடைந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவருக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, மேலும் அச்சத்திற்கான பிற அடையாளங்கள் அனைத்தும் அவரில் வெளிப்பட்டன. அதற்குள் {காட்டுக்குள்} நுழைந்த அவன், திசைப்புள்ளிகள் அனைத்திலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டு, யாரேனும் ஒருவரின் பாதுகாப்பை நாடுவதற்காக அங்கேயும், இங்கேயும் ஓடத் தொடங்கினான். அவன், அந்தப் பயங்கர உயிரினங்களிடம் இருந்து தப்பும் விருப்பத்தால் அச்சத்துடன் ஓடிக் கொண்டிருந்தான். எனினும் அவன், அவற்றிடம் இருந்து தொலைவாகச் செல்லவோ, அவற்றின் முன்னிலையில் இருந்து விடுபடவோ தவறினான். அப்போது அவன், அந்தப் பயங்கரக்காடானது ஒரு பெரிய வலையால் சூழப்பட்டிருப்பதையும், {அந்தக் காட்டுக்கு வெளிப்புறத்தில்} அங்கே அச்சத்தையேற்படுத்தக்கூடிய ஒரு பெண் தன் கரங்களை விரித்தபடி நின்றிருப்பதையும் கண்டான் அந்தப் பெரும் காடானது, நெடும்பாறைகளைப் போல நெடியவையும், சொர்க்கத்தையே {வானத்தையே} தொட்டுக்கொண்டிருந்தவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான ஐந்து தலை பாம்புகள் பலவற்றாலும் சூழப்பட்டிருந்தது. அதற்குள் {அந்தக் காட்டுக்குள்} புற்களால் சூழப்பட்டதும், செடிகொடிகளால் சுற்றிலும் மறைக்கப்பட்டிருந்ததுமான ஒரு குழி {கிணறு} இருந்தது. அந்தப் பிராமணன் இவ்வாறு திரிந்து கொண்டிருந்த போது, கண்களுக்குப் புலப்படாத அந்தக் குழிக்குள் விழுந்தான். ஒன்றொடொன்றாகப் பின்னிப் பிணைந்து கிண்ட அந்தக் கொடிகளின் பின்னலில் அகப்பட்டுக் கொண்ட அவன், பலாமரத்தின் கனியை {பலாப்பழத்தைப்} போல அதில் தொங்கிக் கொண்டிருந்தான். கால் மேலாகவும், தலை கீழாகவும் அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருந்தான். அந்நிலையிலேயே பல்வேறு இன்னல்கள் அவனை மூழ்கடித்தன. அவன் அந்தக் குழிக்குள் வலிமைமிக்கப் பெரும் பாம்பொன்றைக் கண்டான். மேலும் அவன் அந்தக் குழியின் வாயிலருகே ஒரு பெரும் யானை நிற்பதையும் கஙண்டான். கரிய நிறம் கொண்ட அந்த யானையானது, ஆறு முகங்களையும், பனிரெண்டு கால்களையும் கொண்டிருந்தது. மேலும் அந்த விலங்கு {யானை} கொடிகளாலும், மரங்களாலும் மறைக்கப்பட்டிருந்த அந்தக் குழியை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது (அந்தக் குழியின் வாயருகே இருந்த) மரத்தின் கிளைகளில் பயங்கர வடிவிலான தேனீக்கள் தங்கள் கூட்டில் சேகரிக்கப்பட்ட தேனைக் குடிப்பதற்காக அங்கே பெருமளவில் மொய்த்து கொண்டிருந்தன. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துயிர்களுக்கும் இனியதாக இருப்பினும், குழந்தைகளை மட்டுமே ஈர்க்கும் அந்தத் தேனை அவை {அந்தத் தேனீக்கள்} மீண்டும் மீண்டும் விரும்பின (கூட்டில் சேகரிக்கப்பட்ட) அந்தத் தேனானது, பல ஊற்றுகளாகக் கீழே வழிந்தது. குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்த அம்மனிதன் அதைத் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தான். இத்தகு துயரகரமான நிலையில் அந்தத் தேனைக் குடித்தாலும், அவனது தாகம் அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் தாகம் தனியாத அவன் மேலும் மேலும் தேனை விரும்பினான். ஓ! மன்னா, அப்போது அவன் உயிரைக் குறித்துக் கவலையடையாமல் இருந்தான். அப்படிப்பட்ட அவ்விடத்தில்கூட அம்மனிதன் உயிர்வாழும் நம்பிக்கையுடனேயே இருந்தான். கருப்பு மற்றும் வெள்ளை எலிகள் பல, அம்மரத்தின் வேர்களை உண்டு கொண்டிருந்தன. இரைதேடும் விலங்குகளிடமும், காட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடமும், அந்தக் கிணற்றின் அடியில் இருக்கும் பாம்பிடமும், உயரத்தில் நிற்கும் அந்த யானையிடமும் எலிகளின் செயல்பாட்டால் கீழேவிழ இருக்கும் மரத்திடமும், தேனைச் சுவைப்பதற்காகப் பறந்து கொண்டிருந்த அந்தத் தேனீக்களிடமும் அவனுக்கு அச்சமிருந்தது. அந்தக் காட்டில் தன் புலனுணர்வுகளை இழந்திருக்கும் அந்த அவல நிலையிலும், அவன் தன் வாழ்வை நீட்டிப்பதில் உள்ள நம்பிக்கையை {உயிரோடு வாழும் நம்பிக்கையை} ஒருபோதும் இழக்கவில்லை" {என்றான் விதுரன்}. .. ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-5 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "ஐயோ, அம்மனிதனின் துயரம் மிகப்பெரியது, அவனது வாழ்வு முறையும் வலி நிறைந்ததே. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, வாழ்வுக்கான அவனது ஈடுபாடு எங்கிருந்தது? மேலும் அவனது இன்பம் எங்கிருந்தது? {அவன் அங்கே எவ்வாறு இன்புற்றிருக்க முடியும்?} அந்த மனிதன் வசித்து வந்ததும், அறம்பயில்வதற்கு அனுகூலமற்றதுமான அந்த இடம் எங்கிருக்கிறது? ஓ!, அம்மனிதன் அந்தப் பெரும் பயங்கரங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவான்? இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அப்போது அவனுக்காக நாம் முறையாக முயற்சி செய்யலாம். அவனை மீட்கும் வழியில் கிடக்கும் கடினத்தன்மையை நினைத்து நான் பெரிதும் இரங்குகிறேன் {கருணை கொள்கிறேன்}" என்றான். விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, மோக்ஷதர்மத்தை {வீடுபேற்றை} அறிந்தோர் இதை ஓர் உவமையணியாகக் குறிப்பிடுவார்கள். இதை முறையாகப் புரிந்து கொள்ளும் மனிதன், அதன் பிறகு அருள் உலகங்களை அடைவான். காடுகளாக விளக்கப்படுவது பேருலகமாகும். அதற்குள் அளவான இடத்துடன் கூடிய அடைதற்கரிய காடானது ஒருவனின் சொந்த வாழ்வாகும். இரைதேடும் விலங்குகளாகச் சொல்லப்படுவது (நம்மை ஆட்கொள்ளும்) நோய்களாகும். பெரும் உடலுடன் அந்தக் காட்டில் வசிக்கும் பெண்ணானவள், நிறத்தையும், அழகையும் அழிக்கும் முதுமையாக ஞானியரால் காணப்படுகிறாள். குழியாக {கிணறாகச்} சொல்லப்படுவது உடல், அல்லது உடல்கொண்ட உயிரினங்களின் உடற்கட்டாகும். அந்தக் குழியின் அடியில் வசிக்கும் பெரும்பாம்பானது, உடல்கொண்ட அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் காலமாகும். உண்மையில், அதுவே அண்டத்தை அழிக்கிறது. அம்மனிதன் அகப்பட அந்தக்குழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளே, ஒவ்வொரு உயிரினமும் பேணி வளர்க்கும் உயிர்மீது கொண்ட {உயிர்வாழும்} விருப்பமாகும். ஓ! மன்னா, குழியின் வாயிலில் நிற்கும் மரத்தை நோக்கி வரும் ஆறு தலை யானையானது, வருடம் எனச் சொல்லப்படுகிறது. அதன் ஆறு முகங்கள் பருவகாலங்களையும், பனிரெண்டு கால்கள் பனிரெண்டு மாதங்களையும் குறிக்கின்றன. மரத்தை உண்ணும் வெள்ளை மற்றும் கருப்பெலிகள், உயிரினங்களின் வாழ்நாளைக் குறைக்கும் பகல்களும், இரவுகளுமாகும். தேனீக்களாகச் சொல்லப்படுபவை நமது ஆசைகளே ஆகும். தேனைச் சொட்டும் எண்ணற்ற ஓடைகள், நமது ஆசைகளின் நிறைவால் கிட்டும் இன்பங்களாகும். மனிதர்கள் அதற்கே {இன்பங்களுக்கே} அடிமைகளாக இருக்கின்றனர் வாழ்வின் போக்கை இவ்வாறே ஞானியர் அறிகின்றனர். அந்த ஞானத்தினாலேயே அவர்கள் அவற்றின் கட்டுகளை அறுத்து வெற்றியடைகின்றனர்" என்றான் {சஞ்சயன்}. திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "நீ சொன்ன இந்த உவமை அற்புதமானது. நிச்சயமாக, நீ உண்மையை அறிந்திருக்கிறாய். அமுதம் போன்ற உன் பேச்சைக் கேட்ட பிறகும், இன்னும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன்" என்றான். விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, உலகக் கட்டுகளில் இருந்து ஞானியர் தங்களை விடுவித்துக் கொள்ளும் அறிவின் வழிமுறைகளைக் குறித்து மீண்டும் விவரமாகச் சொல்கிறேன் கேட்பீராக. ஓ! மன்னா, நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்யும் ஒரு மனிதன், களைப்படையும்போது சில நேரங்களில் நிற்க வேண்டியிருக்கும், அதேபோலவே, ஓ! பாரதரே, சிறுமதிகொண்டவர்கள், வாழ்வின் நீண்ட வழியில் பயணித்து, கருவறையில் மீண்டும் மீண்டும் பிறத்தல் என்ற வடிவில் அடிக்கடி நின்றுவிடுகின்றனர். எனினும், ஞானியர் அந்தக் கடனிலிருந்து விடுபடுகின்றனர். சாத்திரங்களை அறிந்தோர் இதன் காரணமாகவே வாழ்வை நீண்ட வழி பயணமென்று விவரிக்கின்றனர். ஞானியரும், கடினங்கள் நிறைந்த வாழ்வின் சுழற்சியை ஒரு காடாகவே சொல்கின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உயிரினங்கள் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருப்பினும் அவை இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் திரும்ப வேண்டும். ஞானிகள் மட்டுமே தப்புவார்கள். மனம் மற்றும் உடல் சம்பந்தமாக மனிதர்களுக்கு நேரும் நோய்கள், புலன்படுபவையாகவோ, புலன்படாதவையாகவோ இருப்பினும், ஞானியர் அவற்றை இரைதேடும் விலங்குகளாகவே சொல்லியிருக்கின்றனர் ஓ! பாரதரே, மனிதர்கள் எப்போதும் அவற்றால் பீடிக்கப்பட்டுத் தடுக்கப்படுகிறார்கள் {துன்புற்றுப் பயணத்தைத் தொடராமல் நிற்கின்றனர்}. மேலும் அவர்களின் சொந்த செயல்பாடுகளையே பிரதிபலிக்கும் அந்த இரைதேடும் விலங்குகள் {நோய்கள்}, அந்தச் சிறுமதியாளர்களிடம் எந்தக் கவலையையும் உண்டாக்குவதில்லை. ஓ! ஏகாதிபதி, ஒரு மனிதன் எவ்வாறாவது நோய்களில் இருந்து விடுபட்டால், பிறகு அழகை அழிக்கக்கூடிய முதுமை அவனை வெல்கிறது. அம்மனிதன் ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் என்ற புலனுணர்வுகளுக்குரிய பொருட்களின் சேற்றில் மூழ்கி அவனைப் பாதுகாக்க ஏதுமின்றி அங்கேயே {அந்தச் சேற்றிலேயே விழுந்து} கிடக்கிறான். அதேவேளையில், வருடங்கள், பருவகாலங்கள், மாதங்கள், அரைமாதங்கள் {பக்ஷங்கள்}, பகல்கள், இரவுகள் ஆகியன அடுத்தடுத்து வந்து அழகைக் கெடுத்து, அவனுக்காக ஒதுக்கப்பட்ட காலத்தைக் குறைக்கின்றன இவை அனைத்தும் காலனின் தூதர்களே. எனினும், சிறுமதி படைத்தோர் அவற்றை இவ்வாறு அறிவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் அவற்றின் செயல்பாடுகளின் மூலமே விதியைச்சமைப்பவன் ஆள்கிறான் என ஞானியர் சொல்கின்றனர். .. ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-6 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. விதுரன் திருதராஷ்டிரனிடம் கூறினார் , ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஓர் உயிரினத்தின் உடல் தேர் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் கொள்கையே {புத்தியே} அதன் {அந்தத் தேரின்} சாரதியாகும். புலன்களே குதிரைகளாகும். நமது செயல்களும், அறிவுமே அதன் கடிவாளங்களாகும். ஓடிக்கொண்டிருக்கும் அக்குதிரைகளைப் பின்தொடர்ந்து செல்வோர், மறுபிறப்பெனும் சுழற்சிக்குள் இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் வர வேண்டும். எனினும், தன் அறிவால் அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்னடக்கத்துடன் கூடிய ஒருவன் அவ்வாறு மீண்டும் வருவதில்லை. உண்மையான சக்கரம் போலவே சுழலும் வாழ்வெனும் சக்கரத்தில் திரிந்தும் திகைப்படையாதோர், உண்மையில் மறுபிறப்பெனும் சுழற்சியில் திரிவதில்லை. ஞானம் கொண்ட ஒருவன், மறுபிறப்பெனும் கடனைத் தவிர்க்க நிச்சயம் முயற்சிக்க வேண்டும். ஒருவன் இதில் அலட்சியமாக இருக்கக்கூடாது, அலட்சியமே மீண்டும் மீண்டும் நம்மை அதில் {மறுபிறப்பெனும் கடலில்} ஆழ்த்தும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, கோபம் மற்றும் பேராசையை அடக்கி, உள்ளடக்கத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், இருக்கும் ஒரு மனிதனே அமைதியை அடைவதில் வெல்கிறான். திகைப்படையும் மூடரின் உடலானது யமனின் தேர் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, அத்தகு மனிதன் நீர் அடைந்ததையே அடைவான். ஓ! பாரதரே, நாட்டையும், நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரையும் இழப்பதும், இது போன்ற இழப்புகளும், ஆசையின் ஆதிக்கத்தில் இருப்பவனையே மூழ்கடிக்கும். ஞானியான ஒருவன், பெருந்துன்பங்கள் அனைத்திற்கும், அறிவெனும் மருந்தை இட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட ஒரு மனிதன், உண்மையில் நன்மைதரக்கூடியதும், கிட்டத்தட்ட அடையமுடியாததுமான ஞானமருந்தை அடைந்து கவலை என்றழைக்கப்படும் மிக முக்கிய நோயை உண்மையில் கொன்றுவிடுவான் {குணப்படுத்துவான்}. துயரத்தில் இருக்கும் ஒரு மனிதனை, தன்னடக்கமுள்ள அவனது ஆன்மாவாலான்றி, ஆற்றலாலோ, செல்வத்தாலோ, நண்பர்களாலோ, நலன் விரும்பிகளாலோ {நோயிலிருந்து} குணப்படுத்த முடியாது. எனவே, ஓ! பாரதரே, அனைத்துத் தீங்குகளையும் செய்யாமலிருக்கும், அல்லது அனைத்து உயிரினங்களிடமும் நட்புடனிருக்கும் பெருங்கடமையை {அஹிம்சையைப்} பன்பற்றி நன்னடத்தையை நோற்பீராக. தற்கட்டுப்பாடு, துறவு, கவனக்குவிப்பு ஆகியவையே பிரம்மத்தின் மூன்று குதிரைகளாகும். இந்தக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும் தன்னான்மா எனும் தேரில் செல்லும் ஒருவன், நன்னடத்தை எனும் கடிவாளத்தின் துணை கொண்டு, மரணம் குறித்த அச்சமனைத்தையும் விட்டு, அதை {அந்தத் தேரைச்} செலுத்திச் பிரம்மலோகத்தை அடைகிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எந்த மனிதன் தீங்கிழையாமையை அனைத்து உயிரினங்களுக்கும் உறுதி செய்கிறானோ, அவன் அருளாளனான விஷ்ணுவின் உயர்ந்த உலகங்களுக்குச் செல்கிறான். உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழையாமையை உறுதி செய்வதால் ஒருவன் அடையும் கனியை, ஆயிரம் வேள்விகளாலோ, தினநோன்புகளாலோ அடையமுடியாது. அனைத்துப் பொருட்களிலும் தன்னை {சுயத்தை} விட அன்புக்குரியது வேறு எதுவுமில்லை. ஓ! பாரதரே, மரணத்தை எந்த உயிரினமும் விரும்புவதில்லை. எனவே, அனைவருக்கும் கருணை காட்டப்பட வேண்டும். பல்வேறு வகைத் தவறுகளால், தங்கள் சொந்த அறிவெனும் வலையிலேயே சிக்கும், தீயோரும், நல்லோரும் மீண்டும் மீண்டும் உலகத்தில் திரிய நேர்கிறது. எனினும், நுண்ணியப் பார்வை கொண்ட ஞானியரே பிரம்மத்துடன் ஒன்றுகலந்துவிடுகின்றனர்" {என்றான் விதுரன்}" .. ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-7 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. . வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், தன் மகன்களின் மரணம் குறித்த துயரத்தால் பீடிக்கப்பட்ட குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்}, உணர்விழந்தவனாகக் கீழே தரையில் விழுந்தான். அவனது நண்பர்களும், தீவில் பிறந்தவரான {துவைபாயனரான} வியாசரும், விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகியோரும், நலன்விரும்பிகள் பிறரும், வாயில் காப்போரும், அவனது நம்பிக்கையைப் பெற்றோரும், அவன் விழுந்த நிலையைக் கண்டு, அவனது உடலில் குளிர்ந்த நீரைத் தெளித்து, பனை ஓலைகளால் விசிறிவிட்டுத் தங்கள் கரங்களால் அவனை மெல்லத் தடவினர். அந்நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அவர்கள் தேற்றினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு உணர்வுகள் மீண்டவனான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் மகன்களின் மரணம் குறித்த துயரில் மூழ்கி, நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தான். பிறகு அவன் {திருதராஷ்டிரன்}, "மனதநேயத்துக்கு ஐயோ, மனித உடலுக்கு ஐயோ, மனிதத்தன்மையாலேயே இவ்வாழ்வு அடிக்கடி துயரங்களை அனுபவிக்கிறது. ஐயோ, மகன்கள், செல்வங்கள், சொந்தங்கள் மற்றும் உறவினர்களின் இழப்பால் ஒருவன் அனுபவிப்பது, நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பெருந்துயரமாகும். துயரம் அங்கங்களை எரிக்கிறது, அதனால் நமது ஞானமும் அழிகிறது. அத்துயரத்தில் மூழ்கும் ஒருவனுக்கு மரணமே சிறந்ததாகும். தீப்பேற்றால் நான் அடைந்திருக்கும் துயரமும் அவ்வாறானதே. உயிரை விடுவதைவிட வேறு எந்தவகையிலும் அது முடிவுபெறாது என நான் காண்கிறேன். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, இந்த நாளே நான் என் உயிருக்கு முடிவுகட்டப் போகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}. .. உயரான்மா கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன திருதராஷ்டிரன், துயரில் மூழ்கியவனாகத் திகைப்படைந்தான் {மயக்கமடைந்தான்}. அம்மன்னன், தன் துன்பங்களை நினைத்துப் பார்த்துப் பேச்சற்றவனானான். இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க வியாசர், பிள்ளைகளின் மரணத்தினால் உண்டான துயரத்தில் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வாறு {பின்வருமாறு} வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, நான் சொல்வதைக் கேள். நீ! கல்விமானும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், கடமைகளைப் புரிந்து கொள்வதில் திறன் கொண்டவனும் ஆவாய். அறியத்தக்கது எதையும் நீ அறியாதவனில்லை. மரணமடைய விதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் நிலையாமையை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை. உயிரினங்களுடன் கூடிய உலகம் {ஜீவலோகம்} நிலையற்றது, இவ்வுலகமே நிலையானதில்லை, உயிரானது நிச்சயம் மரணத்தினால்தான் முடிவுக்கு வரும் எனும்போது, நீ ஏன் துயருறுகிறாய்? காலத்தால் கொண்டவரப்பட்டு ஒன்றுதிரண்ட உண்மைகள், உன் கண்களுக்கு முன்பாக, உன் மகனையே {துரியோதனனையே} இந்தப் பகைமைக்குக் காரணமாக்கின. குருக்களின்(கௌரவர்கள்) அழிவு தவிர்க்கப்பட முடியாதது. உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் அவ்வீரர்களைக் குறித்து நீ ஏன் வருந்துகிறாய்? உயரான்ம விதுரன் அனைத்தையும் அறிவான். தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அவன் {விதுரன்} அமைதியைக் கொண்டு வர முயன்றான். ஒருவன் அழிவில்லாமைக்காகப் போராடினாலும், விதியால் வகுக்கப்பட்ட பாதையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்தாகும் தேவர்களால் தீர்மானிக்கப்பட்ட பாதை என்னால் நேரடியாகக் கேட்கப்பட்டது. உன் மன அமைதிக்காக அதை நான் உனக்குச் சொல்கிறேன். ஒரு காலத்தில் நான், எக்களைப்புமின்றி வெகு வேகமாக இந்திரனின் சபையை அடைந்தேன். அங்கே சொர்க்கவாசிகள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பதைக் கண்டேன். அங்கே நாரதரின் தலைமையில் தெய்வீக முனிவர்கள் அனைவரும் இருந்தனர். , அங்கே (உடல் வடிவத்துடன் கூடிய) பூமாதேவியையும் கண்டேன். ஒரு குறிப்பிட்ட காரியத்தின் நிறைவுக்காகவே அவள் தேவர்களிடம் வந்திருந்தாள். தேவர்களை அணுகிய அவள் {பூமாதேவி}, அருளப்பட்டவர்களே, நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது அனைத்தையும், பிரம்மனின் வசிப்பிடத்தில் வைத்து நீங்கள் ஏற்கனவே உறுதி கூறினீர்கள். அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்" என்றாள். உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனான விஷ்ணு, அவளது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தெய்வீகச் சபைக்கு மத்தியில் சிரித்துக் கொண்டே "துரியோதனன் என்ற பெயரில் அறியப்படுபவனான திருதராஷ்டிர மகன்களில் மூத்தவன் உன் காரியத்தை நிறைவேற்றுவான். அம்மன்னனின் மூலமே உனது நோக்கம் நிறைவேறும். குருக்களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மன்னர்கள் பலர் அவனுக்காக ஒன்று கூடுவார்கள். தாக்கவல்ல அவர்கள், கடும் ஆயுதங்களெனும் கருவிகள் மூலம் ஒருவரையொருவர் கொல்லச் செய்வார்கள் ஓ! தேவி, அப்போதைய போரில் உன் சுமை குறைக்கப்படும். ஓ! அழகியே, வேகமாக உன் இடத்திற்குச் சென்று, உயிரினங்களைச் சுமப்பதைத் தொடர்வாயாக" என்றான். இப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காந்தாரியின் கருவறையில் பிறந்தவனான உன் மகன் துரியோதனன், அண்ட அழிவை உண்டாக்கும் நோக்குடன் உதித்த கலியின் {கலிகாலத்தின்} ஒரு பகுதியாவான் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும். பழிவுணர்ச்சி, அமைதியின்மை, பெருங்கோபம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், நிறைவடையக் கடினமானவனாகவும் அவன் இருந்தான். விதியின் ஆதிக்கத்தால் அவனது சகோதரர்களும், அவனைப் போலவே மாறினார்கள். சகுனி அவனது தாய்மாமனாகவும், கர்ணன் அவனது பெரும் நண்பனாகவும் ஆனார்கள். அந்த அழிவு வேலைக்குத் துணைபுரியவே பல்வேறு மன்னர்கள் பூமியில் பிறந்தார்கள். மன்னன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே. மன்னன் நேர்மையானவனாக இருந்தால், அவனது ஆட்சிப்பகுதியில் நேர்மையற்றவர்களும், நேர்மையாளர்களாக ஆவார்கள். பணியாட்கள் தங்கள் தலைவர்களின் தகுதிகள் மற்றும் குறைகளால் பாதிப்பை அடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை {பணியாட்கள் தங்கள் தலைவர்களின் குணங்களையே அடைகிறார்கள்}. ஓ! மன்னா, உன் மகன்கள் ஒரு தீய மன்னனை அடைந்து அழிவை அடைந்தார்கள். ஓ! ஏகாதிபதி அவர்களுக்காக வருந்தாதே. துயருறக் காரணமேதுமில்லை. .. ........தொடரும்....🙏இந்துமதம் Whatsup group🙏 சனாதன தர்மம் - பாகம்-8 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. வியாசர் திருதராஷ்டிரரிடம் கூறினார் .. ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, {இதுவரை} நடந்தவற்றில் பாண்டவர்கள் சிறு தவறையும் செய்யவில்லை. உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராக இருந்தனர். அவர்களே உலகத்திற்கு இந்த அழிவைச் செய்தனர். நீ அருளப்பட்டிருப்பாயாக. ராஜசூய வேள்வியின் போது யுதிஷ்டிரனின் சபையில் நாரதர், "பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் மோதி, அழிவைச் சந்திப்பார்கள். ஓ! குந்தியின் மகனே, நீ செய்ய வேண்டியதைச் செய்வாயாக" என்றார் {நாரதர்}. நாரதரின் வார்த்தைகளைக் கேட்டுப் பாண்டவர்கள் துயரால் நிறைந்தார்கள். இவ்வாறே நான் தேவர்களின் அழிவில்லா ரகசியத்தை உனக்குச் சொல்லிவிட்டேன். தேவர்களால் விதிக்கப்பட்ட அத்தனையும் நடந்தது என்பதால், இஃது உன் துயரத்தை அழித்து, உன் உயிர்மூச்சில் அன்பை மீட்டெடுத்து, பாண்டவர்களிடம் பாசம் கொள்ளச் செய்யும். இவையனைத்தும் சில காலத்திற்கு முன்பே நான் அறிந்தேன். வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தின்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் நான் இதைப் பேசவும் செய்தேன். நான் அவனிடம் கமுக்கமாக இவையனைத்தையும் சொன்னபோது, அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கௌரவர்களுடனான அமைதியைப் பாதுகாக்க தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான். எனினும், தேவர்களால் விதிக்கப்பட்ட அது (அவனால் கலங்கடிக்கப்பட முடியாத அளவுக்கு) சக்தி வாய்ந்ததாக இருந்தது. எவ்வாறாயினும், ஓ! மன்னா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் யமனின் செயலைக் கலங்கடிக்கவல்லவையல்ல ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நீ அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவனுமாவாய். அனைத்துயிரினங்களுக்கும் எது வழி, எது வழியில்லை என்பதையும் நீ அறிவாய். மன்னன் யுதிஷ்டிரன், நீ துயரால் எரிவதையும், அடிக்கடி உன் உணர்வுகளை இழப்பதையும் {மயங்கி விழுவதையும்} அறிந்தால், தன் உயிர்மூச்சையே விட்டுவிடுவான். அவன் எப்போதும் கருணையுள்ளவனாகவும், ஞானம் கொண்டவனாகவும் இருக்கிறான். இழிந்த உயிரினங்கள் அனைத்திடமும் கூட அவன் தன் அன்பை விரிவடையச் செய்கிறான். அவன் {யுதிஷ்டிரன்} உன்னிடம் கருணைகொள்ளாதிருக்க என்ன சாத்தியம்? என் ஆணையின் பேரிலும், தவிர்க்க முடியாத விதியை அறிந்தும், பாண்டவர்களிடம் அன்பு கொண்டு உன் உயிரைத் தாங்கிக் கொள்வாயாக. இவ்வாறு நீ வாழ்ந்தால், உன் புகழ் உலகமெங்கும் பரவும். அனைத்துக் கடமைகளின் அறிவை அடைந்து, பலவருடங்களின் தவத் தகுதியை நீ அடைவாய். ஓ! மன்னா, உன் மகன்களின் மரணத்தால் உன் இதயத்தில் எழுந்திருக்கும் இந்தத் துயரமெனும் சுடர்மிக்க நெருப்பானது, ஞானமெனும் நீரால் எப்போதும் அணைக்கப்பட வேண்டும்" {என்றார் வியாசர்}.(46) "அளவிலா ஆன்மா கொண்டவரான வியாசரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிறிது நேரம் சிந்தித்த திருதராஷ்டிரன், ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {தந்தையே}, நான் துயரெனும் பெருங்கனத்தால் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறேன். என் புலனுணர்வுகள் என்னை அடிக்கடி கைவிடுகின்றன, என்னால் என்னையே தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும், தேவர்களால் விதிக்கப்பட்டதைக் குறித்த உமது வார்த்தைகளைக் கேட்டதால், என் உயிர்மூச்சை விட நினைக்காமலும், துயரில் ஈடுபடாமலும் வாழ்வேன்" என்றான். சத்தியவதியின் மகனான வியாசர், ஓ! ஏகாதிபதி, திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்" {என்றார் வைசம்பாயனர்}... ........தொடரும்.🙏இந்து மதம் Whatsup group🙏🙏 சனாதன தர்மம் - பாகம்-9 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. சனாதன தர்மம் - பாகம்-9 ... மகாபாரதம்-ஸ்திரீ பர்வம் .. கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான விதுரன், பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "ஓ! மன்னா, ஏன் இவ்வாறு கீழே கிடக்கிறீர்? எழுவீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, வருந்தாதீர். ஓ! பூமியின் தலைவரே, அனைத்துயிர்களின் இறுதியான முடிவும் இதுவேயாகும். முதலில் உயிரினங்கள் இருப்பில் இல்லாதிருந்தன. ஓ!பாரதரே, நடுவிலோ, அவை இருப்பில் இருந்தன. இறுதியிலும், அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இவை யாவற்றிலும் என்ன கவலையைக் கொள்ள முடியும்? துயரில் ஈடுபடுவதால், இறந்தோர் திரும்பி வருவதில்லை. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் தானே இறப்பதுமில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்? போரில் ஈடுபடாமலேயே ஒருவன் இறக்கலாம். போரில் ஈடுபட்ட பிறகும் ஒருவன் உயிரோடு தப்பலாம். ஆனால், ஓ! மன்னா, காலன் வரும்போது ஒருவனால் தப்ப முடியாது. அனைத்து வகை உயிரினங்களையும் காலன் இழுத்துச் செல்கிறான். , காலனுக்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது. புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலனின் ஆதிக்கத்திற்குள் அனைத்து உயிரினங்களும் வருகின்றன. ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. வேறொருவனுக்குச் சிறிது முன்பாகவே காலன் ஒருவனைச் சந்திக்கிறான் என்றால் அதில் வருந்துவதற்கான காரணம் என்ன இருக்கிறது? மேலும் ஓ! மன்னா, போரில் வீழ்ந்த சிறப்புமிக்கவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்கே சென்றிருப்பதால், அவர்கள் உமது துயரத்திற்குரிய பொருட்கள் அல்லர். போரில் துணிவுடன் இருந்த வீரர்களைவிட அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, அறிவாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு எளிதாகச் செல்ல முடியாது. அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது? அவர்கள், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதைப் போலத் துணிச்சல்மிக்க எதிரிகளின் உடல்களில் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிந்தார்கள். மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள், பதிலுக்குத் தங்கள் மீது ஊற்றப்படும் கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொண்டனர். இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன். அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர். உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது" {என்றான் விதுரன்} ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-10 ... மகாபாரதம்-ஆதிபர்வம் .. பிராமணர்களில் சிறந்தவனான சஹஸ்ரபத் ருருவிடம் கூறிய அறிவுரைகள் .. அதன்பிறகு சிறப்புமிக்க சக்தி கொண்ட ருருவிடம், "ஓ படைத்தவற்றில் முதன்மையானவனே, மனிதர்களுக்கு உயர்ந்த அறம் கொல்லாமையே. எனவே, எந்தப் பிராமணனும் எந்த உயிரினத்தின் உயிரையும் எடுக்கக்கூடாது. பிராமணன் எப்போதும் மென்மையானவனாகவே இருக்க வேண்டும். இதுவே வேதங்களின் மிகப் புனிதமான விதி. ஒரு பிராமணன் வேதங்களையும், வேதாங்கங்களையும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். உயிரினங்களுக்குக் கடவுள் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். எப்படி வேதங்களை நினைவில் வைத்திருப்பது முதற்கடமையோ அவ்விதமே எல்லா உயிர்களுக்கு நன்மை கருதுவதும், உண்மையோடு இருப்பதும், மன்னிப்பதும் {கடமையே} ஆகும். உனது கடமை, க்ஷத்திரியரின் கடமையன்று. கடுமையாக நடந்து கொள்வது, செங்கோலுடன் அதிகாரம் செய்வது, குடிமக்களை முறையாக ஆள்வது ஆகியவை க்ஷத்திரியனின் கடமைகள். .. யயாதி அஷ்டகனுக்கு கூறிய அறிவுரைகள் .. யயாதி, "நான் நகுஷ மைந்தனும், பூருவின் தந்தையுமான யயாதி ஆவேன். அனைத்து உயிரையும் மதிக்காததால், தேவர்கள், சித்தர்கள், மற்றும் முனிவர்களின் உலகத்திலிருந்து, எனது அறத் தகுதிகள் குன்றி நான் விழுந்து கொண்டிருக்கிறேன். அஷ்டகன் "ஓ ஏகாதிபதி! வயதால் மூத்தவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்று நீர் சொல்கிறீர். ஆனால் கல்வியாலும், தவத் தகுதிகளாலும் உயர்ந்தவர்களே வழிபடுவதற்கு உண்மையான தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது" என்றான். யயாதி, "பாவம் என்பது, நான்கு அறச்செயல்களின் தகுதிகளையும் அழிக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. தற்பெருமையானது ஒருவனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பண்புகளில் ஒன்றாகும். அறவோர், தீயவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றமாட்டார்கள். தங்கள் தவத் தகுதிகள் அதிகரிப்பதற்கான செயல்களையே அவர்கள் செய்வார்கள். நானும் பெரும் அறத்தகுதிகளைக் கொண்டிருந்தேன். ஆனால் அவையெல்லாம் குன்றிவிட்டன. எனது சிறந்த முயற்சிகளினால் கூட என்னால் அவற்றை மீட்டெடுக்க முடியாது. தனது நன்மையில் அக்கறையுள்ளவன், எனது விதியைக் கண்டு செருக்கற்றவனாக இருப்பானாக. அப்படிப்பட்டவன் பெரும் செல்வங்களை அடைந்து, அவனது தகுதிகளை வளர்க்கும் வேள்விகளைச் செய்வான். அவன் அனைத்தையும் கற்று, பணிவுள்ளவனாக இருப்பான். அவன் முழு வேதங்களையும் அறிந்து, இவ்வுலகம் சார்ந்த இன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீகத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தேவலோகம் செல்வான். பெரும் செல்வத்தை அடைந்தவன் எவனும் பேருவகைக் கொள்ளக்கூடாது. முழு வேதங்களையும் அறிந்தவன் எவனும் தகுதிகளற்று இருக்கக் கூடாது. மனிதர்களின் உலகத்தில் பல்வேறு இயற்கைப் பண்புகள் இருக்கின்றன. அங்கே விதியே தலைமையானது. சக்தியும், முயற்சியும் கனியற்றதாக {பயனற்றவையாக} இருக்கின்றன. விதியின் வலிமையை அறிந்த ஞானமுள்ளோர், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும், பேருவகையோ {செருக்கோ}, துன்பமோ அடையக்கூடாது. செழுமையும், துக்கமும் விதியைச் சார்ந்தே இருக்கின்றன, தனது முயற்சியாலோ, சக்தியாலோ அல்ல என்பதை அறிந்தவன், விதி வலியது என்பதை உணர்ந்து துயரமோ, பேருவகையோ கொள்ள மாட்டான். அறிவுள்ளவன் எப்போதும், துயரங்களில் துன்பப்படாமலும், செழுமையில் பேருவகை கொள்ளாமலும் மனநிறைவுடன் இருப்பான். விதியே தலைமையானது என்று உணரும்போது, துயரமும், பேருவகையும் {செருக்கும்} ஏற்படாது. ஓ அஷ்டகா, இந்த உலகத்தில் பெரும் சக்தியின் கட்டளைகளை அறிந்த நான், எப்போதும் அச்சமடைவதில்லை; துயரத்தை ஊக்குவிப்பதும் இல்லை. பூச்சிகளும், புழுக்களும், முட்டையிடும் இனங்களும், தாவர வகைகளும், ஊர்ந்து செல்லும் இனமும், மனித உடலில் வசிக்கும் புழுப் பூச்சிகளும், நீர்களில் இருக்கும் மீன்களும், கற்களும், புற்களும், கட்டைகளும் என அனைத்தும் படைக்கப்பட்டனவே. அவை தனது செயல்களுக்கான விளைவுகளிலிருந்து விலக்கப்படும்போது தலைமை ஆன்மாவோடு (பரமாத்மாவோடு) கலக்கின்றன இன்பமும், துன்பமும் நிலையில்லாதன. எனவே, ஓ அஷ்டகா! நான் ஏன் துயரடைய வேண்டும்? துன்பத்தை விலக்க என்ன செயல் செய்ய வேண்டும் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே, யாரும் துன்பத்தைக் கண்டு துயருறக்கூடாது" என்றான். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-11 ... மகாபாரதம்-ஆதிபர்வம் .. யயாதி அஷ்டகனுக்கு கூறிய அறிவுரைகள் .. "உறவினர்களும், நண்பர்களும், சொந்தங்களும் எப்படி ஒரு மனிதனை இந்த உலகத்தில் கைவிடுகிறார்களோ, அப்படியே அவர்களது செல்வமும் கைவிட்டுப் போகும். அடுத்த உலகத்தில், இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்கள் நாம் அறத்தை இழக்கும்போது நம்மைக் கைவிடுகிறார்கள்" என்றான் அஷ்டகன், "எப்படி அடுத்த உலகத்தில் நாம் அறத்தை இழக்கமுடியும் என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன். ஓ மன்னா! பேரான்மாக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் அறிந்தவர் நீர் என்பது எனக்குத் தெரியும். என்ன செயல்புரிந்தால், எந்த உலகத்தை அடையலாம் என்பதையும் எனக்குச் சொல்லும்" என்றான். யயாதி, "ஓ பக்தியுள்ளவனே, தங்கள் தற்பெருமையையே பேசிக் கொண்டிருப்பவர்கள் பௌமா என்ற நரகத்தில் வீழ்ந்து தண்டிக்கப்படுவார்கள். என்னதான் மெலிந்திருந்தாலும் அவர்கள் பூமியில் வளர்ந்து (மகன்கள் மற்றும் பேரன்கள் வகையில்) கழுகுகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்கும் உணவாக மாறுவர். எனவே, ஓ மன்னா {அஷ்டகா}, பெரிதும் கண்டிக்கத்தக்க களங்கமுள்ள தீயவர்கள் அடக்கப்பட வேண்டும். ஓ மன்னா, உனக்கு அனைத்தையும் சொல்லிவிட்டேன். நான் இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்பதைச் சொல்வாயாக" என்றான். அஷ்டகன், "வாழ்வில் முதுமை அடைந்து அழிந்துபோகும்போது, கழுகுகளும், மயில்களும், பூச்சிகளும், புழுக்களும் மனித உடலை உண்கின்றன. அப்போது அந்த உடலில் இருந்த மனிதன் எங்கிருக்கிறான் (அவை உண்ணும்போது)? அவன் எப்படி மறுபடியும் பிறக்கிறான்? பௌமா என்ற நரகைப் பற்றிப் பூமியில் நான் கேள்விப்பட்டதில்லையே!" என்றான். யயாதி, "உடல் அழிந்த பிறகு, மனிதன், தனது செயல்களுக்கேற்ப, மறுபடியும் ஒரு தாயின் கருவறைக்குள் புகுகிறான். அவன் அங்கேயே தெளிவில்லாத உருவுடன் இருக்கிறான். தெளிவான உருவடைந்து, பின்பு காணும்படியான தோற்றத்தை அடைந்து உலகில் தோன்றி, பூமியின் பரப்பில் நடக்கிறான். அவன் எங்கே விழுகிறானோ அதுதான் பூமியில் நரகமாகும் (பௌமா). வாழ்வின் முடிவை அவன் காண்பதில்லை. அதனால் அவன் அந்த அடிமைத்தளையை அறுப்பதில்லை. சிலர் தேவலோகத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்கின்றனர், சிலர் எண்பது ஆண்டுகள் வாழ்கின்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் கீழே விழுகின்றனர். அப்படி அவர்கள் விழும்போது, ராட்சத உருவில் இருக்கும் மகன்கள், பேரன்கள், உறவினர்கள் ஆகியோரால் தாக்குண்டு தங்களது இதயத்திலிருந்து விலகி தங்கள் அடிமைத்தளைகளை அறுப்பதில்லை" என்றான். அஷ்டகன், "என்ன பாவத்திற்காக சொர்க்கத்தில் இருந்து விழும்போது, கூர்மையான பற்கள் கொண்ட ராட்சசர்களால் தாக்கப்படுகிறார்கள்? ஏன் அவர்கள் முழுவதுமாக அழிவதில்லை? அவர்கள் எப்படி ஒரு கருவறைக்குள் புலனுணர்வுகளுடன் புகுகின்றனர்?" என்று கேட்டான். யயாதி, "சொர்க்கத்தில் இருந்து விழுந்தவுடன், நுண்ணியப் பொருளாக நீரில் கலக்கிறான். இந்த நீரே உயிர் வித்தான விந்தணுவாகிறது. பிறகு பெண்மைக்கான காலத்தில் ஒரு தாயின் கருவறைக்குள் புகுகிறது. அங்கே அது கருவாக வளர்கிறது. பிறகு, மலரிலிருந்து கனி உருவாவது போல், காணும் தோற்றம் கொண்ட வடிவத்தைப் பெறுகிறது. மரங்கள், செடிகள், மற்ற காய்கறிவகைகள், நீர், காற்று, பூமி, ஆகாயம், ஆகியவற்றில் இதே உயிர்நீராக இருந்து, நான்கு கால் விலங்கினங்களாகவும், இரண்டு கால் விலங்கினங்களாகவும் உருவாகிறது. இதுதான் அனைத்து உயிர்களுக்கும் நேர்கிறது" என்றான் அஷ்டகன், "நான் எனது சந்தேகங்களைக் கேட்கிறேன். அவற்றை எனக்குச் சொல்வீராக. கருவறை நுழைந்து, மனித வடிவை அடையும் ஓர் உயிர், எப்படி ஒரு ஒரு வடிவத்தையோ, வேறு வடிவத்தையோ அடைகிறது? தனித்தன்மை வாய்ந்த உருவமும், கண்களும், காதுகளும், நினைவும் எப்படிக் கிடைக்கிறது? ஓ தந்தையே, நீர் பேரான்மாக்களின் வார்த்தைகளையும், செயல்களையும் அறிந்தவர். எனவே, என்னால் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு முழுமையான பதிலைச் சொல்லும்" என்றான். யயாதி, "ஓர் உயிரானது, ஒருவனது செயல்களின் தகுதிக்கேற்ப, உயிர்வித்துக்குள் நுண்ணிய வடிவங்கொண்டு, மறுபிறப்பின் காரணத்திற்கான சுற்றுப்புற சக்திகளால் ஈர்க்கப்பட்டு, கருவறைக்குள் விழுகிறது. அங்கே அது குறிப்பிட்ட காலத்திற்குள் வளர்கிறது. முதலில் அது கருவாகிறது, பிறகு வெளிப்புற உறுப்புகள் வளர்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் அந்தக் கருவறையைவிட்டு வெளியே வந்து, மனிதனாகி, தனது காதுகளால் ஒலியை உணர்கிறது. தனது கண்களால் நிறத்தையும், வடிவத்தையும் உணர்கிறது; தனது மூக்கால் மணத்தையும், தனது நாவால் சுவையையும், தனது முழு உடலால் தொடுதல் உணர்வையும், தனது மனதால் கருத்துகளையும் உணர்கிறது. ஓ அஷ்டகா, இப்படியே நுண்ணியச் சாறு கண்கள் காணும் உடலாக வளர்கிறது" என்றான். அஷ்டகன், "மரணத்திற்குப் பிறகு, உடல் எரிக்கப்படுகிறது. அல்லது அழிக்கப்படுகிறது. முழுவதுமாக அழிக்கப்பட்ட பிறகு, என்ன நியமத்தால் (கொள்கையால்) ஒருவன் புத்துயிர் பெறுகிறான்?" என்று கேட்டான். யயாதி, "ஓ மன்னர்களில் சிங்மே! இறக்கும் மனிதன் ஒரு நுண்ணிய வடிவைக் கொள்கிறான். தனது செயல்களைக் கனவு போல் நினைவில் கொள்கிறான், பிறகு அவன் வேறு உருவத்திற்குள் காற்றைவிட வேகமாக வடிவம் மாறுகிறான். நற்குணமிக்கவர்கள் உயர்வான வடிவையும், தீயவர்கள் கீழ்மையான வடிவையும் அடைகிறார்கள். தீயவர்கள் புழுக்களாகவும், பூச்சிகளாகவும் ஆகிறார்கள். வேறேதும் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. ஓ தூய பெரும் ஆன்மாவே! உயிரினங்கள் எவ்வாறு பிறக்கின்றன, கருவில் வளர்ந்து, பிறகு நான்கு கால்கள், ஆறு கால்கள் அல்லது இன்னும் அதிகமாகக் கால்களுடைய உயிரினங்களாக எப்படி ஆகின்றன என்பதைச் சொல்லிவிட்டேன். நீ என்னிடம் வேறு என்ன கேட்கப் போகிறாய்?" என்றான். அஷ்டகன், "ஓ ஐயா! மனிதர்கள் பூமிக்குத் திரும்பாத அளவுக்கு உயர்ந்த உலகங்களை எப்படி அடைகிறார்கள்? ஆன்மிகத்தாலா அல்லது ஞானத்தாலா? ஒருவன் படிப்படியாக எப்படிப் பாராட்டப்படும் உயர்ந்த உலகங்களை அடைய முடியும்? இதற்கு முழுமையாகப் பதிலளியுங்கள்" என்றான். யயாதி, "மனிதர்கள் சொர்க்கத்தில் நுழைவதற்கு அவர்கள் ஏழு வாயில்களில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஞானமுள்ளோர் சொல்கிறார்கள். துறவு (ஆன்மிகம்), தயவு, அமைதியான மனம் (மன அமைதி), சுய கட்டளை, அடக்கம், எளிமை, அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு ஆகியவையே அவை. கர்வத்தால் ஒருவன் இவையனைத்தையும் இழக்கிறான் என்று ஞானமுள்ளோர் சொல்கிறார்கள் ஞானத்தைப் பெற்றுக் கொள்பவன் தன்னைத் தானே கல்விமானாக நினைத்துக் கொள்கிறான். அந்தக் கல்வியால் மற்றவர்களை மதிக்காமல் இருக்கிறான். அப்படிப்பட்டவன் போற்றப்படும் அழிவில்லாத உலகங்களை அடைய முடியாது. அந்த வகை ஞானம் உள்ள ஒருவன் பிரம்மத்தை அடைய முடியாது. கல்வி, குறைவாகப் பேசும் தன்மை, நெருப்பு முன்பு வழிபாடு, வேள்விகள் ஆகிய இந்த நான்கும் ஒருவனது அச்சத்தை விலக்கவல்லனவாகும். இருப்பினும், செருக்கு கலப்பின், பயம் விலகுவதற்குப் பதில், அஃது அதிகரிக்கும். ஞானமுள்ளோர் மதிக்கப்படும்போது உவகையும், அவமதிக்கப்படும்போது துன்பமும் அடையக்கூடாது. ஞானமுள்ளோர் மட்டும் மற்றுமொரு ஞானமுள்ளவரை மதிப்பார். தீயவர்களால் நல்லொழுக்கம் உள்ளவர்கள் போல நடந்து கொள்ள முடியாது. நான் நிறையக் கொடுத்திருக்கிறேன் - நான் நிறைய வேள்விகளைச் செய்திருக்கிறேன் - நான் நிறையக் கற்றிருக்கிறேன் - நான் நிறைய நோன்புகளைக் கடைப்பிடித்திருக்கிறேன் என்பன போன்ற கர்வங்களே அச்சங்களின் வேர்களாகும். எனவே, நீ அது போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகக் கூடாது. உன்னைப் போன்ற நற்குணமிக்க கற்றவர்கள், மாற்றமில்லாத, பிறப்பு இறப்பற்ற பிரம்மத்தை மட்டுமே துணையாகக் கருதி; இகத்திலும் பரத்திலும் நிரந்தர அமைதியைப் பெறுகிறார்கள்" என்றான். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-12 ... மகாபாரதம்-ஆதிபர்வம் .. யயாதி அஷ்டகனுக்கு கூறிய அறிவுரைகள் .. அஷ்டகன், "வாழ்வின் நான்கு நிலைகளான, கிருஹஸ்தம், பிக்ஷூ, பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் எப்படி நடந்து கொண்டு அறத்தகுதிகளை அடைய வேண்டும் என்பதில் வேதத்தை அறிந்தவர்கள் வேறு பட்டு இருக்கிறார்களே!" என்று கேட்டான். யயாதி, "பிரம்மச்சாரிகள் பின்வருமாறு செயல்பட வேண்டும். தனது குருவின் வசிப்பிடத்தில் தங்கி, அந்தக் குருவின் கட்டளைப்படி பாடம் கற்க வேண்டும். குருவின் கட்டளைக்காகக் காத்திராமல் அவரது குறிப்புணர்ந்து சேவை செய்ய வேண்டும். குரு உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் முன்பு அவன் விழித்துவிட வேண்டும். குரு உறங்கச் சென்ற பிறகே அவன் உறங்கச் செல்ல வேண்டும். அவன் எளிமையானவனாக, தனது உணர்ச்சிகளைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, அமைதியுடனும், விழிப்புடனும் படிப்புக்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் அவன் வெற்றியடைய முடியும். பழமையான உபநிஷத்தில் இவையெல்லாம் சொல்லப்பட்டுள்ளன. கிருஹஸ்தன் (இல்லறவாசி), நேர்மையான, நியாயமான வழிகளில் செல்வம் ஈட்ட வேண்டும். அவன் வேள்விகள் செய்ய வேண்டும். அவன் எப்போதும் ஏதாவது தானம் தர வேண்டும். தனது வசிப்பிடத்திற்கு வரும் விருந்தினர்களை அன்போடு உபசரிக்க வேண்டும். எந்த ஒரு பொருளையும், அதில் சிறுபகுதியையேனும் மற்றவனுக்குக் கொடுக்காமல் தானே எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு முனிவன், கானகங்களைத் தேடாமல், தனது சக்தியை மட்டுமே நம்பி, எல்லாத் தீய காரியங்களிலிருந்தும் விடுபட வேண்டும். அவன் ஏதாவது தானம் செய்ய வேண்டும். எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது. அப்போதுதான் அவன் தனது வழியில் வெற்றியை அடைவான். உண்மையான பிக்ஷூ என்பவன், தனது செயல்களினால் தன்னைத் தாங்கிக் கொள்ளாமல் எண்ணற்ற சாதனைகள் செய்திருக்க வேண்டும். அவன் தனது உணர்ச்சிகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். உலக நிகழ்வுகளில் இருந்து அவன் தன்னைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ஓர் இல்லறவாசியின் கூரைக்குக்கீழே படுத்துறங்கக் கூடாது. அவன் மனைவியைக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவன் சிறிது தூரத்தைக் கடந்து கொண்டே இருக்க வேண்டும். நாட்டின் பெரும்பகுதிகளில் பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். உலகம் சம்பந்தமான தனது கடமைகளை முடித்த கற்றவன், வானப்பிரஸ்த வாழ்வுமுறையைத் (உலகத்தைத் துறந்து, காட்டில் வசிப்பது) தேர்ந்தெடுக்க வேண்டும். இன்பங்களுக்கான தனது பசியைக் குறைத்துக் கொண்டு, செல்வம் சேர்ப்பதில் விருப்பத்தைத் தவிர்த்து வர வேண்டும். இந்த வாழ்வுமுறையை அனுசரித்து வரும்போது இறந்து போகும் மனிதன், தனது பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், வழித்தோன்றல்களையும் தெய்வீகத் தன்மையடையச் செய்கிறான்" என்று பதிலுரைத்தான். அஷ்டகன், "எத்தனை வகையான முனிவர்கள் (பேசாநோன்பை நோற்பவர்களாக) இருக்கிறார்கள்?" என்று கேட்டான். யயாதி, "முனிவன் என்பவன், ஒன்று கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் {கிராமம்} இருக்க வேண்டும். அல்லது அவன் வாழுமிடத்தில் வசித்தாலும், அருகில் கானகம் இருக்க வேண்டும்" என்றான். அஷ்டகன், "முனிவன் என்றால் என்ன? {காட்டில் வாழும்போது வாழுமிடம் சம்பந்தமானவற்றையும், வாழுமிடத்தில் இருக்கும்போதும் காடு சம்பந்தமானவற்றையும் ஒருவனால் எவ்வாறு அடைய முடியும்?}" என்று கேட்டான். யயாதி, "ஒரு முனிவன், அனைத்து உலகப் பொருட்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, கானகத்தில் வசிக்கிறான். வாழுமிடங்களில் இருக்கும் பொருட்கள் தன்னைச் சூழாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளும் முனிவன், தேவைப்படும்போதும் அவையனைத்தும் தனது தவ மகிமையால் பெறுவான். அவன் கானகத்தில் வசித்தாலும், அருகில் வாழுமிடம் இருக்க வேண்டும். உலகப் பொருட்களையெல்லாம் துறந்த ஒரு அறிவுள்ளவன், ஓர் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு துறவியாக வாழ்கிறான். அவன் தனது குலப்பெருமையையோ, பிறப்பு அல்லது கல்வியின் பெருமையையோ காண்பித்துக் கொள்ளக்கூடாது. அவன் குறைந்த அளவு ஆடை உடுத்திக்கொண்டு, அதையே ஆடம்பரமாகக் கருத வேண்டும். அவன் தனது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கே உண்ண வேண்டும். அப்படிப்பட்ட மனிதன் வாழிடத்தில் வசித்தாலும், கானகத்தில் வசித்ததற்குச் சமமே. அப்படிப்பட்ட மனிதன், தனது உணர்ச்சிகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பேசா நோன்பு {மௌன விரதம்} நோற்று, தன்னை எல்லாச் செயல்களிலிருந்தும் விடுவித்துக் கொண்டு, விருப்பங்களைத் துறந்து வெற்றியை அடைகிறான். அறம் அனுமதித்த போதும், தூய்மையான உணவை மட்டுமே உண்டு, அடுத்தவர்களுக்கு எப்போதும் தீங்கிழைக்காமல், எப்போதும் சுத்தமான இதயங்கொண்டு, துறவு நிலை கொண்டு, ஆசைகளைத் துறந்து இருக்கும் மனிதனை நாம் ஏன் மதிக்கக்கூடாது? தவங்களால் மெலிந்து, சதை, எலும்பு, மஜ்ஜை, இரத்தம் ஆகியவை சுருங்கி அவன் இந்த உலகத்தையும், உயர்ந்த உலகங்களையும் வெற்றி கொள்கிறான். ஒரு முனிவன் யோகத் தியானத்தில் அமரும்போது, மகிழ்வும், துயரமும், மதிப்பும், அவமதிப்பும் அவனுக்கு ஒன்றாகிப் போகின்றன. அப்படிப்பட்ட நிலையை அடைந்த அவன், இந்த உலகத்தை விட்டு, பிரம்மத்துடன் ஒருங்கிணைந்து இன்பமடைகிறான். ஒரு முனிவன், (தாயின் மடியில் உறங்கும் குழந்தையைப் போல) எதையும் எதிர்பார்க்காமல், எந்த மகிழ்ச்சியும் அடையாமல் பசுவைப் போலவோ, பிற விலங்குகளைப் போலோ உணவை உண்டால், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவைப் போல அவன் மொத்த அண்டத்துடனும் அடையாளம் காணப்பட்டு, முக்தியை அடைகிறான்" என்றான் {யயாதி}. சனாதன தர்மம் - பாகம்-13 ... மகாபாரதம்-ஆதிபர்வம் .. யயாதி அஷ்டகனுக்கு கூறிய அறிவுரைகள் .. பிரகாசித்துக்கொண்டு பிரம்மத்தில் முதலில் ஒருங்கிணைவது துறவியா? அல்லது ஞானமுள்ளவனா?" என்று கேட்டான் அஷ்டகன் யயாதி, "ஞானமுள்ளவர்கள், வேதங்கள் மற்றும் அறிவின் உதவியோடு, அண்டத்தில் காணப்படுவதெல்லாம் மாயை என்பதை உறுதி செய்து, தானாகவே நிலைத்திருக்கும் பரமாத்மாவை உடனே உணர்கிறார்கள். மேலும் யோகத்திற்கும், தியானத்திற்கும் தன்னை அர்ப்பணித்தவன், வெற்றியை அடைவதற்காக வருத்தத்துடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதால், ஒரே வாழ்க்கையின் மூலம் வெற்றியை அடைய அவனுக்குப் போதிய நேரம் கிடைக்காமல், உலக ஈர்ப்புகளால் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏற்கனவே {இந்த வாழ்வின் மூலம்} அடைந்த முன்னேற்றத்தை அடுத்த வாழ்வில் அடைகிறான். ஆனால், அறிவுள்ளவன், அழிவில்லாத ஒருமையை உடனே கண்டு கொள்கிறான். எனவே, உலக இன்பங்களில் ஈடுபட்டாலும், அவற்றால் அவனது இதயம் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை. எனவே, அவனது முக்தியைத் தாமதப்படுத்த எதுவும் இல்லை. எனினும், ஞானத்தை அடையத் தவறியவன், செயல் (வேள்விகள்) சார்ந்த பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். ஆனால், முக்தியை விரும்பி அத்தகு பக்தியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்பவன் வெற்றியடையமாட்டான். அவனது வேள்விகள் கனியைக் கொடாமல், கொடூரத் தன்மையையே பற்றிக் கொள்ளும். கனியின் {பலனின்} மீது ஆசையில்லாமல் செய்யப்படும் பக்திச் செயல்பாடு, அத்தகு மனிதர்களுக்கு யோகத்திலேயே அமையும்" என்று பதிலுரைத்தான் அஷ்டகன், "ஓ மன்னா! நீர் அழகாகவும், தெய்வீக மாலையால் அலங்கரிக்கப்பட்டும் இளமையாகத் தெரிகிறீர். உம்முடைய காந்தி பெரிதாக இருக்கிறது. நீர் எங்கிருந்து வருகிறீர், எங்குச் செல்கிறீர்? நீர் யாருடைய தூதுவன்? நீர் கீழே பூமிக்குச் செல்கிறீரா?" என்று கேட்டான் யயாதி, "நான் எனது அறத்தகுதிகளை இழந்து சொர்க்கத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். நான் பூமி நரகிற்குள் விழுவதற்கு விதிக்கப்பட்டிருக்கிறேன். உங்களுடனான இந்த விவாதத்தை முடித்துவிட்டு, நிச்சயம் நான் அங்குதான் செல்வேன். இப்போதுகூட, திக்பாலர்கள் என்னை அவ்விடத்திற்கு விரைவாகச் செல்லக் கட்டளையிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா! நான் இந்திரனிடம் ஒரு வரம் பெற்றிருக்கிறேன். நான் பூமியில் விழுந்தாலும், ஞானமுள்ளவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்கள் மத்தியிலேயே விழுவேன். இங்கே கூடியிருக்கும் நீங்களும் அறிவும், அறமும் கொண்டவர்களே" என்றான். அஷ்டகன், "நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். ஓ மன்னா! நான் கேட்கிறேன். நான் மகிழ்வதற்கும் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது ஒரு பகுதி இருக்கிறதா? அப்படி ஏதாவது இருந்தால், நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலும் விழமாட்டீர்" என்றான். யயாதி, "ஓ மன்னா! பூமியின் காடுகளிலும், மலைகளிலும் எத்தனை மாடுகளும், குதிரைகளும் இருக்கின்றனவோ, அப்படியே நீ மகிழ, சொர்க்கத்தில் நிறையப் பகுதிகள் இருக்கின்றன" என்றான். அஷ்டகன், "ஓ மன்னா! சொர்க்கத்தில் அப்படி நான் மகிழ்வதற்காக உலகங்கள் இருந்தால், எனது அறத்தகுதிகளின் கனிகளைக் கொண்டு, அவை அனைத்தையும் நான் உமக்கே தந்தேன். எனவே, நீர் விழுந்து கொண்டிருந்தாலும், முற்றிலுமாக விழமாட்டீர். சொர்க்கத்திலும், அந்தரத்திலும் என்னவெல்லாம் அப்படி எனக்காக இருக்கின்றனவோ அவை அனைத்தையும் விரைவாக எடுத்துக்கொள்ளும். உமது துன்பம் விலகட்டும்" என்றான். யயாதி, "ஓ மன்னர்களில் சிறந்தவனே! பிரம்மத்தை அறிந்த பிராமணன் மட்டுமே இப்படிப் பரிசுகளை ஏற்கலாம். ஆனால், நம்மைப் போன்றவர்கள் ஏற்கக்கூடாது. ஓ ஏகாதிபதி! ஒருவன் பரிசுகளை எப்படிக் கொடுக்க வேண்டுமோ அப்படி பிராமணர்களுக்கு நானே கொடுத்திருக்கிறேன். பிராமணனல்லாதவனோ, அல்லது கல்விமானான ஒரு பிராமணனின் மனைவியோ பரிசுகளை ஏற்று கெடுபுகழ் அடையாதிருக்கட்டும். நான் பூமியில் இருந்த போது, அறச்செயல்கள் செய்வதையே விரும்பினேன். இது வரை நான் அப்படி ஒரு காரியத்தைச் செய்ததில்லை. நான் எப்படி ஒரு பரிசை ஏற்க முடியும்?" என்றான். அங்கு கூடியிருந்தவர்களில் பிரதர்த்தனன் என்பவன், "ஓ அழகான வடிவங்கொண்டவரே! எனது பெயர் பிரதர்த்தனன். உம்மைக் கேட்கிறேன். நான் மகிழ்வதற்குச் சொர்க்கத்திலோ, அந்தரத்திலோ ஏதாவது பகுதி இருக்கிறதா? நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர். எனவே, எனக்குப் பதிலுரையும்" என்றான். யயாதி, "ஓ மன்னா! மகிழ்ச்சி நிறைந்த கணக்கிலடங்கா உலகங்கள், சூரியத் தகட்டைப்போன்று ஒளிவீசிக்கொண்டு இருக்கும் துன்பமே அற்ற உலகங்கள் உனக்காகக் காத்திருக்கின்றன. நீ ஒவ்வொரு உலகத்திலும் ஏழுநாள் தங்கினாலும், அந்த உலகங்கள் பூர்த்தியாகாது" என்றான். பிரதர்த்தனன், "அவற்றை நான் உமக்கு அளிக்கிறேன். எனவே, விழுந்து கொண்டிருக்கும் நீர் விழக்கூடாது. எனக்கான உலகங்கள் சொர்க்கத்திலிருந்தாலும், அந்தரத்திலிருந்தாலும் அவை உமதாகட்டும். விரைவாக நீர் அதை எடுத்துக் கொள்ளும். உமது துயரங்கள் அகலட்டும்" என்றான். யயாதி, "ஓ ஏகாதிபதி! சக்தியில் இணையானவனான எந்த மன்னனும், வேறு மன்னனின் யோகத் தவங்களின் மூலம் பெற்ற அறத்தகுதிகளைப் பரிசாகப் பெற விரும்பக்கூடாது. ஒரு மன்னன் விதியின் காரணமாகப் பேராபத்தில் சிக்கிக் கொண்டாலும், அவன் ஞானமுள்ளவனாக இருந்தால், கண்டிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. ஒரு மன்னன் அறத்தில் தனது பார்வையை நிலைக்க வைத்து, என்னைப் போலவே, தனது கடமைகளை அறிந்து, அறத்தின் பாதையிலேயே நடக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல நடந்து கொள்ளக்கூடாது. அறத்தகுதிகளை அடைய விருப்பம் கொண்ட மனிதர்கள் பரிசுகளைப் பெறாதபோது, நான் எப்படி அவற்றைப் பெற முடியும்?" என்றான். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-14 ... மகாபாரதம்-வனபர்வம் .. சௌனகர் யுதிஷ்டிரனிடம் கூறிய அறிவுரைகள் . "துயரத்தின் காரணம் ஆயிரமும், அச்சத்தின் காரணம் நூறும் நாளுக்கு நாள் மூடனையே மூழ்கடிக்கும். ஆனால் கல்விமானை மூழ்கடிக்காது. நிச்சயமாக, உன்னைப் போன்ற நுண்ணறிவுமிக்க மனிதர்கள் இது போன்ற உண்மை அறிவுக்கு எதிரான அனைத்துவிதமான தீய செயல்களாலும், மோட்சத்திற்கு அழிவை ஏற்படுத்தும் செயல்களாலும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். தீமைகள் அனைத்தையும் எதிர்த்து நிற்கவல்லதும், ஸ்ருதி (வேதங்கள்) மற்றும் சாத்திரக் கல்வியால் விளைவதுமான எட்டு குணங்களுடன்[கேட்டுக் கொள்ள விருப்பம், கேட்டல், புரிந்து கொள்ளுதல், உபயோகித்தல், ஊகித்தல், தீயவை விலக்குதல், பொருளை நன்கு உணர்தல், உண்மையை அறிதல் ஆகிய எட்டுக் குணங்கள்] கூடிய புத்தி உன்னில் இருக்கிறது. உன்னைப் போன்ற மனிதர்கள், ஏழ்மையினாலோ, நண்பர்களுக்கு ஏற்படும் துக்கத்தினாலோ, உடல்ரீதியான, மனரீதியான பாதிப்புகளாலோ ஒருபோதும் கலக்கமடைய மாட்டார்கள். சிறப்புமிக்க ஜனகர், தற்கட்டுப்பாட்டை {ஆன்மக்கட்டுப்பாட்டைக்} குறித்துப் பழங்காலத்தில் பாடிய பாடல்களைச் {ஸ்லோகங்களைச்} சொல்கிறேன் கேட்பாயாக. இவ்வுலகம் உடல் மற்றும் மனம் சார்ந்த துன்பங்களால் பீடிக்கப்படுகிறது. அதைத் தணிப்பதற்கான வழிகளைச் சுருக்கமாகவும், விவரமாகவும் நான் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. நோய், வலிநிறைந்த பொருட்களின் தொடர்பு {முள்}, உழைப்பு, விருப்பத்திற்குரிய பொருட்களின் தேவை ஆகிய நான்கும் உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றன. மருந்தைக் கொள்வதால் நோயைத் தணித்து விட முடியும். அதே நேரத்தில் மனம் சார்ந்த நோயானது தியான யோகத்தினால் மறக்க முற்படும்போது குணமாகிறது. இந்தக் காரணத்திற்காகத்தான் மருத்துவர்கள், நோயாளி ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசியும், விரும்பும் பொருளைக் கொடுப்பதாகக் கூறியும், முதலில் நோயாளிகளின் மனம் சார்ந்த பாதிப்புகளைத் தணிக்க முயல்வர். ஒரு குடத்தில் சூடான இரும்புப் பட்டையை நுழைக்கும்போது, அதிலுள்ள நீர் கொதிப்பைதைப் போலவே, மனத்துயரமானது உடலில் துன்பத்தை ஏற்படுத்தும். நீரானது நெருப்பைத் தணிப்பது போல, உண்மை அறிவு மனக்கலக்கத்தைத் தணிக்கும். மனம் அமைதியுற்றால், உடலும் அமைதி அடையும். பற்றே மனத்துயரத்திற்கான வேரெனத் தெரிகிறது. இந்தப் பற்றே அனைத்து உயிரினங்களுக்கும் துன்பத்தையும், அனைத்துவிதமான துயரங்களையும் கொடுக்கிறது. பற்றே துயரங்கள் அனைத்திற்கும், அச்சங்கள் அனைத்திற்கும், இன்பதுன்பங்கள் அனைத்துக்கும், அனைத்துவிதமான வலிகளுக்கும் வேராக இருக்கிறது. பற்றின் காரணமாகவே அனைத்து காரியங்களும் தோன்றுகின்றன. பற்றே உலக நன்மைகளின் மீது நாம் ஆசை கொள்ளக் காரணமாக இருக்கிறது. முதல்வகை இரண்டாவதைவிட மோசமானதாக இருந்தாலும் இவை இரண்டுமே தீமையின் ஊற்றுக் கண்களேயாகும். மரப்பொந்துக்குள் நுழையும் (சிறு அளவு) நெருப்பும் எப்படி வேர் வரை முழு மரத்தையும் எரித்துவிடுகிறதோ, அதே போலப் பற்றும் எவ்வளவு சிறிதாக எனினும் அறத்தையும் {தர்மத்தையும்}, பொருளையும் {அர்த்தத்தையும்} அழித்துவிடும். உலகப் பொருட்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதால் மட்டுமே ஒருவன் அனைத்தையும் துறந்தவன் ஆகமாட்டான். எனினும், உலகத்தொடர்புகளில் இருந்து கொண்டே அதன் குறைகளை அறிந்தவனே உண்மையில் உலகத்தைத் துறந்தவன் ஆவான். தீய ஆசைகளில் இருந்து விடுபட்டு, எதையும் நம்பியிராத ஆன்மாவைப் பெற்ற ஒருவனே உண்மையில் உலகைத் துறந்தவனாவான். ஒருவன் நண்பர்களிடமோ, தான் ஈட்டிய செல்வத்திடமோ பற்று வைக்கக்கூடாது. அதே போல, தன்மீது வைத்திருக்கும் பற்றை, அறிவினால் களையவேண்டும். நீருக்குள் மூழ்கச் செய்தாலும் தாமரை இலை நனையாமல் இருப்பதைப் போலவே, ஒருநாள் மட்டும் நீடித்திருப்பவைக்கும், எப்போதும் நிலைத்து இருப்பவைக்கும் உள்ள வேறுபாட்டைக் காணத்தெரிந்த ஆன்மா கொண்ட மனிதன், சாத்திரங்களை அறிந்து, அறிவால் தூய்மையடைந்து, பற்றால் பாதிக்கப்படாதவனாக இருப்பான். பற்றால் பீடிக்கப்பட்ட மனிதன், ஆசையால் சித்திரவதை செய்யப்படுகிறான். அப்படி உண்டாகும் அசை, உலகப் பொருட்கள் மீது அவன் கொண்டிருக்கும் தாகத்தை அதிகரிக்கச் செய்கிறது. நிச்சயமாக இந்தத் தாகம் பாவகரமானது. இது துயரங்களின் ஊற்றுக் கண் என்று கருதப்படுகிறது. இந்தக் கொடுமையான தாகமே, பாவத்துடன் கலந்து அறமற்ற செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. இந்தத் தாகத்தைத் துறப்பவர்கள் இன்பத்தை அடைகிறார்கள். உடல் அழிந்தாலும் தீயவர்களின் தாகம் அழியாது. தீயவர்களால் அதைத் துறக்கவே முடியாது. அஃது உண்மையில் மரண நோயே ஆகும். அதற்குத் தொடக்கமும் முடிவும் கிடையாது. இதயத்தில் {மனத்தில்} குடியிருக்கும் வடிவமற்ற நெருப்பைப்போல அஃது உயிரினங்களை அழிக்கிறது. ஒரு விறகில் ஊட்டப்படும் நெருப்பினால், ஒரு விறகுக்கட்டே எரிவதைப் போல, தூய்மையற்ற ஆன்மா கொண்ட மனிதன் தனது இதயத்தில் பிறந்த பேராசையினால் அழிவைச் சந்திக்கிறான். உயிருள்ள உயிரினங்கள் அனைத்தும் மரணத்தைக் கண்டு எப்போதும் அஞ்சுவது போல, செல்வந்தர்கள், மன்னனிடமும், திருடனிடம், நீர், நெருப்பு, ஏன் உறவினர்களிடம் கூட எப்போதும் அச்சத்தையே கொண்டுள்ளனர். காற்றில் இருக்கும் இறைச்சித் துண்டு பறவைகளால் விழுங்கப்படும்; நிலத்தில் இருந்தால் இரைதேடும் விலங்குகளாலும்; நீரில் இருந்தால் மீன்களாலும் விழுங்கப்படுவதைப் போலவே, செல்வந்தன் ஒருவன் எங்கிருந்தாலும் ஆபத்தையே எதிர்நோக்கி இருக்கிறான். பலருக்கு அவர்களின் செல்வமே மரணத்தைக் கொடுக்கும் நஞ்சாகிறது. செல்வத்தில் இன்பம் காணும் ஒருவன் அதற்கு அடிமையாகி உண்மை இன்பத்தை அறியாமல் போகிறான். பேராசையையும் மூடத்தனத்தையுமே செல்வம் அதிகரிக்கச் செய்கிறது. கஞ்சத்தனத்திற்கும், பகட்டுக்கும், தற்பெருமைக்கும், அச்சம் மற்றும் துயரத்துக்கும் செல்வமே வேராகும். இவையே ஞானமுள்ளோர் செல்வந்தர்களிடம் காணும் துன்பங்களாகும். செல்வத்தை அடைவதிலும், பாதுகாப்பதிலும் மனிதர்கள் பல துயரங்களை அடைகின்றனர். செல்வம் செலவழிந்தாலும் அதுவும் துயரத்தையே கொடுக்கும். அல்லாமலும், செல்வத்தின் பொருட்டு ஒருவனின் வாழ்வே {உயிரே} பறிபோகும். செல்வத்தைக் கைவிடுவதாலும் துயரமே மிஞ்சுகிறது. ஒருவனின் செல்வத்தால் பேணி வளர்க்கப்பட்ட மற்றொருவன், அந்தச் செல்வத்தின் பொருட்டு அவனுக்குப் பகைவனாகிறான். எனவே, செல்வத்தை வைத்திருத்தல் இவ்வளவு துயரங்களைக் கொடுப்பதால், அதன் அழிவைக் கண்டு ஒருவன் துயர் கொள்ளலாகாது. அறியாமை கொண்டோர் மட்டுமே நிறைவில்லாமல் இருப்பார்கள். எனினும், ஞானமுள்ளோர் எப்போதும் நிறைவுடனேயே இருப்பார்கள். செல்வத்தின் மீதிருக்கும் தாகத்தை மட்டுப்படுத்தவே முடியாது. நிறைவுடன் இருப்பதே உயர்ந்த இன்பமாகும்; எனவே, மனநிறைவையே பின்பற்றக்கூடிய உயர்ந்த நோக்கமாக ஞானிகள் கருதுகின்றனர். இளமை, அழகு, வாழ்வு, செல்வக்குவியல், செழுமை, அன்பானவர்களின் துணை ஆகிவற்றின் நிலையாமையை உணர்ந்த ஞானிகள் அவற்றில் ஆசை கொள்வதில்லை. எனவே, துன்பத்தை உணர்ந்து செல்வத்தை அடைவதைக் கைவிட வேண்டும். எந்தச் செல்வந்தனும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, அதன்காரணமாகவே அறம்சார்ந்தோர் செல்வத்தின் மீது ஆசையில்லாதவர்களை மெச்சுகிறார்கள். அறம் சார்ந்த காரியங்களுக்காகச் செல்வத்தைத் தொடர்பவர்கள்கூட அத்தகைய செயல்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக, சேறு பட்ட கைகளைக் கழுவிக் கொள்வதைக் காட்டிலும், சேற்றைத் தொடாமல் இருப்பது நல்லது இல்லையா? ஓ யுதிஷ்டிரா, நீ ஆசைப்படாமல் இருக்க வேண்டும்! அறம் உனக்கு வேண்டும் என்றால், உலக உடைமைகள் மீதிருக்கும் ஆசைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்" என்றார் {சௌனகர்}. ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-15 ... மகாபாரதம்-வனபர்வம் .. சௌனகர் யுதிஷ்டிரனிடம் கூறிய அறிவுரைகள் . யுதிஷ்டிரன் கேட்டான் , "ஓ பிராமணரே, செல்வத்தை நான் விரும்புவது, அது கிடைத்தவுடன் இன்புறுவதற்காக அல்ல. பிராமணர்களைத் தாங்கிக் கொள்ளவே நான் அதை விரும்புகிறேன். பேராசையின் காரணமாக நான் அதை விரும்பவில்லை. எங்களைப் போன்ற ஒருவனால், தன்னைப் பின்பற்றுபவர்களை {சார்ந்திருப்பவர்களைப்} பேணவும், ஆதரிக்கவும் இயலவில்லை என்றால், எதற்காக அவன் இல்லற வாழ்வை மேற்கொள்ள வேண்டும்? அனைத்து உயிரினங்களும் (தாங்கள் ஈட்டிய) உணவை, தங்களைச் சார்ந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதைக் காண்கிறோம். அப்படியே இல்லற வாழ்வை வாழ்பவனும், தங்களுக்காகச் சமைத்துக் கொள்ளாதிருக்கும் யதிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் தன் உணவைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். நல்ல மனிதர்களின் வீடுகள், (அமர்ந்து கொள்ள) புல்லும், (ஓய்ந்திருக்க) வெளியும், (கழுவ, தாகம் தணிக்க) நீரும், நான்காவதாக இன்சொல்லும் இல்லாமல் இருக்கலாகாது. களைப்புற்றவனுக்குப் படுக்கையும், நிற்பதால் சோர்ந்தவனுக்கு இருக்கையும், தாகத்திலிருப்பவனுக்கு நீரும், பசித்திருப்பவனுக்கு உணவும் எப்போதும் கொடுக்கப்பட வேண்டும். விருந்தினர்களை இனிமையான பார்வையாலும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தோடும், இனிமையான வார்த்தைகளாலும் வரவேற்க வேண்டும். வீட்டின் உரிமையாளன் விருந்தினரைக் கண்டதும், உடனே எழுந்து, அந்த விருந்தினரை எதிர்கொண்டழைத்து, அவருக்கு இருக்கை அளித்து, அவரை வணங்க வேண்டும். இதுவே நிலையான அறமாகும். அக்னிஹோத்ரம் செய்யாதவர்களும், காளைகளைக் {மாடுகள்} கவனிக்காதவர்களும், உற்றார் உறவினரைப் பேணிக் காக்காதவர்களும், விருந்தினர், நண்பர்கள், மகன்கள், மனைவியர், பணியாட்கள் ஆகியோரைப் புறக்கணிப்பவர்களும் பாவத்தால் எரிக்கப்படுகின்றனர். தன் ஒருவனுக்காக மட்டுமே ஒருவன் உணவு சமைக்கக்கூடாது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும், விருந்தினருக்கும் படைக்காமல் எவனும் எந்த விலங்கையும் கொல்லக்கூடாது. தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் படைக்கப்படாத உணவை ஒருவன் உண்ணக்கூடாது. காலையிலும், மாலையிலும் (தகுந்த) நாய்களுக்கும், சண்டாளர்களுக்கும், பறவைகளுக்கும் உணவைத் தரையிலிட்டு, வைஸ்வதேவ வேள்வியை ஒருவன் செய்ய வேண்டும். விகஸத்தை {விருந்தினர்களுக்கு / யாசகர்களுக்குக் கொடுத்து / வேள்வியில் எஞ்சிய உணவை} உண்பவர்கள், அமிர்தத்தை உண்டதாகக் கருதப்படுகிறார்கள்.(59) ஒரு விருந்தினருக்கு உணவளிப்பது ஒரு வேள்விக்கு நிகரானதாகும், ஒருவன் தன் விருந்தினரைப் பார்க்கும் இனிமையான பார்வை 1அர்ப்பணிப்புடன் கூடிய கவனிப்பு {2}, இனிமையான பேச்சு {3}, பின்தொடர்ந்து அவன் அளிக்கும் மரியாதை {4}, அவன் கொடுக்கும் உணவு மற்றும் நீர் {5} ஆகியவையே அந்த வேள்வியின் ஐந்து தட்சணைகள் {பஞ்சதக்ஷிணையஜ்ஞம்}ஆகும். முன்பு எப்போதும் கண்டிராதவனும், களைத்திருப்பவனுமான வழிப்போக்கனுக்கு அளவற்ற உணவைக் கொடுப்பவன் பெரும் நன்மையை அடைகிறான். இல்லற வாழ்வு வாழ்ந்து இத்தகு செயல்களைச் செய்பவன் பெரும் ஆன்மத் தகுதிகளை அடைகிறான். ஓ பிராமணரே, இதில் உமது கருத்து என்ன?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}. சௌனகர், கூறினார் "ஐயோ, இந்த உலகம் முரண்பாடுகள் நிறைந்தது. நல்லோரை அவமதிக்கவும், தீயோரை நிறைவடையவும் செய்கிறது. ஐயோ, அறியாமையாலும், ஆசையாலும், தங்கள் புலன்களுக்கு அடிமைகளான மூடர்கள் கூட, மறுமையில் உண்டாகப் போகும் பசியைத் தணிக்கப் பல செயல்களைச் செய்கின்றனர்[அறியாமை கொண்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும், ஆசைககளாலும் பீடிக்கப்பட்டு, தங்கள் வயிறுகளையும், பாலியல் உறுப்புகளையும் நிறைவடையச் செய்வதற்கான பல செயல்களைச் செய்கின்றனர்]. தீயவையும், பொல்லாதவையுமான குதிரைகளால் தன் புலனுணர்வை இழந்த ஒரு தேரோட்டியைப் போல, புலன்களால் மயக்கப்படும் மனிதர்கள் கண்களைத் திறந்து கொண்டே வழிதவறிப் {பாவ வழியில்} போகின்றனர். ஆறு புலன்களும், தனக்குரிய பொருளைக் காணும்போது, இதயத்தில் அந்தப் பொருளைக் குறித்த ஆசை எழுகிறது. ஒரு குறிப்பிட்ட புலனுக்கு இன்பம் தரும் பொருளை அடைந்து இன்புற இதயம் முன்னேறும் போது, ஒரு விருப்பம் ஊக்கப்படுத்தப்படுகிறது. எனவே அங்கே ஓர் உறுதி பிறக்கிறது. ஒளியைக் கண்டு ஆசை கொண்டு நெருப்புச்சுடரில் விழும் பூச்சியைப் போல, இன்பம் நுகர் பொருட்களால் துளைக்கப்பட்ட அவன் ஆசை {சபலம்} என்ற நெருப்பில் விழுகிறான். புலன்களின் இன்பத்தால் குருடான அவன், அறியாமை இருளில் மூழ்குகிறான். தான் இன்பம் என்று நினைக்கும் மூடத்தனத்தில் மூழ்கி, தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்கிறான். அறியாமை, செயல் மற்றும் ஆசை ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு உயிரினமும், இடைவிடாமல் உருளும் சக்கரத்தைப் போல, ஒரு பிறவியில் இருந்து மற்றொரு பிறவியை அடைந்தும், இப்போது நீரில், இதோ நிலத்தில், இங்கே காற்றில் எனப் புல்லின் நுனி முதல் பிரம்மன் வரையுள்ள இருப்பின் வட்டம் முழுவதும் திரிந்து, இவ்வுலகில் பல்வேறு நிலைகளில் வீழ்கிறது. இவையே அறிவற்றவர்களின் நடைமுறையாக இருக்கிறது. இனி, லாபம் தரும் அறம் மற்றும் சுய விடுதலையில் {மோக்ஷத்தில் / முக்தியில்} முனைப்புடன் இருக்கும் ஞானிகளின் வழிகளைக் கேட்பாயாக. வேதங்கள் செயல்படக் கட்டளையிடுகின்றன. ஆனால் செயல்பாட்டை (செயல்பாட்டில் உள்ள ஆர்வத்தை) துறக்கச் சொல்கின்றன. எனவே, நீ அபிமானத்தைத் {அபிமானம் = நோக்கமற்ற நிலை} துறந்து செயல்பட வேண்டும். வேள்விகள்{1}, (வேத) கல்வி{2}, கொடை{3}, தவம்{4}, (பேச்சிலும் செயலிலும்) வாய்மை{5}, மன்னிக்கும் தன்மை {பொறுமை}{6}, புலனடக்கம்{7}, ஆசையைத் துறத்தல்{8}, ஆகிய எட்டு கடமைகளும் {தர்மங்களும்} உண்மையி்ன் வழியை உண்டாக்குகின்றன என்று {வேதங்களில்} தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் முதல் நான்கும் பித்ருக்களின் உலகத்திற்கான பாதையை {பிதிருயானமார்க்கத்தை} அமைக்கின்றன. இவை அபிமானம் {நோக்கமின்மை} இல்லாமல் செய்யப்பட வேண்டும். நல்லவர்களால் எப்போதும் பின்பற்றப்படும் கடைசி நான்கும், தேவர்களின் சொர்க்கத்தை அடைய வழிவகுக்கின்றன. ஆன்மத் தூய்மை கொண்ட அனைவரும் இந்த எட்டு வழிகளையும் பின்பற்ற வேண்டும். முக்திக்காக இந்த உலகை வெல்ல நினைப்பவர்கள், நோக்கங்களைத் துறந்து, புலன்களை அடக்கி, குறிப்பிட்ட கடும் நோன்புகள் நோற்று, அர்ப்பணிப்புடன் தங்கள் ஆசானுக்குத் தொண்டு செய்து, தங்கள் தட்சணையை நிச்சயம் கொடுத்து, விடாமுயற்சியுடன் வேதம் கற்று, செயலை இழிவாகக் கருதி கைவிட்டு, மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆசையையும் வெறுப்பையும் {விறுப்பு வெறுப்புகளைக்} கைவிட்டே தேவர்கள் செழுமையை அடைந்தனர். யோக செல்வத்தின் அறத்தாலேயே ருத்திரர்கள், சத்யஸ்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோர் உயிரினங்களை ஆளுகின்றனர். எனவே, ஓ குந்தியின் மகனே, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அவர்களைப் போலவே நீயும், நோக்கம் கொண்ட செயலில் இருந்து முழுமையாக விடுபட்டு, தவச் செயல்களால் யோகத்தில் வெற்றியடைய முயற்சி செய்வாயாக. உனது மூதாதையர்களில் {பித்ருக்களில்} ஆண்களிடமும் பெண்களிடமும் நீ பட்டிருக்கும் கடனை உனது செயல்களால் (வேள்விகளால்) உண்டாகும் வெற்றியால் அடைத்துவிட்டாய். மறுபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குத்} தொண்டு செய்வதற்காகத் தவத்தில் வெற்றியடைவாயாக. தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், அந்த வெற்றியின் அறத்தால், தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியும்; எனவே, தவத்தைக் கைக்கொண்டு விருப்பங்கள் அனைத்தையும் அடைவாயாக" என்றார் {சௌனகர்} ... ........தொடரும்🙏நன்றி இந்து மதம் Whatsup groups🙏 சனாதன தர்மம் - பாகம்-16 ... மகாபாரதம்-வனபர்வம் .. பிரகலாதனுக்கும், பலிசக்கரவர்த்திக்கும் இடையே நடந்த உரையாடல் . ஒரு நாள் பலிச்சக்கரவர்த்தி, தனது பாட்டன் பிரகாலதனிடம், "ஓ தாத்தா, மன்னிக்கும் தன்மை மெச்சத்தகுந்ததா? அல்லது பலமும் சக்தியும் மெச்சத்தகுந்ததா? இது குறித்து எனக்குப் புதிராக இருக்கிறது. ஓ தாத்தா, உம்மிடம் கேட்கும் எனக்கு இது குறித்துத் தெளிவுபடுத்தும்! ஓ அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரே, உண்மையில் எது மெச்சத்தகுந்தது என்பதை எனக்குச் சொல்லும்! உமது கட்டளை எதுவானாலும் நான் அதைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வேன்!" என்றான் {பலி-பலிச்சக்கரவர்த்தி}. ஞானம்கொண்டபிரகலாதன் கூறினான், "ஓ குழந்தாய், பலமும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. மன்னிப்பும் எப்போதும் மெச்சத்தகுந்ததில்லை. நிச்சயமான இந்த இரண்டு உண்மைகளையும் நீ அறிந்து கொள்! எப்போதும் மன்னிப்பவன் பல தீங்குகளுக்கு ஆளாகிறான். பணியாட்களும், அந்நியர்களும், எதிரிகளும் அவனை எப்போதும் அவமதிப்பர். எந்த உயிரும் அவனுக்கு அடிபணியாது. ஆகையால், ஓ குழந்தாய், எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவர்களை கற்றவர்கள் மெச்சுவதில்லை! எப்போதும் மன்னிக்கும் மனிதனை அவனது பணியாட்கள் அவமதித்து எப்போதும் ஏதாவது குறை சொல்பவர்களாகவே இருப்பார்கள். அற்ப புத்தியுள்ள மனிதர்கள் அவனை {மன்னிப்பவனை} ஏமாற்றி அவனது செல்வத்தைக் கவர்வார்கள். இழிந்த ஆன்மா கொண்ட பணியாட்கள் அவனது {மன்னிப்பவனது} வாகனங்கள், துணிகள், ஆபரணங்கள், ஆடைகள், படுக்கைகள், ஆசனங்கள், உணவுகள், பானங்கள் மற்றும் பிற பொருட்களை தாங்கள் விரும்பியபடி எடுத்துப் பயன்படுத்துவார்கள். தங்கள் தலைவன் மற்றவர்களுக்குக் கொடுக்கக் கட்டளையிடும் பொருட்களைக் கொடுக்கமாட்டார்கள். தங்கள் தலைவனுக்கு உரிய மரியாதையும் கொடுக்க மாட்டார்கள். அவனை வழிபடமாட்டார்கள். இவ்வுலகத்தில் அவமதிப்பு என்பது மரணத்தைவிட மோசமானது. ஓ குழந்தாய் {பேரன் பலியே}, மகன்களும், பணியாட்களும், உபசரிக்கிறவர்களும், ஏன் அந்நியர்களும் கூட எப்போதும் மன்னிப்பவனிடம் கடுஞ்சொற்கள் பேசுவார்கள். எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனை அவமதிக்கும் மனிதர்கள், அவனது மனைவியைக் கூட விரும்புவார்கள். அவனது மனைவியும் தான் விரும்பியபடி செயல்படத் தயாராவாள். எப்போதும் இன்பத்தை விரும்பும் பணியாட்கள், தங்கள் தலைவனிடம் இருந்து சிறு தண்டனைகூட கிடைக்காவிட்டால், எல்லா தீமைகளையும் செய்வார்கள். அதிலும் தீயவர்கள் தங்கள் தலைவனுக்குக் காயம் ஏற்படுத்தவும் விளைவார்கள். இதுவும் மேலும் சிலவும் எப்போதும் மன்னிக்கும் குணம் கொண்டவனின் குறைகளாகும். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-17 ... மகாபாரதம்-வனபர்வம் .. பிரகலாதனுக்கும், பலிசக்கரவர்த்திக்கும் இடையே நடந்த உரையாடல் . எப்போதும் மன்னிக்காதவர்களின் குறைகளை இப்போது கேள்! .. கோபம் கொண்ட மனிதன், இருளால் சூழப்பட்டு, தனது சக்தியாலே, பலதரப்பட்ட தண்டனைகளை மனிதர்களுக்குக் கொடுத்து, அந்த மனிதர்கள் அந்தத் தண்டனைக்குத் தகுந்தவர்கள் தானா என்பதைப் பாராமல் இருந்து, அதன் காரணமாகவே தங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிவார்கள். அப்படிப்பட்ட மனிதன், தனது உறவினர்களாலும், அந்நியர்களாலும்கூட வெறுக்கப்படுவான். அப்படிப்பட்ட {எப்போதும் கோபமடையும்} மனிதன், மற்றவர்களை அவமதிப்பதால், செல்வத்தை இழப்பதும், அவமதிப்பை அடைவதும், சோகம், வெறுப்பு, குழப்பம், எதிரிகள் ஆகியவற்றையும் சம்பாதித்துக் கொள்கிறான். கோபம் கொண்ட மனிதன், தனது கடுஞ்சினத்தின் காரணமாக மனிதர்களுக்குத் தண்டனை கொடுத்து, (பதிலுக்கு) கடுஞ்சொற்களைப் பெறுகிறான். அப்படிப்பட்டவன், விரைவில் தனது செழிப்பை இழந்து, நண்பர்களையும் உறவினர்களையும் இழக்கிறான். ஏன் உயிரைக் கூட இழக்கிறான். தனக்கு உதவுபவர்களிடமும், எதிரிகளிடமும் தனது பலத்தைப் பயன்படுத்தும் மனிதன், உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்து, வீட்டில் வசிக்கும் பாம்பு போல அந்தக் குடும்பத்தாருக்குத் தெரிகிறான். உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருப்பவன் என்ன செழிப்பை அடைந்து விட முடியும்? சமயம் வாய்க்கும்போது மக்கள் அவனைக் காயப்படுத்தத் தயங்கமாட்டார்கள். ஆகையால், எல்லா சந்தர்ப்பங்களிலும் மனிதர்கள் பலத்தையோ மன்னிப்பையோ அதிகம் வெளிக்காட்டக்கூடாது. ஒருவன் தனது பலத்தையும், மன்னிக்கும் குணத்தையும் சரியான சமயங்களில் பயன்படுத்த வேண்டும். சரியான நேரங்களில் மன்னிப்பு, கடுமை, பலம் ஆகியவற்றைக் காட்டுபவன், இவ்வுலகிலும் மறு உலகிலும் இன்பத்தை அடைகிறான். நான் இப்போது, எச்சந்தர்ப்பங்களில் மன்னிக்கலாம் என்று கற்றவர்களால் விதிக்கப்பட்டதை விளக்கமாகவும், எது எப்போதும் பின்பற்றத்தக்கது என்பதையும் சொல்கிறேன். நான் சொல்லும்போது கவனமாகக் கேட்டுக் கொள்! உனக்கு ஒரு சேவையைச் செய்தவன், உனக்குப் பெரும் தீங்கிழைத்திருந்தாலும், அவனது முந்தைய சேவையை நினைத்துப் பார்த்து, அந்தக் குற்றவாளியை மன்னிக்கலாம். கல்வியையும் ஞானத்தையும் மனிதர்களால் எளிமையாக அடைய முடியாது. ஆகையால், அறியாமையாலும், முட்டாள்தனத்தாலும் குற்றமிழைத்தவர்களை மன்னிக்கலாம். தெரிந்தே குற்றமிழைத்துவிட்டு, தெரியாமல் செய்துவிட்டேன் என்று கெஞ்சுபவர்களை, அவர்களது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். அத்தகு நேர்மையற்ற மனிதர்கள் மன்னிக்கப்படக்கூடாது. எல்லா உயிரினங்களின் முதல் குற்றமும் மன்னிக்கப்பட வேண்டும். இருப்பினும், இரண்டாவது குற்றம் அற்பமானதாக இருந்தாலும் கூட தண்டிக்க வேண்டும். ஒரு மனிதன் விரும்பாமல் குற்றமிழைத்திருப்பின், அவனது கோரிக்கையை ஆராய்ந்து, சீரான நீதி விசாரணை செய்து, அவனை மன்னிக்க வேண்டும். பணிவு பலத்தை வெற்றி கொள்ளும், பணிவு பலவீனத்தையும் வெற்றி கொள்ளும். பணிவால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. ஆகையால், பணிவே (நம் பார்வைக்குத் தெரிவதைவிட) உண்மையாக கடுமையானது. ஒருவன் இடம், நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தனது பலத்தையும் பலவீனத்தையும் குறித்துக் கொண்டும் செயல்பட வேண்டும். இடத்தையும் நேரத்தையும் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றியடையாது. ஆகையால், நீ எப்போதும் இடத்திற்காகவும், நேரத்திற்காகவும் காத்திருக்க வேண்டும்! சில நேரங்களில் மக்களுக்கு அஞ்சி குற்றவாளிகள் மன்னிக்கப்பட வேண்டும். இவையே மன்னிக்கும் நேரங்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரங்களில் மீறுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்லப்படுகிறது" என்றான் { பலியின் பாட்டன் பிரகலாதன்}. ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-18 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் . திரௌபதி கூறினாள்- எளிமையாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கும் மனிதன் அவமதிக்கப்படுகிறான். கடுமையாக இருப்பவர்கள் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள். உண்மையில், அது அதற்கு தகுந்த நேரத்தில் இரண்டிற்கும் {கோபமடைவதும் கோபமடையாதிருப்பதும்) தஞ்சம் கொடுப்பவனே மன்னனாவான்" என்றாள். யுதிஷ்டிரன் கூறினான்- "கோபமே மனிதனைக் கொல்லும், அதே வேளை கோபமே மனிதனை வளம்பெற வைக்கும். ஞானம் கொண்டவளே {திரௌபதியே}, கோபமே செழிப்பு மற்றும் துரதிர்ஷ்டங்களுக்கு வேர்க்காரணமாகும். எவன் கோபத்தை அடக்குகிறானோ அவன் செழிப்பை அடைகிறான். கோபத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கும் மனிதன், தனது கடும் கோபத்தின் விளைவாக துரதிர்ஷ்டத்தை வரவழைத்துக் கொள்கிறான். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் அழிவுக்கும் கோபமே காரணமாக இருக்கிறது. உலகத்திற்கே அழிவைக் கொண்டுவரும் கோபத்தை நான் எப்படி விரும்பி ஏற்பேன்? கோபம் கொள்ளும் மனிதன் பாவம் இழைக்கிறான். கோபம் கொண்ட மனிதன் தனது குருவைக் கூட கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தனக்கு மேலானவர்களைக் கூட கடுஞ்சொற்களால் அவமதிப்பான். கோபம் கொண்ட மனிதன் எது சொல்லப்பட வேண்டும் எது சொல்லப்படக்கூடாது என்பதற்குண்டான வேறுபாடை அறியாமல் போகிறான். கோபம் கொண்ட மனிதன் செய்ய முடியாத செயல் எதுவும் இல்லை. கோபம் கொண்ட மனிதனால் சொல்ல முடியாத வார்த்தைகளும் எதுவும் இல்லை. கோபத்தின் காரணமாக ஒரு மனிதன், கொல்லப்படத் தகாத மனிதனையும் கொன்றுவிடுவான். கோபம் கொண்ட மனிதன் தனது ஆன்மாவைக்கூட யமனின் உலகுக்கு அனுப்புவான். இக்குறைபாடுகளைக் கண்டே, ஞானமுள்ளோர், உயர்ந்த செழிப்பை இவ்வுலகிலும் மறு உலகிலும் அடைய தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே அமைதியான ஆன்மா கொண்டோர் கோபத்தைத் தங்களிடம் இருந்து விரட்டுகின்றனர். இப்படி இருக்கும் போது எங்களைப் போன்றோர் எப்படி அதில் ஈடுபடுவோம்? திரௌபதியே, இதையெல்லாம் கருதியே எனது கோபம் தூண்டப்படவில்லை. கோபம் கொண்ட மனிதனுக்கு எதிராக எந்த செயலும் செய்யாத மனிதன் தன்னையும் பிறரையும் பெரும் அச்சத்தில் இருந்து காத்துக் கொள்கிறான். உண்மையில் அப்படிப்பட்ட மனிதன் தனக்கும், கோபம் கொண்ட மனிதனுக்கும் மருத்துவன் போன்றவன் ஆவான். மற்றவர்களால் துன்பத்துக்குள்ளான பலவீனமான மனிதன், தனது முட்டாள்தனத்தால் தன்னைவிட பலசாலிகளிடம் கோபமாக நடந்து கொண்டால், தனது அழிவுக்கு தானே காரணமாகிறான். இப்படி தெரிந்தே தனது உயிரை விடும் மனிதர்களுக்கு எந்த உலகமும் கிடைக்காது. ஆகையால், திரௌபதியே, பலவீனமான மனிதன் கோபத்தை அடக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. துன்பத்தில் இருக்கும் ஞானமுள்ள மனிதன் கோபப்படாமல் இருந்தால், தனக்கு துன்பத்தை ஏற்படுத்தியவனை விட மறு உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறான். இதன் காரணமாகவே பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் ஞானமுள்ள மனிதன், எப்போதும் தன்னை துன்புறுத்துகிறவனையும் அவன் கெட்ட காலத்தில் இருந்தாலும் கூட மன்னிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அறம்சார்ந்தவர்கள் கோபத்தை வென்றவர்களைப் பாராட்டுகிறார்கள். உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. என்னைப்போன்ற ஒருவன், துரியோதனனைக் கொல்லும் காரணத்திற்காக, பல குறைகளையுடையதும், அறம்சார்ந்தவர்கள் தங்கள் ஆன்மாவில் இருந்து விரட்டும் கோபத்தை மேற்கொள்வது, எங்ஙனம்? பின்வருவதை அறியும் கற்றவர்களால் பலம் நிறைந்த மனிதன் என்று கருதப்படுபவர்கள் நிச்சயமாக வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் கோபம் மிகுந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். பொங்கி வரும் கோபத்தை தனது ஞானத்தால் அடக்குபவனே பலம் கொண்ட மனிதன் என்று உண்மையை அறிந்த கற்றவர்கள் சொல்கிறார்கள். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-19 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் . கோபம் கொண்ட மனிதன் நடைபெறும் காரியங்களை அதன் உண்மைத் தன்மையுடன் பார்ப்பதில்லை. கோபம் கொண்ட மனிதன் தனது வழியைக் காண்பதில்லை. அவன் மனிதர்களையும் மதிக்க மாட்டான். கோபம் கொண்ட மனிதர் கொல்லத்தகாதவர்களையும் கொல்வான். கோபம் கொண்ட மனிதன் தனது ஆசான்களையும் கொல்வான். ஆகையால், சக்தி கொண்ட மனிதன் கோபத்தை தூரத்தில் விலக்கி வைக்க வேண்டும். கோபத்தில் மூழ்கிய மனிதன் பராக்கிரமசாலிக்கே உரிய பெருந்தன்மை, கண்ணியம், தைரியம், திறமை மற்றும் பிற குணங்களை எளிதாக அடைவதில்லை. கோபத்தைக் கைவிடுவதால் ஒரு மனிதன் சரியான சக்தியை வெளிப்படுத்த முடியும். ஓ! ஞானமுள்ளவளே {திரௌபதியே}, அதே வேளை கோபம் கொண்ட மனிதனால் சரியான நேரத்தில் தனது சக்தியை வெளிப்படுத்த முடியாது. அறியாமையில் இருப்பவர்களே கோபத்தை சக்திக்குச் சமமாகக் கருதுவார்கள். கோபம் என்பது உலகத்தின் அழிவிற்காக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், சரியாக நடக்க விரும்பும் மனிதன் எப்போதும் கோபத்தைக் கைவிட வேண்டும். தனது வகைக்கே உரிய அற்புதமான அறங்களைக் கைவிட்ட மனிதன் கோபப்படுபவனாக இருப்பான். அனைத்து விதங்களிலும் மீறி நடக்கும் ஒளியற்ற மனம் கொண்ட முட்டாள்கள் இப்படி நடந்து கொள்ளும்போது, ஓ! குறைகளற்றவளே, என்னைப்போன்ற ஒருவன் (அவர்களைப் போல) எப்படி மீறி நடக்க முடியும்? பூமியைப் போன்ற பொறுமையுள்ள மனிதர்கள் இல்லையெனில், தொடர்ந்து கோபப்படும் மனிதர்களால் உலகம் அமைதியற்றே இருக்கும். காயப்பட்டவர்கள் தங்கள் காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், மேலானவனால் தண்டிக்கப்பட்டவன் அந்த மேலானவனை பதிலுக்கு தண்டிப்பதும் அனைத்து உயிர்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும். உலகத்தில் பாவம் அதிகரிக்கும். வேறு மனிதனிடம் தீய வார்த்தைகளைக் கேட்கும் மனிதன், பதிலுக்கு அந்த வார்த்தைகளைத் திருப்பிச் சொல்வதும், காயம் கொண்ட மனிதன் தனது காயங்களுக்கு பதிலடி கொடுப்பதும், தண்டனை பெற்ற மனிதன் பதிலுக்கு தண்டிப்பதும் ஏற்படுவதால், தந்தையர் மகன்களையும், மகன்கள் தந்தைகளையும், கணவர்கள் மனைவியரையும், மனைவியர் கணவர்களையும் கொல்லும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட கோபம் நிலவும் உலகத்தில் பிறப்பு எப்படி ஏற்படும்! ஓ! அழகான முகம் கொண்டவளே {திரௌபதியே}, உயிர்களின் பிறப்பு சமாதானத்தால் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள். மன்னர்களும் கோபத்திற்குத் தங்களை ஒப்புக் கொடுத்தால், குடிமக்கள் விரைவில் அழிவைச் சந்திப்பர். ஆகையால், கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். கோபத்தை வெல்லும் சக்தி படைத்த மனிதன், பல எண்ணற்ற {மகிழ்ச்சி நிறைந்த இன்பகரமான} உலகங்களுக்கு சொந்தக்காரனாவான். அதேவேளையில் கோபம் கொண்ட மனிதன் முட்டாள் என்று அழைக்கப்பட்டு, இவ்வுலகிலும் மறு உலகிலும் அழிவைச் சந்திக்கிறான். ஓ! கிருஷ்ணா {திரௌபதி}, எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. தகுதிவாய்ந்த பல வேள்விகளைச் செய்தவர்கள், வேதங்களை அறிந்தவர்கள் மற்றும் தவசிகள் அடையும் உலகத்தை பொறுமைசாலி அடைவான். வேத வேள்விகள் செய்பவர்களும், அறத்தின்படியான நன்மையான சடங்குகளைச் செய்பவர்கள் மற்ற உலகங்களை அடைவார்கள். பொறுமைசாலி, புகழப்படும் பகுதிகள் கொண்ட பிரம்மனின் உலகத்தை அடைவார்கள். பலசாலிகளின் பலமே பொறுமை {மன்னிக்கும் தன்மை}. பொறுமையே வேள்வி, பொறுமையே மன அமைதி. ஓ! கிருஷ்ணா {திரௌபதி} இப்படி இருக்கும்போது பிரம்மம், உண்மை, ஞானம் ஆகியவற்றை அடைய விரும்பும் எங்களைப் போன்றோர் எப்படி பொறுமையைக் கைவிடமுடியும்? பொறுமையாக இருப்பவன் பிரம்மத்தை அடைய முடியும் என்பதால் ஒரு ஞானி பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். பொறுமைசாலிகளுக்கு இந்த உலகம் சொந்தம். மறு உலகமும் அவர்களுடையதே. பொறுமை மதிப்பையும், அருளையும் பெற்றுத் தருகிறது. பொறுமையால் கோபத்தை வெற்றி கொள்ளும் மனிதர்கள் உயர்ந்த உலகங்களை அடைவார்கள். ஆகையால், பொறுமையே உயர்ந்த அறம் என்று சொல்லப்படுகிறது." என்று எப்போதும் பொறுமையுடன் இருப்பவர்களைக் குறித்து காசியபர் பாடியிருக்கிறார். ஓ! திரௌபதி பொறுமை குறித்த இந்த வரிகளைக்கேட்ட பிறகு உனக்குள் உள்ளடங்கு. கோபத்திற்கு ஆளாகாதே. சந்தனுவின் மகனான எங்கள் பாட்டா {பீஷ்மர்}, அமைதியையே வழிபடுகிறார்; கிருபரும் சஞ்சயரும் அமைதியையே உரைக்கின்றர். சோமதத்தன், யுயுத்சு, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, எங்கள் பாட்டனான வியாசர், ஆகிய அனைவரும் அமைதியை குறித்தே பேசுகின்றனர். இவர்களால் அமைதியின் பக்கம் அழைத்துவரப்படும் மன்னர் {திருதராஷ்டிரன்} நமது நாட்டை நமக்குத் திரும்பக் கொடுப்பார் என்று நினைக்கிறேன். இருப்பினும், அவர் {திருதராஷ்டிரன்} மயக்கமடைந்தால், அவர் அழிவைச் சந்திப்பார். ஓ! பெண்ணே {திரௌபதியே}, பாரதர்களின் வரலாற்றில் அவர்களை பேரிடரில் ஆழ்த்த ஒரு நெருக்கடி வந்திருக்கிறது. இது சில காலங்களுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும் உறுதியான தீர்மானம். துரியோதனனுக்கு நாட்டை அடையும் தகுதியில்லை. ஆகையால்தான், அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. நான் ஆட்சி உரிமை கொண்டவன் ஆகையால் பொறுமையை ஏற்கிறேன். மன்னிப்பும் , மென்மையும் சுயமாக ஒருவன் அடைய வேண்டும். அவர்களின் நித்தியமான தன்மையையே பிரதிபலிக்கிறது. ஆகையால் உண்மையில் நான் அந்தக் குணங்களை என்னிடம் சேர்த்துக் கொள்வேன். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-20 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் . ஓ பாரதரே, அறத்தைவிட உகந்தது உமக்கு வேறு எதுவும் இருந்ததில்லை. அறத்தை உமது உயிரைவிட அதிகமாகக் கருதி வருகிறீர். உமது நாடும், உமது சுயமும் அந்தணர்களாலும், உமக்கு மூத்தவர்களாலும், தேவர்களாலும் அறத்திற்காக மட்டுமே கருதப்படுகின்றன. நீர், பீமசேனரையும், அர்ஜுனரையும், மாத்ரி மகன்களான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்}, அவர்களுடன் சேர்த்து என்னையும் கைவிட்டாலும் விடுவீரே ஒழிய அறத்தைக் கைவிட மாட்டீர்! மன்னன் அறத்தைக் காப்பான் என்றும், அப்படி அவனால் காக்கப்பட்ட அறம் (பதிலுக்கு) அவனைக் காக்கும் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும் அறம் உம்மைக் காக்காததையே நான் கண்டு வருகிறேன்! ஓ (யுதிஷ்டிரரே}, மனிதனைத் தொடரும் அவனது நிழல் போல, உமது இதயம், ஒரே நோக்கோடு அறத்தையே நாடுகிறது. நீர் உமக்குச் சமமானவர்களையோ, தாழ்ந்தவர்களையோ, மேன்மையானவர்களையோ என்றும் அவமதித்ததில்லை. முழு உலகத்தை நீர் அடைந்தும், உமக்கு கர்வம் அதிகரிக்கவில்லை! நீர் எப்போதும் அந்தணர்களையும், தேவர்களையும், பித்ருக்களையும், சுவதங்களுடனும் மற்ற வகையான வழிபாடுகளாலும் வழிபட்டு வருகிறீர்! நீர் எப்போதும் அந்தணர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து, அவர்களைத் திருப்தி செய்திருக்கிறீர். யதிகளுக்கும், சந்நியாசிகளுக்கும், இல்லறத்துறவிகளுக்கும் உமது இல்லத்தில் தங்கத்தாலான தட்டில் வைத்து உணவு பரிமாறியிருக்கிறீர். வானப்பிரஸ்தர்களுக்கு தங்கமும் உணவும் எப்போதும் கொடுத்திருக்கிறீர். அந்தணர்களுக்கு நீர் கொடுக்க மாட்டீர் என்று சொல்லும்படி எந்தப் பொருளும் உமது வீட்டில் இல்லை. உமது {மன} அமைதிக்காக, உமது இல்லத்தில் நடைபெற்ற விஸ்வதேவ வேள்வியில், சுத்தம் செய்யப்பட்ட பொருட்களை முதலில் உமது விருந்தினர்களுக்கும், மற்ற எல்லா உயிர்களுக்கும் கொடுத்து மீந்ததையே நீர் உண்டீர்! விருப்பத்தை ஈடேற்றும், இஷ்டிகளையும், பாசுபந்தங்கள் எனும் வேள்விகளையும், இல்லறக் கடமைகளுக்கான சடங்குகளையும், பக வேள்விகளையும், அனைத்து வகையான பிற வேள்விகளையும் உமது வீட்டில் நீர் நடத்தியிருக்கிறீர். திருடர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தனிமையான கானகத்திற்கு நாடுகடத்தப்பட்டும், சொந்த நாட்டை இழந்தும் உமது அறம் கெடவில்லை! பெரும் பரிசுகள் கொடுத்து நடத்தப்பட வேண்டிய அஸ்வமேதம், ராஜசுயம், புண்டரீகம், கோஸ்வம் ஆகிய பெரும் வேள்விகளை நீர் செய்திருக்கிறீர்! விபரீத உணர்வுகளால் உந்தப்பட்ட அந்தக் கடுமையான நேரத்தில், பகடையில் தோற்று, உமது நாட்டையும், உமது செல்வங்களையும், உமது ஆயுதங்களையும், உமது தம்பிகளையும், ஏன் என்னையும் இழந்தீர்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எளிமை, மென்மை, அடக்கம், உண்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தும், தீமை நிறைந்த சூதில் உமது மனம் ஈர்க்கப்பட்டது எவ்வாறு? ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது இந்தத் துயரையும் பேரிடரையும் கண்டு எனது இதயம் துயரத்தில் மூழ்குகிறது. நான் எனது உணர்வுகளை இழக்கும் நிலையில் இருக்கிறேன். மனிதர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்க முடியுமே தவிர, தங்கள் விருப்பங்கள் படி நடக்க முடியாது என்பதற்கு ஒரு பழைய வரலாறு இருக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட மரப் பதுமையைக் {பொம்மையைக்} கட்டி, நூல் கொண்டு ஆட்டி வைப்பது போல, அனைத்து துன்பங்களையும், இன்பங்களையும் விதிப்பவனான மேலான கடவுள், தான் படைத்த மக்களை ஆட்டி வைக்கிறான். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அனைத்துப் பொருட்களையும் மூடியிருக்கும் வெளியைப் போல, கடவுளும் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடுருவி இருந்து இன்பத்தையும் துன்பத்தையும் விதிக்கிறான். நூலால் கட்டப்பட்ட பறவை போல, அனைத்து உயிரினங்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. அனைவரும் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்களே அன்றி வேறு யாருக்கும் அல்ல. யாரும் தனக்குத் தானே விதித்துக் கொள்பவனாக இருக்க முடியாது. நூலில் உள்ள முத்தைப் போல அல்லது, கயிற்றால் கட்டப்பட்ட காளையைப் போல அல்லது நீர்ச்சுழலில் சிக்கிய மரத்தைப் போல, அனைத்து உயிர்களும் படைப்பாளனின் கட்டளைகளைத் தொடர்கின்றன. அந்தப் அண்ட ஆன்மாவை {கடவுளை} நம்பியிருக்கும் மனிதன், ஒருக்கணம் கூட சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இருளால் சூழப்பட்ட எந்த மனிதனும், தானே தனது துன்பத்திற்கும் இனபத்திற்கும் தலைவனாக இருக்க முடியாது. கடவுளால் உந்தப்பட்டே அவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். லேசான வைக்கோல் பலமான காற்றை நம்பியிருப்பது போல, அனைத்து உயிர்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. இதுதான் கடவுள் என்று யாராலும் சொல்ல முடியாதெனினும், அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் கடவுள், அண்டத்தில் நகர்ந்து நல்லது கெட்டதைச் செய்து வருகிறான். இந்த நமது உடலை ஆயுதமாகக் கொண்டு, தலைவர்களுக்குத் தலைவன் {கடவுள்} நன்மை மற்றும் தீமையின் கனிகளைப் பறிக்கிறான். கடவுளால் பரப்பப்பட்டிருக்கும் மாயையின் சக்தியைப் பாரும். கடவுள் தனது மாயையால் குழப்புவதன் மூலமாக, உயிர்களைத் தங்கள் நண்பர்களையே கொல்ல வைக்கிறான். உண்மை அறிந்த முனிவர்கள் அவற்றை வித்தியாசமாகக் காண்கிறார்கள். அவை அவர்களுக்கு சூரிய ஒளியைப் போல வேறு ஒளியில் தெரிகின்றன (சாதாரணக் கண்களுக்கு ஒளிக்கீற்று போலத் தெரிபவை, ஆழ்ந்த பார்வை கொண்டோருக்கு உணவிலும் பானகங்களிலும் இருக்கும் பூச்சிகளைப் பார்ப்பது போலத் தெரிகிறது). சாதாரண மனிதர்கள் இவ்வுலகத்தை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்பிலும் அழிப்பிலும் வேறு வேறு செயல்வகைகளைக் கைக்கொண்டு, அனைத்தையும் செய்பவன் இறைவனே ஆவான். ஓ யுதிஷ்டிரரே, சுயம்புவான பெருந்தகப்பன் {பிரம்மா}, அந்தப் பெரும் தெய்வம், ஒரு மரத்தின் மந்தமான உணர்வற்ற பகுதியை, மரத்தை வைத்தே உடைப்பது போலவும், கல்லைக் கல்லால் உடைப்பது போலவும், இரும்பை இரும்பால் உடைப்பது போலவும், தான் படைத்த உயிரை தானே கொல்கிறான். அந்தத் தலைவர்களுக்குத் தலைவன் {பிரம்மன்}, தன் சித்தத்தின் படி உயிரினங்களை உற்பத்தி செய்து, அவற்றை அழித்து, ஒரு குழந்தை களிமண் பொம்மையுடன் விளையாடுவது போல, தான் படைத்த உயிரினங்களுடன் விளையாடுகிறான். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, கடவுள் தான் படைத்த உயிரினங்களுடன் ஒரு தந்தையைப் போலவோ அல்லது ஒரு தாயைப் போலவோ நடந்து கொள்கிறான் என எனக்குத் தோன்றவில்லை. ஒரு தீய மனிதனைப் போல, அவன், தான் படைத்தவை மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்! மேன்மையான, நன்னடத்தையுள்ள, எளிமையான மனிதர்கள் துன்புற்று, பாவிகள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். உமது துயரத்தையும், சுயோதனனின் {துரியோதனனின்} செழிப்பையும் நான் காண்பதால், பாரபட்சத்துடன் நடக்கும் அந்தப் பெரும் ஆணையாளனைக் குறித்து நான் உயர்வாகப் பேச மாட்டேன். ஐயா {யுதிஷ்டிரரே}, விதிகள் அனைத்தையும் மீறி, நியாயமற்று, பேராசையுடன் நடந்து கொண்டு, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் காயப்படுத்தும் திருதராஷ்டிரனின் மகனுக்குப் {துரியோதனனுக்கு} பெரும் செழிப்பை வழங்கி என்ன பெரும் கனியை {பலனை} அடைந்து விடப்போகிறான் அந்த பெரும் ஆணையாளன் ? ஒரு செயலின் பலன் {வினை} செய்தவனை மட்டுமே தொடரும்; மற்றவரைத் தொடராது என்றால், நிச்சயமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலாலும் ஏற்படும் பாவத்தால் கடவுளே கறைபடுகிறான். எனினும், செய்யப்பட்ட செயலின் பாவம் செய்தவனைச் சாரவில்லை என்றால், பலமே (தனியொருவனின் பலமே) செயல்களுக்கான உண்மையான காரணமாகும் (கடவுள் இல்லையென்றாகிவிடும்). நான் பலமற்றவர்களுக்காக வருந்துகிறேன்!" என்றாள் {திரௌபதி}. ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-21 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் . யுதிஷ்டிரன் சொன்னான், "ஓ யக்ஞசேனி {திரௌபதி}, உனது பேச்சு மென்மையானதாக, அற்புதம் நிறைந்த சொற்றொடர்கள் கொண்டதாக இருக்கிறது. நாங்கள் அதைக் {கவனமாகக்} கேட்டோம். எனினும், நீ நாத்திகர்களின் மொழியில் பேசுகிறாய். ஓ இளவரசி {திரௌபதி}, எனது செயல்களுக்கான கனியை {பலனை} எதிர்பார்த்து நான் செயல்படுவதில்லை. கொடுப்பது எனது கடமையாகையால் நான் கொடுக்கிறேன்; வேள்வி செய்வது எனது கடமையாகையால் நான் வேள்வி செய்கிறேன்! இல்லற வாழ்வு வாழும் ஒரு மனிதன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம், அவை கனி கொடுக்குமா கொடுக்காதா என்பதைக் கருதாமலேயே எனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி செய்கிறேன். அறத்தின் கனியை அடைய விரும்பி நான் அறம்பயில வில்லை. வேதத்தின் விதிகளை மீறி நடக்கக்கூடாது என்று கருதியும், நல்லவர்கள் மற்றும் ஞானமுள்ளவர்களின் நடத்தையைக் கண்டுமே நான் அறம்பயில்கிறேன்! ஓ கிருஷ்ணா {திரௌபதி}, எனது இதயம் இயற்கையாகவே அறத்தின்பால் ஈர்க்கப்படுகிறது. அறம்பயில்வதின் மூலம் அந்த அறத்தின் கனியை அடைய விரும்பும் மனிதன் அறத்தை வணிகம் செய்பவனே ஆவான். அறச்செயல்கள் செய்த பிறகு, அதன் கனி குறித்து சந்தேகப்படுபடும் பாவ மனம் கொண்டவனுக்கு, அவனது ஐயத்தின் காரணமாகவே அக்கனி கிடைக்காது. , அறம் குறித்த சந்தேகம் உனக்கு இருக்கக்கூடாது என்பதற்காகவே இது போன்ற விஷயங்களில் நிறைய சாட்சிகளைக் கொண்டிருக்கும் வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதை நான் உன்னிடம் பேசுகிறேன். அறத்தை சந்தேகிப்பவன் தாழ்ந்த பிறவியான விலங்காகப் பிறக்க விதிக்கப்படுகிறான். வேதங்களின் படி, பலவீனமான புரிதல் கொண்ட மனிதன் ஒருவன், அறம், நல்லொழுக்கம், அல்லது முனிவர்களின் வார்த்தைகளைச் சந்தேகித்தால், நித்திய வாழ்வில் இருந்தும், அருளில் இருந்தும் வெளியேற்றப்பட்டு சூத்திரனாகிறான். நற்குலத்தில் பிறந்த ஒரு குழந்தை வேதங்களைப் பயின்று, அறத்தால் தன்னைத் தாங்கிக் கொண்டால், அறக்குணம் கொண்ட அரச முனிகள் அவனது வயதைக் கருதிப் பாரார். ஆனால், அறத்தைச் சந்தேகித்து, சாத்திரங்களை மீறி நடக்கும் பாவம் நிறைந்த இழிந்தவன், சூத்திரர்களை விடவும், ஏன் திருடர்களை விடவும் தாழ்ந்தவனாகக் கருதப்படுவான். அளவிடமுடியா ஆன்மா கொண்ட பெரும் தவசியான மார்க்கண்டேயர் நம்மிடம் வந்ததை நீயே உன் கண் கொண்டு பார்த்தாய்! அறத்தால் மட்டுமே அவர் சதையுடன் கூடிய நித்தியத்தன்மையை {சாகாவரத்தை} அடைந்தார். வியாசர், வசிஷ்டர், மைத்திரேயர், நாரதர், லோமசர், சுகர் மற்றும் பிற முனிவர்கள் அனைவரும் அறத்தால் மட்டுமே பரிசுத்தமான ஆன்மாவை அடைந்தனர். தெய்வீக தவச் சக்தியும், சாபமிட மற்றும் அருள் வழங்கக் கூடிய சக்தியும், தேவர்களைப் போன்றே அவர்கள் மேன்மையுடன் இருப்பதையும் நீயே உன் கண்ணாறக் கண்டிருக்கிறாய். ஓ பாவமற்றவளே {திரௌபதியே}, தேவர்களுக்குச் சமமான இவர்கள் அனைவரும், வேதங்களில் எழுதியிருப்பதைத் தங்கள் கண்களால் கண்டு, அறமே முதன்மைக் கடமை என்று விவரிக்கின்றனர். ஆகையால், ஓ இனிமையான அரசியே {திரௌபதியே}, மடமை கொண்ட இதயத்துடன் {மனத்துடன்} தெய்வத்தையோ செயலையோ சந்தேகிக்கவோ நிந்திக்கவோ செய்யாதே! அறத்தைச் சந்தேகித்து அதை அவமதிக்கும் முட்டாள், தனது ஆய்வறிவால் கிடைத்த சாட்சியைக் கொண்ட கர்வத்துடன், மற்ற சாட்சிகள் அனைத்தையும் காணாது, எதிர்காலத்தையே நிகழ்காலம் போல அறிந்து சொல்லும் முனிவர்களை பைத்தியக்காரர்கள் என்கிறான். தனது புலன்களைத் திருப்தி செய்யும் மேலோட்டமான வார்த்தைகளையே கருதிப்பார்க்கும் அந்த முட்டாள், மற்ற அனைத்திலும் குருடாயிருக்கிறான். அறத்தைச் சந்தேகிப்பவன் தனது குற்றத்திற்கு பரிகாரம் இல்லாதவன் ஆவான். கவலை நிறைந்த அந்த ஆறுதல் பெற முடியாத பாவி, அதன் பிறகு எந்த நல்லுலகையும் அடையமாட்டான். சாட்சிகளை நிராகரிப்பவனும், வேத சாத்திரங்களின் பொருளை அவதூறாகப் பேசுபவனும், காமத்தாலும் பேராசையாலும் உந்தப்பட்டு விதி மீறுபவனுமான அந்த முட்டாள் நரகத்திற்குச் செல்கிறான். மறுபுறம், அறத்தை நம்பிக்கையுடன் பேணிக் காப்பவர்கள், மறு உலகத்தில் நித்தியமான அருளைப் பெறுகிறார்கள். அறத்தைப் பேணிக்காக்காத முட்டாள், முனிவர்கள் அருளிய சாட்சிகளை மீறி நடந்து, அந்த சாத்திர மீறலுக்காக எந்த {உலக} வாழ்க்கையிலும் செழிப்பை அடைய மாட்டார்கள். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-22 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் . யுதிஷ்டிரன் சொன்னான் . திரௌபதியே, மரியாதையுடன் முனிவர்களின் வார்த்தைகளையும், அறம்சார்ந்தவர்களின் நடத்தைகளையும் சாட்சியாக எண்ணிப் பார்க்காதவன், நிச்சயமாக இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நிலைக்க மாட்டான். நல்லவர்கள் பயிலும் பழமையான தர்மம் அண்ட அறிவு பெற்று அனைத்தையும் காணும் சக்தி பெற்ற முனிவர்களால் நிறுவப்பட்டது. கடலைக் கடக்க நினைக்கும் வணிகர்களுக்கு கப்பல் எப்படியோ, அப்படி சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோரின் ஒரே படகு தர்மமே {சனாதன தர்மம்}. அறம்சார்ந்தோரால் பயிலப்படும் அறங்கள் கனி கொடுக்கவில்லையெனில், இந்த அண்ட மே காரிருளில் மூழ்கிவிடும். யாரும் முக்திக்கு முயற்சிக்கமாட்டார்கள். யாரும் ஞானத்தையோ செல்வத்தையோ பெற முயற்சிக்க மாட்டார்கள். மனிதர்களும் விலங்குகளைப் போலவே வாழ ஆரம்பிப்பார்கள். தவம் {ஆன்மிகம்}, பிரம்மச்சரியம், வேள்விகள், வேத கல்வி, தானம், நேர்மை ஆகியவை கனி கொடாமலிருந்தால், தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் அறம் பயின்றிருக்க மாட்டார்கள். செயல்கள் கனியற்றதாக இருப்பின், ஒரு கொடிய குழப்பமே பின்தொடரும். மனிதர்களின் நிலைமைக்கு {தரத்திற்கு} அப்பார்ப்பட்ட முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், ராட்சசர்களும் அறத்தை இந்த அளவு ஈடுபாட்டுடன் ஏன் பயில வேண்டும்? கடவுளே அறத்திற்கான கனி கொடுப்பவன் என்பதை அறிந்தவன், இவ்வுலகத்தில் அறத்தையே பயில்வான். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, இதுவே நித்திய செழிப்பு {செழிப்பின் ஊற்றுக்கண்}. ஞானம் மற்றும் தவத்தின் கனிகள் தெரியும்போது, அறமும், தீமையும் கனியற்றதாகிவிடாது. ஓ கிருஷ்ணா {திரௌபதி}, நீ கேள்விப்பட்டவாறே உனது பிறப்பைக் குறித்து நினைத்துப் பார். பெரும் வீரம் கொண்ட திருஷ்டத்யும்னன் எப்படிப் பிறந்தான் என்பதை நினைத்துப் பார். இவையே {அறத்தின் கனிகளுக்கு} சிறந்த சாட்சிகள். தங்கள் மனதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், தங்கள் செயல்களுக்கான கனியைப் பறிப்பார்கள். சிறிது அறம்பயில்பவர்கள் கனியின் சிறு பகுதிகளை அடைவார்கள். அறத்தைச் சிறிதும் பயிலாத அறியாமையில் உள்ள மூடர்கள், எவ்வளவுதான் (இங்கு) பெற்றாலும், மறு உலகத்தில் ஒன்றையும் அடையமாட்டார்கள். வேதங்களில் விதிக்கப்பட்ட அறச்செயல்களும், மீறல்களும் கனிகொடாமல் போவது என்பதன் ஆதியும் அந்தமும், தேவர்களும் அறியாத புதிராக உள்ளது. இவற்றையெல்லாம் சாதாரண மனிதர்கள் அறியாமல் இருக்கின்றனர். இந்தப் புதிரைத் தக்க வைத்துக் கொள்ளும் தேவர்கள், மாயையால் அதை மறைக்கிறார்கள் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. நோன்புகளிலும் தவத்திலும் நம்பிக்கை வைத்து, தங்கள் பாவங்களை எரித்து, அமைதியாகவும் புனிதமாகவும் வசிக்கும் ஆசைகளை அழித்த மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்} இவை அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள். ஆகையால், அறம் கனி கொடுப்பதை நீ காணவில்லையென்றாலும், தர்மத்தையும் தேவர்களையும் நீ சந்தேகிக்கக்கூடாது. நீ விருப்பத்துடன் வேள்விகளைச் செய்ய வேண்டும். ஆணவம் இல்லாமல் தொண்டு செய்ய வேண்டும். இந்த உலகில் செய்யப்படும் அனைத்து செயல்களுக்கும் கனிகள் இருக்கின்றன. அறம் நித்தியமானது. காசியபரை சாட்சியாக வைத்து, தனது (ஆன்மிக) மகன்களுக்கு பிரம்மாவே இதைச் சொல்லியிருக்கிறார். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, உனது சந்தேகங்கள் மூடுபனி விலகுவது போல விலகட்டும். இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து, உனது சந்தேகங்கள் நம்பிக்கைக்கு வழி கொடுக்கட்டும். அனைத்து உயிரினங்களுக்கும் தலைவனான கடவுளை அவதூறு செய்யாதே. அவனை {கடவுளை} எப்படி அறிவது என்பதை அறிந்து கொள். அவனைப் பணிந்து வணங்கு. உனது மனம் இது போல் ஆகாது பார்த்துக் கொள். ஓ கிருஷ்ணா {திரௌபதி}, மனிதர்களுக்கு அருளும் தலைவர்களுக்குத் தலைவனான கடவுளை பக்தியுடன் அணுகி, அழியாத் தன்மை {நித்தியத்தன்மை} பெறு! ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-23 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் . திரௌபதி சொன்னாள், "ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, நான் தர்மத்தை அவமதிக்கவோ பழிக்கவோ இல்லை. அனைத்து உயிரினங்களின் தலைவனான கடவுளை நான் ஏன் அவமதிக்க வேண்டும்? துயரத்தால் தாக்கப்பட்டு நொந்து போயிருப்பதால் நான் மீண்டும் புலம்புகிறேன் என்பதை அறிந்து கொள்ளும். உலகில் உள்ள உணர்வுள்ள எவ்வுயிரும் எப்படிச் செயல்படும் என்று நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். அசையாத உயிரினங்களைத் தவிர்த்து வேறு எந்த உயிரினமும் செயல்படாமல் இருக்காது. ஒரு கன்றுக்குட்டி, தான் பிறந்த உடனேயே, தாயின் மடியை அடைந்து பால் குடிக்கிறது. தங்கள் சிலைகளை வைத்து மந்திரங்கள் ஓதப்படுவதன் விளைவாக மனிதர்கள் வலியை உணர்கிறார்கள். ஆகையால், ஓ யுதிஷ்டிரரே, முன்ஜென்மங்களில் தாங்கள் செய்த செயல்களின் அடிப்படையிலேயே உயிரினங்கள் தங்கள் குணங்களை அடைகின்றன. அசையும் உயிரினங்களில் மனிதன் மட்டும் தனது செயல்கள் மூலம் இவ்வுலக வாழ்க்கை மற்றும் மறு உலக வாழ்க்கையை நிர்ணயிப்பதால் விசேஷமானவனாக இருக்கிறான். முந்தைய ஜென்ம வாழ்க்கையின் தாக்கத்தால், அனைத்து உயிர்களும் தங்கள் செயல்களின் கனிகளை இவ்வுலகில் பறிப்பது தெரிகிறது. உண்மையில், அனைத்து உயிரினங்களும் முந்தய ஜென்ம வாழ்வின் தாக்கத்தோடேயே வாழ்கின்றன. (யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே) நீரில் வாழும் கொக்கைப் போல படைப்பாளரும் {பிரம்மாவும்}, அண்ட ஆணையாளரும் தங்கள் வேலையைச் செய்கின்றனர். செயல்படாத உயிரினத்தின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடுகிறது. ஆகையால், எந்த உயிரினமாக இருந்தாலும் செயலற்ற தன்மையுடன் அல்லாமல் செயல்பாடோடே இருக்க வேண்டும். செயலைத் துறப்பதால் கண்டிக்கப்படாதிருக்க நீரும் செயல்பட வேண்டும். கவசம் தரிப்பது போல, செயலால் உம்மைக் காத்துக் கொள்ளும். செயல்கள் அல்லது வேலையின் பயன்பாட்டை உண்மையில் அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது அதுவும் இல்லாமலிருக்கலாம். ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளவும் செயல்பட வேண்டும்; {செல்வ} வரவுக்காக முயற்சிக்காதவன், தனது செல்வத்தைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருந்தால், இமயத்தை ஒத்த அவனது பெரும் செல்வமும் விரைவில் செலவழிந்துவிடும். செயல் இல்லை என்றால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து போகும். செயல்கள் கனிகொடுக்க வில்லையென்றால், உயிரினங்கள் பெருகியிருக்காது. சில நேரங்களில் உயிரினங்கள் கனியற்ற செயல்களை செய்வதை நாம் காண்கிறோம். அவை செயல்படவில்லை என்றால் அவற்றின் வாழ்வு சாத்தியமற்றதாகிவிடும். விதியை நம்பும் மனிதர்களும், வாய்ப்பை {அதிர்ஷ்டத்தை} நம்பும் மனிதர்களும், மனிதர்களிலேயே இழிந்தவர்களாவார்கள். செயல்திறனை நம்புபவர்கள் மட்டுமே பாராட்டத்தக்கவர்கள். வசதியாக பொய்யுரைத்துக் கொண்டு, செயல்படாமல், விதியை மட்டுமே நம்பி இருப்பவன், சுடப்படாத மண் பானை நீரால் அழிவது போல அழிந்து போவான். அதே போல, வாய்ப்பை நம்பி எதிர்பார்த்து, செயல்பட முடிந்தும் செயல்படாமல் உட்கார்ந்து இருப்பவனும், பலவீனமான மற்றும் ஆதரவற்ற தனது வாழ்க்கையால் நீண்ட நாள் பிழைத்திருக்க மாட்டான். எதிர்பாராவிதத்தில் செல்வத்தை அடையும் ஒருவன், யாரொருவரின் முயற்சியும் இல்லாமல் அதைப் பெற்றதால், அதிர்ஷ்டத்தால் அடைந்தான் என்று சொல்லப்படுகிறது. ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரரே}, அறச்சடங்குகள் மூலம் ஒரு மனிதன் அடையும் எந்த நற்பேறாக இருந்தாலும், அது அதிர்ஷ்டவசமாகப் பெற்றதாகவே சொல்லப்படுகிறது. மனிதன் செயல்பாட்டால் கனியை அடைந்தால், தனது செயல்பாடுகளின் நேரடிப் பயனான அது, அவனது தனிப்பட்ட திறனுக்கான சாட்சியாக மதிக்கப்படுகிறது. காரணம் இல்லாமல் தானாக ஒருவனால் அடையப்படும் செல்வம், தன்னிச்சையான கையகப்படுத்தல் என்று சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமான அருளாலும், தானாகவும் வரும் எந்தப் பொருளும், ஒருவனுடைய செயல்களின் பயனாகப் பெறப்பட்டது என்று கருதப்பட்டாலும், அது முன்ஜென்ம வாழ்க்கையில் அவன் செய்த செயல்களின் விளைவே ஆகும். அண்ட ஆணையாளரான கடவுள், முன் ஜென்ம வாழ்க்கையில் செய்த செயல்களை ஆராய்ந்து, இந்த உலகத்தில் அதன் பகுதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறான். நல்லதாகவோ தீயதாகவோ எச்செயலையும் செய்யும் ஒரு மனிதன், அது கடவுள் கொடுத்த பயன் என்பதை அறிந்து, முன்ஜென்ம வாழ்க்கைக்குத் தக்க படி செயல்படுகிறான். இந்த உடல் கடவுளின் கரங்களில், செய்யப்படும் செயல்களுக்கு கருவியாக மட்டுமே இருக்கிறது. செயல்திறனற்றதாக இருக்கும் உடல், கடவுள் பணித்ததைச் செய்கிறது. ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-24 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரனுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் . திரௌபதி சொன்னாள், . ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, தலைவர்களுக்குத் தலைவனான கடவுளே, அனைத்து உயிர்களையும் செயல்பட வைக்கிறான். உயிரினங்கள் தானே செயல்படும் சக்தியற்றவை. ஓ வீரரே, மனிதன் முதலில் மனதில் ஒரு காரியத்தைத் தீர்மானித்து, தனது அறிவின் துணை கொண்டு அதைச் சாதிக்கிறான். ஆகையால், நாம், (மனிதன் செய்யும் காரியங்களுக்கு) மனிதனே காரணம் என்று சொல்கிறோம். மாளிகைகளும், நகரங்களும் மனிதர்களின் செயல்களின் பயன்களே, ஆகையால் மனிதர்களின் செயல்கள் எத்தனை என்று எண்ணுவது சாத்தியமற்றது. எள்ளில் இருந்து எண்ணை எடுக்கலாம் என்றும், பாலில் இருந்து தயிர் எடுக்கலாம் என்றும், விறகு எரிப்பதால் உணவைச் சமைக்க முடியும் என்றும், புத்தி கொண்ட மனிதன் தனது அறிவின் துணை கொண்டு அறிந்து கொள்கிறான். இவற்றையெல்லாம் சாதிக்கும் வழிகளையும் அவர்கள் அறிகிறார்கள். அவற்றை அறிந்து கொண்டு, பின்பு சரியான பொருட்களைக் கொண்டு அவற்றைச் சாதிக்கிறார்கள். தங்கள் செயல்களின் வழியாகக் கிடைக்கும் பலன்களைக் கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன. ஒரு நிபுணன் ஒரு வேலையைச் செய்தால், அதைச் சரியாகச் செய்கிறான். வேலையில் இருக்கும் வித்தியாசங்களால், நிபுணத்துவம் அற்ற கை செய்த வேலையை நாம் கண்டறிகிறோம். ஒரு மனிதன் செய்யும் செயல்களின் விஷயத்தில் அவன் காரணமாக இருக்க வில்லையெனில், வேள்விகள் அவன் விஷயத்தில் கனி கொடுக்காது. யாரும் அவனுக்கு சீடனாகவும் முடியாது. குருவாகவும் முடியாது. ஒரு வேலைக்கு அந்த மனிதனே காரணமாக இருப்பதால்தான் அவன் வெற்றியடையும்போது பாராட்டப்படுகிறான். ஆகையால் அந்தப் பணியில் அவன் தோற்கும்போது நிந்திக்கப்படுகிறான். தனது செயல்களுக்குத் தானே காரணமாகாத மனிதன் இவற்றையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? சிலர் அனைத்துமே அதிர்ஷ்டத்தின் பயன் என்று சொல்கின்றனர். வேறு சிலர் அப்படியில்லை என்கின்றனர். ஆனால் விதியின் பயன் என்றும், அதிர்ஷ்டத்தின் பயன் என்றும் சொல்லப்படும் அனைத்தும், முன்ஜென்ம செயல்களின் நல்ல அல்லது தீய செயல்களின் பயனாக இருக்கின்றன. அதிர்ஷ்டத்தாலும், விதியாலும் உடைமைகள் கிடைப்பதும் காணப்படுகிறது. சில விதியாலும், சில அதிஷ்டத்தாலும், சில முயற்சியாலும் பெற்றப்படுகின்றன. மனிதர்களின் விஷயத்தில் இவை மூன்றையும் தவிர்த்து நான்காவதாக ஒரு காரணம் கிடையாது. உண்மை அறிந்த, அறிவுத்திறமை கொண்டவர்கள் இப்படியே சொல்கின்றனர். எனினும், நன்மையான அல்லது தீங்கான கனிகளைக் கொடுப்பது கடவுள் இல்லை என்றால், உயிரினங்களில் பரிதாபகரமானவர்கள் யாரும் இருக்க முடியாது. முந்தைய செயல்களின் விளைவுகள் ஒரு கட்டுக்கதை என்றால், மனிதன் வேலை செய்யும் அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமானதாக இருக்க வேண்டும். ஆகையால் இவ்வுலகில் மூன்று மட்டுமே {விதி, அதிர்ஷ்டம், முயற்சி} வெற்றி மற்றும் தோல்வியின் கதவுகள் என்று (முன் ஜென்ம வாழ்வின் செயல்களைக் கருதிப்பாராமல்) கருதுபவர்கள் உடலைப் போலவே மந்தமாக செயலற்று இருப்பார்கள். இவையெல்லாம் இப்படி இருப்பினும் மனிதன் செயல்பட வேண்டும். இது மனுவின் தீர்மானமாகும். ஓ யுதிஷ்டிரரே, செயல்படாத மனிதன் நிச்சயம் அடிமைப்படுவான் {Succumb}. இவ்வுலகத்தில் செயல்படும் மனிதன் பொதுவாக வெற்றியையே சந்திக்கிறான். இருப்பினும் செயலற்றவன் வெற்றியை அடைவதே இல்லை. வெற்றி சாத்தியமில்லாத போது, வெற்றியின் பாதையில் இருக்கும் தடைகளை விலக்க ஒருவன் முயற்சிக்க வேண்டும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, (கடுமையாக) வேலை செய்யும் {உழைக்கும்} மனிதனின் கடன்கள் (கடவுளுக்கு பட்ட கடன்கள்) (அவன் வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும்) ரத்து செய்யப்படுகின்றன. செயலற்று, நீண்டு கிடப்பவன், துரதிர்ஷ்டத்தில் மூழ்குகிறான். துடிப்புடனும், நிபுணத்துவத்துடனும் இருப்பவன் நிச்சயம் வெற்றியை அறுவடை செய்து, செழிப்பையும் இன்பத்தையும் அடைவான். தன்னம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபடும் புத்திசாலி மனிதர்கள், வித்தியாசமாக இருப்பவர்களை சந்தேகம் உள்ளவர்களாகவும், வெற்றியடையாதவர்களாகவும் கருதுகிறார்கள். எனினும் நம்பிக்கை நிறைந்தவர்களை வெற்றியாளர்களாகவே அவர்கள் கருதுகிறார்கள். இந்தக் கணம் நாம் துன்பத்தில் மூழ்கி இருக்கிறோம். இருப்பினும் நீர் செயல்பட்டால் நமது துன்பம் விலகும். நீர் தோல்வியுற்றால், அதுவே உமக்கும், விருகோதரருக்கும் {பீமருக்கும்}, விவத்சுவுக்கும் {அர்ஜுனருக்கும்}, இரட்டையர்களுக்கும் {நகுலர், சகாதேவருக்கும்} (நீங்கள் எதிரியிடம் நாட்டை பறிக்க முடியவில்லை என்ற) ஆதாரத்தை வழங்கும். மற்றவர்களின் செயல்களுக்கு வெற்றிமகுடம் சூட்டப்படுவதைக் காண்கிறோம். நமது செயல்களும் வெற்றியடையும் என்று கருதலாம். தொடர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஒருவன் எப்படி முன்பே அறிந்து கொள்ள முடியும்? முயற்சி செய்தால், அந்த முயற்சிக்கு கனி கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். உழவன் கலப்பையைக் கொண்டு நிலத்தை உழுது விதைகளைத் தூவுகிறான். பிறகு பயிரை விளைவிக்க மேகமே {மழையே} காரணம் என்று அமைதியாக அமர்கிறான். மேகங்கள் அவனுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அந்த உழவன் பழியில் இருந்து விடுவிக்கப்படுகிறான். அவன் தனக்குள்ளேயே, "மற்றவர்கள் செய்ததைத்தான் நானும் செய்தேன். இருந்தபோதிலும் தோல்வியைச் சந்தித்தேன். என்னை எந்தப் பழியும் சாராது." என்று நினைத்துக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னைத்தானே நிந்தித்துக் கொள்ளாதிருப்பான். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, ஒரு நம்பிக்கையின்மையுடன், "நான் செயல்படுகிறேன். ஆனாலும் வெற்றி எனதாகவில்லையே!" என்று கருதக்கூடாது. ஏனென்றால் முயற்சியைத் தவிர்த்து வெற்றிக்கான இன்னும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. வெற்றியோ தோல்வியோ நம்பிக்கையின்மை கூடாது. ஏனென்றால் செயல்களின் வெற்றி சேர்க்கை மற்றும் பல சூழ்நிலைகளைப் பொருத்ததாகும். ஒரு முக்கியமான பொருள் தேவை என்றால் வெற்றி அதற்கு ஈடானதாகாது அல்லது வெற்றி கிட்டாது. இருப்பினும் முயற்சி இல்லையென்றால் வெற்றி கிட்டாது. முயற்சி இல்லாது வேறு எது இருந்தாலும் அது பாராட்டத்தக்கதல்ல. புத்திசாலிகள், செழிப்பை அடைய இடம், நேரம், வழி, அதிர்ஷ்ட சடங்குகள் ஆகியவற்றைச் சரியாகச் செய்து தங்கள் புத்தியின் துணையுடன் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துவார்கள். கவனத்துடனும், விழிப்புடனும் வீரத்தைத் தலைமை வழிகாட்டியாகக் கொண்டு வேலையைச் செய்ய வேண்டும். ஒரு வேலையின் வெற்றிக்குத் தேவையான குணங்களின் சேர்க்கையில் வீரமே முக்கியமானதாகும். எதிரி தன்னைவிட பல குணங்களில் மேன்மையாக இருப்பதைக் காணும் புத்திசாலி மனிதன், சமரசக் கலைகளையும், சரியான சாதனங்களையும் பயன்படுத்தி தனது காரியங்களை நிறைவேற்றுவதற்கு வழி தேட முயற்சிக்க வேண்டும். அவன் தனது எதிரிக்கு தீமையையும், எதிரியை அகற்றுதலையும் விரும்ப வேண்டும். மரணத்திற்குரிய மனிதர்களைப் பற்றி இல்லாமல், அவனது எதிரி கடல், மலைகளாகவும் இருந்தாலும் கூட அவனது நோக்கங்கள் இவ்வாறே வழிநடத்தப்பட வேண்டும். ஒரு மனிதன் தனது எதிரிகளிடம் இருக்கும் ஓட்டைகளைத் தேடுவதன் மூலம், தனது மற்றும் தனது நண்பர்களின் கடனைத் தீர்க்கிறான். எந்த மனிதனும் தன்னைத் தானே இழிவுப்படுத்திக் கொள்ளக்கூடாது. தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்பவன் உயர்ந்த செழிப்பை அடையவே மாட்டேன். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்த உலகத்தில் வெற்றி என்பது அடையக்கூடியதே. உண்மையில் இவ்வுலகத்தில் வெற்றி என்பது நேரம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கிடைக்கிறது. முன்பு என் தந்தை {துருபதன்} தன்னுடன் ஒரு கற்ற அந்தணரை வைத்திருந்தார். ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, அவரே {அந்த அந்தணரே} இவற்றையெல்லாம் என் தந்தைக்கு {துருபதனுக்குச்} சொன்னார். உண்மையில் பிருஹஸ்பதி வெளிப்படுத்திய கடமை குறித்த இவ்வழிமுறைகள், எனது சகோதரர்களுக்கு {திருஷ்டத்யும்னன் போன்றோர்க்குக்} கற்றுத் தரப்பட்டது. பிறகு, அவர்களிடம் இருந்தே, என் தந்தையின் {துருபதரின்} இல்லத்தில் இருந்தபோது நான் கேட்டறிந்தேன். ஓ யுதிஷ்டிரரே, இடைவேளை நேரங்களில் நான் {உள் அறைகளில் இருந்து = அந்தப்புரத்தில் இருந்து} வெளியே சென்று என் தந்தையின் {துருபதரின்} மடியில் அமர்ந்து கொள்வேன். அப்போது அந்தக் கற்ற அந்தணர் இந்த உண்மைகளையெல்லாம் இனிமையாகவும் ஆறுதலாகவும் எனக்குச் சொன்னார். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-25 ... மகாபாரதம்-வனபர்வம் .. மார்க்கண்டேயருக்கும் நாராயணருக்கும் இடையே நடந்த உரையாடல் . நாராயணர் கூறினார், "ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மையில் தேவர்களும் என்னை அறிய மாட்டார்கள். இருப்பினும், நான் உம்மிடம் திருப்தி கொண்டிருப்பதால், இப்அண்டத்தை எப்படி உருவாக்கினேன் என்பதை உமக்குச் சொல்கிறேன்! நீர் உமது மூதாதையர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து கொண்டு, எனது பாதுகாப்பையும் கோரினீர் {என்னைச் சரணடைந்தீர்}. நீர் என்னை உமது கண்களால் கண்டிருக்கிறீர்! உமது ஆன்மத் தகுதியும் அதிகமானதே! பழங்காலத்தில் நீர் என்பது நாரம் என்று அழைக்கப்பட்டது. நீரே எனது வசிப்பிடமாக {அயணமாக} இருப்பதால், நான் நாராயணன் (நீரை வசிப்பிடமாகக் கொண்டவன்) என்று அழைக்கப்படுகிறேன். அனைத்துக்கும் மூலமாக, நித்தியமானவனாக, மாறாதவனாக இருக்கும் நானே நாராயணன். நானே அனைத்தையும் படைக்கிறேன்; நானே அனைத்தையும் அழிக்கிறேன். நானே விஷ்ணு, நானே பிரம்மன், நானே தேவர்கள் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நானே மன்னன் வைஸ்ரவணன், நானே இறந்த ஆவிகளின் தலைவனான யமன். நானே சிவன், நானே சோமன், நானே படைக்கப்பட்டவற்றுக்குத் தலைவனான காசியபர். மேலும், நானே தத்ரியும் விதத்ரியுமாவேன்; நானே உருவம் கொண்ட வேள்வியுமாவேன். நெருப்பே எனது வாய், பூமி எனது பாதம், சூரியனும் சந்திரனும் எனது கண்கள்; சொர்க்கம் எனது தலையில் இருக்கும் கிரீடம், ஆகாயமும், திசைப் புள்ளிகளும் எனது காதுகள்; எனது வேர்வையில் இருந்தே நீர் பிறக்கிறது. திசைப் புள்ளிகளுக்கு மத்தியில் இருப்பதே எனது உடல்; காற்றே எனது மனமாகும். நான் அபரிமிதமான பரிசுகள் கொடுத்து பல நூற்றுக்கணக்கான வேள்விகளைச் செய்திருக்கிறேன். நான் தேவர்களின் வேள்விகளில் எப்போதும் இருக்கிறேன்; வேதங்களை அறிந்து வேள்வியை நடத்துபவர்கள் எனக்குக் காணிக்கைகளைக் கொடுக்கின்றனர். இப்பூமியில் மனிதர்களை ஆளும் க்ஷத்திரியத் தலைவர்கள், சொர்க்கமடைய விரும்பி வேள்விகளைச் செய்கின்றனர். அதே மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளை அடைவதற்கு விரும்பியே வைசியர்களும் தங்கள் வேள்விகளைச் செய்கின்றனர். அனைவரும் அது போன்ற நேரங்களில் சடங்குகளுடன் என்னை வழிபடுகின்றனர். சேஷனின் உருவத்தைக் கொண்டு நான்கு கடல்களையும், மேருவையும், மந்தரத்தையும் கொண்ட பூமியை (எனது தலையில்) நானே தாங்குகிறேன். ஓ! மறுபிறப்பாளரே { மார்க்கண்டேயரே}, பன்றி உரு கொண்டு, நீரில் மூழ்கிய பூமியை பழங்காலத்தில் உயர்த்தியவன் நானே. குதிரையின் வாயில் வரும் நெருப்பாக {வடவாமுகாக்னி} மாறி, நீரை {கடலை} குடித்து, மீண்டும் அவற்றை உருவாக்குவது நானே. என் சக்தியின் தொடர்ச்சியாக, எனது வாய், கரங்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் படிப்படியாகத் தோன்றினார்கள். என்னிடமிருந்தே ரிக், சாமம், யஜூர், அதர்வன வேதங்கள் எழுந்தன. நேரம் வரும் போது இவை அனைத்தும் என்னுள்ளேயே நுழைகின்றன. தவத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் அந்தணர்களும், அமைதியையே உயர்ந்த பண்பாக மதிப்பவர்களும், தங்கள் ஆன்மாக்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், ஞானத்தை விரும்புபவர்களும், காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, புவிசார்ந்த பொருட்களைத் துறந்தவர்களும், தங்கள் பாவங்களை முழுமையாகக் கழுவிக் கொண்டவர்களும், கனிவும் நல்லொழுக்கமும் கொண்டு கர்வம் அகன்றவர்களும், ஆன்மா குறித்த முழு அறிவு கொண்டவர்களும் ஆழ்ந்த தியானத்துடன் என்னையே வழிபடுகிறார்கள். சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு {பிரளய கால நெருப்பு} நானே, அப்பெயரில் {சம்வர்த்தகம் என்ற பெயரில்} அழைக்கப்படும் காற்றும் நானே, அப்பட்டத்தைச் சூட்டியிருக்கும் {சம்வர்த்தகம் என்ற பட்டத்தைச் சூட்டியிருக்கும்} சூரியனும் நானே, அந்தப் பதவியைக் {சம்வர்த்தகம் என்ற பதவியைக்} கொண்ட நெருப்பும் நானே. ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்கள் அனைத்தும் எனது தோலில் உள்ள துளைகள் {நுண்துளைகள்} என்பதை அறிவீராக. ரத்தினங்களின் சுரங்கங்களான கடலும், நான்கு திசைப்புள்ளிகளும், எனது உடையும், படுக்கையும், இல்லமும் ஆகும் என்பதை அறிவீராக. தேவர்களின் காரியங்களுக்குச் சேவை செய்யவே அவை என்னால் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காமம், கோபம், மகிழ்ச்சி, அச்சம், புத்திமயக்கம் {மோகம்} ஆகியனவும் என்னுடைய பல உருவங்களே என்பதை அறிவீராக. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, உண்மை, தானம், கடுந்தவம், அமைதி, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை {அஹிம்சை} ஆகியவற்றைப் பயில்வதால் மனிதர்கள் அடையும் எதுவும், அது போன்ற நற்காரியங்களும், எனது ஏற்பாட்டாலேயே அடையப்படுகின்றன. என் கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு, என் உடலுக்குள் திரியும் மனிதர்களின் உணர்வுகள் என்னால் அதிகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் தங்கள் விருப்பப்படி திரிவதில்லை, மாறாக என்னாலே அவர்கள் திரிய வைக்கப்படுகின்றனர். வேதங்கள் முழுமையும் கற்ற ஆன்ம அமைதி கொண்ட மறுபிறப்பாள அந்தணர்கள், தங்கள் கோபத்தை அடக்கி, பல்வேறுபட்ட வேள்விகளின் மூலம் உயர்ந்த வெகுமதியை அடைந்திருக்கின்றனர். இருப்பினும் அவ்வெகுமதியானது, பேராசை, குறுகிய மனம், அருளற்ற அசுத்தமான ஆன்மாக்கள் ஆகியற்றால் பீடிக்கப்பட்ட மதிப்பற்றவர்களாலும், தீச்செயல் செய்யும் மனிதர்களாலும் அடையமுடியாததாகும். எனவே, ஆன்மாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பவர்களால் இவ்வெகுமதி அடையப்படும். மூடர்களாலும் அறியாமை கொண்டவர்களாலும் தவத்தால் மட்டுமே அடையக்கூடிய உயர்ந்த தகுதியின் கனியான அதை {அவ்வெகுமதியை} அடைய முடியாது. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, அறமும், அறநெறிகளும் குறைந்து, பாவங்களும், ஒழுக்கமின்மையும் {அறநெறிமீறலும்} அதிகரிக்கும் நேரத்தில், நான் என்னைப் புதிய உருவங்களில் படைத்துக் கொள்கிறேன். ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, தேவர்களில் முதன்மையானவர்களாலும் கொல்லப்பட முடியாத தீங்கிழைக்கும் கடுமையானவர்களுமான தைத்தியர்களும் ராட்சசர்களும் பூமியில் பிறக்கும்போது, தீமைகளை அகற்றி, அமைதியை மீட்க நான் அறம்சார்ந்த மனிதர்களின் குடும்பங்களில் மனித உரு கொண்டு பிறக்கிறேன். என் மாயையால், நான் தேவர்களையும், மனிதர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், அனைத்து அசையாதவைகளையும் படைத்து, பிறகு அவை அனைத்தையும் (நேரம் வரும்போது) அழிக்கிறேன். அறம் மற்றும் நன்னெறிகளைக் காக்க நான் மனித உருவம் கொள்கிறேன். செயலுக்கான காலம் வரும்போது, மீண்டும் நான் கற்பனைக்கெட்டாத வடிவங்களை எடுக்கிறேன். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-26 ... மகாபாரதம்-வனபர்வம் .. மார்க்கண்டேயருக்கும் நாராயணருக்கும் இடையே நடந்த உரையாடல் . மார்க்கண்டேயருக்கும் நாராயணருக்கும் இடையே நடந்த உரையாடல் . நாராயணர் கூறினார், . ஓ! மனிதர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, அறமும், அறநெறிகளும் குறைந்து, பாவங்களும், ஒழுக்கமின்மையும் {அறநெறிமீறலும்} அதிகரிக்கும் நேரத்தில், நான் என்னைப் புதிய உருவங்களில் படைத்துக் கொள்கிறேன். ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, தேவர்களில் முதன்மையானவர்களாலும் கொல்லப்பட முடியாத தீங்கிழைக்கும் கடுமையானவர்களுமான தைத்தியர்களும் ராட்சசர்களும் பூமியில் பிறக்கும்போது, தீமைகளை அகற்றி, அமைதியை மீட்க நான் அறம்சார்ந்த மனிதர்களின் குடும்பங்களில் மனித உரு கொண்டு பிறக்கிறேன். என் மாயையால், நான் தேவர்களையும், மனிதர்களையும், கந்தர்வர்களையும், ராட்சசர்களையும், அனைத்து அசையாதவைகளையும் படைத்து, பிறகு அவை அனைத்தையும் (நேரம் வரும்போது) அழிக்கிறேன். அறம் மற்றும் நன்னெறிகளைக் காக்க நான் மனித உருவம் கொள்கிறேன். செயலுக்கான காலம் வரும்போது, மீண்டும் நான் கற்பனைக்கெட்டாத வடிவங்களை எடுக்கிறேன். கிருத யுகத்தில் நான் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் மஞ்சளாகவும், துவாபர யுகத்தில் சிவப்பாகவும், கலி யுகத்தில் கறுப்பாகவும் ஆகிறேன். கலி காலத்தில், நாலில் மூன்று பங்கு அறமீறல்கள் நடக்கின்றன. (கால் பங்கே அறநெறி இருக்கிறது). அந்த யுகத்தின் முடிவில், மரணத்தின் கடுமையான உருவத்தைக் கொண்டு நான் தனியாக அசைவன, அசையாதன ஆகியவற்றைக் கொண்ட மூன்று உலகங்களையும் அழிக்கிறேன். மூன்று அடிகளால் நான் முழு அண்டத்தையும் அடக்குகிறேன். நானே இப்அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறேன்; நானே மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறேன்; நானே கர்வபங்கம் செய்பவனாக இருக்கிறேன்; நான் எங்கும் இருக்கிறேன்; நான் எல்லையற்றவனாக இருக்கிறேன்; நான் புலன்களின் தலைவனாக இருக்கிறேன்; என் வலிமை பெரிதானது. ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, தனியாகவே நான் காலச்சக்கரத்தைச் சுழற்றுகிறேன்; நான் உருவமற்றவனாக இருக்கிறேன்; நான் அனைத்து உயிர்களையும் அழிப்பவனாக இருக்கிறேன்; எனது படைப்புகளின் அனைத்து முயற்சிகளுக்கும் நானே காரணனாக இருக்கிறேன். ஓ! முனிவர்களின் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, எனது ஆன்மா அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கிறது {அனைத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்}. ஆனால், என்னை ஒருவரும் அறிவதில்லை. அனைத்து உலகங்களிலும் பக்தியுடனும் அர்பணிப்புடனும் நானே வணங்கப்படுகிறேன். எனது வயிற்றில் நீங்கள் என்னவெல்லாம் வலியை உணர்ந்திரோ, அவை அனைத்தும் உமது மகிழ்ச்சிக்காகவும், நற்பேறுக்காகவுமே என்பதை அறிவீராக. அவ்வுலகத்தில் என்னவெல்லாம் அசைவன மற்றும் அசையாதனவற்றைக் கண்டீரோ அவை அனைத்தும் எனது ஆன்மாவால், இருப்புக்குக் கொண்டு வந்து எழுப்பப்பட விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} எனது உடலில் பாதியாவான்; நான் நாராயணன் என்று அழைக்கப்படுகிறேன். நான் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கி நிற்கிறேன். யுகங்களின் நீளத்தில் ஆயிரம் மடங்கு அளக்கக்கூடிய காலத்திற்கு, அண்டத்தின் ஆன்மாவான நான், உயிரினங்களை உணர்வற்றதாக இருக்கச் செய்து {பிரம்மனான நான்} உறங்குகிறேன். ஓ! மறுபிறப்பாள முனிவர்களில் சிறந்தவரே {மார்க்கண்டேயரே}, இப்படியே அந்த முழுக் காலமும், நான் முதிர்ந்தவனாக இருந்தும் சிறுபிள்ளையின் உருவத்தில், பிரம்மன் விழிக்கும் வரை எப்போதும் இங்கேயே இருக்கிறேன். ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, நான் உம்மிடம் திருப்தி கொண்டிருக்கிறேன். பிரம்மமான நான் உமக்குத் திரும்பத் திரும்ப வரங்களை அளித்திருக்கிறேன். அசைவன, அசையாதன என அனைத்தும் அழிக்கப்பட்டதையும், ஒரே பெரும் நீர் பரப்பையும் கண்ட நீர் துன்பத்தால் தாக்கப்பட்டீர். நான் அதை அறிந்தேன், எனவேதான் நான் உமக்கு (எனது வயிற்றுக்குள் இருக்கும்) அண்டத்தைக் காட்டினேன். நீர் எனது உடலுக்குள் இருந்து முழு உலகத்தையும் கண்ட போது, உணர்விழந்து, ஆச்சரியத்தில் மூழ்கினீர். , இதன் காரணமாகவே நீர் விரைவாக எனது வாய்வழியாக வெளியேற்றப்பட்டீர். நான் (இப்போது) உம்மிடம், தேவர்களாலும், அசுரர்களாலும் புரிந்து கொள்ள இயலாத ஆன்மாவைக் குறித்துச் சொன்னேன். பெரும் தவசியான, புனிதமான பிரம்மா விழிக்காத வரை, ஓ! மறுபிறப்பாள முனிவரே {மார்க்கண்டேயரே}, நீர் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இங்கேயே வசிக்கலாம். அனைத்து உயிரினங்களின் பெருந்தகப்பன் {பிரம்மன்} விழித்த பிறகு, நான் தனியாக உடலுடன் கூடிய அனைத்து உயிர்களையும் படைத்து, ஆகாயம், பூமி, ஒளி, வளிமண்டலம், நீர் என உண்மையில் அனைத்து அசைவன மற்றும் அசையாதன ஆகிய (நீர் கண்டிருக்கக்கூடிய) உயிரினங்களையும் பூமியில் படைப்பேன்!" என்றான் {சிறுவனாக இருந்த நாராயணன்}. மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்த அற்புத தெய்வம் {நாராயணன்}, ஓ! மகனே {யுதிஷ்டிரா}, எனது காட்சியில் இருந்து மறைந்து போனான்! பிறகு தான் நான் இந்தப் பலதரப்பட்ட அற்புதமான படைப்பு உயிர் பெறுவதைக் கண்டேன். இந்த அற்புதமான அனைத்தையும் யுகத்தின் முடிவில், ஓ! அறம்சார்ந்த அனைத்து மனிதர்களிலும் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, சாட்சியாக இருந்து நான் கண்டேன். பழங்காலத்தில் என்னால் பார்க்கப்பட்ட, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தத் தெய்வம், உனது உறவினனாக இருக்கும் இந்த ஜனாதர்த்தனனே {கிருஷ்ணனே}. எனக்கு அளிக்கப்பட்ட வரத்தின் தொடர்ச்சியாகவே, எனது ஞாபக சக்தி குறையவில்லை. ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, மரணத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எனது வாழ்வின் காலம் மிக நீண்டது. பழமையான பெருந்தலைவனான இந்த ஹரியே, வலிமை நிறைந்த கரங்கள் கொண்டவனாக விருஷ்ணி குலத்தில் கிருஷ்ணனாகப் பிறந்து இவ்வுலகில் விளையாடிக் கொண்டிருப்பதைப் போலக் காணப்படுகிறான். இவனே தத்ரியும், விதத்ரியும் ஆவான். அனைத்து நித்தியமானவைகளையும் அழிப்பவன் இவனே. மார்பில் ஸ்ரீவத்சம் என்ற மருவைக் கொண்டவன் இவனே. அனைத்து உயிர்களின் தலைவனுக்குத் தலைவன் இவனே, உயர்ந்தவர்களில் உயர்ந்தவனான இவன் கோவிந்தன் என்று அழைக்கப்படுகிறான். மஞ்சளாடை {பீதாம்பரம்} உடுத்தி, எப்போதும் வெல்பவனும் அனைத்து தேவர்களிலும் முதன்மையானவனுமான இவனைக் கண்டதாலேயே எனக்குப் பழைய நினைவுகள் மீண்டும் வந்தன! இந்த மாதவனே {கிருஷ்ணனே}, அனைத்து உயிர்களுக்கும் தந்தையும் தாயுமானாவன்! குரு குலத்தின் காளைகளே {பாண்டவர்களே}, இந்தப் பாதுகாவலனிடம் உங்கள் பாதுகாப்பைக் கோருங்கள். {ரட்சகனான இவனைச் சரணடையுங்கள்}" என்றார் {மார்க்கண்டேயர்} ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-27 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரருக்கும் மார்க்கண்டேயருக்கும் இடையே நடந்த உரையாடல் ... குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பெருமுனிவரான மார்க்கண்டேயரிடம் எதிர்காலத்தில் வரப்போகும் பூமியின் அரசாங்கம் குறித்து மீண்டும் கேட்டான். . யுதிஷ்டிரன், ஓ! பிருகு குலத்தின் முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகத்தின் முடிவில் ஏற்படும் அனைத்தின் அழிவையும், மீள்பிறப்பையும் குறித்துக் கேட்டோம். உண்மையில் அவை அற்புதமாக இருந்தன. இருப்பினும், கலிகாலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துக் கேட்க இன்னும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அறமும், அறநெறிகளும் நிலைகுலைந்த நேரத்தில், எதுதான் எஞ்சியிருக்கும்! அந்தக் காலத்தின் மனிதர்களின் பராக்கிரமம், உணவு மற்றும் அவர்களின் கேளிக்கைகள் {நடையுடைகள்} ஆகியன எவ்வாறு இருக்கும்? அந்த யுகத்தின் முடிவில், வாழ்வின் காலம்தான் எவ்வளவு? எந்த எல்லையை அடைந்த பிறகு, மீண்டும் புதிதாகக் கிருத காலம் தொடங்கும்? ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, இவையனைத்தையும் விவரமாகச் சொல்லும். இதுவரை நீர் சொன்னது அனைத்தும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருந்தன" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}. மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, என்னால் கேட்கப்பட்ட, காணப்பட்ட அனைத்தையும் சொல்கிறேன் கேள். தேவர்களுக்குத் தேவனின் அருளால் நான் அறிந்ததைச் சொல்கிறேன். கிருதகாலத்தில் அனைத்தும், ஏமாற்று, சதி, தீமை, பேராசை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருந்தன. அறநெறி என்பது முழுதாக நாலு கால் கொண்ட காளையைப் போல மனிதர்களிடையே இருந்தது. திரேதா காலத்தில், பாவம் ஒரு காலை எடுத்துவிட்டது, அறநெறி மூன்று கால்களைக் கொண்டிருந்தது. துவாபர யுகத்தில், பாவமும், அறநெறியும் பாதிப் பாதியாகக் கலந்திருக்கிறது; அதனால் அறநெறி என்பது இரண்டு கால்களே கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இருண்ட காலத்தில் (கலி காலத்தில்), அறநெறியென்பது மூன்று பங்கு பாவத்துடன் கலந்து, மனிதர்களுக்கு அருகில் வாழ்கிறது. மனிதர்களின் வாழ்வின் காலமும், சக்தியும், புத்திக்கூர்மையும், உடல் பலமும் ஒவ்வொரு யுகமும் குறையும் என்பதை அறிந்து கொள்வாயாக. ஓ! பாண்டவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் அறத்தையும், அறநெறிகளையும் ஏமாற்றுகரமாகப் பயில்வார்கள். பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் அறம் என்ற வலையைப்பின்னி தங்கள் சகாக்களை ஏமாற்றுவார்கள். கற்றலில் {கல்வியில்} பொய்ப்புகழ் கொண்ட மனிதர்கள், தங்கள் செயல்கள் மூலமாக உண்மையை {சத்தியத்தை} குறுக்கி மறைத்து வைக்க ஏற்பாடு செய்வார்கள். வாழ்நாள் குறைவதன் தொடர்ச்சியாக, அவர்களால் பெரிதாக ஞானத்தை அடைய இயலாது. புத்தி குறைவின் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஞானம் இருக்காது. இதனால் பொருளாசையும் பேராசையும் அவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கும். பேராசை, கோபம், அறியாமை, காமம் ஆகியவை கொண்ட மனிதர்கள், ஒருவர் இன்னொருவரின் உயிரை எடுக்க விரும்பி ஒருவருக்கொருவர் பகைமை பாரட்டுவார்கள். அறங்கள் குறுகி, தவத்தையும், உண்மையையும் கைவிடும் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களுக்குச் சமானமாகக் குறைக்கப்படுவார்கள். தாழ்ந்த வகை மனிதர்கள் அனைவரும், இடைநிலை மனிதர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இடைநிலை மனிதர்கள் அனைவரும் நிச்சயமாகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஓ! யுதிஷ்டிரா, யுகத்தின் முடிவில் உலகத்தில் நிலை இவ்வாறே இருக்கும். அந்தக் {கலி} காலத்தின் மனிதர்கள் தங்கள் மனைவியரை தங்கள் (ஒரே} நண்பராகக் கருதுவார்கள். அந்தக் காலத்தில் நோன்பு நோற்பவர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பார்கள். ஒருவர் மற்றவரின் உயிரை எப்போதும் பறிப்பதற்காகக் காத்திருப்பார்கள். {அந்த} யுகத்தால் தள்ளப்பட்ட மனிதர்கள் நாத்திகர்களாகவும், திருடர்களாகவும் இருப்பார்கள். ... ........தொடரும்................ [10/6, 12:23 PM] Mohan SriRaghavendrar Kulithalai: சனாதன தர்மம் - பாகம்-28 ... மகாபாரதம்-வனபர்வம் .. கலியுகம் பற்றி யுதிஷ்டிரருக்கும் மார்க்கண்டேயருக்கும் இடையே நடந்த உரையாடல் .. கலியுகத்தில் அந்தணர்கள் வேதங்களை மரியாதைகுறைவாகப் பேசி, நோன்புகளை நோற்காமல், வீண் தர்க்கத்திற்கு அடிமையாகி, வேள்விகளையோ ஹோமங்களையோ செய்யாதிருப்பார்கள். யுக்திவாதங்களான போலி அறிவியலால் ஏமாற்றப்பட்டு, தாழ்ந்த குறுகிய அனைத்திலும் தங்கள் இதயத்தை நிலைக்கச் செய்வார்கள். மகன்கள் தங்கள் தந்தைகளைக் கொல்வார்கள்; தந்தைகள் தங்கள் மகன்களைக் கொன்று எந்த மானக்கேடும் அடையாமல் இருப்பார்கள். இத்தகு செயல்கள் செய்து, துயரங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டு, அதைப் {அச்செயலை} புகழவும் செய்வார்கள். முழு உலகமும் மிலேச்ச வகை நடத்தைகள், கருத்துகள், விழாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வேள்விகள் நின்று போகும், மகிழ்ச்சி எங்குமிருக்காது. பொதுமகிழ்ச்சி என்பது மறைந்தே போகும். ஆதரவற்றவர்கள், நண்பர்களற்றவர்கள் ஆகியோரிடம் இருந்து அவர்களது உடைமைகளையும் அறிவையும் மனிதர்கள் திருடுவார்கள். குறைந்த சக்தியும் பலமும் கொண்டு, ஞானமற்று, பேராசையும், முட்டாள்த்தனமும் கொண்டு, பாவச் செயல்கள் செய்யும் மனிதர்கள், அலட்சியமான வார்த்தைகளைச் சொல்லி, தீயவர்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பூமியின் மன்னர்களின் இதயம் ஞானமற்றுப் பாவத்திலேயே லயித்திருக்கும், அவர்கள் தங்கள் ஞானம் குறித்துக் கர்வமாகப் பேசி, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி சவால் விடுப்பார்கள். அந்தக் காலத்தின் முடிவில் க்ஷத்திரியர்களும் பூமியின் முட்களாவார்கள். பேராசை கொண்டு, கர்வம் பெருகி, தீமை செய்து, (தங்கள் குடிகளைக்) காக்க விரும்பாமல், தண்டனை கொடுப்பதில் மட்டும் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். நல்லவர்கள், நேர்மையானவர்கள் ஆகியோர், துயரத்தால் அழுதாலும், அவர்களிடம் இரக்கம் காட்டாமல் தொடர்ச்சியாகத் தாக்கும் க்ஷத்திரியர்கள், அவர்களது மனைவியரையும், செல்வத்தையும் கொள்ளையடிப்பார்கள். எவனும் எந்தப் பெண்ணையும் (திருமணத்திற்காக) கேட்கமாட்டான். எவனும் எந்தப் பெண்ணை (திருமணத்திற்காக) கொடுக்கவும் மாட்டான். ஆனால் பெண்கள், யுகத்தின் முடிவு வரும்போது, தாங்களாகவே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அறியாமையில் மூழ்கிய ஆன்மாக் கொண்ட புவியின் மன்னர்கள், தாங்கள் கொண்டிருப்பதில் அதிருப்தி கொண்டு, அது போன்ற நேரத்தில் {கலிகாலத்தில்}, தங்கள் பலத்தைப் பிரயோகித்து எல்லா வழிகளிலும் குடிமக்களிடம் இருந்து திருடுவார்கள். சந்தேகமற முழு உலகமும் மிலேச்சமயமாகும். யுக முடிவின் போது, வலக்கை இடதையும், இடம் வலத்தையும் ஏமாற்றும். போலிப் புகழ் கொண்ட கல்வியாளர்கள் உண்மையைச் சுருக்குவார்கள். முதியவர்கள் புத்தியற்ற இளைஞர்களையும், இளைஞர்கள் மனத்தளர்ச்சி கொண்ட முதியவர்களையும் வஞ்சிப்பார்கள். கோழை, வீரன் என்ற போலிப்புகழ் பெற்றிருப்பான். வீரர்கள், கோழைகளைப் போல உற்சாகமற்று இருப்பார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்று இருப்பார்கள். பேராசையும், முட்டாள்தனமும் உலகம் முழுவதும் இருக்கும். அனைவரும் ஒரே வகை உணவை உண்பார்கள். பாவம் வளர்ந்து செழிப்படையும், அதே வேளையில் அறம் மங்கி, பிரகாசம் இழக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் தங்கள் வகைக்கு யாரையும் மிச்சம் வைக்காமல் மறைந்து போவார்கள். (மூன்று வர்ணத்தாரும் மறைந்துபோவார்கள்) யுக முடிவின் போது, மனிதர்கள் அனைவரும், எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே வகையின் உறுப்பினர்களாவார்கள். தந்தைகள் மகன்களை மன்னிக்க மாட்டார்கள், பிள்ளைகள் தந்தைகளை மன்னிக்க மாட்டார்கள். முடிவு நெருங்கும்போது, மனைவியர் தங்கள் கணவர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்ய மாட்டார்கள். ஆண்களும் பெண்களும், தங்கள் நடத்தைகளில் சுதந்திரமானவர்களாக இருந்து, அடுத்தவர் குறையைப் பொறுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். இப்படி முழு உலகமும் மிலேச்சமயமாகும். மனிதர்கள் ஸ்ரார்த்தக் கொடை கொடுத்துத் தேவர்களைத் திருப்தி செய்வதை நிறுத்திவிடுவார்கள். எவரும் யாருடைய வார்த்தைகளையும் கேட்கமாட்டார்கள். ஒருவரும் மற்றவரால் குருவாகக் கருதப்பட மாட்டார்கள். மனிதர்களுக்கு உடைமைகள் குறைவாகவே இருக்கும், மனிதர்கள் போலியாக மதக்குறிகளைத் தாங்கி நிற்பார்கள். பொறாமையும், தீய குணமும் உலகம் முழுதும் நிறைந்திருக்கும். யாரும் யாருக்கும் (செல்வத்தையோ அல்லது வேறு எதையுமோ) தானம் செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். உலகத்தில் குடியேற்றும் இல்லாத பகுதிகள் {மக்கள் தொகை குறைந்த பகுதிகள்} பற்றாக்குறை மற்றும் பஞ்சத்தால் துன்புறும். நெடுஞ்சாலைகள் அனைத்தும், காமம் நிறைந்த தீய குணம் கொண்ட ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருக்கும். அது போன்ற நேரத்தில், பெண்கள் தங்கள் கணவர்கள் மீது வெறுப்பைக் காட்டி மகிழ்வார்கள். யுக முடிவு வரும்போது, சந்தேகமற மனிதர்கள் அனைவரும் மிலேச்ச முறையைக் கைக்கொண்டு, அவர்களிடம் இருந்து வேறுபாடு இல்லாமல் அனைத்தையும் உண்பவர்களாகி, தங்கள் செயல்கள் அனைத்திலும் கடுமையாக இருப்பார்கள். ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} பேராசையால் உந்தப்பட்ட மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விற்கவும், வாங்கவும் {கொள்முதல் செய்தலையும்} செய்வார்கள். கட்டளைகளை {ஆசாரம்} அறியாத மனிதர்கள், சடங்குகளையும், விழாக்களையும் நடத்துவார்கள். யுக முடிவு நெருங்கும்போது நிச்சயம் மனிதர்கள் மேற்கண்டவாறே நடப்பார்கள். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-29 ... மகாபாரதம்-வனபர்வம் .. கலியுகம் பற்றி யுதிஷ்டிரருக்கும் மார்க்கண்டேயருக்கும் இடையே நடந்த உரையாடல் .. யுக முடிவு வரும்போது, தங்கள் தேவைகளால் உந்தப்பட்ட மனிதர்கள், கடுஞ்செயல் புரிந்து, ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசுவார்கள். மனிதர்கள் ஈவிரக்கம் இல்லாமல் மரங்களையும் தோப்புகளையும் அழிப்பார்கள். வாழ்வு குறித்த கவலையில் மூழ்கியபடியே மனிதர்கள் இருப்பார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பேராசையில் மூழ்கும் மனிதர்கள் அந்தணர்களைக் கொல்வார்கள். அதன்பிறகு, தங்களுக்குப் பொருத்தமான அவர்களது {அந்தணர்களின்} உடைமைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். சூத்திரர்களால் ஒடுக்கப்படும் மறுபிறப்பாளர்கள்(மூனு்ற வுரு்ணுது்துர்ரமு்), அச்சத்தால் துயருற்று, "ஓ", "அய்யோ" என்று கதறியபடி, பாதுகாக்க யாருமின்றி உலகத்தில் திரிவார்கள். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கி, தீயவர்களாகவும், கடுமையானவர்களாகவும் ஆகி, விலங்கு வாழ்வு வாழ்வார்கள். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள் கூட, கள்வர்களால் துன்புற்று, காக்கைகளைப் போலப் பயத்தால் வேகமாகப் பறந்து, நதிகளிலும், மலைகளிலும், அடையமுடியாத கடினமான பகுதிகளிலும் தஞ்சமடைவார்கள். தீய ஆட்சியாளர்களால் கடுமையான வரிச்சுமைக்கு எப்போதும் உட்படுத்தப்படும் மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள், , அந்தப் பயங்கரமான நேரங்களில், அனைத்து பொறுமையையும் இழந்து, தகாத செயல்கள் புரிந்து, சூத்திரர்களின் சேவகர்கள் ஆவார்கள். சூத்திரர்கள் சாத்திரங்களை விளக்குவார்கள், அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்து அதைக் கேட்பார்கள். அது போன்ற விளக்கவுரைகளைக் கேட்டு, அவற்றைத் தங்கள் வழிகாட்டிகளாக எண்ணி, தங்கள் கடமைக்கான வழிகளை நிர்ணயிப்பார்கள். தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களாவார்கள், அனைத்துப் பொருட்களின் வழிகளும் முரண்பாடாகவே இருக்கும். யுக முடிவின் போது, சூத்திரர்கள், பிராமணர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்வதை நிறுத்துவார்கள். பெரு முனிவர்களின் ஆசிரமங்கள், அந்தணர்களின் கல்விக்கூடங்கள், தேவர்களுக்குப் புனிதமான இடங்கள், வேள்வி மண்டபங்கள், புனிதமான குளங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை மறைத்து கல்லறைகளும், எலும்புகள் கொண்ட நினைவுச்சின்னங்களும், சிதைவடைந்த தூண்களுமே இருக்கும். தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் எதுவும் அங்கே இருக்காது. இவை அனைத்தும் யுகமுடிவின் போது நடைபெறும், இவை அனைத்தும் யுக முடிவின் குறீயீடுகள் என்பதை அறிந்து கொள்வாயாக. {கலி} யுக முடிவு வரும்போது, கடுமையாகும் மனிதர்கள், அறத்தை இழந்து, அனைத்தையும் உண்ணும் ஊனுண்ணிகளாகி {புலால் உண்பவர்களாகி}, போதைதரும் பானங்களுக்கு அடிமையாவார்கள். , மலருக்குள் மலரும், கனிக்குள் கனியும் உண்டாகும் அப்போது யுகம் ஒரு முடிவுக்கு வரும். யுக முடிவு நெருங்கும்போது, காலமற்ற காலத்தில் மேகங்கள் மழையைப் பொழியும். அந்நேரத்தில், மனிதர்களின் விழாச் சடங்குகள் சரியான உரிய வரிசையில் நடக்காது. சூத்திரர்கள் பிராமணர்களுடன் மோதுவார்கள். உலகம் முழுவதும் மிலேச்சர்கள் நிறைந்ததாகும். வரிச்சுமையின் காரணமாக அந்தணர்கள் பயத்தில் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடுவார்கள். மனிதர்களுக்குள் இருந்த வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து அவர்கள் நடத்தைகள் அனைத்தும் ஒன்றாகும். இப்படிப் பாதிப்படைந்த உலகத்தில், நடத்தையில் நேர்மையற்ற காட்சிகள் எங்கும் காணப்படும். சீடர்கள் குருவின் அறிவுரைகளை இல்லாமல் செய்து {ஏற்காமல்}, அவர்களை {குருக்களை} காயப்படுத்தக்கூட முயல்வார்கள். வறிய நிலையிலுள்ள குருக்களை மனிதர்கள் அவமதிப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள், சம்பந்திகள் ஆகியோர், ஒரு மனிதன் சேகரித்த செல்வத்துக்காக அவனிடம் நட்புடன் இருப்பார்கள். யுக முடிவு வரும்போது, அனைவரும் தேவையில் இருப்பார்கள். தொடுவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் சுடர்விட்டபடி இருக்கும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் ஒளியற்றே இருக்கும். கோள்களும் கோள் சேர்க்கைகளும் அமங்களமாக இருக்கும். காற்றின் பாதைகள் குழப்பமுற்று கலங்கிப் போகும், தீமையை முன் குறித்தபடி எண்ணிலடங்கா எரிகற்கள் வானத்தில் ஒளிர்ந்தபடி செல்லும். சூரியன், அதே வகைக் கொண்ட மேலும் ஆறு சூரியன்களுடன் தோன்றும். சுற்றிலும் முழக்கங்களும், நெருப்பும் ஏற்படும். சூரியன் எழும் மணியிலிருந்து மறைவது வரை ராகுவால் மறைக்கப்பட்டிருப்பான். ஆயிரம் கண் கொண்ட தெய்வம் {இந்திரன்}, காலமற்ற காலத்தில் மழையைப் பொழிவான். யுக முடிவு வரும்போது, பயிர்கள் அபரிமிதமாக வளராது. யுக முடிவு வரும்போது, ராகு சூரியனை காலமற்ற காலத்தில் விழுங்குவான். அனைத்துப் புறங்களிலும் நெருப்புகள் சுடர்விட்டு எரியும். பயணிகளுக்கு, அவர்கள் கேட்டாலும் உணவும், குடிநீரும், உறைவிடமும் கிடைக்காததால், தங்கள் தேவைகளால் உந்தப்பட்டு வழியில் படுத்துக் கிடப்பார்கள். யுக முடிவு வரும்போது, காகங்கள், பாம்புகள், கழுகுகள், ராஜாளிகளும் பிற விலங்குகளும் பறவைகளும் முரண்பட்ட பயங்கராமன ஒலியெழுப்பும். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பணியாட்களைக் கைவிட்டுத் துறப்பார்கள். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, யுகத்தின் முடிவு வரும்போது, மனிதர்கள், தாங்கள் தொழில் செய்யும் நாடுகள், திசைகள், நகரங்களை விட்டு, புதியவற்றை {புதிய நாடு, திசை, நகரம் ஆகியவற்றை} ஒன்றன் பின் ஒன்றாக அடைவார்கள். மனிதர்கள் "ஓ பிதாவே" , "ஓ சுதனே" என்று உச்சரித்தவாறு உலகமெங்கும் திரிந்து, அதே போன்ற இன்னும் பல பயங்கரமான அலறல்களை ஒலிப்பார்கள். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-30 ... மகாபாரதம்-வனபர்வம் .. கலியுகம் பற்றி யுதிஷ்டிரருக்கும் மார்க்கண்டேயருக்கும் இடையே நடந்த உரையாடல் .. அந்தப் பயங்கரமான அழிவுகாலங்கள் காலங்கள் முடிந்த பிறகு, புதிய படைப்புகள் தொடங்கும். மனிதர்கள் மீண்டும் படைக்கப்பட்டுப் பிராமணர்களில் தொடங்கும் நால்வகையாகப் பிரிவார்கள். அந்நேரத்தில், மனிதர்கள் அதிகரிக்கவும், மகிழ்ச்சிக்குத்தக்க முன்ஜாக்கிரதையோடு, மீண்டும் அனுகூலம் பெற்றவர்களாவார்கள். சூரியன், சந்திரன், பிருஹஸ்பதி {குரு = வியாழன் = jupiter} ஆகியவை ஒரே ராசிக்குள் {கடக ராசிக்குள்} புகுந்து பூச நட்சத்திரத்தில் {எட்டாவது நட்சத்திரத்தில்} ஒன்றாக இருக்கும்போது கிருத காலம் தொடங்கும். காலத்துக்குகந்த மழை பொழிய மேகங்கள் கூடும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் மங்களகரமான நிலையை அடையும். கோள்களும், தங்கள் சுற்றுப்பாதையில் முறையாகச் சுழன்று, மிகவும் மங்களகரமாக நிலையை அடையும். சுற்றிலும் செழுமையும், அபரிமிதமான ஆரோக்கியமும் அமைதியும் இருக்கும். பிறகு, நியமிக்கப்பட்ட நேரத்தில் கல்கி என்ற பெயர் படைத்த அந்தணர் பிறப்பார். அவர் விஷ்ணுவைப் புகழ்ந்தபடி, பெரும் சக்தியும், புத்திக்கூர்மையும், பெரும் பராக்கிரமும் கொண்டவராக இருப்பார். அவர் ஒரு மங்களகரமான அந்தணக் குடும்பத்தில் சம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். வாகனங்கள், ஆயுதங்கள், வீரர்கள், தளவாடங்கள், பாதுகாப்புக் கவசங்கள் போன்றவை அவர் நினைக்கும்போது அவருக்குக் கிடைக்கும். அவர் மன்னர்களுக்கெல்லாம் மன்னராகி, அறத்தின் பலத்தால் எப்போதும் வெற்றி பெறுபவராக இருப்பார். அவர் மீண்டும் வகைகளை {வர்ணங்களை} மீட்டு, உயிரினங்கள் நிறைந்த, போக்கில் முரண்பாடு கொண்ட பூமியில் அமைதியை ஏற்படுத்துவார். பெரும் அறிவாற்றல் கொண்ட அந்தப் பிரகாசமிக்க அந்தணர் {கல்கி} தோன்றியதும், அனைத்தையும் அழிப்பார். அவரே அனைத்தையும் அழிப்பவராகவும், புதிய யுகத்தைத் தொடங்கி வைப்பவராகவும் இருப்பார். பிராமணர்கள் சூழ இருக்கும் அந்த அந்தணர் {கல்கி}, தாழ்ந்த இழிவான மனிதர்கள் எங்கெல்லாம் தஞ்சமடைந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அந்த மிலேச்சர்கள் அனைவரையும் அடியோடு அழிப்பார். திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை வேரோடு அழித்த பிறகு, ஒரு பெரும் அசுவமேத வேள்வியில், இந்தப் பூமியை கல்கி அந்தணர்களுக்குக் கொடுப்பார். புனிதமான காரியங்களைச் செய்து சிறந்த புகழைக் கொண்ட கல்கி, சுயம்புவால் விதிக்கப்பட்ட மங்களகரமான புதிய அருளாட்சியை நிறுவிய பிறகு, காண்பதற்கினிய கானகத்திற்குள் புகுவார். பிராமணர்களால் திருடர்களும், கொள்ளையர்களும் வேரோடு ஒழிக்கப்பட்ட பிறகு, பூமியெங்கும் செழிப்பாக இருக்கும். இந்தப் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் அவரது {கல்கியின்} நடத்தையைப் பின்பற்றுவர். இந்த உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்திய பிறகு, பிராமணர்களில் புலியான கல்கி, மான் தோலையும், ஈட்டிகளையும், சூலங்களையும் அங்கேயே விட்டு, அந்தணர்களில் முதன்மையானவர்களால் புகழப்பட்டபடி பூமியெங்கும் சுற்றுவார். அவர் {கல்கி} அந்தணர்களுக்குத் தக்க மரியாதைகளைச் செய்து, திருடர்களையும் கொள்ளையர்களையும் கொல்வதிலேயே முழு நேரமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவர் {கல்கி}, திருடர்களையும், கொள்ளையர்களையும் கொன்று "ஓ! தந்தையே", "ஓ! தாயே", "ஓ! மகனே" என்று இதயத்திலிருந்து கதற வைப்பார். அதே போல, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பாவங்கள் வேரோடு ஒழிக்கப்பட்டு, கிருத காலத்தின் தொடக்கத்தில் அறம் தழைக்கும். மனிதர்கள் மீண்டும் அறச் சடங்குகள் பயில ஆரம்பிப்பார்கள். கிருத காலத்தில், நன்றாகப் பதியமிட்ட தோட்டங்களும், வேள்வி மண்டபங்களும், பெரிய குளங்களும், அந்தணப் புராணங்களை வளர்க்கும் கல்விச்சாலைகளும், தடாகங்களும், கோவில்களும் எங்கும் மீண்டும் தோன்றும். விழாக்களும், வேள்விச்சடங்குகளும் மீண்டும் செய்யத்தொடங்கப் படும். அந்தணர்கள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஆவார்கள். மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்}, தவச்சடங்குகளுக்குத் தங்களை அர்ப்பணித்து முனிவர்களாவார்கள். இழிந்தவர்களால் நிரம்பியிருந்த தவசிகளின் ஆசிரமங்கள் மீண்டும் உண்மை நிறைந்த மனிதர்களின் இல்லங்களாகும். பொதுவாக மனிதர்கள் உண்மையை {சத்தியத்தை} போற்றவும் புகழவும் செய்வார்கள். நிலத்தில் தூவப்படும் விதைகள் அனைத்தும் முளைக்கும். அனைத்து வகைப் பயிர்களும் எல்லாக் காலங்களிலும் வளரும். தானம், தவங்கள், நோன்புகள் ஆகியவற்றுக்கு மனிதர்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அறம்சார்ந்த ஆன்மாக்களாலும், எப்போதும் உற்சாகமாக இருக்கும் மனிதர்களாலும் வேள்விகள் நடத்தப்படும். பூமியின் ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை அறம் சார்ந்து அரசாள்வார்கள். அப்படிப்பட்ட கிருத காலத்தில் வைசியர்கள் தங்கள் வகைக்கு உண்டான செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் ஆறு வகைக் கடமைகளுக்கு (கற்பது, கற்பிப்பது, தானாக முன்வந்து வேள்விகள் நடத்துவது, பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, அறப்பணிகள் செய்வது, பரிசுகளை ஏற்பது ஆகிய ஆறு வகைக் கடமைகளுக்குத்) தங்களை அர்ப்பணிப்பார்கள். க்ஷத்திரியர்கள் பராக்கிரமச் செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். சூத்திரர்கள், மூன்று (உயர்ந்த) வகையினருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணிப்பார்கள். இவையே, ஓ! யுதிஷ்டிரா, கிருத, திரேதா, துவாபர மற்றும் தொடரும் {கலி} காலங்களின் வழிகளாகும். இப்போது நான் உனக்கு அனைத்தையும் விவரித்து விட்டேன். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-31 ... மகாபாரதம்-வனபர்வம் .. {யுதிஷ்டிரன்}, "ஓ! முனிவரே {மார்க்கண்டேயரே}, . நான் எனது குடிகளைக் காக்க வேண்டும் என்றால், நான் எதுபோன்ற நடத்தை வழிகளைப் பின்பற்ற வேண்டும்.? நான் எனது வகைக்கான {க்ஷத்திரியர்களின்} கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்க நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான். இதைக் கேட்ட மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "அனைத்து உயிரனங்களுக்கும் நன்மை செய்ய உன்னை நீ அர்ப்பணித்து, அவற்றிடம் கருணையோடு இரு. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்து, எதையும் வெறுக்காதே. பேச்சில் உண்மையுடனும், எளிமையாகவும், ஆசைகளை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொண்டும், எப்போதும் உனது மக்களைப் பாதுகாப்பதில் உன்னை அர்ப்பணித்துக் கொள். அறம் பயின்று, பாவங்களைக் கைவிடு. மூதாதையரையும், தெய்வத்தையும் வழிபடு. அறியாமையிலும் கவனமின்மையாலும் நீ எதையெல்லாம் செய்தாயோ, அவற்றையெல்லாம் நீ செய்யும் அறப்பணிகளால் கழுவு. பெருமை மற்றும் கர்வத்தைக் கைவிட்டு, பணிவு மற்றும் நன்னடத்தையைக் கைக்கொள். முழு உலகத்தையும் அடிபணியச் செய்து இன்புற்றிரு, மகிழ்ச்சி உனதாகட்டும். இதுவே அறத்திற்கு உடன்படும் நடத்தை போக்காகும் {நடத்தையாகும்}. அறம் சார்ந்ததாக இதுவரை கருதப்பட்டு வந்ததையும், இனிமேல் கருதப்படப் போவதையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன். கடந்த காலம் சம்பந்தமாகவோ எதிரகாலம் சம்பந்தமாகவோ நீ அறியாதது எதுவுமில்லை. காலத்தால் துன்புறுத்தப்படும்போது, விவேகிகள் {ஞானம் கொண்டோர்} அதில் மூழ்கிப் போய்விடுவதில்லை. சொர்க்கவாசிகளும்கூட {தேவர்களும்கூட} காலத்தை விஞ்ச முடியாது. காலம் அனைத்து உயிரினங்களையும் துன்புறுத்துகிறது. ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உண்மை {சத்தியம்} சம்பந்தமாக நான் சொன்னவற்றில் உனது மனது சந்தேகம் கொள்ள வேண்டாம். சந்தேகம் உனது இதயத்தை அடைய நீ அனுமதித்தால், உனது அறம் குறையும். .. மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "பயனற்ற வாழ்வு நான்கு{4} வகைப்படும். பயனற்ற தானம் பதினாறு{16} வகைப்படும். மகனில்லாதவன் வாழ்வு பயனற்றது {1}; அறம் வழுவுபவர்கள் வாழ்வு பயனற்றது {2); அடுத்தவன் உணவில் வாழ்பவன் வாழ்வு பயனற்றது {3}; கடைசியாக, தனக்காக மட்டுமே சமைத்து, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உணவளிக்காமல், அவர்களுக்கு முன்பாக உணவருந்துபவன் வாழ்வும் பயனற்றது {4}. .. அறநோன்புகள் பயில்வதிலிருந்து விழுந்தவனுக்குச் செய்யப்படும் தானம் {1}, தவறாக ஈட்டிய செல்வத்தில் செய்யப்படும் தானம் {2} ஆகிய இரண்டும் பயனற்றதே. விழுந்த {அறம் வழுவிய} பிராமணன் {3}, திருடன் {4}, போலி ஆசான் {5} ஆகியோருக்குச் செய்யப்படும் தானமும் பயனற்றதே. பொய்யன் {6}, பாவி {7}, நன்றியில்லாதவன் {8}, கிராமத்தில் வசிக்கும் அனைத்து வகை மக்களுக்கும் வேள்வி செய்து கொடுப்பவன் {9}, வேதங்களை விற்பவன் 1 {10}, சூத்திரனுக்காகச் சமைப்பவன் {11}, பிறப்பால் அந்தணனாக இருந்து, தனது வகைக்குரிய தொழிலைச் செய்யாதவன் {12}, ஆகியோருக்கு அளிக்கப்படும் தானம் பயனற்றதே. ஒரு பெண் பூப்படைந்த பின்னர்த் திருமணம் செய்து கொள்பவன் {The one that has married a girl after the accession of puberty } {13}, (பெண் பூப்படைவதற்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறப்படுகிறது) பெண்கள் {14}, பாம்புடன் விளையாடுபவன் {15}, வீட்டு ஊழியம் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவன் {16} ஆகியோருக்குச் செய்யப்படும் தானமும் பயனற்றதே. இந்தப் பதினாறு {16} வகைத் தானங்களும் எச்சிறப்பையும் {எந்த பலனையும்} கொடுக்காது. . மனதில் இருள் சூழ்ந்த {அஞ்ஞானம் கொண்ட} மனிதன் ஒருவன், அச்சத்தாலோ, கோபத்தாலோ தானமளித்தால், தாயின் கருவறைக்குள் இருந்து அத்தகு தானத்திற்கான பலனை அனுபவிப்பது போல அனுபவிப்பான் {அதனால் எந்தப் பலனும் இருக்காது}. {எச்சூழ்நிலையிலும்} ஒரு மனிதன் அந்தணர்களுக்குத் தானமளித்தால், அவன் தனது முதிர்ந்த வயதில் அதன் கனியைச் சுவைக்கிறான். எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சொர்க்கத்தின் வழியை அடைய வேண்டும் என்று விரும்பும் ஒருவன், எந்தச் சூழ்நிலையானாலும், தான் விரும்பும் அனைத்தையும் அந்தணர்களுக்குக் கொடுக்கலாம்" என்றார் {மார்க்கண்டேயர்}. ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-32 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, "நால்வகை மனிதர்களிடமும் தானமேற்கும் அந்தணர்கள், அடுத்தவர்களையும் தங்களையும் எவ்வழியில் பாதுகாக்கிறார்கள்?" என்று கேட்டான். மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "1.ஜபம் 2, மந்திரங்கள் 3, ஹோமம் 4, வேத கல்வி ஆகியவற்றின் மூலம் அந்தணர்கள் ஒரு வேதப் படகைக் கட்டுகிறார்கள். அதைக் கொண்டு, அவர்கள் தங்களையும் பிறரையும் காக்கின்றனர். அந்தணர்களைத் திருப்திசெய்யும் மனிதனிடம் தேவர்களும் திருப்தி அடைகிறார்கள். உண்மையில், ஓர் மனிதன், ஓர் அந்தணனின் கட்டளையின் பேரிலேயே சொர்க்கத்தை அடைகிறான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது உடல் கபம் {சளி} உண்டுபண்ணும் மந்தமான சிலேத்தும உடலாகவே இருந்தாலும் கூட, நீ பித்ருக்கள், தேவர்கள் ஆகியோரை வழிபடுவதாலும், அந்தணர்களை மதிப்பதாலும், நிச்சயம் நித்திய அருள் இருக்கும் உலகங்களை நீ அடைவாய். அறத்தையும், சொர்க்கத்தையும் விரும்புபவன் அந்தணர்களைப் வணங்க வேண்டும். ஒருவன் சிரத்தங்களின் {சிரார்த்தங்களின்} போது, சபிக்கப்பட்டவர்களையும், விழுந்தவர்களையும் விலக்கினாலும்கூட, அந்தணர்களுக்குக் கவனமாக உணவளிக்க வேண்டும். அதீத வெள்ளையாக, அதீத கருப்பாக இருப்பவர்களையும், நோய்ப்பட்ட நகங்கள் {சொத்தை நகங்கள்} கொண்டோரையும், குஷ்டரோகிகளையும், ஏமாற்றுக்காரர்களையும், கைம்பெண்களுக்கோ, உயிருடன் இருக்கும் பல கணவர்களைக் கொண்ட பெண்ணுக்கோ முறைகேடாகப் பிறந்தவர்களையும், பிச்சை எடுத்துத் தங்களைத் தாங்கிக் கொள்பவர்களையும் {சிரார்த்தங்களின் போதும்} கவனமாக விலக்க வேண்டும். கண்டிக்கத்தக்க சிரார்த்தங்கள், அதைச் செய்யும் ஒருவனை எரிபொருளை உட்கொள்ளும் நெருப்பைப் போல உட்கொண்டுவிடும். ஓ! யுதிஷ்டிரா, நீ யாருக்குத் தானமளிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறேன் கேள். .. வேதங்கள் அனைத்தையும் அறிந்தவன், எந்த அந்தணன், தானமளிப்பவனையும் தன்னையும் காப்பானோ அவனுக்குத் தானம் அளிக்க வேண்டும். எவன் கொடுப்பவனையும், தன்னையும் கரையேற்றுவானோ அந்தச் சக்தி உள்ளவனுக்கே தானமளிக்க வேண்டும். ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, விருந்தினரை உபசரிப்பது என்ற தெளிந்த நெய்யை ஏற்பதைப் போல, மலர்கள், சந்தனம், மற்றும் பிற நறுமணப் பொருட்களைப் புனித நெருப்பு ஏற்பதில்லை. நீ விருந்தினர்களை உபசரிக்க முயல வேண்டும். விருந்தினர்கள் தங்கள் பாதங்களைக் கழுவி கொள்ள நீர் கொடுப்பது, (களைத்த) தங்கள் கால்களில் தடவி கொள்ள நெய் கொடுப்பது, இருள் நிறைந்த நேரங்களில் ஒளி கொடுப்பது, உணவு மற்றும் உறைவிடம் கொடுப்பது ஆகியவற்றைச் செய்யும் மனிதன் யமனிடம் செல்ல வேண்டியதில்லை. தேவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மலர்க்காணிக்கைகளை (வழிபாட்டிற்குப் பிறகு) அகற்றல், அந்தணன் உண்ட மிச்சத்தை அகற்றல், (ஒரு அந்தணனுக்காக) நறுமணத் தைலங்களுடன் காத்திருதல், அந்தணனின் உறுப்புகளைப் பிடித்துவிடல் ஆகிய ஒவ்வொன்றும், பசுதானத்தைவிட {பலன் கொடுக்கும்} தகுதியால் அதிகமானவை. கபில பசுவை {காராம்பசுவை} தானமளிப்பவன், சந்தேகமற தன்னைக் காத்துக் கொள்கிறான். எனவே, ஒருவன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கபில பசுவை {காராம்பசுவை} அந்தணர்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். ஒருவன் நல்ல குலத்தில் பிறந்தவனுக்கும், வேதங்களை அறிந்தவனுக்கும், ஏழ்மையானவனுக்கும், மனைவி மக்கள் என்ற சுமையுடன் வாழும் இல்லற வாழ்வு வாழ்பவனுக்கும், தினமும் புனித நெருப்பை வணங்குபவனுக்கும், உனக்கு எந்தச் சேவையும் செய்யாதவனுக்கும் தானமளிக்க வேண்டும். நீ எப்போதும் இது போன்றவர்களுக்கே கொடுக்க வேண்டும். செழிப்புடன் இருப்பவர்களுக்குக் கொடுக்கக்கூடாது. ஓ! பரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, செழிப்பானவனுக்குக் கொடுப்பதில் என்ன தகுதி உண்டாகும்? கற்ற அந்தணனருக்கு நிலத்தைத் தானம் அளிப்பவன், தனது விருப்பங்கள் அனைத்தும் ஈடேறப்பட்டவனாவான். கால்கள் அழுக்கடைந்து, பலவீனமடைந்த உறுப்புகளைக் கொண்ட களைத்த பயணி, தனக்கு உணவு தரக்கூடியவனின் பெயரைக் கேட்பான். அவனுக்குப் பெயரைச் சொல்லும் மனிதர்கள் உண்டு. அப்படிக் களைத்துப் போய் வருபவனுக்கு, உணவு தருபவன் பெயரைச் சொல்லும் விவேகி, உணவைத் தானமளிப்பவன் அடையும் அதே அளவு தகுதியை அடைவான். எனவே நீ, பிற வகைத் தானங்களைத் தவிர்த்து உணவைத் தானமாகக் கொடு {அன்னதானம் செய்}. உணவைத் தானம் செய்வதில் கிடைப்பதை விட (தானங்களால் எழும்} பெரிய தகுதிகள் கிடைப்பதில்லை. தனது சக்திக்குட்பட்டு ஒருவன் நன்கு சமைத்த சுத்தமான உணவைக் கொடுப்பானானால், அவனது செயலின் பலனாகப் பிரஜாபதியின் (பிரம்மனின்) தோழமையைப் பெறுகிறான். உணவை விட உயர்ந்தது எதுவுமில்லை. எனவே, உணவே {தானமளிக்கப்படுவதில்} முதன்மையானதாக, அனைத்துப் பொருட்களுக்கும் முதன்மையானதாகக் கொள்ளப்படுகிறது. உணவே பிரஜாபதிதான் என்றும் சொல்லப்படுகிறது. பிரஜாபதியே வருடமாகக் கருதப்படுகிறான். வருடமே வேள்வி. அனைத்தும் வேள்வியிலேயே நிலைபெற்றிருக்கின்றன. வேள்வியினாலே அனைத்து உயிரினங்களும், அசைவன மற்றும் அசையாதனவும் தங்கள் பிறப்பை அடைகின்றன. இதன் காரணமாகவே, உணவு அனைத்திலும் முதன்மையானது என்று நாம் கேள்விப்படுகிறோம். தடாகங்களையும், பெரும் நீர்நிலைகளையும், குளங்களையும், கிணறுகளையும், உறைவிடம் மற்றும் உணவையும் தானமளிப்பவனும், இனிமையான வார்த்தைகளைப் பேசுபவனும் யமனின் எச்சரிக்கைகளைக் கேட்க மாட்டார்கள் {யமன் எச்சரிக்கமாட்டான்}. எவன் தனது உழைப்பால் ஈட்டிய அரிசியையும், செல்வத்தையும், நன்னடத்தைக் கொண்ட அந்தணனுக்குத் தானமளிப்பானோ அவனிடம் இந்தப் பூமி திருப்தியுடன் இருக்கிறாள். அவள் அவன் மீது செல்வத்தைப் பொழிகிறாள். உணவைத் தானமளிப்பவன் {அன்னதானம் செய்பவன்} முதலில் நடக்கிறான், அவனுக்குப் பின்னால் உண்மை பேசுபவனும், கோராத நபர்களுக்குத் தானமளிப்பவனும் நடக்கிறார்கள். ஆனால் அந்த மூவரும் ஒரே இடத்திற்கே செல்கிறார்கள்" என்றார் {மார்க்கண்டேயர்} ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-33 ... மகாபாரதம்-வனபர்வம் .. யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, அந்தணன் தன்னை எப்போதும் சுத்தனாக வைத்துக் கொள்வதற்கு என்ன சுத்திகரிப்பு முறை உள்ளது? .. மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "பேச்சுச் சுத்தம், செயல் சுத்தம், நீரைப் பயன்படுத்துவதால் வரும் சுத்தம் எனச் சுத்தம் மூன்று வகைப்படும். இந்த மூன்று வகைச் சுத்திகரிப்புகளையும் செய்யும் ஒருவன் சந்தேகமற சொர்க்கத்தை அடைகிறான். காலையிலும் மாலையிலும் சந்தியா தேவியை வணங்கி {சந்தியா வந்தனம் செய்து}, வேதங்களின் தாயான புனிதமான காயத்ரி தேவியைத் தியானத்தன்மையோடு உரைக்கும் {காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்} அந்தணன், அவளால் சுத்திகரிக்கப்பட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபடுவான். கடல்களோடு கூடிய இந்த முழு உலகையும் அவன் தானமாகப் பெற்றிருந்தாலும், அதன்காரணமாக அவன் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்க மாட்டான். சூரியன் உள்ளிட்ட தெய்வீகக் கோள்கள் அமங்களமாகி, ஒருவனுக்குப் பகையாக இருந்தாலும், இது போன்ற அவனது செயல்களால் அவை விரைவில் மங்களகரமானவையாகவும், சாதகமாகவும் மாறும். அதே வேளையில், ஏற்கனவே மங்களகரமாகவும் சாதகமாகவும் அந்த நட்சத்திரங்கள் இருந்தால், இதுபோன்ற அவனது செயல்களால், அவை மேலும் அதிக மங்களகரமாகவும், அதிகச் சாதகமாகவும் மாறும். விலங்குகளை உணவாக உண்ணும் பயங்கரமான ராட்சசர்களும், கடும் முகம் படைத்தவர்களும், பருத்த உடல் உடையவர்களும் இதுபோன்ற தூய்மையைப் பயிலும் அந்தணனுக்குத் தீங்கு செய்ய இயலாது. அந்தணர்கள் சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்றவர்கள். கல்வி கொடுப்பதாலோ, வேள்வி நடத்துவதாலோ, தானம் பெறுவதாலோ அவர்கள் எந்தக் குறைவும் அடைய மாட்டார்கள். அந்தணன் வேதமறிந்திருக்கிறானோ, அறியாதிருக்கிறானோ, சுத்தமாக இருக்கிறானோ, அசுத்தமாக இருக்கிறானோ, அந்தணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் என்பதால், எப்போதுமே அவர்கள் அவமதிக்கப்படக் கூடாது. இறந்தவர்களின் உடலை எரிக்க இடப்படும் நெருப்புத் தூய்மையற்றதாகக் கருதப்படுவதில்லை. அதே போல, ஒரு அந்தணன் கற்றவனோ, அறியாதவனோ அவன் எப்போதும் சுத்தனே ஆவான். அவன் பெரியவனும், தேவனுமாவான். சுவர்களாலும், வாயில்களாலும், அரண்மனைகளாலும் நிறைந்த நகரங்கள், அந்தணர்களற்று இருந்தால், தங்களது அழகை இழக்கும். உண்மையில்,தங்கள் வகைக்குரிய கடமைகளைச் சரியாகச் செய்து, கல்வி கற்று, தவத்தகுதியுடன் இருக்கும் வேதமறிந்த அந்தணர்கள் வசித்தால்தான் அது நகரமாகும். கற்ற அந்தணன் வசிக்கும் இடம், காடாகவோ, புல்வெளியாகவோ இருந்தால்கூட அது நகரம் என்று அழைக்கப்படும். , அவ்விடம் தீர்த்தமாகவும் ஆகும். பாதுகாப்பைக் கொடுக்கும் மன்னனையும், தவத்தகுதி படைத்த அந்தணனையும் அணுகி, அந்த இருவருக்கும் வழிபாட்டைச் செலுத்தும் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தையும் உடனே அழிக்கிறான். ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-34 ... மகாபாரதம்-வனபர்வம் .. மார்க்கண்டேயர் யுதிஷ்டிரரிடம் கூறினார்- ... புனிதத் தீர்த்தங்களின் நீர்க்காணிக்கைகள் {பானபலி} செலுத்துவதையும், புனிதமானவர்களின் பெயர்களைச் சொல்வதையும், நல்லவர்கள் மற்றும் அறம்சார்ந்தவர்களுடன் உரையாடுவதையும் பாராட்டுக்குரிய தகுதிவாய்ந்த செயல்கள் என்று கற்றவர்கள் சொல்கிறார்கள். . அறம்சார்ந்து நேர்மையாக இருப்பவர்கள், தங்களைப் போன்றோருடன் இருக்கும் தங்கள் தோழமையை எப்போதும் பரிசுத்தமான நீரால் புண்ணியமாக்கப்பட்ட புனிதத் தொடர்பாகக் கருதுகிறார்கள். திரி தண்டம் சுமந்து , நோன்புகள் பயின்று, நீர்க்காணிக்கைகள் கொடுத்து, நெருப்பை வணங்கி, கானகத்தில் வசித்து, உடல் மெலிந்து போவதெல்லாம், ஒருவன் இதயச் சுத்தம் இல்லாமல் இருந்தால் பயனில்லாமலேயே போகும். . சுத்தம் இல்லாமை கடினமானதே; சுத்தமில்லாமல் கிடைக்கும் சுகம் எளிதானது கிடையாது {சுத்தமில்லாமல் சுகம் கிடைக்காது. அது மோட்சத்தைக் கொடுக்காது}. . ஆறு புலன்களின், மனது மட்டுமே எளிதாகத் தூண்டப்படும். அதுவே மிக ஆபத்தானதும் கூட வார்த்தையாலோ, செயலாலோ, ஆன்மாவாலோ பாவமிழைக்காத உயர் ஆன்ம மனிதர்கள் தவங்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறதே ஒழிய, உடலை அழிக்கும் உபவாசங்களையோ நோன்புகளையோ அவர்கள் செய்வதில்லை. . தனது உறவினர்களிடம் அன்பில்லாத ஒருவன், தனது உடலை சுத்தமாக வைத்திருந்தாலும் பாவத்திலிருந்து விடுபட மாட்டான். . கடும் இதயமே ஒருவனது தவத்திற்கு எதிரியாகும். தவம் என்பது உலக இன்பங்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல. எப்போதும் சுத்தமாகவும், அறம்சார்ந்தும் இருப்பவனும், தனது வாழ்நாள் முழுவதும் அன்பைப் பயில்பவனும் இல்லற வாழ்வு வாழ்ந்தாலும் முனிவரே ஆவர். அப்படிப்பட்ட மனிதன் தனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கிறான். . உபவாசங்களும், பிற நோன்புகளும் பாவங்களை அழிக்காது. இருப்பினும், அவற்றைப் பலமிழக்கச் செய்யும். மேலும் உடலின் சதைகளையும் இரத்தத்தையும் சுண்டச் செய்யும். . புனிதமற்ற இதயம் கொண்டவன், நோன்புகளின் பொருளை உணராமல் அவற்றை மேற்கொள்வது, தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்வதாகும். அத்தகு செயல்களைச் செய்வதால் அவன் அவனது பாவங்களில் இருந்து விடுபடுவதில்லை. அவன் வழிபடும் நெருப்பு, அவனது பாவங்களை உட்கொள்வதில்லை. . புனிதத்தன்மையாலும், அறத்தாலும் மட்டுமே ஒரு மனிதன் அருள் உலகங்களை அடைகிறான். உபவாசங்களும் நோன்புகளும் பயனற்றுப் போகும். கனிகளும், கிழங்குகளும் மட்டுமே உண்பது, மௌன விரதமிருப்பது, காற்றை மட்டுமே உண்பது, சிகை மழித்து {மொட்டையடித்து} இருப்பது, நிலையான வீட்டைப் புறக்கணிப்பது, தலையில் சடா முடி தரிப்பது, வானம் பார்க்கப் படுப்பது, தினமும் உபவாசம் இருப்பது, நெருப்பை வழிபடுவது, நீரில் மூழ்குவது, வெறுந்தரையில் படுப்பது ஆகியன மட்டுமே அதுபோன்ற பலனைத் தராது {அருள் உலகங்களை அடைய முடியாது}. . அறிவாலும் செயலாலும் புனிதத்தன்மையடைபவர்கள் மட்டுமே, நோய், பலவீனம், மரணம், உயர்ந்த நிலையை அடைதல் ஆகியவற்றை வெல்கிறார்கள். நெருப்பால் சுடப்பட்ட விதைகள் முளைக்காததைப் போல, அறிவால் சுடப்பட்ட வலிகள் ஆன்மாவைப் பாதிக்காது. குறைந்த காலம் வாழும் கடலின் நுரை போலவே, ஆன்மா இல்லாத செயலற்ற {மந்தமான} உடலும் மரக்கட்டை போன்றதே. . அனைவருக்குள்ளும் வசிக்கும் ஆன்மா; அந்த ஆன்மாவின் காட்சி {தரிசனம்} பெற்றவன், (வேதங்களின்} ஒரு தாள வரி {ஸ்லோகம் எனக் கொள்க} அல்லது பாதியின் உதவி பெற்றவன் ஆகியோருக்கு வேறு எதன் தேவையுமில்லை. சிலர் (வேதங்களின்} இரண்டே எழுத்துகளால் பரமாத்மாவின் அறிவைப் பெறுகிறார்கள்; சிலர் நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலுமான தாள வரிகளால் {சுலோகங்களால்} முக்தியை அடைகிறார்கள். . பரமாத்மாவை அறிதலே {அறியும் அறிவே} முக்திக்கான குறியீடாகும். தனித்தன்மையான ஞானம் கொண்ட பழங்கால மனிதர்கள், சந்தேகங்களால் சலனப்படுபவனுக்கு இவ்வுலகமும் கிடையாது; அடுத்த உலகமும் கிடையாது; அருளுலகமும் கிடையாது என்று சொல்கின்றனர். . பரமாத்மாவில் தன்னைக் காண்பவனின் நம்பிக்கையே முக்திக்குக் குறியீடாகும். வேதங்களின் உண்மையான பொருளை அறிந்தவன், அதன் உண்மையான பயன்பாட்டைப் புரிந்து கொள்கிறான். அப்படிப்பட்ட மனிதன், எரியும் காட்டைப் பார்க்கும் மனிதனைப் போல, வேதச் சடங்குகளைப் {வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கர்மங்களைப் {செயல்களைப்]} பார்த்து அஞ்சுகிறான். வறண்ட சொற்போர்களைத் தவிர்த்து, சுருதி மற்றும் ஸ்மிருதிகளில் ஆர்வம் செலுத்து. அறிவின் துணை கொண்டு, இரண்டாவதற்ற அழிவற்றவனை {பரமாத்மாவை} அறி. (அதை அறிந்த பிறகு) ஒருவனின் தேடல், குறைபாடுடைய வழிமுறைகளின் மூலம் வீணாகிறது. எனவே, ஒருவன் வேதங்களின் துணை கொண்டு அந்த அறிவை அடைய முயல வேண்டும். வேதங்களே பரமாத்மா; அவையே அவனது உடல்; அவையே உண்மை. விலங்கின் தன்மையால் கட்டுப்பட்டுள்ள ஆன்மா, வேதங்களில் கலந்திருக்கும் அவனை {பரமாத்மாவை} அறிய இயலாததாக இருக்கிறது. எனினும், அந்தப் பரமாத்மா சுத்தமான அறிவால் அறியத்தக்கவனாவான். வேதங்களில் சொல்லப்பட்டுள்ளபடி தேவர்களின் இருப்பும், உடல்களால் செய்யப்படும் செயல்களின் திறனும், செயல்பாட்டின் திறனும் அனைத்து யுகங்களிலும் கவனிக்கப்பட்டுள்ளது. இவற்றை விட்டுவிடுவதும், நிர்மூலமாக்குவதும் புலன்களின் {அறிவுகளின்} சுத்தத்தால் கோரப்படுகிறது. எனவே, புலன்களின் செயல்பாட்டை இடைநிறுத்தம் செய்வதே {நிறுத்துவதே} உண்மையான உபவாசமாகும். ஒருவன் தவத்தின் மூலம் சொர்க்கத்தை அடையலாம். ஒருவன் தானம் செய்வதால் இன்பநுகர் பொருட்களை அடையலாம். தீர்த்தங்களில் நீர்க்கடன் செலுத்துவதால் ஒருவனின் பாவங்கள் அழிக்கப்படலாம். ஆனால், முழுமையான விடுதலை என்பது, ஞானத்தைத் தவிர வேறெதாலும் அடைய முடியாது. .. ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-35 ... மகாபாரதம்-வனபர்வம் .. {யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம்}, "ஓ! புனிதமானவரே உயர்வானதும் அற்புதம் வாய்ந்ததுமான பெண்களின் அறம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். சூரியன், சந்திரன், காற்று, பூமி, நெருப்பு, தந்தை, தாய், குரு ஆகியவர்களும், தேவர்களால் விதிக்கப்பட்ட சில பொருட்களும் {சிலரும்}, தெய்வமே உருவம் கொண்டு வந்தது போல நமக்குத் தெரிகின்றனர். நமது மதிப்பிற்குரிய இவர்கள் அனைவரும் நமது சிறப்பான கவனத்திற்கு தகுதிவாய்ந்தவர்களே. ஒரே தலைவனை வணங்கும் {அன்பொழுகும்} பெண்களும் அப்படியே {கவனத்திற்குச் சிறந்த தகுதிவாய்ந்தவர்களே}. கற்புள்ள மனைவியர், கணவர்களுக்கு வழங்கும் வழிபாடு, பெறும் சிரமம் கொண்டது என நான் கருதுகிறேன். . ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, நன்னடத்தைக் கொண்ட பெண்கள் காட்டும் அக்கறையும், அதன் தொடர்ச்சியாகத் தங்கள் தாய் தந்தையரைக் கவனிக்கும் நல்ல மகன்களின் நடத்தையும் மிகவும் கடினமான செயல்திறன் கொண்டவை என எனக்குத் தோன்றுகிறது. . ஓ! அந்தணரே {மார்க்கண்டேயரே}, எப்போதும் உண்மை பேசி, முழுப் பத்து மாதங்கள் கருவுற்ற காலத்தைக் கழித்து, ஒரே தலைவனுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் அனைத்துப் பெண்களின் காரியங்களும், எதையும் விட கடினமானவையே. . பெரும் சிரமத்திற்குள்ளாகி, பெரும் வலியை உணரும் {அனுபவிக்கும்} பெண்கள், தங்கள் வாரிசுகளை ஈன்றெடுத்து பாசத்துடன் வளர்க்கிறார்கள். எப்போதும் தீச்செயல்களில் ஈடுபட்டு, அதனால் பொதுவெறுப்புக்கு உள்ளானவர்களாக {சில பெண்கள்} இருந்தாலும், மிகவும் கடினம் என நான் கருதும் அவர்களது கடமைகளைச் சாதித்து(குழந்தைகளை வளர்த்தல்) வெற்றியடைகிறார்களே! மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, உனது கேள்வி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நான் உண்மையில் அவை அனைத்தையும் குறித்துச் சொற்பொழிவாற்றுவேன். எனவே, {அவற்றை} நான் உனக்குச் சொல்லும்போது, நீ கேள். . சிலர் தாயை மேன்மையானவராகக் கருதுகிறார்கள், சிலர் தந்தையை அப்படிக் கருதுகிறார்கள். இருப்பினும், வாரிசைப் பெற்று வளர்த்தெடுக்கும் தாயின் செயல் அதிகக் கடினமானதே. . தந்தையரும், ஆன்மத் தவங்களாலும், தெய்வ வழிபாடுகளாலும், குளிர் வெப்பத்தைத் தாங்கிக் கொள்வதாலும், மந்திரங்கள் உச்சரிப்பதாலும், வேறு வழிகளாலும் பிள்ளைகளைப் பெறவே விரும்புகின்றனர்.(பெண்ணின் உதவியில்லாமல் குழந்தையை பெற்றெடுக்கும் வழக்கம் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளது) . இப்படிப்பட்ட வலிகளை உணர்ந்து {அனுபவித்து}, அடைவதற்கு அரிதான பிள்ளைகளை அடைந்த பிறகும், எப்போதும் தங்கள் மகன்களின் எதிர்காலம் குறித்தே {தாயும் தந்தையும்} கவலை கொள்கிறார்கள். . தந்தை, தாய் ஆகிய இருவரும் தங்கள் மகன்கள் புகழுடனும், சாதனைகளுடனும், செழிப்புடனும், வாரிசுகளுடனும், நல்லொழுக்கத்துடனும் {அறத்துடனும்} இருப்பதைக் காணவே விரும்புகிறார்கள். . தனது பெற்றோரின் {தாய் தந்தையரின்} எதிர்பார்ப்புகளை உணரும் மகன் அறம் சார்ந்தவனாவான். தந்தையும் தாயும் எந்த மகனிடம் திருப்தி கொள்கின்றனரோ, அவன் {அந்த மகன்} நித்தியமான புகழையும், நித்தியமான அறத்தையும் {கீர்த்தியையும் தர்மத்தையும்} இங்கேயும், இதற்கு அடுத்த உலகத்திலும் {இம்மையிலும் மறுமையிலும்} அடைகிறான். . பெண்களைப் பொறுத்தவரை, வேள்விகளாலோ, சிரார்த்தங்களாலோ, அல்லது உண்ணா நோன்புகளாலோ {விரதங்களாலோ} எந்தப் பலாபலனும் கிடையாது. தங்கள் கணவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமே அவர்கள் {பெண்கள்} சொர்க்கத்தை வெல்கிறார்கள். ஓ! மன்னா, ஓ! யுதிஷ்டிரா, இதை மட்டுமே நினைவில் கொண்டு, கற்புடைய பெண்டிரின் {பதிவிரதைகளின்} கடமைகளைக் கவனத்துடன் கேள்" என்றார் {மார்க்கண்டேயர்}. . கௌசிகர் என்ற பிராமணனுக்கு அறிவுரை கூறிய பெண்ணைப்பற்றி கூறத்தொடங்கினார்..{மார்க்கண்டேயர்}. ..... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-36 ... மகாபாரதம்-வனபர்வம் .. கற்புடைய பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் .. மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், கௌசிகர் என்ற பெயரில் ஓர் அறம் சார்ந்த துறவி இருந்தார். அவர் தன்னை வேத கல்விக்கு அர்ப்பணித்துக் கொண்டு, துறவை செல்வமாகக் கொண்டு அந்தணர்களில் வெகு மேன்மையானவராக இருந்தார். அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்} அனைத்து வேதங்களையும், அங்கங்களையும், உபநிஷத்துகளையும் கற்றறிந்தார். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு வேதம் உரைத்துக் கொண்டிருந்தபோது, அந்த மரத்தின் மேலே ஒரு பெண் கொக்கு இருந்தது. அந்நேரத்தில் அந்தப் பெண் கொக்கு அந்த அந்தணன் மீது எச்சமிட்டது. கொக்கைக் கண்ட அந்த அந்தணர் மிகவும் கோபம் கொண்டு அதற்குக் காயமேற்படுத்த எண்ணி, தனது கோபப்பார்வையை அந்தக் கொக்கின் மீது செலுத்தி, மனதால் தீங்கை நினைத்தார். அந்தக் கொக்கு உடனே தரையில் விழுந்தது. அப்படி அந்தக் கொக்கு மரத்தில் இருந்து விழுந்து, இறந்து போய் உணர்வற்றுக் கிடப்பதைக் கண்ட அந்த அந்தணர் {கௌசிகர்}, மனதால் இரக்கம் கொண்டார். பிறகு இறந்து போன கொக்கைக் கண்ட அந்த மறுபிறப்பாளர் {பிராமணர்}, "ஐயோ, கோபத்தாலும் துர்க்குணத்தாலும் ஒரு தீச்செயலைச் செய்துவிட்டேனே" என்று சொல்லி அழுதார்" .. "இந்த வார்த்தைகளைப் பலமுறை சொன்ன அந்தக் கற்ற அந்தணர் {கௌசிகர்}, பிறகு பிச்சை எடுப்பதற்காக ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். நற்குலத்தில் பிறந்தவர்களின் வீடுகளில் பிச்சையெடுக்கச் சென்ற அந்த அந்தணர் , முன்பே தான் அறிந்த ஒரு வீட்டினுள் நுழைந்தார். அவர் அந்த வீட்டினுள் நுழைந்ததுமே, "{பிச்சை} கொடு" என்று கேட்டார். . அவருக்கு ஒரு பெண், "நில்லும்" என்ற வார்த்தையால் பதிலுரைத்தாள். அந்த இல்லத்தரசி, பிச்சையிடுவதற்கான பாத்திரத்தைக் கழுவி கொண்டிருந்த போது, பசியால் துன்பப்பட்ட அவளது கணவன் திடீரென வீட்டினுள் நுழைந்தான். . அந்தக் கற்புடைய இல்லத்தரசி, தனது கணவனைக் கண்டதும், அந்தப் பிராமணனைக் கவனியாமல், தனது தலைவனுக்குக் கால்களையும் முகத்தையும் கழுவ நீர் கொடுத்து, இருக்கையும் கொடுத்தாள். பிறகு அந்தக் மங்கை, தனது தலைவனுக்கு முன்னால் சுவை நிறைந்த உணவையும், பானத்தையும் வைத்து, அவனது தேவைகளைக் கவனிக்க விரும்பி, அடக்கத்துடன் அவன் {கணவன்} அருகில் நின்றாள். கீழ்ப்படிதலுள்ள மனைவியான அவள் தினமும் தனது கணவன் உண்ட தட்டில் உள்ள மிச்சத்தை உண்டாள். தனது கணவனின் விருப்பங்களுக்கு எப்போதும் கீழ்ப்படியும் நடத்தை கொண்டவளான அவள், எப்போதும் தனது கணவனை மதித்து வந்தாள். அவளது இதயத்தின் அன்பு முழுவதும் தனது தலைவனை {கணவனை} நோக்கியே இருந்தது. . புனிதமான நடத்தையாலும், இல்லறக் கடமைகளில் நிபுணத்துவத்தோடும், விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டும், தனது கணவனுக்கு நன்மை பயப்பதையும், ஏற்புடையதையுமே அவள் எப்போதும் செய்து வந்தாள். அவள் கவனம் நிறைந்த உணர்வுகளுடன் தேவர்களை வணங்கி, விருந்தினர்கள், பணியாட்கள், மாமியார் மற்றும் மாமனாரின் தேவைகளை உணர்ந்து நடந்து கொண்டாள். . அந்த அழகிய மங்கை, தனது தலைவனின் {கணவனின்} சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவள், பிச்சைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்தணரைக் கண்டாள். அவரைக் கண்ட பிறகுதான், அவரைக் காத்திருக்கச் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. இவை அனைத்தையும் நினைவுகூர்ந்த அவள், {தான் மறந்ததை நினைத்து} வெட்கமடைந்தாள். . பிறகு அந்தப் பெரும் புகழுடைய கற்புள்ள பெண், பிச்சைக்காகக் கொடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அந்த அந்தணருக்குக் {பிச்சையைக்} கொடுத்தாள். அவள் அந்த அந்தணர் முன்பு வந்த போது, அவர் {கௌசிகர்}, "ஓ! பெண்களில் சிறந்தவளே, ஓ! அருளப்பட்டவளே! நான் உனது நடத்தையைக் கண்டு வியக்கிறேன்! "நில்லும்" என்று சொல்லி என்னை நிறுத்திவிட்டு, இன்னும் என்னை அனுப்பாமல் இருக்கிறாய்!" என்றார் {கௌசிகர்}. . அந்த அந்தணர் கோபத்தால் நிறைவதைக் கண்ட அந்தக் கற்புள்ள பெண் அவரைச் சமாதானம் படுத்த எண்ணி, "ஓ! கற்றவரே, என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். எனது கணவரே எனக்குத் தலைமையான தெய்வம். அவர் பசியோடும் களைப்போடும் வந்தார். அதனால் நான் அவருக்குச் சேவை செய்து அவருக்காகக் காத்திருந்தேன்" என்றாள். . இதைக் கேட்ட அந்தணர், "உனக்கு, பிராமணர்கள் உயர்ந்த மதிப்பிற்குத் தகார். அவர்களுக்கு மேலாக உனது கணவனை உயர்த்துகிறாயா? இல்லற வாழ்வு வாழும் நீ, பிராமணர்களை அவமதிக்கிறாயா? அவர்களை {பிராமணர்களை} இந்திரனே கூட வணங்குவான். அப்படியிருக்கும்போது பூமியில் இருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்வேன். கர்வம் கொண்ட பெண்ணே, பிராமணர்கள் நெருப்பைப் போன்றவர்கள் அவர்கள் முழு உலகத்தையும் எரித்து விடுவார்கள் என்பதை நீ அறியவில்லையா? அதை இதுவரை நீ கேள்விப்பட வில்லையா?" என்று கேட்டார். . அந்தணரின் {கௌசிகரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண், "நான் பெண் கொக்கல்ல, ஓ! மறுபிறப்பாள முனிவரே! ஓ! துறவை செல்வமாகக் கொண்டவரே, இந்த உமது கோபத்தைக் கைவிடும். கோபமுள்ள நீர், உமது கோபப்பார்வையால் என்னை என்ன செய்துவிடுவீர்? நான் அந்தணர்களை அவமதிப்பதில்லை. பெரும் சக்தி கொண்ட ஆன்மா உடைய அவர்கள் தேவர்களைப் போன்றவர்களாவர். ஆனால், ஓ! பாவமற்றவரே, இந்த எனது குற்றம் மன்னிக்கத்தக்கதே. ஞானம் கொண்ட அந்தணர்களின் சக்தி மற்றும் கௌரவத்தை நான் அறிவேன். கடலின் நீர் உவர்ப்பாகவும் குடிக்க முடியாமல் போகவும் அந்தணர்களின் கோபமே காரணம். ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தவத்தகுதியால் சுடர்விடும் முனிவர்களின் சக்தி என்னவென்பதை நான் அறிவேன். அவர்களது கோபத்தால் உண்டான் நெருப்பு இந்த நாள் வரையில் தண்டக வனத்தில் அணையாமல் இருக்கிறது. அந்தணர்களை அவமதித்ததன் காரணமாகவே, தீய மனம் கொண்ட வாதாபி அகஸ்தியரைச் சந்தித்தபோது அவரால் செரிக்கப்பட்டான். உயர் ஆன்மா கொண்ட {மகாத்மாவான} அந்தணர்களின் சக்திகளும் தகுதிகளும் பெரிது. . ஆனால், ஓ! அந்தணரே, மறுபிறப்பாளர்கள் கோபத்தில் பெரியவர்களாக இருந்தாலும், அதே அளவு மன்னிப்பதிலும் பெரியவர்களாக இருக்கிறார்கள். எனவே, இக்காரியத்தில் எனது குற்றத்திற்காக நீர் என்னை மன்னிப்பதே தகும். . எனது கணவருக்குச் சேவை செய்வதாற்க்காக கிடைக்கும் தகுதியையே நான் உயர்வாகக் கருதுகிறேன். நான் எனது கணவரையே தேவர்களில் உயர்ந்தவராகக் கருதுகிறேன். உயர்ந்த தெய்வமாக நான் கருதும் எனது கணவருக்குப் பணிவிடை செய்வதையே நான் பெரும் தகுதியாக நினைக்கிறேன். . .ஒருத்தி கணவருக்குச் செய்யும் பணிவிடையால் கிடைக்கும் தகுதியைப் {பலனைப்} பாரும்! நீர் உமது கோபத்தால் ஒரு பெண் கொக்கை எரித்து வந்தீர் என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால், ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, ஒருவரால் பேணப்படும் கோபமே அவனது பெரிய எதிரியாகும். .. ..... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-37 ... மகாபாரதம்-வனபர்வம் .. அந்தணர்களிடம் இருக்க வேண்டிய குணம் குறித்து கற்புமிக்க பெண் பிராமணனருக்கு போதித்தாள் .. கோபத்தையும் ஆசையையும் கைவிட்டவனையே, தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள். . எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள், குருவைத் திருப்தி செய்பவர்கள், தான் காயப்பட்டாலும் பதிலுக்குப் பிறருக்குக் காயமேற்படுத்தாதவர்கள் ஆகியோரையே, தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். . தனது புலன்களை {உணர்வுகளை} முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன், அறம்சார்ந்து சுத்தனாக இருப்பவன், வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணிப்பவன், கோபம் மற்றும் காமத்தை ஆளுமை செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். . அறநெறிகள் அறிந்தவர்கள், மனோ சக்தி கொண்டவர்கள், அறத்தால் அனைவருக்கும் பொதுவானவன் அனைவரையும் தனக்குச் சமமாக நினைப்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். .. தானே பயின்று, மற்றவர்களுக்குப் பயிற்றுவிப்பவன், தானே வேள்விகள் செய்பவன், தானே முன்வந்து அடுத்தவர்களின வேள்விகளைச் செய்து தருபவன், தன்னால் இயன்ற அளவு தானம் செய்பவன் ஆகியோரையே தேவர்கள் அந்தணர்கள் என்று அறிகிறார்கள். .. ஆன்ம சுதந்திரம் கொண்டு, பிரம்மச்சரிய நோன்பு பயின்று, கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவன், உண்மையில், விழிப்பான வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் மறுபிறப்பாளர்களில் காளையையே தேவர்கள் அந்தணன் என்று அறிகிறார்கள். .. எதுவெல்லாம் அந்தணர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை இவற்றுக்கு முன்பாக எப்போதும் சொல்ல வேண்டும். உண்மையில் இன்பம் கொள்கிறவர்களின் இதயம் பொய்மையில் இன்பத்தைக் காணாது. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, வேத கல்வி, ஆன்ம அமைதி, எளிய நடத்தை, புலன்களை ஒடுக்குதல் ஆகியன அந்தணர்களின் நித்திய கடமைகளாகும். .. அறமும் அறநெறிகளும் அறிந்தவர்கள், உண்மையும் நேர்மையும் உயர்ந்த அறங்கள் என்று சொல்கின்றனர். நித்தியமான அறம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானது. ஆனால், அஃது எதுவாக இருந்தாலும், அஃது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. .. பழங்காலத்தவர்கள், அறம் எனப்பட்டது சுருதியை நம்பி இருக்கிறது என்று தீர்மானித்திருக்கின்றனர். ஆனால், {கௌசிகரே}, சுருதியில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறம் பலவகைப்பட்டதாகத் தோன்றுகிறது. எனவே, புரிந்து கொள்வதற்கு அது மிகவும் நுட்பமானது. நீர் அறம் மற்றும் சுத்தம் ஆகியவற்றை அறிந்தவர். வேத கல்விக்கு உம்மை அர்ப்பணித்திருப்பவர். எனினும், ஓ! புனிதமானவரே {கௌசிகரே}, உண்மையில் அறத்தை நீர் அறியவில்லை என்றே நான் நினைக்கிறேன். .. ஓ! மறுபிறப்பாளரே {கௌசிகரே}, நீர் உண்மையில் உயர்ந்த அறம் எவற்றால் ஆனது என்பதை அறியவில்லையெனில், மிதிலை நகரத்திற்குச் சென்று அறம் சார்ந்த வேடனிடம் {தர்மவயாதனிடம்} விசாரியும். அங்கே மிதிலையில் பெற்றோருக்கு சேவை செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்து உண்மையுள்ளவனாக, புலன்களை முழுக் கட்டுக்குள் வைத்திருப்பவனாக ஒரு வேடன் இருக்கிறான். அறம் சம்பந்தமான சொற்பொழிவை அவன் உனக்காக ஆற்றுவான். .. ஓ! {கௌசிகரே}, நீர் அருளப்பட்டிரும். நீர் விரும்பினால் அங்கே செல்லும். நான் சொன்னது உமக்கு உகந்ததாக இல்லையென்றாலும், நீர் என்னை மன்னிப்பதே உமக்குத் தகும். ஏனென்றால், அறம் கொள்ள விரும்புபவர்களால் ஒரு பெண்ணெக்குத் தீங்கிழைக்க இயலாது!" என்றாள். கற்புள்ள பெண்ணின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தணர் {கௌசிகர்}, "நான் உன்னிடம் திருப்தி அடைந்தேன். நீ அருளப்பட்டிரு; எனது கோபம் தணிந்தது. உன்னால் சொல்லப்பட்ட கண்டனம் {நீ செய்த கண்டிப்பு}, எனக்கு உயர்ந்த பலனையே தரும். நீ அருளப்பட்டிரு, நான் இப்போது சென்று, என் நன்மைக்குகந்ததைச் சாதிக்கப் போகிறேன்" என்றார் {கௌசிகர்}". ...... ........தொடரும்................ [9:49 AM, 10/17/2023] Mohan SriRaghavendrar Kulithalai: சனாதன தர்மம் - பாகம்-38 ... மகாபாரதம்-வனபர்வம் .. இறைச்சி விற்கும் வேடனிடமிருந்து ஞானத்தைப் பெற்ற பிராமணன துறவி . மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} கூறினார் . மிதிலையில்}, அந்த அந்தணர் {கௌசிகர்}, அறம்சார்ந்த வேடனைக் {தர்மவியாதனைக்} குறித்து விசாரித்தார். சில இருபிறப்பாள மனிதர்கள் அவரைக் குறித்துச் சொல்லினர். . அந்த இருபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} சொன்ன இடத்திற்குச் சென்ற அந்த அந்தணர் {கௌசிகர்}, அந்த வேடன் கசாப்புக்கடை முற்றத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்தத் தவசியான வேடன் அப்போது மான் இறைச்சியையும், எருமை இறைச்சியையும் விற்றுக் கொண்டிருந்தான். {இறைச்சியை} விலைக்கு வாங்குவோர், வேடனைச் சுற்றி பெரிய படையாகக் கூடியிருந்ததால், கௌசிகர் சற்றுத் தொலைவில் நின்றார். . அந்த அந்தணர் தன்னைக் காணவே வந்திருக்கிறார் என்று அறிந்து கொண்ட வேடன், திடீரெனத் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அந்த அந்தணர் {கௌசிகர்} இருந்த அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அவரை {கௌசிகரை} அணுகினான். . வேடன் {தர்மவியாதன்} அவரிடம் {கௌசிகரிடம்}, "ஓ! புனிதமானவரே! நான் உம்மை வணங்குகிறேன். ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே} உமக்கு நல்வரவு. நீர் அருளப்பட்டிரும். நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கட்டளையிடும். " மிதிலைக்குச் செல்லும்" என்ற கற்புள்ள பெண்ணின் வார்த்தைகளை நான் அறிவேன். நீர் என்ன காரியத்திற்காக இங்கு வந்திருக்கிறீர் என்பதையும் நான் அறிவேன்" என்றான். . வேடனின் {தர்மவியாதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த அந்தணர் {கௌசிகர்} ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் {கௌசிகர்}, தனக்குள்ளேயே, "உண்மையில் இது நான் காணும் இரண்டாவது அதிசயமாகும்!" என்று நினைத்தார். . பிறகு அந்த வேடன் அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "ஓ! பாவமற்றவரே {கௌசிகரே} உமக்குத் தகாத இடத்தில் நீர் இப்போது நின்று கொண்டிருக்கிறீர். ஓ! புனிதமானவரே, நீர் விரும்பினால், நாம் எனது இல்லத்திற்குச் செல்லலாம்" என்றான் {வேடன் தர்மவியாதன்}. . அதன்பேரில் அந்த வேடன், தனக்கு முன்னால் அந்த அந்தணரை நடக்க விட்டு தனது இல்லத்துக்குச் சென்றான். காண்பதற்கினிய இல்லத்தில் நுழைந்த அந்த வேடன், தனது விருந்தாளிக்கு {கௌசிகருக்கு} ஆசனத்தைக் கொடுத்து மரியாதையுடன் நடத்தினான். பிறகு அவன் {தர்மவியாதன்} கால்களையும் முகத்தையும் கழுவி கொள்ள நீரும் கொடுத்தான். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்ட அந்த அந்தணர்களில் சிறந்தவர் {கௌசிகர்}, வசதியாக அமர்ந்தார். . பிறகு அவர் {கௌசிகர்}, அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "உமது தொழில் உமக்குப் பொருத்தமானது அல்ல எனத் தெரிகிறது. ஓ! வேடா, இத்தகு கொடுந்தொழிலை நீ செய்ய நேர்வதைக் கண்டு நான் ஆழமாக வருந்துகிறேன்" என்றார். .. அந்தணரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வேடன், "இது எனது குலத்தொழில். நான் இதை எனது பாட்டன்கள் மற்றும் முப்பாட்டன்களிடம் இருந்து மரபுரிமையாகச் செய்து வருகிறேன். . பிறப்பால் ஏற்பட்ட எனது கடமைகள் குறித்து எனக்காக நீர் வருந்தாதீர். படைப்பாளனால் முன்பே எனக்காக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதற்காக, நான் எனக்கு மேன்மையானவர்களுக்கும், முதியவர்களுக்கும் கவனமாகச் சேவை செய்கிறேன். . நான் எப்போதும் உண்மையே பேசுகிறேன், பிறரை எப்போதும் பகைப்பதில்லை; எனது சக்திக்குத்தக்க சிறந்த வகையில் தானம் செய்கிறேன். தேவர்கள், விருந்தினர்கள், என்னை நம்பியிருப்பவர்கள் ஆகியோருக்குச் சேவை செய்து போக மீதம் வருவதிலேயே {மீதம் வருவதை உண்டே} நான் வாழ்கிறேன். . நான் எதைக் குறித்தும் சிறுமையாகவோ பெருமையாகவோ பேசுவதில்லை; எதையும் நிந்திப்பதில்லை. முந்தைய பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனைத் தொடர்கின்றன. ...... ........தொடரும்................ [9:50 AM, 10/17/2023] Mohan SriRaghavendrar Kulithalai: சனாதன தர்மம் - பாகம்-39 ... மகாபாரதம்-வனபர்வம் .. வேடனிடமிருந்து வெளிப்பட்ட ஞானம் . அறம்சார்ந்த வேடன் {தர்மவியாதன்)அந்தணரிடம் கூறினான் ... இவ்வுலகத்தில் வேளாண்மை {விவசாயம்}, {ஆடு, மாடு போன்ற} கால்நடை வளர்ப்பு, வணிகம் ஆகிய மூன்று முதன்மைத் {முக்கிய} தொழில்கள் இருக்கின்றன. . மறு உலகத்தைப் பொறுத்தவரை, மூன்று வேதங்கள், ஞானம், அறநெறி அறிவியல் ஆகியன பயனளிக்கக்கூடியவை. (மூன்று வகையினருக்கும் {வர்ணத்தாருக்கு}} சேவை செய்வது சூத்திரர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. . வேளாண்மை வைசியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. போர்த்தொழில் க்ஷத்திரியர்களுக்கும், பிரம்மச்சரிய நோன்பு பயில்தல், துறவு, மந்திரங்கள் உச்சரித்தல், சத்தியம் ஆகியன பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. . சரியான கடமைகளைச் செய்யும் குடிமக்களை, ஒரு மன்னன் அறம் சார்ந்து ஆள வேண்டும். தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து விழுந்தவர்களைச் சரியான பாதையில் அவன் {மன்னன்} செலுத்த வேண்டும். தங்கள் குடிமக்களுக்குத் தலைவர்களாக இருப்பதால் மன்னர் அஞ்சத்தக்கவர்களாக இருக்கிறார்கள். மான்களைக் கணைகளால் அடக்குவதைப் போல, தங்கள் கடமைகளில் இருந்து விழுந்த குடிமக்களை அவர்கள் {மன்னர்கள்} அடக்க வேண்டும். . ஓ! மறுபிறப்பாள முனிவரே {கௌசிகரே}, பிறப்பால் ஏற்பட்ட கடமைகளில் தவறும் ஒரு குடிமகன் கூட ஜனகனின் இந்த நாட்டில் கிடையாது. நால்வகை மக்களும் தங்களுக்குரிய கடமைகளை உறுதியுடன் பற்றுகிறார்கள். . தீயவர்களை மன்னன் ஜனகன் தண்டிக்கிறான். அவன் தனது சொந்த மகனாகவே இருப்பினும் அவனைத் தண்டிக்கிறான். ஆனால், அறம்சார்ந்தவர்களுக்கு அவன் {ஜனகன்} தீங்கிழைப்பதில்லை. நல்ல திறமையான ஒற்றர்களை நியமித்து, நடுநிலை தவறாத பார்வையுடன் அனைத்தையும் கவனிக்கிறான். . செழிப்பு, அரசு, தண்டிக்கும் திறன் ஆகியவை க்ஷத்திரியர்களுக்கு உரியது. தங்களுக்குரிய கடமைகளைப் பயில்வதன் மூலம் மன்னர்கள் உயர்ந்த செழிப்பை விரும்புகிறார்கள். ஒரு மன்னனே நால் வகை மனிதர்களுக்கும் பாதுகாவலனாக இருக்கிறான். . என்னைப் பொறுத்த வரை நான் எப்போதும் பன்றி மற்றும் எருமை இறைச்சியை விற்கிறேன். அவ்விலங்கள் என்னால் கொல்லப்படுவதில்லை. நான் மற்றவர்களால் கொல்லப்படும் விலங்குகளின் இறைச்சியையே விற்கிறேன். எப்போதுமே நான் ஊண் {இறைச்சி} உண்பதில்லை; . அவளது {ருது} காலத்தைத் தவிர மற்ற காலங்களில் நான் எனது மனைவியிடம் செல்வதில்லை; நான் பகலில் {உண்ணா} விரதமிருந்து, இரவில் உண்கிறேன். . ஒருவனின் வகைக்கான நடத்தை தீயவையாக இருந்தாலும், அவன் நன்னடத்தைக் கொண்டவனாக இருக்கலாம். அப்படியே ஒரு மனிதன் தொழிலால் விலங்குகளைக் கொல்பவனாக இருப்பினும், அவன் அறம் சார்ந்தவன் ஆகிறான். . மன்னர்களில் பாவச்செயல்களின் தொடர்ச்சியாகவே அறம் பெருமளவு குறைந்து, பாவம் வளர்கிறது. இவை அனைத்தும் ஒரு நாட்டில் உள்ள குடிமக்களிடம் ஏற்பட்டால், அது நாட்டை அழிக்கிறது. அப்போதுதான், காணக் கொடூரமானவர்கள், குள்ளர்கள், கூனர்கள், கனத்த தலை கொண்ட மனிதர்கள், குருடர்கள், செவிடர்கள், கோணல் கண் கொண்டவர்கள், இனப்பெருக்க சக்தியை இழந்தவர்கள் {நபும்சகர்கள்} ஆகியோர் பிறக்க ஆரம்பிக்கின்றனர். . மன்னர்களின் பாவங்களினாலேயே எண்ணிலடங்கா துயர்களைக் குடிமக்கள் சந்திக்கின்றனர். ஆனால், எங்கள் மன்னன் ஜனகன், அனைத்துக் குடிமக்கள் மீதும் அறம்சார்ந்த பார்வையைச் செலுத்துகிறான். உரிய கடமைகளைத் தானே செய்பவர்களை அவன் எப்போதும் அன்புடன் நடத்துகிறான். . என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நற்செயல்கள் புரிகிறேன். என்னை நிந்திப்பவர்களையும் நான் நிந்திப்பதில்லை. தங்களுக்கு உரிய கடமைகளைத் தாங்களே செய்யும் மன்னர்கள், நன்மையான நேர்மையான செயல்களைப் பயில்வதில் எப்போதும் ஈடுபடுபவர்கள், . தங்கள் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள், எப்போதும் தயாராகச் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆகியோர் எப்போதும் தங்கள் சக்தியைத் தாங்குவதற்கு எதையும் நம்பியிருப்பதில்லை. . தனது சக்திக்குத் தக்க சிறந்த வகையில் அன்னதானம் செய்வது, வெப்பம் மற்றும் குளிரில் உறுதியுடன் இருப்பது, அறத்தில் உறுதியோடு இருப்பது, அனைத்து உயிர்களிடமும் அன்புடன் இருப்பது ஆகிய இந்தக் குணங்கள் அத்தனையும், இவ்வுலகத்தில் இருந்து தனித்து இருப்பவனைத் தவிர வேறு எவரிடமும் காண முடியாது. . ஒருவன் தனது பேச்சில் பொய்மையைத் தவிர்த்து, நன்மையைத் தயங்காமல் செய்ய வேண்டும். ஆசையாலோ, கோபத்தாலோ, துன்பத்தாலோ ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. . நல்ல காலத்தில் அளவுக்கதிகமான இன்பத்தையும், கெட்ட காலத்தில் அளவுக்கதிகமான துன்பத்தையும் ஒருவன் அடையக்கூடாது. . வறுமை வரும்போது ஒருவன் தாழவோ, அல்லது அறத்தின் பாதையைக் கைவிடவோ செய்யக்கூடாது. ஒருவன் எப்போதாவது தவறு செய்தாலும், அதே போன்ற தவறை மீண்டுமொருமுறை அவன் செய்யக்கூடாது. தான் நன்மை என்று கருதும் காரியத்திலேயே ஒருவன் தனது ஆன்மாவை ஊக்கப்படுத்த வேண்டும்" .. ...... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-40 ... மகாபாரதம்-வனபர்வம் .. தனது இல்லற கடமைகளை செய்ததன் மூலமே ஞானம் அடைந்த வேடன் .. வேடன் {தர்மவியாதன் கௌசிகரிடம்}கூறினான், . "தனக்குச் செய்யப்பட்ட தீங்குக்குப் பதிலாக மற்றுமொரு தீங்கையே செய்யாமல், ஒருவன், தனக்குத் தீங்கிழைத்தவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். . பாவகரமான காரியத்தைச் செய்ய விரும்பும் இழிந்த மனிதன் தன்னைத் தானே கொல்கிறான். பாவம் செய்து, "அறம் என்பதே இல்லை" என்று சொல்லி, நல்லவர்களையும், சுத்தர்களையும் கேலி செய்து, தீயப் பாவியைப் போல நடந்து கொள்பவன், சந்தேகமற அழிவையே சந்திக்கிறான். . காற்றடைத்த தோல் பையைப் {துருத்தியைப்} போல ஒரு பாவி வீங்குகிறான் {பருக்கிறான்}. கர்வமும் மூடத்தனமும் நிறைந்த இந்தப் பாவிகளின் எண்ணங்கள் பலவீனமானவையும் லாபமற்றதாகவும் இருக்கும். இதயம், உள்ளுறைந்திருக்கும் ஆன்மா {உள்ளுணர்வு} ஆகியவையே, பகலில் சூரியன் உருவங்களைக் கண்டுபிடிப்பதைப் போல முட்டாளைக் கண்டுபிடிப்பவை. . கர்வத்தினால் ஒரு மூடன் இவ்வுலகில் எப்போதும் பிரகாசிப்பதில்லை. கற்றவன், அழகற்றவனாக இருப்பினும், பிறரைப் பழித்துப் பேசுவது, தன்னைப் புகழ்ந்து பேசுவது ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பதால் காந்தியுடன் {பிரகாசத்துடன்} இருப்பான். . தங்கள் நற்பெயரைப் பறைசாற்றும் நடவடிக்கைகளைக் கொண்ட மனிதர்கள், குணம் நிறைந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இவ்வுலகில் பிரகாசித்ததற்கான ஓர் உதாரணமும் கிடைக்காது. தான் செய்த தீங்கிற்காக ஒருவன் வருந்தவானேயானால், அந்த வருத்தமே அவனது பாவத்தைக் கழுவிவிடும். . ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, சாத்திரங்களால் சொல்லப்படும் சில பரிகாரங்களைச் செய்து பாவத்தில் இருந்து விடுபடுவதைப் போலவே, மீண்டும் அத்தீங்கைச் செய்வதில்லை என்று அவன் எடுக்கும் தீர்மானம் அவனை எதிர்காலப் பாவத்திலிருந்து காக்கும். இதுவும் அறம் சம்பந்தமாகக் காணப்படும் ஸ்ருதி என்று ஆகிறது. . முன்பு அறம்சார்ந்து இருந்தவன், பாவமிழைத்தாலோ, அல்லது அதைத் தெரியாமல் செய்தாலோ, {அவன் கடைப்பிடித்த அறம்} அந்தப் பாவங்களை அழிக்கும். மனிதர்கள் அறியாமையில் செய்யும் பாவங்களை அறம் விரட்டியடிக்கும். . ஒரு பாவத்தை இழைத்த மனிதன், அதற்கு மேலும் தன்னை மனிதன் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். . எந்த மனிதனும் அவனது பாவங்களை மறைக்க முடியாது. ஒருவன் என்ன செய்கிறான் என்பதை அவனுக்குள் இருப்பவனும் {பரமாத்மாவும்}, தேவர்களும் காண்கின்றனர். . பக்தி கொண்ட கறையில்லா மனிதன், தனது ஆடையில் இருக்கும் ஓட்டைகளை மறைப்பதைப் போல, நேர்மையானவர்களின் குறைகளை மறைக்க வேண்டும். அப்படிப்பட்டவன் நிச்சயம் முக்தியை அடைவான். . பாவம் செய்த ஒரு மனிதன், அதிலிருந்து மீள நினைத்தால், சந்தேகமற அவனது பாவங்கள் எல்லாம் அழிந்து போகும். அவன் மேகங்களில் இருந்து விடுபட்டு, உதிக்கும் சந்திரனைப் போலப் பிரகாசமாகவ்வும் சுத்தமானவனாகவும் இருப்பான். . இருளை விலக்கும் உதயசூரியன் போல, தனது பாவங்களில் இருந்து மீள நினைக்கும் மனிதன் அவற்றைக் கழுவிக் கொள்கிறான். . ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, மோகமே பாவங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. அறியாமையில் இருக்கும் மனிதர்கள் மோகத்தின் பயனால் மட்டுமே பாவமிழைக்கின்றனர். . புற்களால் மறைக்கப்பட்டுள்ள கிணறுகளின் வாய் போல, பொதுவாக, பாவிகள் தங்களை அறம் சார்ந்தவர்களாக வெளியில் காட்டிக் கொள்வார்கள். வெளிப்பார்வைக்கு அவர்கள் தன்னடக்கம் கொண்டவர்களாகவும், புனிதமானவர்களாகவும் தங்களைக் காட்டிக் கொண்டு தங்கள் வாயினால் அறம் சார்ந்த பேச்சுகளைத் அர்த்தமில்லாமல் உதிர்க்கிறார்கள். உண்மையில் அவர்களிடம் அனைத்துமே காணப்படும், ஆனால் உண்மையான அறம் மட்டும் காணப்படாது....... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-41 ... மகாபாரதம்-வனபர்வம் .. தர்மவியாதனிடமிருந்து வெளிப்பட்ட நீதி .. பெரும் ஞானம் கொண்ட அந்தணர் {கௌசிகர்}, மீண்டும் அந்த வேடனிடம் {தர்மவியாதனிடம்}, "அறம்சார்ந்த நடத்தையை நான் எப்படி அறிவது? நான் இதை உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். எனவே, ஓ மேன்மையான ஆன்மா கொண்டவனே, அது குறித்த உண்மைகள் அனைத்தும் எனக்குச் சொல்" என்று கேட்டார். . இந்த வார்த்தைகளைக் கேட்ட வேடன், "ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, . வேள்விகள், தானம், துறவு, வேதங்கள், சத்தியம் ஆகிய ஐந்தும் புனிதமானவை, இவை அறம் சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடம் என்றும் இருக்கும். . காமம், கோபம், பேராசை, குறுக்குபுத்தி ஆகியவற்றை வென்று, அறம் சார்ந்த ஒன்று என்பதாலேயே அந்த அறத்தில் இன்புறுபவர்களே உண்மையில் அறம்சார்ந்தவர்களின் புகழ்ச்சிக்குத் தகுதியானவர்களும், அறம்சார்ந்தவர்களும் ஆவர். வேள்விகளுக்கும், வேத கல்விக்கும் தங்களை அர்ப்பணிக்கும் இம்மனிதர்கள் சுதந்திரமான நடத்தையற்றவர்களாவர். அவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் ஆகியோரின் நடத்தைகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். இதுவே {நேர்மையானவர்கள் மற்றும் நல்லவர்களைப் பின்பற்றுவதே} உண்மையில் அறம்சார்ந்தவர்களின் இரண்டாவது பண்பு ஆகும். . பெரியவர்களுக்காகக் காத்திருத்தல், சத்தியம், கோபத்தில் இருந்து விடுதலை, தானம் ஆகிய நான்கும், அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதாகும். . நற்பெயர் பெறுவதற்காக ஒரு மனிதன், அறம் சார்ந்த நடத்தையில் தனது இதயத்தை நிலைநிறுத்துகிறான். அப்படி அதை உறுதியாகப் பற்றுவது கடினமானதும் அடைவதற்கு அரிதுமாகும். ஆனால் மேற்சொன்ன நான்கு அறங்களையும் செய்தால் அதை {நற்பெயரை} அடையலாம். . வேதங்களின் சாரம் சத்தியமாகும். சத்தியத்தின் சாரம் தன்னடக்கமாகும். தன்னடக்கத்தின் சாரம் உலக இன்பங்களைத் துறப்பதாகும். இவை அனைத்தையும் அறம்சார்ந்தவர்களின் நடத்தையில் காணலாம். . மனிதர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையின் வடிவங்களைக் கேலி செய்யும் ஏமாற்றுகர முட்டாள்களைப் பின்பற்றுபவர்கள், அந்தப் பாவ வழியில் நடந்ததற்காக அழிவுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். எனினும், நோன்புகள் நோற்பதில் ஈடுபடும் அறம்சார்ந்தவர்களும், சுருதிகளுக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களும், உலக இன்பங்களைத் தவிர்த்து அறத்தைப் பின்பற்றுபவர்களும் {நல்லொழுக்கத்துடன் இருப்பவர்களும்}, உண்மையில் அறத்தின் சுவடுகளில் நடந்து உண்மையான தர்மத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். . தங்கள் குருக்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களும், சாத்திரங்களின் உணர்வுகளைப் பொறுமையுடனும் கவனத்துடனும் சிந்தித்துப் பார்ப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ! அந்தணரே {கௌசிகரே}, இவையே உயர்ந்த நுண்ணறிவை அடையச் சரியாக வழிகாட்டுபவையாகும். ...... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-42 ... மகாபாரதம்-வனபர்வம் .. தர்மவியாதன் அந்தணனிடம் கூறினான் . நாத்திகர்கள், அறத்தின் வரம்புகளை மீறுபவர்கள், தீய ஆன்மாக்கள், பாவகர வாழ்வு வாழ்பவர்கள் ஆகியோரைக் கைவிட்டு, அறம்சார்ந்தவர்களை மதித்து ஞானம் அடைய முயற்சி செய்வீராக. . காமம் மற்றும் மோகம் ஆகியவை, வாழ்வு என்ற நதியில் இருக்கும் சுறாக்கள் போன்றவை; ஐம்புலன்களே {அங்கு} நீராக இருக்கின்றன. நீர் பொறுமை என்ற படகைக் கொண்டு, திரளான உடல் இருப்பைத் (இவ்வுலகில் மறுபடியும் மறுபடியும் பிறத்தலைத்} தவிர்த்து, அந்த {பிறவி} நதியின் அடுத்தக் கரைக்கு கடந்து செல்வீராக. . அறிவார்ந்த கொள்கை மற்றும் {நல்லதைப்} பிரித்தெடுத்தலைப் பயிலும் தலைமை அறமானது, படிப்படியாக {நம்மிடம்} சேர்க்கப்படும்போது, வெள்ளைத் துணியில் இருக்கும் சாயம் போல அழகாக இருக்கிறது. . சத்தியம், எவருக்கும் தீங்கிழையாமை {அஹிம்சை}, ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் உயர்ந்த நன்மைகளைச் செய்யும் அறங்களாகும். இவ்விரண்டில் கடைசியானது {அஹிம்சை}, உண்மையை {சத்தியத்தை} அடிப்படையாகக் கொண்ட முக்கியமான அறமாகும். நமது உளவியல், உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போதே, சரியாக இயங்குகிறது. அறம்பயில்வதில், உண்மையே உயர்ந்த மதிப்புடையதாகும். . நடத்தையில் சுத்தம் என்பது, நல்ல மனிதர்கள் அனைவரின் குணமாகும். புனிதமான வாழ்வுக்காக {மற்றவரிலிருந்து} வேறுபட்டிருப்பவர்கள், நல்லவர்களும் அறம்சார்ந்தவர்களும் ஆவர். . அனைத்து உயிரினங்களும் தங்கள் தன்மைக்குகந்த உள்ளார்ந்த நடத்தை கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. தன்னடக்கம் இல்லாத பாவிகள் காமத்தையும், கோபத்தையும், பிற தீங்குகளையும் அடைகிறார்கள். அறச்செயல்கள் அனைத்தும் நீதியில் இருந்தே தோன்றுகின்றன என்பது தொன்றுதொட்டு வரும் விதியாகும். . அநீதியான நடத்தைகள் அனைத்தும் பாவமே என்று புனிதமானவர்களால் சொல்லப்பட்டுள்ளது. கோபம், கர்வம், இறுமாப்பு, பகைமை ஆகியவற்றால் இயக்கப்படாமல், அமைதியாக, வெளிப்படையாக {நேர்முகமாக} இருப்பவர்கள் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்கள். மூன்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ள . சடங்குகளை ஊக்கமுடன் செய்பவர்களும், ஞானம் கொண்டவர்களும், சுத்தமான நல்லொழுக்கம் கொண்டவர்களும், சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களும், பெரியவர்களைக் கவனிப்பவர்களும் அறம்சார்ந்த நடத்தை கொண்டவர்களாவார்கள். பெரும் சக்தி கொண்ட அத்தகைய மனிதர்களின் செயல்களையும், நடத்தைகளையும் {நாம்} அடைவது மிகக் கடினமாகும். தாங்கள் செய்யும் {நற்}செயல்களின் மூலமாகவே ஒருவன் சுத்திகரிக்கப்படுகிறான். அதன் தொடர்ச்சியாகப் பாவம் தானாக அழிகிறது. ...... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-43 ... மகாபாரதம்-வனபர்வம் .. தர்மவியாதன் அந்தணனிடம் கூறிய அறம் . நன்னடத்தை எனும் அறம் அற்புதமானது, பழமையானது, மாற்றமுடியாதது, நித்தியமானது; இவ்வறத்தைப் புனிதமாக நோற்கும் ஞானிகள் சொர்க்கத்தை அடைகிறார்கள். . தெய்வத்தின் இருப்பை நம்பும் மனிதர்கள், போலிப்பெருமைகளில் இருந்து விடுபட்டவர்கள், புனிதமான சாத்திரங்களை அறிந்தவர்கள், மறுபிறப்பாளரை (இரு பிறப்பாளரை = பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகியோரை} மதிப்பவர்கள் ஆகியோர் சொர்க்கத்தை அடைகிறார்கள். . புனிதமான மனிதர்களில் வேதங்கள் கற்பிக்கும் உயர்ந்த அறம், தர்மசாத்திரங்கள் கற்பிக்கும் அறம், அறம்சார்ந்தவர்கள் {நல்லவர்கள்} நடத்தை {கற்பிக்கும் அறம்} என மூன்று வழிகளில் அறம் வேறுபட்டிருக்கிறது. . ஞானம் அடைதல், புண்ணிய இடங்களுக்குப் புனிதப் பயணம், சத்தியம், பொறுமை, சுத்தம், வெளிப்படையான தன்மை {கபடமின்மை} ஆகியவை அறம் சார்ந்த நடத்தையைக் குறிக்கின்றன. அறம் சார்ந்த ,அனைத்து உயிர்களிடமும் எப்போதும் அன்புடனும், மறுபிறப்பாளர்களிடம் நன்றாகவும் நடந்து கொள்வார்கள். அவர்கள் எந்த உயிருக்கும் தீங்கை விளைவிக்கமாட்டார்கள் {அஹிம்சையை மேற்கொள்வார்கள்}, முரட்டுத்தனமாகப் {கொடுஞ்சொல்} எப்போதுமே பேசமாட்டார்கள். . செய்யும் நல்ல மற்றும் தீய காரியங்கள் தரும் பலன்களின் விளைவுகளை நன்கு அறிந்த நல்ல மனிதர்கள், அறம் சார்ந்தவர்களால் பாராட்டப்படுகின்றனர். நீதிமானாக, நன்னடைத்துக் கொண்டவனாக, அறம் கொண்டவனாக, அனைத்து உயிருக்கும் நன்மை விரும்புபவனாக, அறத்தின் பாதையில் உறுதியாக இருப்பவனாக, சொர்க்கத்தை வென்றவனாக, தானம் செய்பவனாக, தன்னலமில்லாதவனாக, அப்பழுக்கற்ற குணம் கொண்டவனாக, துன்புறுபவர்களுக்கு உதவுபவனாக, கற்றவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாக, துறவை மேற்கொள்பவனாக, அனைத்து உயிர்களிடமும் அன்புள்ளவனாக இருப்பவர்களை அறம்சார்ந்தவர்கள் பாராட்டுகிறார்கள். . தானம் செய்பவர்கள் இவ்வுலகிலும், (இதற்குப் பின் வரும்) அருள் உலகங்களிலும் செழிப்புடன் இருப்பார்கள். நல்ல மனிதர்களால் உதவிக்கு அழைக்கப்படும் அறம் சார்ந்த மனிதன், தனது மனைவி மற்றும் வேலையாட்களின் வசதிகளை இழந்தாலும் கூட, மிகுந்த சிரமப்பட்டாவது அவர்களுக்கு {உதவி கேட்டவர்களுக்கு} பிச்சையிட வேண்டும். . தனது நன்மை, அறம் மற்றும் உலகத்தின் வழிகள் ஆகியவற்றில் ஒரு கண் வைத்திருக்கும் நல்ல மனிதர்கள், இவ்வழியிலேயே செயல்படுகின்றனர். எனவே அவர்களின் அறம், முடிவிலா காலத்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. . நல்ல மனிதர்களிடம் இருக்கும் சத்தியம், அஹிம்சை, நன்னெறி, எவருக்கும் தீங்கிழையாமை, அகந்தையின்மை, அடக்கம், {உலகப்பற்று} விலக்கல், சுயக்கட்டுப்பாடு, ஆசையின்மை, ஞானம், பொறுமை, அனைத்துயிர்களிடத்திலும் அன்பு, தீயவை மற்றும் காமத்தில் இருந்து விடுபட்டிருக்கும் குணம் ஆகியவையே {இந்த} உலகத்திற்குச் சாட்சியாக இருக்கின்றன. . ஒரு மனிதன் வேறு எவருக்கும் தவறு இழைக்கக்கூடாது, அவன் பிச்சையிட {தர்மகாரியங்களில் ஈடுபடவேண்டும்} வேண்டும், எப்போதும் உண்மையுடன் இருக்க வேண்டும் என்ற மூன்றும் சேர்ந்ததே, அறம் சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது. . தீர்மானமான நம்பிக்கைகளும், அறம்சார்ந்த நடத்தையும், உயர்ந்த ஆன்மாவும், அனைவரிடமும் அன்பு கொண்ட, இரக்கமும் நிறைந்த நல்ல மனிதர்கள், இவ்வுலகில் மனநிறைவு கொண்டு அறத்தின் சரியான பாதையை அடைவார்கள். . தீயவற்றிலிருந்து விடுதலை, பொறுமை, மன அமைதி, மன நிறைவு, இன்சொல், ஆசை மற்றும் கோபத்தைக் கைவிடுதல், அறம்சார்ந்த நடத்தை, புனிதமான சாத்திர விதிகளின் படியான கட்டுப்பாடான செயல்கள் ஆகியவையே அறம்சார்ந்தவர்களின் சரியான வழியாக இருக்கிறது. . அறத்தில் நிலைத்திருப்பவர்கள் இந்த அறநடத்தை விதிகளைப் பின்பற்றுகிறார்கள். மனித நடத்தைகளுக்கு இடையில் பல்வேறு கட்டங்களில் வரும் வேற்றுமை அறிதல் மற்றும் ஞானம் அடைதல் ஆகியவற்றின் உச்சியை அடைந்தவர்கள், மிகவும் அறம் சார்ந்தவர்களாகவோ, நேர்மாறானவர்களாகவோ {அறமற்றவர்களாகவோ} இருந்து பெரும் ஆபத்துகளில் இருந்து தப்புவார்கள். . ஓ! பெரும் அந்தணரே {கௌசிகரே}, இப்படியே அற நடத்தை குறித்து ஓர் அறிமுகத்துடன், எனது ஞானத்தின் படியும், நான் கேள்விப்பட்டதன் படியும், இவை அனைத்தையும் உமக்கு விவரித்திருக்கிறேன்" என்றான் வேடன் {தர்மவியாதன்}. ...... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-44 ... மகாபாரதம்-வனபர்வம் .. தர்மவியாதன் அந்தணரிடம் கூறிய உபதேசங்கள் .. ஓ! அந்தணரே {கௌசிகரே}, நான் எப்போதும் தீமையை ஒழிப்பதில் ஊக்கமுடன் இருக்கிறேன். ஓர் உயிர் தெய்வத்தாலேயே கொல்லப்படுகிறது. அதைக் கொல்பவன், இரண்டாம் நிலை முகவராக மட்டுமே {கருவியாக மட்டுமே} செயல்படுகிறான். .. ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எங்கள் கர்மத்தின் காரணமாக நாங்கள் அத்தகு முகவர்களாக {கொல்லும் கருவியாக} மட்டுமே இருக்கிறோம். என்னால் கொல்லப்படும் விலங்குகளும், நான் விற்கும் அதன் இறைச்சியும் கர்ம பலனை அடைகின்றன. ஏனெனில், (அவற்றின் இறைச்சியை), தேவர்களும், விருந்தினர்களும், பணியாட்களும் சுவைமிகுந்த உணவை விருந்தாக உண்பதால், இறந்தவர்களின் ஆவி சாந்தமடைகிறது. மூலிகைகள், காய்கறிகள், மான்கள், பறவைகள், காட்டு விலங்குகள் ஆகியவை அனைத்து உயிர்களின் உணவாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ... ஓ! அந்தணரே {கௌசிகரே}, உசீனரன் மகனான பொறுமைமிக்க மன்னன் சிபி, தனது சொந்த சதையைத் {இறைச்சியைத்} தானமளித்து, அடைவதற்கு அரிதான சொர்க்கத்தை அடைந்தான். ... பழங்காலத்தில், மன்னன் ரந்திதேவனின் சமையலறையில் {மடைப்பள்ளியில்} ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் விலங்குகள் கொல்லப்பட்டு வந்தன; அதே போலத் தினமும் இரண்டாயிரம் {2000} மாடுகளும் கொல்லப்பட்டன; மன்னன் ரந்திதேவன் அந்த இறைச்சியைக் {தானம்} கொடுத்து வந்ததால், அவன் நிகரற்ற புகழை அடைந்தான். ... நான்கு மாதச் சடங்கைச் {சாதுர்மாஸ்யம்} செய்வதற்குத் தினமும் விலங்குகள் பலி கொடுக்கப்பட வேண்டும். 'புனித நெருப்புக்கு விலங்கின் {இறைச்சி} உணவு பிடிக்கும்' என்ற மொழி {ஸ்ருதி} நம்மிடம் இருக்கிறது. வேள்விகளில் மறுபிறப்பாள அந்தணர்களால் விலங்குகள் வகைதொகையின்றிக் கொல்லப்படுகின்றன. மந்திரங்களால் பாவம் அழிக்கப்பட்ட அவ்விலங்குகள் சொர்க்கத்தை அடைகின்றன. ... பழங்காலத்தில், புனிதமான நெருப்புக்கு விலங்கு {இறைச்சி} உணவு பிடிக்காமல் போயிருந்தால், யாருக்கும் அது {இறைச்சி} உணவாகியிருக்க முடியாது. இந்த விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் இவ்விதி விதிக்கப்பட்டுள்ளது. "முதலில் தேவர்களுக்கும், இறந்தவர்களின் ஆவிகளுக்கும் மரியாதையாகக் காணிக்கை செய்யப்பட்ட விலங்கு {இறைச்சி} உணவை உண்பவன், அத்தகு செயலால் {காணிக்கை செய்வதால்} அசுத்தமடையமாட்டான் {தோஷத்துக்கு உள்ளாக மாட்டான்}. {இதுவே விலங்கு {இறைச்சி} உணவு சம்பந்தமாக முனிவர்களால் விதிக்கப்பட்ட விதியாகும்}. ... ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒருவன், தனது சொந்தத் தொழிலைக் கைவிடுவது, பாவம் எனக் கருதப்படுகிறது. ஒருவன் தனது சொந்தத் தொழிலைச் செய்வதென்பது மெச்சத்தகுந்த செயலே என்பதில் ஐயமில்லை. முந்தைய இருப்பின் {முற்பிறவியின்} செயல்கள் {கர்மங்கள்} எந்த உயிரினத்தையும் விடுவதில்லை. ஒருவனது செயல்களின் விளைவுகளைத் தீர்மானிப்பதில், இவ்விதி, படைப்பாளனின் {பிரம்மனின்} பார்வையைப் பெற்றது. {பல்வேறு தொழில்களை நிர்ணயிக்கும் விஷயத்தில் பிரம்மனே இவ்விதியை விதித்தான்}. ... தீய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு மனிதன், எப்போதும் தன் கர்மத்திற்கு எப்படிப் பரிகாரம் செய்வது என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். தீவினையில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொண்டால், தீய கர்மம் பல்வேறு வழிகளில் ஈடு {சரி} செய்யப்படும். அதற்கேற்றவாறே, நான் தானம் செய்கிறேன், உண்மையுடன் இருக்கிறேன், பெரியவர்களைக் கவனிப்பதில் சிரத்தை கொள்கிறேன், மறுபிறப்பாள {இருபிறப்பாள} பிராமணர்களை முழுமையாக மதிக்கிறேன், கர்வம் கொள்வதில்லை, அதிகமாகப் பேசாமலும் இருக்கிறேன். ... வேளாண்மை என்பது போற்றுதலுக்குரிய தொழிலாகக் கருதப்படுகிறது. அதில் கூட, விலங்கின வாழ்வுக்குப் பெரிய தீங்கு செய்யப்படுகிறது என்பது நன்கு அறியப்படுகிறது; நிலத்தை உழுவதால் தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிரினங்களும், பல்வேறு உருவங்களில் உள்ள விலங்குகளின் வாழ்வும் அழிக்கப்படுகின்றன. இது குறித்து நீர் என்ன நினைக்கிறீர்? ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, அரிசியும் மற்ற அரிசி விதைகளும் {நெல் முதலிய அரிசி வகைகள் அனைத்தும்} உயிருள்ளவையே. இவ்விஷயத்தில் உமது கருத்து என்ன? .. மனிதர்கள் காட்டுவிலங்குகளை வேட்டையாடிக் கொன்று, அவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றனர்; அவர்கள் மரங்களையும், மூலிகைகளையும் {செடிகளையும்} கூட அறுக்கின்றனர்; ஆனால், மரங்களிலும், பழங்களிலும், ஏன் நீரிலும் கூட எண்ணற்ற உயிரிகள் இருக்கின்றன; முழுப் படைப்புமே, உயிரிகளை உணவாக ஏற்கும் விலங்குகளின் உயிரால் நிறைந்திருக்கிறது. மீன்கள் மீனை இரையாக்குகின்றன; பல்வேறு விலங்கு வகைகள் பிற விலங்கு வகைகளை இரையாகக் கொள்கின்றன; ஒன்றை ஒன்று உண்ணும் விலங்கு வகைகளும் இருக்கின்றன என்பதை நீர் காணவில்லையா? ஓ! அந்தணரே {கௌசிகரே}, மனிதர்கள் அங்கேயும் இங்கேயும் நடக்கும்போது, தரையில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற உயிர்களை மிதித்துக் கொல்கின்றனர். விவேகிகளும் ஞானிகளும் கூட, தூங்கும்போதும், நிலைகளை மாற்றும்போதும் எனப் பல்வேறு வழிகளில் விலங்குகளின் உயிரை அழிக்கின்றனர். இதற்கு நீர் என்ன சொல்லப் போகிறீர்? பூமியிலும், காற்றிலும் மொய்த்துக் கொண்டு இருக்கும் அனைத்து உயிர் வகைகளையும், மனிதர்கள், சுயநினைவற்ற நிலையிலும், அறியாமையிலும் அழித்து விடுகின்றனர். இப்படி நடக்கவில்லையா? .. இவ்வழக்கில், மக்கள் எவ்வுயிரினத்துக்கும் தீங்கிழைக்கக்கூடாது என்ற கட்டளை, உண்மை நிலை அறியாமல் இருந்த பழங்காலத்து மனிதர்களால் விதிக்கப்பட்டது. ஓ! அந்தணரே {கௌசிகரே}, எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்ட ஒரு மனிதனும் இவ்வுலகில் கிடையாது. முழுமையாகப் பரிசீலித்துப் பார்த்தால், எவ்வுயிருக்கும் தீங்கிழைத்த பாவத்தில் இருந்து விடுபட்டவனாக, இவ்வுலகில் ஒரு மனிதனும் கிடையாது என்ற தவிர்க்க முடியாத தீர்மானத்திற்கே நாம் வர இயலும்.. ... ஓ! நல்ல அந்தணரே {பிராமணோத்தமரே}, எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்று நோன்பு நோற்ற தவசிகள் கூட, விலங்குகளின் உயிருக்கு தீங்கையே செய்கின்றனர். இன்றியமையாத பெரிய தேவைகள் இருக்கும்போது மட்டுமே, தீங்கு குறைவாக இருக்கிறது. உன்னதப் பிறவிகளும், சிறந்த குணங்கள் கொண்டவர்களும் கூட, தீச்செயல்களை இழைத்துவிட்டு, அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, எதற்கும் வெட்கப்படாமல் இருக்கிறார்கள். .. பின்பற்றத்தக்க வழியில் செயல்படும் நல்லவர்கள், மற்ற நல்லவர்களால் மெச்சப்படுவதில்லை; அதே போல, முரண்பாட்டு வழியில் செயல்படும் தீயவர்கள், தங்கள் உடன் ஒத்த தீயவர்களால் புகழப்படுவதில்லை; உயர் குணங்களைக் கொடையாகக் கொண்டிருந்தாலும், நண்பர்கள், {மற்ற} நண்பர்களுக்கு ஏற்புடையவர்களாக இருப்பதில்லை. மூடப்பண்டிதர்கள் {பண்டிதர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் முட்டாள்கள்}, தங்கள் குருக்களின் அறங்களைச் {சிறப்புகளைச்} சொல்லிக் கதறுகிறார்கள். .. ஓ! அந்தணரே {கௌசிகரே}, பொருட்களின் இயற்கையான ஒழுங்கு இவ்வுலகில் எல்லா இடங்களிலும் தலைகீழாகவே காணப்படுகிறது. {உலகத்தில் பல பொருட்கள் மாறுபட்டிருப்பனவாகக் காணப்படுகின்றன}. பொருட்களின் நிலை மற்றும் அறம் ஆகியவற்றில் உமது கருத்தென்ன? நமது செயல்களில் நன்மையோ தீமையோ, சொல்வதற்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், எவனொருவன், தனது சொந்த தொழிலில் நிலைபெற்றிருக்கிறானோ, அவன் பெரும் புகழை அடைகிறான். .. ...... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-45 ... மகாபாரதம்-வனபர்வம் .. தர்மவியாதன் அந்தணரிடம் கூறிய கர்ம உபதேசம் .. "நேர்மையின் வழிகள் நுட்பமானவை, பல்முகப்பட்டவை, எல்லையற்றவை என்று முதிர்ந்தவர்கள் கருதுகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையிலும், திருமணக் காரியத்திலும் பொய் சொல்லத் தக்கதே. சில நேரங்களில் பொய்மை உண்மையின் வெற்றிக்கு வழிவகுக்கும்; உண்மை பொய்மையாய் தேய்ந்து போகும். எது அனைத்து உயிர்களுக்கும் நன்மையை விளைவிக்குமோ அதுவே உண்மை {சத்தியம்} என்று கருதப்படுகிறது. அறம் இப்படி நெறிதவறுவதிலும் இருக்கிறது; நீர் அதன் நுட்பமான வழிகளைக் குறித்துக் கொள்ளும். ... நன்மையோ, தீமையோ ஒரு மனிதனின் செயல்களுக்கான பலன்களை அந்த மனிதன் நிச்சயமாக அறுப்பான் {பெறுவான்}. இழிவான நிலையை அடையும் அறியாமை கொண்ட மனிதன், தனது தீய கர்மத்தின் விளைவுகளை அறியாமல், தேவர்களை முற்றிலுமாக நிந்திக்கிறான். மூடனும், கபடனும், நிலையற்றவனும் {சபலனும்} எப்போதும் மகிழ்ச்சியையோ துயரத்தையோ தலைகீழாக அடைகிறார்கள். கற்றலோ, நல்ல ஒழுக்க நெறியோ, சுய முயற்சியோ அவர்களைக் காப்பதில்லை. நமது முயற்சிகளின் கனிகள் {பலன்கள்} வேறு எதையும் சாராது சுதந்திரமாக இருந்தால், மனிதர்கள் தங்கள் விருப்பத்தின் நோக்கத்தை வெறும் முயற்சியிலேயே அடைவார்கள். .. இயன்றவர்கள், புத்திசாலிகள், விடாமுயற்சியுடைய மனிதர்களின் முயற்சிகள் தடைபட்டு, அவர்கள் தங்கள் செயல்களின் கனிகளை அறுப்பதில்லை என்பதைக் காண்கிறோம். மறுபுறம், மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதில் சுறுசுறுப்பாக இருப்பவர்களும், உலகத்தை ஏமாற்றுபவர்களும், மகிழ்ச்சியான வாழ்வை நடத்துகிறார்கள். எந்த முயற்சியுமே இல்லாமல் சிலர் செழிப்பை அடைகின்றனர். இன்னும் சிலர் மிகுந்த முயற்சி செய்தும் தங்களுக்கு உரியவற்றை அடைய இயலாமல் இருக்கின்றனர். தங்கள் மகன் பிறப்பதற்காகத் தேவர்களை வழிபட்டு, கடும் தவங்களை இயற்றும் இரக்கப்படத்தக்கவர்களால் {பெற்றோர்}, தொடர்ந்து பத்து மாதங்கள் கருவில் இருக்கும் அவர்களுடைய மகன்கள், தங்கள் குலத்தில் மிக மோசமானவர்களாக {குலத்தைக் கெடுப்பவர்களாக} ஆகிறார்கள். சிலர் அதே போன்ற கர்மங்களால் பெறப்பட்டு, தங்கள் வாழ்வைத் தங்கள் மூதாதையர் சேர்த்த செல்வம் மற்றும் தானியக் குவியல்களைக் கொண்டு தங்கள் வாழ்வை ஒழுங்காகவும் ஆடம்பரமாகவும் கழிக்கிறார்கள். .. மனிதனைத் தாக்கும் நோய்கள், சந்தேகமற அவனது சொந்த கர்மத்தின் பலன்களே. . மேலும் அவர்கள் மனக்கஷ்டங்களையும் அடுக்கிக் கொள்கின்றனர். தாங்கள் சேகரித்து வைத்திருக்கும் மருந்துகளைக் கொண்டு, தகுதி வாய்ந்த திறமை மிகுந்த மருத்துவர்களால் அந்த நோய்களின் வீரியம் சரிபார்க்கப்படுகிறது. அறத்தைப் பேணுபவர்களின் சிறந்தவரே {கௌசிகரே}, அதைத் {நோயைத்} தங்கள் கட்டுக்குள் {அதிகாரத்திற்குள்} வைத்து, (இந்தப் பூமியில் உள்ள நல்ல விஷயங்களை) அனுபவிப்பவர்கள், நாள்ப்பட்ட குடல் நோய்களில் இருந்து உண்மையில் தங்கள் துன்பத்தைக் களைகிறார்கள் என்றும், வலுவும் சக்தியும் கொண்டவர்கள், துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடையக்கூடப் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்றும் கண்டீர். அனைத்து மனிதனும் இப்படியே ஆதரவற்று, துன்பம் மற்றும் மாயையில் மூழ்கி, மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டு, பலமிக்கத் தங்கள் சொந்த செயல்களாலேயே (கர்மத்தாலேயே) மூழ்கிப் போகிறார்கள். .. செயல்களில் {எதையும் செய்யலாம் என்ற} முழுச் சுதந்திரம் இருந்திருந்தால் {தெய்வம் இல்லாதிருந்தால்}, எந்த உயிரினமும் சாகாது; யாரும் அழிவுக்கு உள்ளாகவோ, செய்த தீவினையின் தண்டனையை எதிர்நோக்கவோ மாட்டார்கள்; அனைவரும் விரும்பிய அனைத்தையும் அடைவார்கள். எல்லோரும் மற்றவரனைவரையும் {வாழ்வு எனும் பந்தயத்தில்} விஞ்சி நிற்கவே நினைப்பார்கள்; அவர்கள் அதற்காகத் தங்கள் முழுச் சக்தியையும் பயன்படுத்துவார்கள்; ஆனால் பலன் வேறுமாதிரியாக இருக்கும். .. ஒரு நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்த பலர் ஒரே மாதிரியான நற்பேறைப் பெறுகிறார்கள்; ஆனால் அவர்களது செயல்ளில் முதிர்ச்சியில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. எவனும் தன் செல்வத்தைத் தானே செலவழிப்பவனாக இருக்க முடியாது. முற்பிறவிகளில் செய்த செயல்களின் பலன்கள் இந்தப் பிறவியில் காணப்படுகிறது. ... ஆன்மா நித்தியமானது, முடிவில்லாதது என்பது தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய கருத்தாகும். ஆனால், அனைத்து உயிர்களின் உடற்கட்டும் இங்கே (கீழே) {அதாவது இவ்வுலகில்} அழிவுக்குள்ளாகிறது. எனவே வாழ்வு முடியும்போது, உடல் மட்டுமே அழிகிறது; ஆனால், ஆவியானது(சூட்சுமஉடல்)செயல்களோடு தனக்கு இருக்கும் சம்பந்தத்தால் வேறு எங்கோ பயணிக்கிறது {வேறு உடல் கொள்கிறது}" என்றான் வேடன் ( தர்மவியாதன்}....... ........தொடரும்................ [12:01 PM, 10/26/2023] Mohan SriRaghavendrar Kulithalai: சனாதன தர்மம் - பாகம்-46 ... மகாபாரதம்-வனபர்வம் .. தர்மவியாதன் அந்தணரிடம் கூறிய உபதேசம்-உயிர்கள் எப்படி மறுபடி பிறக்கின்றன? .. அந்தணர் {கௌசிகர்},கேட்டர். .. "ஓ! கர்மக் கோட்பாட்டையும் அறிந்தவர்களிலும், சொற்பொழிவு ஆற்றுபவர்களிலும் சிறந்தவனே, ஆத்மா எப்படி நித்தியமானதாகிறது என்பதைத் துல்லியமாக அறியவிரும்புகிறேன்" என்று கேட்டார். .. வேடன் {தர்மவியாதன்},கூறினான். "ஆவி {ஜீவன் } இறப்பதில்லை; வெறுமனே குடியிருப்பு மற்றமே நடக்கிறது. உயிர்கள் இறக்கின்றன என்று மடமையினால் தவறுதலாகச் சொல்கின்றனர். ஆன்மா மற்றொரு {உடல்} கட்டுக்குள் தன்னை வழிப்படுத்திக் கொள்கிறது. மேலும் அதன் {ஆத்மாவின்} வாழ்விட மாற்றமே மரணம் என்று அழைக்கப்படுகிறது. .. மனிதர்களின் உலகில், எந்த மனிதனும் வேறொரு மனிதனுடைய கர்மத்தின் பலன்களைப் பெறுவதில்லை. ஒருவன் எதைச் செய்தாலும், அதன் பலனை அவன் நிச்சயம் பெறுவான் என்பது நிச்சயம்; ஒருமுறை செய்யப்பட்ட கர்மத்தின் பலன்களை அகற்றவே முடியாது. அறம்சார்ந்தவர்கள் {நல்லவர்கள்} பெரும் நற்பண்புகள் கொண்டவர்களாகவும், பாவிகள் தீச்செயல்கள் புரிபவர்களாகவும் ஆகிறார்கள். மனிதர்களின் செயல்கள் அவர்களைத் தொடர்கின்றன; அதன் தாக்கத்தால் அவர்கள் மறுபடி பிறக்கிறார்கள்" என்றான் {வேடன் தர்மவியாதன்}. .. அந்தணர் {கௌசிகர்} கேட்டார்-, "ஆவி {ஜீவன்} ஏன் பிறப்பெடுக்கிறது? அதன் {ஆவியின்} பிறப்பிடம் {உடல்கள்} ஏன் பாவகரமாகவோ அறம்சார்ந்தவையாகவோ ஆகின்றன {மனிதன் ஏன் பாவியாகவோ நல்லவனாகவோ ஆகிறான்}? ஓ! நல்லவனே {தர்மவியாதா}, அது {ஆவி, ஜீவன்} எவ்வாறு பாவிகள் குலத்திற்கோ, நல்லவர்கள் குலத்திற்கோ உடையதாகிறது?" என்று விசாரித்தார். .. வேடன் {தர்மவியாதன்} கூறினான்- "இம்மர்மம் இனப்பெருக்கத்தின் {ஆவி கருவில் சேரும்} பொருள் சார்ந்ததாகத் தெரிகிறது. ஆனாலும், நேர்மையானவர்கள் நல்லவர்களிடமும், தீயவர்கள் பாவிகளிடமும் {முற்பிறவியில் செய்த} கர்மத்தால் குவிக்கப்பட்ட சுமையுடன், {அந்த ஆத்மா} மீண்டும் எவ்வாறு பிறக்கிறது என்பதை நான் உமக்குச் சுருக்கமாகச் சொல்வேன். .. அறம்சார்ந்த செயல்களைச் செய்வதனால் அது {ஆத்மா} தேவர்களின் நிலையை அடைகிறது; நல்ல மற்றும் தீய செயல்களின் கலவையால், அது {ஆத்மா} மனித நிலையை அடைகிறது. உணர்ச்சியில் மிகுதியான ஈடுபாடு கொண்டு, அதற்கு ஒப்பான சீரழிவான நடைமுறைகளைச் செய்வதால், அது {ஆத்மா} தாழ்ந்த இனங்களான விலங்குகளிடம் பிறக்கிறது {விலங்கின் நிலையை அடைகிறது}; .. பாவச் செய்லகளே செய்வதால், அது {ஆத்மா} நரகத்திற்கு {அல்லது, கொடிய இடத்திற்கு} செல்கிறது. பிறப்பு மற்றும் முதுமையினால் ஏற்படும் மனத்தளர்ச்சி ஆகிய துக்கங்களால் பாதிக்கப்பட்ட மனிதன், தனது சொந்த செயல்களின் தீய விளைவுகளை அடைய, இங்கே கீழே {பூமியில்} வாட விதிக்கப்படுகிறான். நரகப் பகுதிகள் உட்படப் பல ஆயிரக்கணக்கான பிறவிகளைக் கடந்து வரும் நமது ஆவிகள் {ஜீவன்கள்}, தங்கள் சொந்த கர்மத்தின் கட்டுகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. .. அசையும் தன்மை கொண்ட உயிரினங்கள், தங்களால் செய்யப்பட்ட இச்செயல்களினால் அடுத்த உலகில் பரிதாப நிலையை அடைகின்றன. அந்தத் துயரங்களின் எதிர்வினையால், அவை தாழ்ந்த பிறப்பை அடைகின்றன. பிறகு அவை புதிதான செயல்தொடரைக் குவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, நோயுள்ள மனிதன் நோயை உண்டாக்குகிற உணவைப் பெற்று மகிழ்ச்சிஅடைவதைப் போல அவை மீண்டும் துயரத்தையே அடைகின்றன. அதன் விளைவாக, தங்கள் சங்கிலிகள் தளர்த்தப்படாததால் அவற்றுக்குப் புதிய கர்மங்கள் {கர்மாக்கள்} எழுகின்றன. பல்வேறு துயரங்களால் பாதிக்கப்படுவதால், இவ்வுலகில் அவை {அசையும் உயிரினங்கள்} சக்கரங்களைப் போலச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. .. ஓ! அந்தணர்களில் சிறந்தவரே {கௌசிகரே}, தங்கள் சங்கிலிகளை அவை கைவிட்டால், தங்கள் செயல்களால் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு தவமும் அறத்தியானமும் பயின்று, எண்ணற்ற இதுபோன்ற செயல்களால் சொர்க்கம் சார்ந்த பகுதிகளை அடைகின்றன. தங்கள் சங்கிலிகளைக் கைவிடுவதாலும் கர்மத்தை சுத்திகரிப்பதாலும், மனிதர்கள் அருள் உலகத்தை அடைகின்றனர். அங்கே செல்பவர்களுக்கு துன்பம் என்பதே தெரியாது. .. தீயவைக்கு அடிமையாகும் பாவிகள், தங்கள் அக்கிரமப் பாதைக்கு ஒரு முடிவை அடைய மாட்டார்கள். எனவே, எது அறம்சார்ந்ததோ {நன்மையோ} அதை நாம் செய்ய முயல வேண்டும். எது அறம்சாராததோ அதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதயம் நிறைந்த நன்றியுணர்வுடனும், துர்குணத்தில் இருந்து விடுபட்டும், எது நன்மையோ அதைச் செய்பவன், செல்வம், அறம், மகிழ்ச்சி மற்றும் சொர்க்கத்தையும் {இதற்கு அடுத்த உலகத்தையும்) அடைகிறான். .. பாவங்களில் இருந்து சுத்தமடைந்தவர்கள், ஞானமுள்ளோர், பொறுமைசாலிகள், நேர்மையில் நிலைத்திருப்பவர்கள், சுயக்கட்டுப்பாடு கொண்டவர்கள் ஆகியோர், இவ்வுலகத்திலும், இதைத் தொடரும் அடுத்த உலகத்திலும் {இம்மையிலும் மறுமையிலும்} தொடர்ச்சியான இன்பநிலையை அனுபவிக்கின்றனர். மனிதர்கள் நல்லவர்களின் நிலையான அறத்தைப் பின்பற்ற வேண்டும். அவனது செயல்கள் நேர்மையானவர்களின் செயல்களை உதாரணமாகக் கொண்டிருக்க வேண்டும். புனித சாத்திரங்களை அறிந்த, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் கற்ற அறம்சார்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதனின் சரியான கடமை, தனக்குச் சரியான தொழிலைச் செய்வதில் அடங்கியிருக்கிறது. இதுவே வழக்கென்றால் பின்னது {தொழில்} குழப்பமானதாகவும், கலவையானதாகவும் இருக்காது. .. ஞானி அறத்தில் மகிழ்ந்து, நேர்மையாக வாழ்கிறான். இப்படி அடையப்பட்ட நேர்மையைச் செல்வமாகக் கொண்ட அப்படிப்பட்ட {அறம்சார்ந்த} மனிதன், தனக்கு எது மிகவும் அறம்சார்ந்தது எனக் கண்டடைகிறானோ அந்தச் செடியின் {அந்த அறச்செயலின்} வேருக்கு நீர் இரைக்கிறான். இப்படியே அறம்சார்ந்த மனிதன் செயல்படுகிறான். அவனது மனமும் அமைதியாக இருக்கிறது. அவன் இவ்வுலகத்தில் உள்ள தனது நண்பர்களிடம் திருப்தியுடன் இருக்கிறான். அதன் பிறகு அவன் எப்போதும் மகிழ்ச்சியையே அடைகிறான். .. ஓ! நல்ல மனிதரே {கௌசிகரே}, அறம்சார்ந்த மனிதர்கள், தங்கள் விருப்பத்தின்படி அழகு, சுவை, ஒலி, மற்றும் தொடு உணர்வுகளால் மகிழ்ச்சியை அடைகிறார்கள். இவையே அறத்தின் நற்கூலி {தர்மத்தின் பயன்} என்று அறியப்படுகிறது. .. ஆனால், ஓ! பெரும் அந்தணரே {மஹா பிராமணரே}, ஞானப் பார்வை கொண்ட மனிதன், நீதியால் கிடைக்கும் கனிகளை அறுப்பதால் திருப்தியடைவதில்லை. அதில் மன நிறைவு கொள்ளாமல் ,அவன், தனக்குள் இருக்கும் ஆன்மிக ஞானத்தால், வலி,மகிழ்ச்சி மற்றும் உலகத்தின் தீமைகள் ஆகியவற்றால் பாதிப்படையாமல் அவற்றின் மேல் அலட்சியமாக இருக்கிறான் {வைராக்கியத்தை அடைகிறான்}. தனது சொந்த விருப்பத்தின் பேரில் உலகம் சார்ந்த பொருட்களின் மீது அலட்சியம் கொள்ளும் அவன், அறத்தை மட்டும் கைவிடுவதில்லை. .. உலகில் அனைத்தும் நிலையற்றது என்பதைக் கவனிக்கும் அவன் அனைத்தையும் துறப்பதற்கு முயல்கிறான். முக்திக்கான {விடுதலை} வழி வகைகளை எட்ட சிந்தித்து, பல வாய்ப்புகளைக் கணக்கிட்டுப் பார்க்கிறான். இப்படியே அவன் உலக நோக்கங்களைத் துறந்து, பாவ வழிகளை அடைத்து, அறம்சார்ந்தவனாகி கடைசியாக முக்தியை அடைகிறான். (முக்தி என்பது சொர்க்கத்தைவிட மேலானது).முக்திக்கு ஆன்மிக ஞானமே {தவமே} முக்கியத் தேவையாக இருக்கிறது. துறவு, பொறுமை ஆகியனவே அதன் {முக்தியை அடைய} வேர்கள். இவ்வழிகளில் அவன் தனக்கு விருப்பமானவை அனைத்தையும் அடைகிறான். .. ஆனால், ஓ! நல்ல அந்தணரே புலன்களை அடக்குதல், சத்தியத்தின் வழிகள், பொறுமை ஆகியவற்றால் அவன், தலைமையான ஆசிரமமான, பிரம்மனின் ஆசிரமத்தை {பிரம்ம நிலையை} அடைகிறான்" என்றான் {தர்மவியாதன்}. .. .. ... ........தொடரும்................ [12:03 PM, 10/26/2023] Mohan SriRaghavendrar Kulithalai: சனாதன தர்மம் - பாகம்-47 ... மகாபாரதம்-வனபர்வம் .. தர்மவியாதன் அந்தணரிடம் கூறிய உபதேசம்-புலன்களை கட்டுப்படுத்தினால் சொர்க்கத்தை அடையலாம் .. அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஓ! அறத்திலும் மிகச் சிறந்தவனே, அறக்கடமைகளைச் செய்வதில் நிலையானவனே {தர்மவியாதா}, நீ புலன்களைக் குறித்துப் பேசுகிறாய்; அவை என்ன' அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது? அதைக் கட்டுப்படுத்துவதால் என்ன நன்மை? ஒரு உயிரினம் அதன்மூலமாக எப்படிக் கனிகளை அறுக்கிறது? ஓ! பக்திமானே, இவ்விஷயத்தில் உண்மையை எனக்குத் தெரியப்படுத்த இரந்து கேட்கிறேன்" என்றார் {கௌசிகர்}. .. வேடன் {தர்மவியாதன்},கூறினான் "மனிதர்களின் மனங்கள் முதலில் அறிவை அடைவதில் முனைகின்றன. அதை அடைந்ததும், அவர்கள் தங்கள் ஆசைகளிலும், விருப்பங்களிலும் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரிய அளவில் இலக்குகளை நிர்ணயித்து உழைக்கிறார்கள். அழகு, சுவை போன்ற அவர்கள் மிகவும் விரும்பும் காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக விருப்பம் {பாசம்}, பொறாமை, பின்னர்ப் பேராசையும் வருகின்றன. அதன் பின்னர் அவர்களது ஆன்ம ஒளி அழிகிறது. .. மனிதர்கள் பேராசையின் ஆதிக்கத்தில் இருக்கும்போது, அவர்கள் பொறாமையிலும் பாசத்திலும் மூழ்குகிறார்கள். அவர்களது அறிவு, நீதியின் வழிகாட்டுதல் படி நடப்பதில் இருந்து விலகுகிறது. அவர்களது அறப் பயிற்சி கேலிக்குரியதாகிறது. பாசாங்குத்தனத்தோடு அறம் பயில்வதால், கௌரவமற்ற வழிகளில் செல்வத்தைப் பெற்று மனநிறைவு அடைகிறார்கள். இப்படி அடையப்பட்ட செல்வத்தால், அவர்களில் இருந்த புத்திசாலித்தனம் தீய வழிகளில் மயங்குகிறது. மேலும், அவர்கள் பாவமிழைக்கும் விருப்பத்தால் நிரம்புகிறார்கள். ... அவர்களது நண்பர்களும், ஞானம் கொண்டவர்களும் அவர்களை எச்சரிக்கும்போது, கண்துடைப்பான {போலியான} பதில்களைத் தயாராக வைத்திருப்பார்கள். அந்தப் பதில்கள் வலுவானதாகவோ {ஆரோக்கியமானதாகவோ}, சமாதானம் ஏற்படுத்துவதாகவோ இருக்காது. தீய வழிகளுக்கு அடிமைப் பட்டிருப்பதால், அவர்கள் மூன்று வித பாவங்கள் செய்த குற்றவாளியாகிறார்கள். .. அவர்கள், எண்ணம், சொல், செயல்களில் {என்ற மூன்று விதங்களில்} பாவமிழைக்கிறார்கள். பொல்லாத வழிகளுக்கு அடிமைப்பட்டிருப்பதால், அவர்களது அனைத்த நல்ல குணங்களும் சாகின்றன {அழிகின்றன}. இது போன்ற தீச்செயல் செய்யும் மனிதர்கள், தன்னைப் போன்ற தன்மை கொண்ட மனிதர்களிடமே நட்பை வளர்ப்பார்கள். அதன் விளைவாக அவர்கள் இவ்வுலகிலும், அடுத்த உலகிலும் துன்பத்தையே அனுபவிக்கிறார்கள். .. பாவம் நிறைந்த மனிதன் {மேற்சொன்ன} இந்த இயல்பிலேயே இருக்கிறான். இப்போது அறம்சார்ந்த மனிதனைப் பற்றிக் கேளும். அவன் {அறம்சார்ந்தவன்}, இத்தீமைகளைத் தனது ஆன்ம உட்பார்வையால் { ஆன்மிகப் பார்வையால்} கண்டுகொண்டு, இன்பம் மற்றும் துயரம் ஆகியவற்றுக்கிடையே உள்ள பாகுபாட்டை அறியும் ஆற்றல் பெறுகிறான். அறம்சார்ந்தவர்களை மரியாதையுடன் கவனிப்பதாலும், அறங்கள் பயில்வதாலும், அவனது மனம் நீதியை நோக்கி உயர்கிறது" என்றான் வேடன் {தர்மவியாதன்}. .. .. தனது முந்தைய கர்மத்துடன் {வினையுடன்} தொடர்புடைய ஒருவன், எவ்வளவுதான் ஆன்ம ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அவனது ஆன்மாவின் புறநிலை இருப்பை மட்டுமே அறிகிறான். ஆனால் சுற்றியிருக்கும் புற நிலைமைகளால் பாதிக்கப்படாத ஆன்மா கொண்ட மனிதன், அடிப்படை ஆவியான பிரம்மம் அதைக் {கர்மங்களின் தொடர்பை} கிரகிப்பதன் காரணமாக {அம்மனிதன்} தீமைகளுக்கு ஆட்படுவதில்லை. .. மாயையின் ஆதிக்கத்தில் இருந்து ஒரு மனிதன் விடுபடும்போது, ஆன்மிக ஞானத்தின் சாரம் கொண்டவையும், ஆண்மை நிறைந்தவையுமான அவனது அறங்கள், ஆன்ம ஞானத்தின் பக்கம் திரும்பி, புலனறிவும் ஆற்றலுமுள்ள புத்திசாலியாக அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது. அத்தகைய மனிதன், தொடக்கமும் {ஆதியும்} முடிவும் {அந்தமும்} இல்லாத, தானே இருப்பதான {சுயம்புவான}, மாற்றம் இல்லாத, உடல் வடிவம் இல்லாத, ஒப்பிடமுடியாத எல்லாம் வல்ல அறிவார்ந்த பிரம்மத்தால், உருவம் கொடுக்கப்படுகிறான். .. தன்னொழுக்கம், புலன்களை அடக்குவதால் மட்டுமே அடையப்படுகிறது. இதற்கு வேறு வழியில்லை. சொர்க்கம் நரகம் ஆகிய இரண்டும் நமது புலன்களைச் சார்ந்தே இருக்கிறது. கட்டுக்குள் வைக்கப்படும்போது அவை சொர்க்கத்திற்கு வழிவகுக்கும்; பழக்கப்படுத்தினால் {கட்டுப்படுத்தாவிட்டால்}, அவை நரகத்திற்கு வழிவகுக்கும். இந்தப் புலனடக்கமே ஆன்ம ஒளியை அடைவதற்கான உயர்ந்த வழிமுறையாகும். .. நமது புலன்களே, நமது ஆன்ம முன்னேற்றத்துக்கான வேராகவும் (காரணமாகவும்), ஆன்ம அழிவுக்கான வேராகவும் இருக்கிறது. அவற்றைப் பழக்கப்படுத்துவதால் {கட்டுப்படுத்தாமல் செயல்படவிட்டால்}, ஒரு மனிதன் சந்தேகமற தீயவற்றோடு தொடர்பு கொள்கிறான். அவற்றை அடக்கினால் அவன் முக்தியை அடைகிறான். சுயக்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், தன் இயல்பில் உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்களின் {ஐம்புலன்கள் மற்றும் மனம்} மீது ஆதிக்கத்தை அடைந்தால், அவன் பாவத்தால் களங்கப்படுவதில்லை. மேலும் அதன் காரணமாகத் தீமைக்கு அவன் மீது எந்த அதிகாரமும் ஏற்படுவதில்லை. .. மனிதனின் உடல் தேராகவும், அவனது ஆன்மா தேரோட்டியாகவும், அவனது புலன்கள் குதிரைகளாகவும் ஒப்பிடப்படுகிறது. திறமையான கரங்கள் கொண்ட மனிதன், அமைதியான தேரோட்டியாக, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட குதிரைகளைக் குழப்பமில்லாமல் செலுத்துகிறான். .. இயற்கையாக உள்ளார்ந்து இருக்கும் ஆறு புலன்கள் எனும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களைப் பொறுமையாக பற்றி ஓட்டுபவன் அற்புதமான தேரோட்டியாகக் கருதப்படுகிறான். நெடுஞ்சாலையில் செல்லும் ஆளுமைக்குட்படாத குதிரைகளைப் போல நமது புலன்கள் ஆகும்போது, நாம் அதன் கடிவாளத்தைப் பொறுமையாகப் பற்ற வேண்டும். பொறுமையால் மட்டுமே நாம் நிச்சயம் சிறந்ததைச் செய்ய முடியும். .. ஒரு மனிதனின் மனது, எந்த ஒரு புலனின் முரட்டு ஓட்டத்திலாவது மூழ்கினால், புயலின் போது உயர்ந்த சமுத்திரத்தில் தூக்கி வீசப்படும் கப்பல் போல ஆகி, அவன் தனது புத்தியை இழக்கிறான். மனிதர்கள், அந்த ஆறு பொருட்களால் கனிகளை அறுக்கலாம் {பலன்களை அனுபவிக்கலாம்} என்ற நம்பிக்கையில் மாயையால் ஏமாற்றப்படுகின்றனர். தங்கள் தெளிவான கருத்துகளால் கனிகளை அறுக்கும் ஆன்ம உள்பார்வை கொண்ட மனிதர்களால் அதன் விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன" என்றான் {தர்மவியாதன்}.... ........தொடரும்................ [12:04 PM, 10/26/2023] Mohan SriRaghavendrar Kulithalai: சனாதன தர்மம் - பாகம்-48 ... மகாபாரதம்-வனபர்வம் .. சூத்திர வர்ணத்தில் பிறந்தவன்கூட பிராமணனாகலாம் .. அந்தணர் தர்மவியாதனிடம் கேட்டார் . - "சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய குணங்களுக்கு உரிய ஒழுக்கங்களை உள்ளது உள்ளபடி கேட்கும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். . அதற்கு வேடன் {தர்மவியாதன்}, "நன்றி. நீர் கேட்பதை நான் உமக்குச் சொல்கிறேன். அது அதற்கு உரிய ஒழுக்கங்களை நான் விவரிக்கிறேன், கேளும். அவற்றில் தமஸ் குணம் மாயையால் வகைப்படுத்தப்படுகிறது. ரஜஸ் குணம் (மனிதர்களைச் செயல்படத்) தூண்டுகிறது. சத்வ குணம் பெரும் கம்பீரத்துடன் இருக்கிறது. அதனால் சத்வகுணமே பெரியது என்று சொல்லப்படுகிறது. .. ஆன்ம அறியாமை, மூடத்தனம், அறிவற்ற தன்மை, கனவிலேயே லயிப்பு, செயலற்ற தன்மை, சுறுசுறுப்பற்ற தன்மை, கோபம் மற்றும் கர்வத்தால் இயக்கம் ஆகியவற்றில் ஆதிக்கத்தில் பெரிதும் மூழ்கியவன், தமஸ் குண ஆதிக்கத்தில் இருப்பவனாகச் சொல்லப்படுகிறது. .. ஏற்புடைய பேச்சு, சிந்தனாசக்தி, பொறாமையற்ற தன்மை, ஊக்கமான செயல்பாடுகளால் பலன்களை அடைய விருப்பம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்ட அற்புதமான மனிதன், ரஜஸ் குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. .. உறுதி, அமைதி, கோபமடையாமை, துர்க்குணத்தில் இருந்து விடுதலை, தன்னல விருப்பத்தால் பலன்களை பெறுவதற்காக செயல்படுவதில் நிபுணத்துவம் இல்லாமை {லாபம் அடைவதில் விருப்பமில்லாமை}, ஞானம், பொறுமை ஆகியவற்றைக் கொண்டவன் சத்வ குணத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. .. சத்வ குணத்தைக் கொண்ட மனிதன், உலகப்பற்றால் ஆட்கொள்ளப்படும்போது, அவன் துயரால் பாதிக்கப்படுகிறான்; ஆனால், அவன் அதன் {உலகப்பற்றின்} முழு விளைவையும் அறியும்போது, அவன் உலகப்பற்றை வெறுக்கிறான். பிறகு உலக விவகாரங்களில் அலட்சிய உணர்வு அவனை ஆட்கொள்ளத் தொடங்குகிறது. பிறகு அவனது கர்வம் குறைகிறது, நீதியே அதிக முக்கியமாகிறது, அவனது முரண்பட்ட அறநெறி உணர்வுகள் ஒப்புரவாகின்றன {சமரசம் ஆகின்றன}. பிறகு, எந்தக் காரியத்திலும் சுயக்கட்டுப்பாடு தேவையற்றதாகிறது. .. ஓ! அந்தணரே {கௌசிகரே}, ஒரு மனிதன் சூத்திர சாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நல்ல குணங்களைக் கொண்டிருந்தானானால், அவன் வைசிய நிலையையும், க்ஷத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். அவனே நேர்மையில் உறுதியாக இருந்தானானால், அவன் பிராமணனாகக் கூட ஆகலாம். ... ... ........தொடரும்................ சனாதன தர்மம் - பாகம்-49 ... மகாபாரதம்-வனபர்வம் .. பொறுமையான யோகிகள் அனைத்துத் துன்பங்களையும் கடக்கும் வழி இதுதான் .. அந்தணர் {கௌசிகர்}, உயிர் சக்தி, பூமியின் தனிமத்தோடு கூடி உயிரினங்களின் உடல்சார்ந்த வசிப்பிடமாக எப்படி ஆகிறது? மேலும், உயிர்க்காற்று (உயிர்மூச்சு) அதன் இருக்கையின் (தசைகள் மற்றும் நரம்புகளின்) இயல்பால் எப்படிச் (உடலெனும் சட்டகத்தைச்) செயல்படத் தூண்டுகிறது?" என்று விசாரித்தார். .. வேடனான தர்மவியாதன்}, உயர்ந்த மனம் கொண்ட அந்த அந்தணரிடம் {கௌசிகரிடம்}, "உயிர் ஆவி, உணர்வுநிலை {மூளை} எனும் இருக்கையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, உடல் கட்டமைப்பின் செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. ஆன்மாவானது அவ்விரண்டிலும் {ஆவியிலும், மூளையிலும்} இருந்து கொண்டு அவை மூலமாகச் செயல்படுகிறது. கடந்த காலம் {சென்றது}, நிகழ்காலம் {இருப்பது}, எதிர்காலம் {வருவது} ஆகியவை ஆன்மாவிலிருந்து பிரிக்க முடியாதபடி கலந்திருக்கிறது. . உயிரினங்களில் இருப்பனவற்றில் அதுவே {ஆன்மாவே} உயர்ந்தது; அதுவே பரமாத்மாவின் சாரம்; நாம் அதை வணங்குகிறோம். அதுவே {ஆன்மாவே} உயிரினங்களின் இயக்க சக்தியாக, நித்திய (ஆவியாக) புருஷனாக {நித்தியமானதாக} இருக்கிறது. அதுவே பெரியது; அதுவே புத்தியும் அகங்காரமாகவும் இருக்கிறது. அதுவே பூதங்களின் {பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின்} பல்வேறு பண்புகளுக்கான அகநிலை {தன்னிலை} இருக்கையாக இருக்கிறது. .. இங்கே {உடற்கட்டுக்குள்} இப்படி {ஆன்மாவானது} அமர்ந்து கொண்டு, வெளிப்புறமாகவோ {புறமாகவோ}, உட்புறமாகவோ {அகமாகவோ} (பொருளிலோ மனதிலோ), பிராணன் என்ற நுட்பமான ஐம்புலன்களின் காற்று {பிராணவாயு} மூலம் அனைத்துடனும் உறவுகளைத் {தொடர்புகளைத்} தக்க வைத்துக் கொள்கிறது. .. அதன் பிறகு ஒவ்வொரு உயிரினமும், சமானம் என்ற மற்றொரு நுட்பமான காற்றின் செயல்பாட்டால் அதன் வழியிலேயே செல்கின்றன. பின்னது {சமானம் என்ற காற்று [சமான வாயு]} அபானக் காற்றாகத் தன்னை மாற்றிக் கொண்டு, வயிற்றின் தலைப்பகுதியால் தாங்கப்பட்டு, உடலால் புறக்கணிக்கப்பட்ட பொருட்களான மலஜலங்களைச் சிறுநீரகம் மற்றும் குடலுக்குள் சுமந்து செல்கிறது. .. அதே காற்று {சமான [அ] அபான வாயு}, முயற்சி, உழைப்பு மற்றும் சக்தி ஆகிய மூன்று கூறுகளிலும் இருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் அது {சமான [அ] அபான வாயு}, இயற்பியலாளர்களால் உதானக் காற்று {உதான வாயு} என்று அழைக்கப்படுகிறது. .. மனித உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துச் சந்திப்பு புள்ளிகளிலும் அது {சமான அல்லது உதான வாயு} தன் இருப்பை வெளிப்படுத்தும்போது, அது வியானம் என்று அழைக்கப்படுகிறது. .. மேலும், அக வெப்பம் {உடலுக்குள் உருவாகும் வெப்பம்} நமது உடலமைப்புக்குள் இருக்கும் அனைத்துத் திசுக்களின் மீதும் பரவுகிறது. இவ்வகைக் காற்றுகளின் {பிராண வாயு சமானம், அபானம், உதானம், வியானம்} மூலம் தாங்கப்பட்டு, இது {வெப்பம்} நாம் உண்ணும் உணவை, திசுக்களுக்கும் உடல் நீர்மங்களுக்கும் கடத்துகிறது. .. பிராண வாயுவுடன் கூட்டமைக்கும் பிற காற்றுகளால், ஒரு (கலவையான) எதிர்வினை உருவாகிறது. அதன் {அந்த எதிர்வினை} மூலம் உருவாக்கப்பட்ட வெப்பமே மனித அமைப்பின் அக வெப்பம் என்று அறியப்படுகிறது. அதுவே {அந்த வெப்பமே} நமது உணவின் செரிமானத்திற்குக் காரணமாகிறது. .. பிராண மற்றும் அபான காற்றுகள் {வாயுக்கள்}, சமான மற்றும் உதான காற்றுகளுக்கு {வாயுக்களுக்கு} இடையிலேயே நிலைபெற்றிருக்கின்றன. அவற்றின் கூட்டணியில் {உராய்வால்} உற்பத்தியாகும் வெப்பமே (ஏழு பொருட்கள், எலும்புகள், தசைகள் மற்றும் இதரவை அடங்கிய) உடலின் வளர்ச்சி காரணமாக அமைகிறது. .. பெருங்குடல் வரை விரிந்து இருக்கும் பகுதியை இருக்கையாக {தான் இருக்கும் இடமாகக்} கொண்டது அபானம் என்று அழைக்கப்படுகிறது. தமனிகளில் {இரத்தக் குழாய்களில் இருந்து (பிராணம் முதற்கொண்ட) ஐந்து காற்றுகளும் {பிராணம், சமானம், அபானம், உதானம், வியானம்} எழுகின்றன. .. பிராணக் காற்று வெப்பத்தால் செயல்பட்டு, அபானப் பகுதியின் எல்லையைத் தாக்குகிறது. பின்னர்த் திகைத்து நின்று, அந்த வெப்பத்துடன் எதிர்வினை புரிகிறது. தொப்புளுக்கு {நாபிக்கு} மேலே செரிக்காத உணவுள்ள பகுதியும் {ஆமாசயம்}, அதற்கு {தொப்புளுக்குக்} கீழே செரிமானம் செய்யும் பகுதியும் {பக்வாசயம்} இருக்கின்றன. .. பிராணக்காற்றும், உடலமைப்புக்குள் இருக்கும் மற்ற பிற காற்றுகளும், தொப்புளிலேயே {நாபியிலேயே} அமர்ந்திருக்கின்றன {நிலைபெற்றிருக்கின்றன}. இதயத்திலிருந்து வெளிவந்து தமனிகள் {இரத்தக்குழாய்கள், நரம்புகள்} மேலும் கீழுமாகவும், சாய்வான திசைகளிலும் ஓடுகின்றன; அவை நம் உணவில் இருந்து சிறந்த சாரத்தை எடுத்துக் செல்கின்றன. அவற்றுடன் {உணவின் சிறந்த சாரத்தை} பத்து பிராணக் காற்றுகள் {பிராணவாயுக்கள்} வினைபுரிகின்றன. .. பொறுமையான யோகிகள் அனைத்துத் துன்பங்களையும் கடக்கும் வழி இதுதான். .. பொருட்களைச் சார்பற்ற சமமான பார்வையில் பார்க்கும் அவர் அவர்கள் {யோகிகள்}, தங்கள் ஆன்மாக்களை மூளையில் இருத்தி, அனைத்து உயிரினங்களின் உடலுக்குள்ளும் இருக்கும் பரமாத்மாவையும், பிராண மற்றும் அபானக் காற்றுகளையும் கண்டுபிடிக்கின்றனர். .. உடல் என்ற மாற்றுருவத்தில், (விலங்குகளின் உடலமைப்பில்) பதினொரு புறவேற்றுமைத் தனிமங்களின் நிலையில் சூட்சுமஉடல் உள்ளடங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும். அது {ஆவி} நித்தியமாக இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட நெருப்பு நித்தியமாக இருப்பினும், அதன் புறச்சூழலுக்கு ஏற்றவாறு மாறுவதைப் போல அதன் இயல்பு தன்னுடன் இருப்பவையின் வெளிப்படையாக மாற்றப்படுகிறது. .. தெய்வீகப் பொருளுடன் உறவுகொள்ளும் உடல், தாமரை இலையின் பரப்பில் இருக்கும் நீர்த்துளி {அதனுடன் ஒட்டாமல்} உருளுவது போலவே பிந்தையதுடன் {ஆவியுடன்} தொடர்புடையதாகும். {அதாவது உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம் தாமரை இலை நீர்த்துளி போன்றதாகும்) ... ........தொடரும்................

No comments: