Sunday, October 29, 2023

விதுர நீதி - 28 29-10-2023



Radhe Krishna 29-10-2023





Radhe KRISHNA 29-10-2023




விதுர நீதி - 28 29-10-2023

விதுர நீதி - 28 29-10-2023


Radhe Krishna 29-10-2023 Thu, Oct 5 at 8:20 PM Radhe Krishna 05-10-2023 விதுர நீதி - 28 விதியை மதியால் வெல்வது எப்படி? விதியை மதியால் நிஜமாகவே வெல்ல முடியுமா? அல்லது விதியை மதியால் வெல்லும் அந்த நிகழ்வும் விதியின்ஒரு விளையாட்டா?. படித்ததில் பிடித்த நல்ல நீதிக்கதை!! ஒரு மிகப் பெரிய மலையின் அடிவாரத்தில் அழகிய காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டில் ஒரு பறவை மிகவும் இன்பமாக சுற்றித் திரிந்து உலா வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை மீது ஆகாயத்தில், மேகங்களுக்கு இடையில் சில தேவர்கள் வேகமாக மிதந்து சென்று கொண்டு இருந்தனர். அவர்களைக் கண்ட அந்த அழகிய பறவை ஒரு பெரிய மரத்தின் மேல் உள்ள கிளையில் தன் இறகுகளை மடித்து சற்றே அமர்ந்தது. ஆகாயத்தில் முதலில் அக்னி தேவன் செல்வதையும் அவர் பின்னால் வாயு தேவன் மற்றும் அனைத்து தேவர்களும் செல்வதைக் கண்டு பறவை ஆச்சரியம் அடைந்தது. அனைத்து தேவர்களுக்கும் பின்னால் தேவேந்திரன் செல்வதையும் பறவை கவனித்தது. பறவைக்கு தேவர்கள் அனைவரும் எங்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை. "சரி, நம் வேலையை பார்ப்போம்" என்று எண்ணி பறவை அருகில் இருந்த மா மரங்களில் இருந்து விழுந்திருந்த மாம்பழங்களை கொத்தி சாப்பிட்டு கொண்டு இருந்தது. வயிறார சில மாங்கனிகளை உண்ட பின்னர் சற்று இளைப்பாற எண்ணி ஒரு மரக்கிளையில் சாய்ந்தது. அப்பொழுது அனைத்து தேவர்களும் ஆகாயத்தில் ஏதோ பேசிக் கொண்டு தேவலோகத்திற்கு திரும்பிச் செல்வதை உறங்கும் கண்களோடு பறவை கவனித்தது. பறவை ஒரு நிமிடம் அதிர்ந்து போனது. அதன் அதிர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?. அனைத்து தேவர்களையும் கண்ட பறவை இறுதியில் எமதர்ம ராஜன் கதையையும் பாசக் கயிற்றினையும் சுமந்துகொண்டு நடந்து வரும் காட்சியை கண்டதனால்தான். பறவை சற்று அச்சம் அடைந்தது. ஒருவர் இறக்கும் தருவாயில் அல்லவா எமதர்மனை காண இயலும். அப்படி எனில் தாம் மரணமடைய போகின்றோமா என்றெல்லாம் பறவை சிந்தித்தது. ஆனால் எமதர்மன் தன்னைக் பார்க்கவில்லை என்று பறவை சமாதானம் அடைந்தது. என்ன ஆச்சரியம்!. அடுத்த நொடியே எமதர்மன் தன் தலையை திருப்பி தொலைதூரத்தில் உள்ள கானகத்தில் உள்ள மரக்கிளையில் சாய்ந்து கொண்டிருந்த பறவையை பார்வையிட்டான். எமதர்மனின் அந்த பார்வையே பறவையை நிலை குலையச் செய்தது. எமதர்மர் சில வினாடிகள் பறவையை நோக்கி விட்டு தேவர்களை பின் தொடர்ந்து சென்று விட்டார். இந்த அச்ச மயமான சம்பவம் பறவைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை எமதர்மன் என்னைத் தேடி இந்த கானகத்திற்கு வந்து விட்டால் என்செய்வேன்?. எங்கே போவேன்?. இந்த அச்சத்திலிருந்து எப்படி நான் விடுதலை அடைவேன்?!. சிறிது நேரம் சிந்தித்ததில் பறவைக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அது என்னவென்றால் தான் எமனின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் எம்பெருமான் மகா விஷ்ணுவை துதிக்க வேண்டும் என்று முடிவு செய்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு நாராயணனை அகக்கண்ணால் வழிபடத் தொடங்கியது. கண்ணில் கண்ணீர் மல்க பரந்தாமனை துதி பாடியது பறவை!. பறவையின் இசை கேட்டு இன்பமுற்று நாராயணர் தன் கருட வாகனத்தில் ஏறி பறவையைக் காண கானகத்திற்கு வந்தார். "பறவையே! உனது கண்களை திறவாய்!உனது பக்தி மயமான துதியைக் கேட்டு யாம் அகம் மகிழ்ந்தோம்!. உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள்" என்று நாராயணர் புன்னகையுடன் வினவினார். பறவை மெதுவாக கண்களைத் திறந்து, "ஐயனே! வைகுண்ட வாசா! உனது வைகுண்டத்தில் எனக்கு ஒரு சிறு இடம் அளிப்பாயா?. எம தர்மராஜன் என்னை தன் கண்களால் மிரட்டி விட்டுச் சென்றார். நீ அறியாதது ஒன்றுமில்லை. என்னை நீயே காப்பாற்ற வேண்டும்!" என்று நெகிழ்ச்சியுடன் உரைத்தது. நாராயணரும், "அப்படியே ஆகட்டும்!" என்று பறவைக்கு அருள்மொழி மொழிந்தார். பறவை மிக்க மகிழ்ச்சி அடைந்தது. சில நொடிகளிலேயே நாராயணர் பறவையை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். வைகுண்டத்தை அடைந்த பறவை அளப்பரிய இன்பத்தைப் பெற்றது. நாராயணர் வைகுண்டத்தில் ஒரு குளத்திற்கு அருகில் உள்ள சிறிய பாறையை பறவைக்கு காண்பித்து, "பறவையே! நீ இந்த குளத்தை சுற்றியும், பாறைக்கு அருகிலும் எங்கு வேண்டுமெனிலும் சுற்றித் திரிந்து விளையாடிக் கொள்ளலாம்!. வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டாம்." என்று கூறி விட்டு தன் மனைவியான மகாலட்சுமியை காணச் சென்றார். பறவை ஆனந்தம் அடைந்து குளத்திற்கு அருகில் சிறிது நேரம் விளையாடியது. பின்னர் பாறைக்கு பின்னே உள்ள சின்னஞ்சிறு செடிகளில் உருண்டு பிரண்டு இன்புற்றது. ஆனால் சற்று நேரத்திலேயே குளமும் பாறையும் பறவைக்கு சலித்துப் போயின. பெருமாள் சொன்ன வார்த்தையை உதாசீனம் செய்து குளத்தையும் பாறையையும் தாண்டி பறந்து சென்றது. சற்று தூரத்திற்கு பறந்து சென்ற பறவை வைகுண்டத்தின் பரந்து விரிந்த இயற்கை அழகினை கண்டது. குளத்திற்கு சற்று தூரத்திலுள்ள ஒரு பெரிய மாமரத்தை கண்டது. அதன் மேல் பறவை சென்று அமர்ந்தது. சில மாங்கனிகளை உண்டது. சற்று நேரத்திலேயே எங்கிருந்தோ வந்த ஒரு வேடனது அம்பானது அந்தப் பறவையின் இதயத்தை துளைத்தது. பறவை தன் கண்களில் நீர் மல்க மரத்திலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த எமதர்மராஜன் பறவைக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்டார். பறவை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் எமதர்மரிடம், "பிரபு! தாங்கள் என்னை கண்டு விட்டீர்கள் என்று அச்சம் அடைந்து எனது வசிப்பிடத்தை நீங்கி வைகுண்டம் அடைந்தேன். ஆனால் தாமோ இங்கு வந்த எனது உயிரை பறித்து விட்டீர்! விதியை மதியால் வெல்ல நினைத்து இறுதியில் தோல்வியையே சந்தித்தேன். என்னாளிலும் விதியை வெல்ல ஒருவராலும் முடியாது என்று நான் நன்கு உணர்ந்து கொண்டேன்" என்று உரைத்தது. எமதர்மராஜன் பறவையின் கூற்றைக் கேட்டு மெல்ல சிரித்தார். "அன்பிற்குரிய பறவையே! நான் ஏன் உன்னை மலையிலிருந்து கவனித்து விட்டு ஏதும் செய்யாமல் சென்றேன் என்பதற்கு காரணத்தை நீ அறிவாயா?. நீ உயிர் விடும் தருவாயில் வைகுண்டத்தில் இருக்க வேண்டும் என்பதே உனது விதி! ஆனால் நீ இருந்ததோ இந்த வைகுண்டத்தில் இருந்து தொலை தூரத்திலுள்ள உனது வசிப்பிடத்தில். நீ ஒரு வேளை உனது வசிப்பிடத்தை நீங்கி இங்கே வந்து இருக்காவிடில் நான் உனது உயிரை பறித்து இருக்க இயலாது. என் பணியை நீயே எளிதாக்கி விட்டாய்! மதியை செயல்படச் செய்வதும் செயல் இழக்கச் செய்வதும் விதியே ஆகும். ஆனால் ஒன்றை அறிந்து கொள்!. விதி என்றும் சதி செய்யாது!. விதி நமக்கு இறுதியில் மிகப்பெரிய நன்மையைத் தரும். இன்று நீ மட்டும் வைகுண்டம் வரவில்லை எனில் இன்னும் பல ஆயிரம் பிறவிகள் எடுத்திருப்பாய்!. நீ வைகுண்டத்தில் உயிர் துறப்பதால் மறு பிறவி இன்றி இறைவனடியில் இணைந்தாய்!. எல்லாம் நன்மைக்கே!. கதை உணர்த்தும் நீதி: விதி என்ன நிகழ்வை நிகழ்த்தினாலும் அதன் சூட்சுமத்தை புரிந்து கொள்பவரே மதியில் சிறந்தவராவார்!" என்று எமதர்மர் எடுத்து உரைத்தார். இந்த அற்புத உண்மையைக் கேட்டு பறவை ஆனந்தக் கண்ணீருடன் தன் இறுதி பிறவியிலிருந்து விடுதலை பெற்றது. இது வெறும் கதை என விட்டு விடாமல் நிஜமான வாழ்க்கையை விதியை மதியால் வெல்வது எப்படி என்பதை உணர்ந்தும் தெளிந்தும் வாழ்வோம். விதுர நீதி - யார் மூடர்? விதுர நீதி தமிழில் pdf download - யார் மூடர் விதுர நீதி தமிழில் - யார் மூடர்? எந்த காலத்துக்கும் பொருந்தும் படியாக விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு மஹா பாரதத்தில் விதுரர் மூலம் சொல்லப் பட்டுள்ளது இது உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு கூறப் பட்டிருந்தாலும் எல்லோரும் கேட்டு பயனடையுமாறு வியாச மகரிஷியால் நமக்கு அருளப் பட்டது நமது பெரும் பாக்கியம். வியாச மகரிஷி -விதுர நீதி வியாச மகரிஷி விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் - தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு மற்றும் எட்டு அடுத்து மூடன் என்றால் யார் என்று கீழ் கண்டவாறு விவரிக்கிறார். கேள்விச் செல்வம் இல்லாதவன் அதாவது எதையுமே நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொள்பவன் நல்லோர்கள், படித்தோர்கள் சொல்வதை கேட்பவனே பண்டிதன் ஆவான் வீண் ஜம்பம் அடிப்பவன் அதாவது கையில் ஒன்றுமே இல்லாமல் 18 மாடி வீடு கட்டுவேன் என்று ஜம்பம் அடிப்பவன் மூடன் முயற்சி எதுவும் செய்யாமல் தானாக கிடைக்கும் என்று நினைப்பவன் எதையுமே செய்யாமல் நமது அறிவு, திறமையால் தானாகவே எல்லாம் கிடைக்கும் என்று நினைப்பவன் மூடன் ஆவான் தனது செயலை விட்டு விட்டு பிரர்த்தியார் செய்யும் தொழிலே நல்லது என்று நினைப்பவன் .அதாவது தான் செய்யும் தொழிலை தாழ்வாக நினைத்து பிறர் செய்யும் தொழில் சிறந்தது என்று நினைப்பவன் மூடன் நண்பருக்கு உறவினருக்கு துரோகம் நினைப்பவன் தன்னை விட பலசாலியை பகைவனாக நினைப்பவன் அதாவதுதன்னை விட பலம் மிகவும் அதிகமாக உள்ளவனிடம் யுத்தம் செய்ய நினைப்பவன் மூடன் ஆவான். எதிலும் சந்தேகம் கொள்பவன் தேவையற்ற சந்தேகத்தை கொள்ளாதவனே அறிவுள்ளவன் ஆவான் சீக்கிரம் செய்ய வேண்டிய காரியத்தை தள்ளி போட்டுக்கொண்டேஇருப்பவன் எந்த காரியத்தையும் அந்தந்த நேரத்தில் முடிப்பதே புத்திசாலிதனமாகும் நேரம் தவறி செய்யும் காரியங்கள் அந்த காலத்திற்கு ஒப்பாமல் பயனற்று போகும் தெய்வங்களுக்கு பூஜை அர்ச்சனை மற்றும் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யாதவன் அழையாமல் வருபவன் மற்றும் பேசுபவன் பிறர் குற்றத்தை பற்றி பேசுபவன், - அதாவது தான் மீது உள்ள சீற்றங்களை பற்றி நினைக்காமல் பிறர் பற்றி குற்றம் பேசுபவன் சாஸ்திரம் படி மூன்று பேருக்குத்தான் குற்றத்தை கேட்கும் அதிகாரம் உண்டு பகவான், மகாலட்சுமி தாயார், மற்றும் தரும தேவதை தங்களுக்கு இடப் பட்ட வேலையை மட்டும் செய்பவனே அறிவுள்ளவன் ஆவான் தன்னால் எதுவம் செய்யமுடியாது என்று தெரிந்தும் கோபித்து கொள்பவன், அதாவது கையாலாகதவன் கோபித்துக் கொள்வது அர்த்தமே இல்லை. பேசாமல் இருப்பதே நல்லது மேலே சொல்லப் பட்ட விஷயங்களில் இருந்து நமக்கு மூடனுக்கு உள்ள குணங்கள் எதாவது தவறி நம்மிடம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். பாண்டவர்களிடம் தூது போய் வருமாறு திருதராஷ்டிரன் சஞ்சயன் ஐ அனுப்பி வைக்கிறான் சஞ்சயன் தூது போய் வந்து இரவு நேரம் ஆகி விட்ட படியால் காலையில் விவரம் சொல்வதாக கூறி சென்று விடுகிறாய் பிறகு தூக்கம் வராமல் திருதராஷ்டிரன் தவிக்கிறான். எனவே விதுரரை அழைத்தனுப்பி உபதேசம் கேட்கிறேன் மன உளைச்சல் தாங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்க போகுது என்று மேலும் தனது உபதேசங்களை தொடர்கிறார். ஒருவனுக்கு பக்தி வர வேண்டுமானால் கீழ் கண்ட ஏழு குணங்களும் சாதனங்களும் இருந்தாக வேண்டும் என்று கூறுகிறார்: தேக சுத்தி - உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும் உடம்பு சுத்தம் என்றால் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இல்லை ஆகார சுத்தம் வேண்டும் அதாவது சத்துவ குணங்கள் வளர்க்கும் உணவுகள்உட்கொள்ள வேண்டும் தமோ குணம் மற்றும் ரஜோ குணங்களை வளர்க்கும் உணவுகளை உட்கொண்டால் பக்தி வராது. அதீத ஆசை கூடாது காண்பது, கேட்பது, உண்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் மிக அதிகமான ஆசை கூடாது. அப்பியாசம் திரும்ப திரும்ப செய்யும் சக்தி, அதாவது பகவானின் திருமேனியை நினைத்து, நினைத்து மனதில் நிறுத்த வேண்டும். பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ர நாமம் போன்றவற்றை திரும்ப திரும்ப அலுப்பு தட்டாமல் படிக்கும் சக்தி, பெரியோர்களிடம் இவற்றை திரும்ப திரும்ப கேட்கும் சக்தி வேண்டும். கிரியா - கிரஹச்திணர் அனைவரும் பஞ்ச மஹா யக்கியம் தினமும் செய்ய வேண்டும் வீட்டில் பஞ்ச சோ சூனைகள் என்ற ஐந்து தோஷங்கள் உண்டு அம்மி, உரல் மற்றும் உலக்கை, ஜல பாத்திரம் விளக்குமாறு, அடுப்பு என்ற ஐந்து இடங்களிலும் தினமும் நம்மை அறியாமல் பிராணி வதை நடை பெரும் எனவே ஐந்து தோஷங்களால் பாவம் வந்து சேரும் அந்த பாபங்களில் இருந்து விடுபட பிரம்ம யக்கியம், தேவ யக்கியம் ரிஷி யக்கியம், மனுஷ யக்கியம் மற்றும் பூத யக்கியம் செய்ய வேண்டும் யக்கியம் என்றால் பெரிய காரியம் ஒன்றும் அல்ல. பூ சந்தனம் கொண்டு வழி பட்டாய் தேவ மற்றும் பிரம்ம யக்கியம் ஆகும் வேதம் சொன்னால் ரிஷி யக்கியம் ஆகும். விருந்தினரை உபசரித்தால் மனுஷ யக்கியம் ஆகும் மற்றும் வாசலுக்கு வரும் பிராணிக்கு உணவு இட்டால் பூத யக்கியம் ஆகும் இவற்றை தினமும் செய்ய வேண்டும். நல்ல குணங்கள் இருக்க வேண்டும் - அதாவது தயா இருக்க வேண்டும் இல்லாதவனை பார்த்தல் கொடுக்க வேண்டும் என்ற தயை வர வேண்டும் எப்போதும் சத்யம் சொல்ல வேண்டும். அதிக துன்பம் கூடாது தேச, கால மாறுபட்டினால் வருத்தப் படாமல் இருக்க வேண்டும் அதாவது வேறு இடம் சென்று விட்டால் அங்கு ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும் தட்ப வெப்ப மாறுபாட்டை தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும். தண்ணீர், ஆகார மாறுபாட்டினால் துன்பப்பட கூடாது. அதிக மகிழ்ச்சி கூடாது - நமக்கு சுகம் தரும் விஷயங்கள் நடந்தாய் அதற்காக அதிக மகிழ்ச்சி கூடாது. ஆக மேல் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் இருந்தால் மட்டுமே நமக்கு பக்தி வரும் என்றும் இந்த எழு படிக்கட்டுகளையும் நாம் தாண்ட வேண்டும் என்றும் விதுரர் விவரிக்கிறார். எந்த ஒன்றுகளை பற்ற வேண்டும், எந்த ஒன்றுகளை விட வேண்டும் விதுர நீதி பற்றிய கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள் பின் வரும் நாட்களில் இதுபோன்ற வாழ்க்கை தத்துவ தொடர்களை தொடர்ந்து உங்களுக்கு பதிவு செய்ய உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு மிக முக்கியம் https://archive.org/details/VidhuraNeethi Vidhura Neethi by Sri.U.V.Velukudi Krishnan 1 Vidhura Neethi 00117:042 Vidhura Neethi 00216:473 Vidhura Neethi 00318:384 Vidhura Neethi 00416:325 Vidhura Neethi 00517:416 Vidhura Neethi 00616:597 Vidhura Neethi 00715:548 Vidhura Neethi 00816:129 Vidhura Neethi 00916:5910 Vidhura Neethi 01016:3111 Vidhura Neethi 01116:2912 Vidhura Neethi 01217:2013 Vidhura Neethi 01316:5714 Vidhura Neethi 01417:2215 Vidhura Neethi 01515:5416 Vidhura Neethi 01616:3417 Vidhura Neethi 01717:1518 Vidhura Neethi 01815:5719 Vidhura Neethi 01916:0220 Vidhura Neethi 02016:4521 Vidhura Neethi 02117:0022 Vidhura Neethi 02216:2223 Vidhura Neethi 02316:3624 Vidhura Neethi 02416:3125 Vidhura Neethi 02516:2726 Vidhura Neethi 02616:2227 Vidhura Neethi 02718:2928 Vidhura Neethi 02817:0129 Vidhura Neethi 02916:3030 Vidhura Neethi 03016:3931 Vidhura Neethi 03117:0032 Vidhura Neethi 03216:5833 Vidhura Neethi 03316:2134 Vidhura Neethi 03416:3335 Vidhura Neethi 03516:3136 Vidhura Neethi 03617:0637 Vidhura Neethi 03715:5938 Vidhura Neethi 03816:3739 Vidhura Neethi 03918:5840 Vidhura Neethi 04016:3541 Vidhura Neethi 04116:2142 Vidhura Neethi 04216:2743 Vidhura Neethi 04316:5244 Vidhura Neethi 04416:4245 Vidhura Neethi 04516:4246 Vidhura Neethi 04616:5047 Vidhura Neethi 04716:0248 Vidhura Neethi 04816:2249 Vidhura Neethi 04916:0750 Vidhura Neethi 05015:5651 Vidhura Neethi 05117:0052 Vidhura Neethi 05216:0553 Vidhura Neethi 05316:2254 Vidhura Neethi 05416:2255 Vidhura Neethi 05517:0756 Vidhura Neethi 05615:2857 Vidhura Neethi 05715:5458 Vidhura Neethi 05815:4759 Vidhura Neethi 05916:0260 Vidhura Neethi 06014:4561 Vidhura Neethi 06117:4162 Vidhura Neethi 06216:3263 Vidhura Neethi 06314:5464 Vidhura Neethi 06416:0865 Vidhura Neethi 06516:4566 Vidhura Neethi 06615:5467 Vidhura Neethi 06716:0568 Vidhura Neethi 06815:3569 Vidhura Neethi 06916:4770 Vidhura Neethi 07016:1471 Vidhura Neethi 07116:4472 Vidhura Neethi 07216:0673 Vidhura Neethi 07316:1274 Vidhura Neethi 07416:5575 Vidhura Neethi 07515:5776 Vidhura Neethi 07616:5377 Vidhura Neethi 07716:5778 Vidhura Neethi 07817:4279 Vidhura Neethi 07916:5280 Vidhura Neethi 08017:1281 Vidhura Neethi 08117:1382 Vidhura Neethi 08217:1183 Vidhura Neethi 08316:4884 Vidhura Neethi 08415:5185 Vidhura Neethi 08516:5186 Vidhura Neethi 08615:3487 Vidhura Neethi 08716:1388 Vidhura Neethi 08815:4689 Vidhura Neethi 08915:4890 Vidhura Neethi 09015:5191 Vidhura Neethi 09116:0792 Vidhura Neethi 09215:5293 Vidhura Neethi 09315:0694 Vidhura Neethi 09415:1995 Vidhura Neethi 09515:2196 Vidhura Neethi 09616:0597 Vidhura Neethi 09715:3998 Vidhura Neethi 09815:1399 Vidhura Neethi 09916:01 ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய🙏 விதுர நீதி - 1 இன்று முதல்... மகாபாரதம் நமக்கு கிடைத்த மிகவும் அறிய பொக்கிஷங்களில் ஒன்றாகும் நான்கு வேதங்களுக்கு பின் ஐந்தாவது வேதமாக மகாபாரதம் கருதப்படுகிறது. மகாபாரதத்தில் ஒன்றே கால் லட்சம் ஸ்லோகங்கள் உள்ளன மொத்தம் உள்ள பதினெட்டு பருவத்தில் ஐந்தாவது பர்வமான உத்யோக பருவத்தில் விதுர நீதி திருதராஷ்டிரன் க்கு கூறப்பட்டுள்ளது சஞ்சயன் ஆண்டவரிடத்தில் தூது போய் வந்த பிறகு காலையில் திருதராஷ்ட்ரன் ஐ சந்தித்து விவரம் கூறுவதாக சென்றுவிடுகிறான். திருதராஷ்டிரன் தனது ராஜ்யத்தை பாண்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்கவேண்டுமா என்று எண்ணி மிகவும் துன்புறுகிறான் எனவே தூக்கம் வராமல் வாயில் காப்போனை அழைத்து விதுரரை அழைத்து வர ஆணை இடுகிறான். தூக்கம் வராமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும். விதுர நீதியில் மிக நுட்பமான விஷயங்கள் பல சொல்லப்பட்டுள்ளன எவ்வளவு கஷ்டப் படும் மனிதனாக இருந்தாலும் நம்பிக்கையுடன் விதுர நீதி கேட்டால் கவலை நிச்சயமாக நீங்கும் விதுர நீதியை ஆரம்பிக்கும் முன் விதுரர் என்பவர் யார் அவர் ஏன் பூமியில் அவதரித்தார் என்று காண்போம். முந்தைய காலத்தில் ஆணி மாண்டவ்யர் என்ற ரிஷி ஒருவர் இருந்தார் அவர் இது சிறு பிராயத்தில் எறும்புகளைப் பிடித்து துன்புறுத்தி விளையாடி வந்தார். பிறகு யோகங்கள் பல செய்து ஆழ்ந்த தியான மார்க்கத்தில் ஈடுபட்டார். ஒரு நாள் அவர் மீது சில குற்றங்கள் சுமத்தப் பட்டு ராஜாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார் ராஜா அவரை விசாரித்தார் ஆனால் ரிஷி தியானத்தில் ஈடுபட்டிருந்ததால் எதுவும் சொல்லாமல் தியானத்திலேயே ஈடுபட்டிருந்தார். ராஜா அவரை கழுவில் ஏற்றுமாறு தண்டனை இட்டான் அவருக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது பாதி கழு உடம்பில் ஏறிய பிறகுதான் அவருக்கு பிரக்ஞை வந்தது அக்கம்பக்கத்தில் விசாரிக்கவே அவர் செய்ததாக சொல்லப்பட்ட குற்றம் சொல்லப்பட்டது தான் அந்த குற்றம் செய்யவில்லை என்று எண்ணம் அவருக்கு அப்போது தான் வந்தது இருப்பினும் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை கிடைத்திருக்கிறது என்றால் அதற்க்கு வேறு காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணி தனது சக்தியால் தருமராஜனை அழைத்தார் தருமராஜன் தோன்றவே தனக்கு தண்டளை தரப்பட்டதற்கான காரணத்தை கேட்டார் அதற்கு தருமராஜன் சிறுபிராயத்தில் எறும்புகளை துன்புருதியதற்காக இந்த தண்டனை தற்போது மன்னனால் தரப்பட்டது என்று கூறினார் அருகில் இருந்தவர்கள் மன்னன் வேறு எதோ தவறு செய்ததிற்காக அல்லவா தண்டனை கொடுத்தான் ஆனால் இங்கு எறும்பை துன்புறுத்தியதை பற்றி கேள்வி படவில்லையே என்று ஆச்சரியப் பட்டார்கள். ரிஷி தனது சிறுபிராயத்தில் அறியாமல் செய்த தவற்றிற்கு கொடுத்த தண்டனை சரியானது இல்லை ஆதலால், தர்ம ராஜனை நூறு ஆண்டு காலம் பூலோகத்தில் பிறந்து சுக துக்கங்களை அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டார் அந்த சாபத்தினால் தான் தர்ம ராஜனே விதுரராக அவதரித்தார். விதூர் சொல்லும் அனைத்து வார்த்தைகளும் தர்ம நீதிகள் ஆகும். அவர் எப்போதுமே தர்மத்தை தவிர வேறு எதையுமே கூறியதில்லை. யாரெல்லாம் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் அதுபற்றி நாளை பார்க்கலாம். தொடரும்... ஸர்வம் ஸ்ரீராம மயம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 யாரெல்லாம் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் - விதுர நீதி 2 ( பாகம் 1 - ன் தொடர்ச்சி) விதுரர் தூக்கம் வராமல் தவிக்கும் திருதராஷ்டிரனிடம் கீழ்க் கண்டவர்கள் தூக்கம் வராமல் தவிப்பார்கள் என்று கூறுகிறார் 1. தன்னை விட பலவானிடம் மோதுபவன் 2. தான் ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என நினைத்து அதை நிறைவேற்ற வேண்டிய சாதனம் இல்லாமல் இருப்பவன் 3.தனது சொத்தை களவு கொடுத்தவன் 4.காம வசப்பட்டவன் கடைசியாக 5, திருடன் மேலும் விதுரர் கூறுகிறார், ஆனால் திருதராஷ்டிரா உனக்கு மேல் சொல்லப்பட்ட ஐந்து தோஷங்களால் நீ தீண்டப்பட்டவன் அல்ல. இருப்பினும், நீயும் உறக்கம் வராமல் தவிக்கிறாய். இதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு இந்த காரணங்களுக்கும் மேலாக பிரர்த்தியார்( அடுத்தவர் )சொத்தை யார் அபகரித்தாலும் அவனுக்கும் உறக்கம் வராது, நீ செய்தது பெருங்குற்றம் தான். யாராக இருந்தாலும் தன்னிடம் உள்ள துணி, அன்னம் மற்றும் இல்லம் ஆகியவற்றை தனக்கு தேவையானது போக மீதத்தை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால் நீ நியாயமாக கிடைக்க வேண்டிய பாண்டவர்கள் பங்கை கொடுக்க மறுக்கிறாய் எனவே நீ உறக்கம் வராமல் தவிக்கிறாய் என்று கூறுகிறார். அதற்கு திருதராஷ்டிரன் இதுவரை அமைதியாக இருந்துவிட்டு, தர்மர் இப்போது ஏன் சொத்தை கேட்டு சண்டைக்கு வர வேண்டும் என வினவுகிறான். எல்லா ஜீவராசிகளிடம் உள்ள கருணையால் தான் தருமர் இதுவரை பொறுத்துக் கொண்டு இருந்தார் என்று கூறுகிறார் விதுரர். மேலும் தாமதிக்காமல் அவர்களது சொத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் . திருதராஷ்டிரன் கொடுப்பதாக இல்லை அடுத்து விதுரர் பண்டிதர்களுக்கான விளக்கத்தை பற்றி கூற ஆரம்பிக்கிறார் அதை பற்றி அடுத்த அத்தியாயத்தில் காண்போம். அதற்கு முன் தரும புத்திரனின் தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சியைப் பற்றி பாப்போம். கண்ணபிரான் இந்த பூவுலகத்தை பிரிந்த பிறகு இவ்வுலகத்தில் இருக்க பிடிக்காமல் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திரௌபதி சொர்க்க ஆரோஹனம் செய்வதற்கு இமயமலை நோக்கி செல்கிறார்கள் முதலில் திரௌபதி தனது பிராணனை விட்டு விடுகிறாள். அதன் பிறகு தருமரை தவிர மற்ற நால்வரும் ஒவ்வொருவராக இவ்வுலகத்தை பிரிந்து. விடுகிறார்கள் கடைசியாக தருமரும் ஒரு நாயும் செல்கின்றனர். அப்போது அந்த நாய் நீங்கள் தான் இந்த உலகத்தை விட்டு செல்ல போகிறீர்களா எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும், எனது ரோமத்தில் உள்ள புழு பூச்சிகள் என்னை கடித்து துன்புறுத்துகின்றன. அவைகளை எனது உடம்பை விட்டு எடுத்து செல்லுங்கள், நான் படும் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு விடுவேன் என்று சொல்லியது. அந்த பூச்சிகளை தருமர் உதற முற்படும் பொது அந்த பூச்சிகளின் பிரதிநிதி அவரிடம் பேசுகிறது. நாங்கள் அனைவரும் இந்த நாயின் மீது தான் உயிர் வாழ்கிறோம் , எங்களை இதில் இருந்து எடுத்து விட்டால் நாங்கள் இந்த இமயமலையில் எப்படி உயிர் வாழ்வோம் நீங்கள்தான் தரும சிந்தனை உடையவர் ஆயிற்றே எங்களுக்கு வழி சொல்லுங்கள் என்று கூறியது. தருமர் சிந்தனையில் ஈடுபட்டார். பிறகு ஒரு உபாயம் தோன்றவே அந்த பூச்சிகளை அந்த நாயிடம் இருந்து உதறி தன் மீது விட்டுக் கொண்டார். இந்த ஒரு செயலால் நாயையும் பூச்சிகளையும் காப்பாற்றியதைப் பார்த்து எம தர்ம ராஜனும் இந்திரனும் நேரில் வந்து கடைசி நேரத்தில் எப்படி இருக்கிறாய் என்று சோதிக்கவே இப்படி ஒரு நாடகம் தாங்களே நடத்தியதாக கூறி தங்களது ராஜ்ய சபைக்கு தருமரை அழைத்துச் சென்றார்கள். யார் பண்டிதர்கள்? - நாளை தொடரும்... [9/13, 6:22 PM] Mohan SriRaghavendrar Kulithalai: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 *விதுரர் நீதி - பகுதி 3* *யார் பண்டிதர்கள்* விதுரர் தனது அறிவுரைகளை மேலும் தொடங்குகிறார். திருதராஷ்டிரனிடம் பண்டிதர்கள் என்றால் யார் என்றும் , முட்டாள்கள் என்றால் யார் என்றும், அவர்களுக்கான இலக்கணம் எப்படி இருக்க வேண்டும் , கீழ் வருமாறு கூறுகிறார். இதை படிக்கும் போது விதுரர் படித்தவர்கள் தான் பண்டிதர்கள் என்று எங்குமே கூறவே இல்லை. கீழ் வரும் நான்கு லட்சணங்கள் முதலாவதாக பண்டிதருக்கு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 1 தன்னைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டவர்கள் 2 தனக்கு தெரிந்ததை செயலாற்ற முயற்சி செய்பவர்கள், 3 அதை செயலாற்ற முயற்சி செய்யும் போது வரும் தடங்கல்களை தாங்கும் பொறுமை உள்ளவர்கள் 4 செய்யவேண்டிய காரியங்களை தரும சாஸ்திரம் சொன்ன வழியிலேயே செய்ய முயற்சிப்பவர்கள் தன்னை பற்றி ஒருவன் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் தன்னை பற்றி தாழ்வாகவோ அல்லது உயர்வாகவோ நினைத்துக் கொள்ளக் கூடாது தன்னால் என்ன செய்யமுடியும் எதை செய்ய முடியாது எனது பலம் என்ன என்று ஒருவன் நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு தனக்கு தெரிந்ததை செய்ய முயற்சி செய்யவேண்டும். தனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் அதை செய்யாவிட்டாலும் அவன் பண்டிதனாக மாட்டான் மேலும் ஒரு காரியத்தை செய்ய முற்படும் பொது இடையில் வரும் தடங்கல்களை தாங்கும் சக்தியும் ஒருவனுக்கு இருக்க வேண்டும் அவ்வாறு ஒரு செயலை செய்யும் போது வரும் தடங்கல்களை தாண்ட அவன் தரும் வழியையே அவன் மேற்கொள்ள வேண்டும் எந்த குறுக்கு வழியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் மேல் சொன்ன நான்கும் பண்டிதரின்முதல் லட்சணங்கள் என்று விதுரர் கூறுகிறார் விதுரர் அடுத்து கீழ் கண்ட நான்கு காரியங்களை செய்பவன் பண்டிதன் என்றுகூறுகிறார் 1 முன்னோர்கள் செய்த நல்ல காரியங்களை தொடருபவன் 2 முன்னோர்கள் விட்டு விட்ட கெட்ட காரியங்களை தொடராமல் விட்டு விடுபவன் 3 நாஸ்திக புத்தியை விட்டு விடுபவன் 4 சாஸ்திரத்தில் சிரத்தையுடன் இருப்பவன். நமது முன்னோர்கள் எந்த காரியங்களை நல்லது என்று செய்து வந்தார்களோ அதை தொடர்ந்து செய்து வர வேண்டும் உதாரணத்திற்கு நீராடி உணவருந்துதல். அடுத்து நமது முன்னோர்கள் எதை செய்ய கூடாது என்று ஒதுக்கி வைத்தார்களோ அதை நாம் செய்யக் கூடாது என்று முதல் இரண்டு காரியங்களாக விதுரர் கூறுகிறார் அடுத்து நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத பிரம்மம் போன்ற விஷயங்கள் இல்லை என்ற நாஸ்திக புத்தி இருக்கக் கூடாது என்றும் சாஸ்திரத்தில் எப்போதுமே சிரத்தையுடன் இருப்பவன் பண்டிதன் என்று கூறி முடிக்கிறார். அடுத்து கீழ்கண்டவைகளில் இருந்து விலகி இருப்பவனே பண்டிதன் என்று கூறுகிறார் 1. அதிககோபம் 2. மிக்க மகிழ்ச்சி 3. கர்வம் 4. வெட்கம் 5. திமிர் 6. துரபிமானம் (தானே எல்லோராலும் மதிக்கப் படுபவன் என்று நினைப்பவன் ஆக பண்டிதன் என்பவன் தனது திறமையை மறைத்துக் கொண்டு சிறு பாலனை போல் இருக்க வேண்டும் என்று கொள்ளலாம் யாரை பார்த்தும் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவர்கள் பண்டிதர்கள் ஆக மாட்டார்கள் ரைத்வர் என்ற மகாச்சாரியர் ஒருவர் இருந்தார். அப்போது இருந்த ஜன சுருதி என்ற மன்னனுக்கு பிரம்ம ஞானத்தை தவிர மற்ற ஞானம் வந்து விட்டது அவனுக்கு பிரம்ம ஞானத்தை சூட்ட இரண்டு ரிஷிகள் முடிவு செய்து இரண்டு பக்ஷிகளாக ராஜன் இருக்கும் இடத்திற்கு மேலே பறந்து வந்தனர் அந்த ராஜனுக்கு பக்ஷிகளின் பாஷைகள் தெரியும் அப்போது ஒரு பறவை தனது நிழல் அந்த ராஜன் மீது படுமாறு சென்றது. அதற்கு மற்றொரு பறவை அதனிடம் அந்த ராஜன் தரும சிந்தனை உள்ளவர் உன்னை எரித்து விடுவான் ஒதுங்கி செல் என்று சொன்னது அதற்கு அந்த பறவை அவன் அவ்வாறு செய்ய அவன் என்ன ரைத்வனோ என்று கேட்டது விட்டு சென்று விட்டது. ராஜனுக்கு தான் ரைத்வன் இல்லை ஆதலால் உண்மையான ரைத்வனை தேட ஆரம்பித்தான் பண்டித கோஷ்டிகள், பணக்கார கோஷ்டிகள், வியாபார கோஷ்டிகள் என்று பல வித மனிதர்களிடையேயும் ரைத்வர் கிடைக்கவில்லை கடைசியில் ஒரு வண்டி சக்கரத்தின் அருகே கிழிந்த உடைகளுடன் அழுக்காக இருக்கும் ஒருவன் தான் ரைத்வன் என்று வேலைக்காரன் சொல்ல அந்த ரைத்வனை அழைத்து வருமாறு ராஜன் ஆணை இட்டான் அந்த ரைத்வன், அழைக்க சென்ற சேவகனிடம் தனக்கு ராஜா என்ற ஒருவரை யார் என்றே தெரியாது தான் வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான் ராஜன் ஒரு தேரை அனுப்பி அழைத்து வருமாறு ஆணை இட்டான் அதற்கு அந்த ரைத்வன் தான் வருவதாகவே சொல்லவில்லை மேலும் தனக்கு காலும் வலிக்கவில்லை ஆனாலும் வருவதற்கான எண்ணமே இல்லை என்றும் வர இயலாது என்றும் சொல்லிவிட்டான் பிறகு மன்னன் தானே வந்து வணங்கியவுடன் அதற்கு நீ பறவை சொல்லி வந்தாயோ என்று கேட்க அவனே ரைத்வன் என்று அறிந்து ஞானத்தை புகட்டுமாறு கேட்டுக் கொண்டான். ரைத்வரும் ராஜனுக்கு பிரம்ம ஞானத்தை சூட்டினார் என்று சரித்திரம் எனவே உருவத்தை வைத்து யாரையும் எடை போட முடியாது என்று கொள்ளலாம். யார் மூடர் - விதுர நீதி தொடர்ச்சி நாளை தொடரும். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 [9/13, 6:22 PM] Mohan SriRaghavendrar Kulithalai: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 *விதுர_நீதி*_ *பகுதி 4* யார் மூடர் - எந்த காலத்துக்கும் பொருந்தும் படியாக விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு மஹா பாரதத்தில் விதுரர் மூலம் சொல்லப் பட்டுள்ளது. இது உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு கூறப் பட்டிருந்தாலும் எல்லோரும் கேட்டு பயனடையுமாறு வியாச மகரிஷியால் நமக்கு அருளப் பட்டது நமது பெரும் பாக்கியம். அடுத்து மூடன் என்றால் யார் என்று கீழ் கண்டவாறு விவரிக்கிறார். 1.கேள்விச் செல்வம் இல்லாதவன் அதாவது எதையுமே நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொள்பவன் மூடன் ஆவான். நல்லோர்கள், படித்தோர்கள் சொல்வதை கேட்பவனே பண்டிதன் ஆவான். 2. வீண் ஜம்பம் அடிப்பவன் அதாவது கையில் ஒன்றுமே இல்லாமல் 18 மாடி வீடு கட்டுவேன் என்று ஜம்பம் அடிப்பவன் மூடன் . 3. முயற்சி எதுவும் செய்யாமல் தானாக கிடைக்கும் என்று நினைப்பவன் எதையுமே செய்யாமல் நமது அறிவு, திறமையால் தானாகவே எல்லாம் கிடைக்கும் என்று நினைப்பவன் மூடன் ஆவான் . 4. தனது செயலை விட்டு விட்டு பிரர்த்தியார் செய்யும் தொழிலே நல்லது என்று நினைப்பவன் அதாவது தான் செய்யும் தொழிலை தாழ்வாக நினைத்து பிறர் செய்யும் தொழில் சிறந்தது என்று நினைப்பவன் மூடன். 5. நண்பருக்கும் உறவினருக்கும் துரோகம் நினைப்பவன் மூடன். 6. தன்னை விட பலசாலியை பகைவனாக நினைப்பவன் அதாவது தன்னை விட பலம் மிகவும் அதிகமாக உள்ளவனிடம் யுத்தம் செய்ய நினைப்பவன் மூடன் ஆவான் . 7. எதிலும் சந்தேகம் கொள்பவன் தேவையற்ற சந்தேகத்தை கொள்ளாதவனே அறிவுள்ளவன் ஆவான். 8. சீக்கிரம் செய்ய வேண்டிய காரியத்தை தள்ளி போட்டுக்கொண்டே இருப்பவன், எந்த காரியத்தையும் அந்தந்த நேரத்தில் செய்து முடிப்பதே புத்திசாலிதனமாகும். நேரம் தவறி செய்யும் காரியங்கள் அந்த காலத்திற்கு ஒப்பாமல் பயனற்று போகும். 9.தெய்வங்களுக்கு பூஜை அர்ச்சனை மற்றும் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்யாதவன் மூடன். 10. அழையாமல் வருபவன் மற்றும் தேவையில்லாமல் பேசுபவன். 11.பிறர் குற்றத்தை பற்றி பேசுபவன், - அதாவது தான் மீது உள்ள சீற்றங்களை பற்றி நினைக்காமல் பிறர் பற்றி குற்றம் பேசுபவன். சாஸ்திரம் படி மூன்று பேருக்குத்தான் குற்றத்தை கேட்கும் அதிகாரம் உண்டு., பகவான், மகாலட்சுமி தாயார், மற்றும் தரும தேவதை ஆகும். தங்களுக்கு இடப்பட்ட வேலையை மட்டும் செய்பவனே அறிவுள்ளவன் ஆவான். 12. தன்னால் எதுவம் செய்யமுடியாது என்று தெரிந்தும் கோபித்து கொள்பவன், அதாவது கையாலாகதவன் கோபித்துக் கொள்வது அர்த்தமே இல்லை. பேசாமல் இருப்பதே நல்லது மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் இருந்து நமக்கு மூடனுக்கு உள்ள குணங்கள் எதாவது தப்பி தவறி நம்மிடம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். யார் மூடர்கள் ?தொடர்ச்சி நாளை தொடரும்..... ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 விதுர நீதி 5 ( விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் ) எந்த ஒன்றுகளை பற்ற வேண்டும், எந்த ஒன்றுகளை விட வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் அடுத்ததாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பத்து வரை நாம் பற்ற வேண்டியது, விட வேண்டியது என்று கணக்கு போட்டு சொல்கிறார். முதலில் நாம் பற்ற வேண்டிய மற்றும் விட வேண்டிய ஒன்றுகளைப் பற்றி காண்போம். 1. இனிய தின் பண்டத்தை தனித்து அனுபவிக்கக் கூடாது. - நமக்கு சுவையான பண்டம் உண்பதற்கு கிடைத்தால் அதை தனியாக அனுபவிக்கக் கூடாது. சேர்ந்தே உன்ன வேண்டும். இதனால் மற்றவர்களின் வயிற்றெரிச்சல் நமக்கு வந்து சேராது. பிறர்க்கு கொடுத்த புண்ணியம் கிடைக்கும். அடுத்து இல்லாதவனுக்கு கொடுத்தால் அது பெருமாளுக்கு ஆனந்தத்தை உண்டாக்கும். 2. எந்த ஒரு முடிவையும் தனித்து எடுக்கக் கூடாது. - எந்த ஒரு முடிவையும் பிறரிடம் கலந்து ஆலோசித்த பிறகே நடைப் படுத்த வேண்டும். அப்படி ஆலோசித்தால் தான் அதனால் ஏற்படும் நல்ல அல்லது பற்றிய கெட்ட முடிவுகளை முன்பே தெரிந்து கொள்ள முடியும். . 3. இரவில் காட்டு மார்கத்தில் தனித்து போகக் கூடாது. - இதனால் நமக்கு வரும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். 4. இரவில் எல்லோரும் உறங்கும்போது தனித்து விழித்திருக்கக் கூடாது. அடுத்து இந்த ஒன்றுகளுக்கு நிகரானது வேறு இல்லை எனவே இதை பற்ற வேண்டும் என்றும் கூறுகிறார் 5. சொர்க்கத்துக்கு செல்ல சத்தியம் ஒன்றேதான் வழி. இதைதவிர வேறு வழி ஏதும் இல்லை. எப்படி, கங்கையை கடக்க படகு என்ற ஒரே வழியோ அதுபோல சொர்க்கத்துக்குச் செல்ல சத்தியம் ஒன்றேதான் வழி. 6. பொறுமை என்ற குணம் ஒன்றே மற்ற குணங்களை விட சிறந்த குணம் - பொறுமை குணத்தை சிலர் நிந்தித்தாலும் இதைவிட நிகரான குணம் வேறில்லை. கோபம் என்ற புத்தியை சாந்தி என்னும் நெருப்பு அனைத்து விடும். ராமனே தனது பிராட்டியை இராவணன் கடத்தி சென்றாலும் அவனை கொல்வதற்கும் இன்று போய் நாளை வா என்று பொறுமை காட்டினார் அல்லவா. எனவே பொறுமை என்ற குணத்திற்கு நிகரான குணம் வேறு எதுவும் கிடையாது. பொறுமை ஒன்றுமில்லாதவனுக்கு இருந்தால் குணம் ஆகும். அதுவே வீரனுக்கு இருந்து விட்டால் அது ஆபரணம் ஆகும். 7. ஒருவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் தருமம் ஒன்றே சிறந்த வழி. 8. ஒருவனுக்கு சாந்தி நிலவ வேண்டும் என்றால் பொறுமை ஒன்றே சிறந்த வழி. 9. ஒருவனுக்கு திருப்தி ஏற்பட வேண்டும் என்றால் படிப்பு ஒன்றே சிறந்த வழி. 10. ஒருவனுக்கு சுகம் வேண்டும் என்றால் யாரையும் துன்புறுத்தாத அகிம்சை ஒன்றே சிறந்த வழி. இவ்வாறு பற்ற வேண்டிய மற்றும் விட வேண்டிய ஒன்றுகளை பற்றி விதுரர் கூறியுள்ளார். அடுத்த அத்தியாயத்தில் பற்ற வேண்டிய இரண்டுகளைப் பற்றிக் காண்போம். தொடரும்.. ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர_நீதி பகுதி 6 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் எந்த இரண்டுகளை பற்ற வேண்டும், எந்த இரண்டுகளை விட வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி: அடுத்ததாக இரண்டுகளைப் பற்றி கீழ் வருமாறு விதுரர் விவரிக்கிறார். 1. இந்த இரண்டு பேரும் பாம்பின் வாயில் அகப் பட்ட தவளை போல அழிந்து விடுவர். சத்ரியன் ராஜாவாகவும் ராணுவ தலைவனாகவும் இருந்து விட்டு வரவழைத்த யுத்தத்திற்கு போக மாட்டேன் என்று சொல்பவன். பிராமணனாக இருந்து ஊர் ஊராக சென்று தொண்டு புரியாதவன். (பிராம்மண குலமே அழிந்து விடும்) 2. இந்த இரண்டு விஷயங்களை செய்பவர்கள் கொண்டாடப் படுவர். கெட்டவன் என்று தெரிந்து அவனை அர்ச்சிக்காதவன் அல்லது அவனை நல்லவன் என்று புகழாதவன் மற்றவர்களை துன்புறுத்தும் வார்த்தைகளை உபயோகிக்காதவனை கொண்டாடுபவன். 3. இந்த இரண்டு பேர்களுக்கும் சுய புத்தி கிடையாது. மற்ற ஸ்திரிகளின் வஸ்துகளுக்கு (பொருட்களுக்கு) ஆசை பட்டு அதை அனுபவிக்க, வாங்க ஆசைப்படும் ஸ்திரிகள். ஒருவனைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே மற்றவர்கள் சொன்னார்கள் என்று உண்மையை தெரிந்துகொள்ளாமல் அவனைப் பற்றி புகழ்பவர்கள். 4. இந்த இரண்டும் முள் போல குத்திக் கொண்டே இருக்கும். ஒருவனது கையில் காசு இல்லை என்றாலும் பலவற்றை வாங்க வேண்டும் என்று ஆசைபட்டால் அந்த ஆசை தனக்கு சக்தி அல்லது பதவி இல்லை என்று தெரிந்தும் கோபப்பட்டால் அந்த கோபம். 5. இந்த இரண்டு கர்மாக்களை செய்பவன் விளங்குவதில்லை. எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் கிரகஸ்தன் (இல்லத்தரசன்) வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் சந்நியாசி. 6. இந்த இரண்டு பேரும் சொர்க்கத்தை விட உயர்ந்த இடத்தில நிற்கிறார்கள். பொறுமை உள்ள பணக்காரன் தரித்திரனாக இருந்தும் தன்னிடம் உள்ளதை தானம் செய்பவன். 7. இந்த இரண்டு செயல்களும் ஏற்று கொள்ளப் படாது ஏற்பதுக்கு தகுதி உள்ளவனுக்கு கொடுப்பது ஏற்கும் சக்தி உள்ளவனுக்கு கொடுக்காமல் இருப்பது 8. இந்த இரண்டு பேரும் கழுத்தில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்குபவர்கள். தனம் இருந்தும் ஈயாதவன் (சம்சாரக் கடலில் மூழ்கி விடுவான். ) உலகத்து கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாதவன். (திருடு, கொள்ளை அன்று பல விதங்களில் மாட்டிக் கொண்டு விடுவான்.) 9. இந்த இரண்டு பேரும் சூரிய மண்டலத்தை தாண்டிய உயர் கதியை அடைவார்கள். யோகம் மற்றும் வைராக்கியம் உள்ள சந்நியாசி போர்களத்தில் இறந்த வீரன். இவ்வாறு விதுரர் இரண்டுகளைப் பற்றி அழகாக விவரிக்கிறார். அடுத்து மூன்றுகளைப் பற்றி என்ன விவரித்தார் என்று அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 🌸 விதுர நீதி 7🌸* விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்றுகள்- விதுர நீதி தொடர்ச்சி விதுரர் மேலும் தொடர்கிறார். கீழ்கண்ட மூன்று பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் வலியுறுத்துகிறார். 1. மனிதர்கள் மூன்று வகைப்பட்டவர்கள் தாழ்ந்தவன் - தான் வாழ பிறரை கெடுப்பவன். மத்திமன் - தானும் வாழ்வான் பிறரையும் வாழ விடுவான். உத்தமன் - தான் கெட்டாலும் பிறரை வாழ வைப்பான். இந்த காலத்தில் உத்தமனாக வாழ்வது மிகக் கடினம். குறைந்த பட்சம் நாம் மத்திமனாக வாழலாம். 2. இந்த மூவருக்கும் தனித்து சொத்து கிடையாது மனைவி, வேலைக்காரன் மற்றும் பிள்ளைகள் மனைவியின் சொத்து கணவர் வசமே இருக்கும். பிள்ளைகள் சொத்து தகப்பனையே சேரும். (இந்த காலத்தில் கணவனையோ தகபனையோ சார்ந்து இருக்காதவர்களுக்கு இது பொருந்தாது. ) 3. இந்த மூன்று குற்றம் நம்மை கெடுத்தே தீரும். பிறர் சொத்துக்கு ஆசைப்படுதல். பிறன் மனை நோக்குதல் மற்றும் நமக்கு நன்மை நினைத்தவனை விட்டு விடுதல். மேற்கண்ட குற்றங்கள் உடம்புக்கு உடனடியாக நன்மை தந்தாலும் ஆத்மாவுக்கு நாசம் தந்து விடும். 4. இந்த மூன்று தோஷங்களை விட்டு விட வேண்டும். காமம், குரோதம் மற்றும் பேராசை. இந்த மூன்றும் இருந்தால் நரகத்தின் வாசல் நமக்காக திறந்தே இருக்குமாம். 5. இந்த மூன்றை விட நண்பனை எதிரியிடம் இருந்து காப்பதே மேல். நல்ல வரம், ராஜ்யம் மற்றும் பிள்ளை பேரு. நண்பன் எதிரியிடம் மாட்டிக் கொண்டால் மேல் சொன்ன மூன்று நன்மைகளை நாம் கேட்டு அடைவதை விட அவனை காத்தல் மிகவும் சிறப்பானது என்று கூறுகிறார். 6. இந்த மூன்று பேரை எந்த காலத்திலும் விட்டுவிடக் கூடாது பக்தன், வேலைக்காரன், நம்மிடம் சரண் அடைந்தவன். இவ்வாறு நமக்கு இருக்க வேண்டிய சிறப்புகளை மூன்று மூன்றாக அழகாக அடுக்கி வைக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் நான்குகள் பற்றி என்ன சொன்னார் என்று பார்ப்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 🌸விதுர நீதி 8🌸 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து கொள்ளவேண்டிய நான்குகள் - விதுர நீதி தொடர்ச்சி மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய பல விஷயங்கள் கூறப் பட்டுள்ளன. உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு சொல்லும் உபதேசமாக விதுரர் நீதி உரைக்கப்பட்டுள்ளது. அடுத்து விதுரர் தொடர்ந்து நான்கு நான்காக கீழ் வருமாறு அழகாக எடுத்துரைக்கிறார். 1. இந்த நான்கு பேரிடமும் சேரக் கூடாது. சிறுமதி படைத்தவன், எந்த ஒரு காரியத்தையும் இழுத்து முடிப்பவன், எந்த ஒரு காரியத்தையும் பதட்டமாக அவசரமாக தவறாக செய்பவன் மற்றும் வேலையே செய்யாமல் வெறும் பேச்சு பேசியே காலத்தை தள்ளுபவன். 2. இந்த நான்கு பேரை வீட்டில் வைத்துக் கொண்டால் மிகவும் நன்மை கிட்டும். நமது குலத்தை சேர்ந்த வயோதிக பங்காளி - இவர் நமது குல தர்மத்தை எடுத்து சொல்லிக்கொண்டே இருப்பார். தொடர்ந்து நாம் செய்யவேண்டியதை நமக்கு ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பார். உயர்ந்த குலத்தில் இருந்து இப்போது வறிய நிலையில் இருப்பவர். குல தர்மங்கள் பற்றியும் வாழ்க்கைக்கு நல்லது செய்யவேண்டியது பற்றியும் நமக்கு ஞாபக படுத்திக் கொண்டே இருப்பார். நண்பன் ஆனால் தற்போது மிகவும் வறிய நிலையில் இருப்பவன். இவன் நமக்கு நன்மைகளையே எடுத்து சொல்லிக் கொண்டே இருப்பான். கூடப் பிறந்த குழைந்தை இல்லாத சகோதரி - இவள் நமது சொத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுவாள். 3. இந்த நான்கும் உடனடியாக பலனைத் தரும். தேவதையின் சங்கல்பம், மகானின் திறமை, மெத்த படித்தவர்களின் பணிவு, பாபிகளின் அழிவு (தர்மத்தை நிலை நிறுத்தும்) 4. இந்த நான்கும், ஒரே செயல்கள் செய்யும் நோக்கத்தில் இரண்டு விதமான பலன்கள் தரும். அக்னி காரியம் (ஹிந்து தர்மத்தில் எந்த ஒரு காரியத்தை செய்யும் பொது அக்னி முன்பே செய்ய வேண்டும்) - செய்யவேண்டியதை அந்த கடமைக்கு செய்தால் நல்லது கிட்டும். பெருமைக்கு செய்தால் பாபமே வரும். மௌனம் - வைராக்கியத்துடன் இருந்தால் நல்லது நடக்கும். ஆனால் சொல்லவேண்டியதை சொல்லாமல் அல்லது வேண்டும் என்றே பேசாமல் இருந்தால் கெடுதலே நடக்கும். கல்வி - விருப்பத்துடன் கற்றல் நல்லது. அதையே சான்றிதழுக்காக படித்தால் அனர்த்தத்தில் முடியும். யாக யக்யங்களை ஆச்சார அனுஷ்டானத்தில் செய்தால் நல்ல பலன் கிட்டும். இல்லையேல் கெடுதலே நடக்கும். இவ்வாறு நாம் பின்பற்ற வேண்டிய தரும நீதிகளை நான்கு நான்காக எடுத்துரைக்கிறார். அடுத்து ஐந்து ஐந்தாக சொன்னதை மேற்கொண்டு அடுத்து அத்தியாயத்தில் பார்ப்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 விதுர நீதி 9 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் தெரிந்து கொள்ளவேண்டிய ஐந்து - விதுர நீதி தொடர்ச்சி. திருதாஷ்டிரனுக்கு பாண்டவர்கள் சொத்தை பிரித்துக் கொடுப்பதில் இம்மி அளவும் பிரியம் இல்லை. எனவே உறக்கம் வராமல் தவிக்கிறான். அவனுக்கு விதுரர் கூறும் உபதேசமே விதுர நீதி ஆகும். மேற்கொண்டு ஐந்து ஐந்தாக அடுத்த நீதிகளை கீழ் வருமாறு கூறுகிறார். 1. இந்த ஐந்தும் போற்றப்படவேண்டியது/ போற்றவேண்டியவர்கள் மாத, பிதா, அக்னி (எந்த காரியம் செய்தலும் அக்னி முன்பே நாம் செய்வோம். அந்த அக்னி நம்மை எங்கும் எப்போதும் நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்), ஆத்மா என்கின்ற நான் மற்றும் நமக்கு ஞானம் ஊட்டிய குரு 2. இந்த ஐந்து பேரும் பூஜிக்கப் பட வேண்டியவர்கள். தேவர்கள் அல்லது தெய்வங்கள் (இவர்களை நாம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.) பித்ரு (சிரார்த்தம், திதி முதலியவற்றை விடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.) சக மனிதர்கள் (இவர்களுக்கு தேவையான உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும்) சந்நியாசி (வணங்கி அவர்களுக்கு தேவையானதை கொடுக்க வேண்டும்) விருந்தினர் (இவர்கள் நமது வீட்டிற்கு வந்தால் வெறும் வயிற்றோடு திரும்பக் கூடாது) 3. இந்த ஐந்து பேரும் நம்மால் நிழல் போல தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள் நண்பன், எதிரி, நண்பனாகவும் எதிரியாகவும் இல்லாத பொதுவானவன், நம்மை வாழ்விக்கப் போகிறவர், நம்மால் வாழப் போகிறவர். (இந்த ஐவரும் நம்மை சுற்றிக் கொண்டே இருப்பார்கள். நாம் தான் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்). 4. அடக்கி வைத்திருக்க வேண்டிய ஐந்து இந்திரியங்கள் (புலன்கள்) எப்படி பாத்திரத்தில் உள்ள தண்ணீர் ஒரு சிறு ஓட்டை இருந்தாலும் வெளியே சென்று விடுமோ அது போல ஒரு புலன் கட்டுப் பட்டுபட்டை இழந்தாலும் மற்ற புலன்கள் கட்டுக்கு அடங்காமல் போய் விடும். இவ்வாறு நாம் அறிந்து கொள்ளவேண்டியவற்றை ஐந்து ஐந்தாக கூறுகிறார். அடுத்து விதுரர் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுரநீதி 10 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் தெரிந்து கொள்ளவேண்டிய ஆறு - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் தொடர்ந்து, உறங்காமல் தவிக்கும் திருதராஷ்டிரனுக்கு மேலும் உபதேசிக்கிறார். இந்த உபதேசம் இப்போதும் நமக்கு உபயோகமுள்ளதாக உள்ளது. 1. உயர்நிலைக்கும் செல்வத்திற்கும் ஆசைப்படுவர்கள் இதை ஆறையும் விட்டுவிட வேண்டும். அதிக நித்திரை மயக்கம் அல்லது மந்தம் பயம் கோபம் சோம்பல் எந்த காரியத்தையும் முடிக்காமல் நீட்டிக்கொண்டே செல்லுதல். 2. இந்த ஆறு பேரின் நட்பை எப்படி ஓட்டை உள்ள படகிலிருந்து உடனே தப்பித்துக் கொள்ள நினைப்போமோ அவ்வாறு உடனடியாக விட்டு விட வேண்டும். எல்லாம் தெரிந்திருந்தும் எதையும் கற்றுக் கொடுக்காத ஆச்சார்யன்/ குரு வேதத்தை கற்றுக்கொள்ளாமல் யக்கியம் செய்ய வருபவர் இன்சொல் பேசாத மனைவி ரட்சிக்க வேண்டிய ஆட்கள் இருந்தும், நம்மை காக்காமல் தூங்கிகொண்டிருக்கும் ராஜா வீட்டை விட்டு வெளியே செய்யும் தொழிலை, வீட்டுக்குள்ளேயே செய்ய நினைக்கும் சோம்பேறி. காட்டுக்குச் சென்று தவம் செய்ய நினைக்கும் நாவிதன். 3. இந்த ஆறை எப்போதும் விட்டு விடக்கூடாது சத்யம் தானம் சோம்பலின்மை பொறாமை படாமல் இருத்தல் பொறுமை தைரியம் 4. இந்த ஆறும் ஜீவ லோகத்தில் எப்போதும் சுகமே தரும். தின பண வரவு எப்போதும் ஆரோக்கியம் பிரியமான மனைவி பிரியமாக பேசும் மனைவி நம் சொல் கேட்கும், நமது வசத்தில் உள்ள பிள்ளை நாம் படித்திருப்பதற்கு தகுந்தாற்போல் நல்ல சம்பாத்தியம் கொடுக்கும் வேலை. 5. இந்த ஆறையும் ஜெயித்தே தீர வேண்டும். காமம் கோபம் பேராசை கர்வம் பொறாமை மயக்கம் 6. இந்த ஆறு வகைபட்டவரும் பிறரை நம்பி வாழ்பவர்கள் திருடர்கள் (முட்டாளை நம்பி) வைத்தியர்கள் (வியாதி பிடித்தவர்களை நம்பி) வேசிகள் (காம வசப்பட்ட ஆண்களை நம்பி) யக்கியம் செய்யும் பிராமணர்கள் (எஜமானரை நம்பி) ராஜா (சண்டை செய்யும் வீரர்களை நம்பி) பண்டிதர்கள் (புத்தி இல்லாதவர்களை நம்பி) 7. கீழ்க் கண்டவற்றை முகூர்த்தம் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பசு மனைவி (எப்போதும் பரிவுடன் நடத்த வேண்டும்) சேவகன் (சேவகன் எஜமானரின் இசைவுக்கு ஏற்ப எப்போதுமே நடந்து கொள்ள வேண்டும்) நெற்பயிர் கல்வி (தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்) நம்மை விட தாழ்ந்தவர்கள் (இவர்கள் எப்போது காலை வாரி விடுவார்கள் என்று தெரியாது) 8. இந்த ஆறு பேருக்கும் நன்றி காட்ட மாட்டார்கள் கற்ற பின் ஆசார்யன், குரு திருமணம் ஆனவுடன் தாய் காம இச்சைக்குப் பிறகு பெண் வேலையை செய்து முடித்துவிட்ட வேலை ஆள் ஆற்றை கடந்த பின் ஓடம் வைத்தியம் முடிந்தவுடன் வைத்தியர். இவ்வாறு விதுரர் நீதியில் திருதராஷ்டிரனுக்கு நீதி உபதேசிக்கப் பட்டுள்ளது. அடுத்து விதுரர் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 11 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் அடுத்து கீழ் கண்ட ஏழும் துக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே இவைகளை தவிர்க்குமாறு தெரிவிக்கிறார். 1. பெண்களை அவமான படுத்துதல் 2. சூதாட்டம் ஆடுதல் 3. அதிகமான வேட்டை ஆடுதல் 4. கள் குடித்தல் 5. நல்ல வார்த்தை பேசாது இருத்தல் 6. சிறு குற்றத்திற்கு அதிக தண்டனை கொடுத்தல் 7. பணத்தை விரயம் பண்ணுதல் இவ்வாறு இந்த காரியங்களை செய்தால் அது துக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு அடுத்த அத்தியாத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 12 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் வெண்ணை சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தை கொடுப்பவை - *விதுர நீதி தொடர்ச்சி விதுரர் திருதராஷ்டிரனுக்கு தொடர்ந்து உபதேசம் செய்கிறார். பஞ்ச லோகங்களையும் ஆளும் வல்லமை கொண்ட பஞ்ச பாண்டவர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு திருதராஷ்டிரா என்று கூறுகிறார். ஆனால் அவனோ ராஜ்யத்தை பிரித்துக் கொடுப்பதாக இல்லை. எனவே தனது உபதேசத்தை மேற்கொண்டு தொடர்கிறார். கீழ் கண்ட எட்டும் வெண்ணை சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தை கொடுப்பவை என்று கூறுகிறார். 1.*நல்லோர்களின் நட்பு*- நாம் எப்போதும் நல்லோர்களிடம் நட்பு வைத்திருக்க வேண்டும். நமக்கு அதனால் நன்மைகள் பல கிடைத்துக் கொண்டே இருக்கும். மேலும் அது நமக்கு இன்பத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். நம்மை அவர்கள் நன்றாக வழி நடத்துவர். இதுவே நமது நட்பு, கெட்டவர்களிடம் இருந்தால் அது நமக்கு தீமையும் அதனால் நமக்கு துன்பத்தையுமே கொடுக்கும். 2. நிறைய பண வரவு - பண வரவு வந்தால் அது சந்தோஷத்தை கொடுக்கும். அதற்காக நாம் பணத்தை சம்பாதிப்பதே நமது நோக்கம் என்று கொள்ளக் கூடாது. 3. பிள்ளையை அணைத்துக் கொள்ளுதல். - நமது பிள்ளையை அணைத்துக் கொள்ளும் ஒவ்வொரு க்ஷணமும் நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். அப்போது நமது கவலைகள் நமக்குத் தெரியாது. 4. கருத்தொருமித்த இல்லறம்- இது அமைவது கடினம். நல்ல இல்லறம் அமைந்து விட்டால் அது நமக்கு எப்போதும் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். ஒருவர் செய்யும் செயல் மற்றொருவருக்கு தொல்லையாக இருக்காது. 5. கஷ்டமான நேரத்தில் கேட்கப்பட்ட நல்வார்த்தை. - நமக்கு எதாவது கஷ்டம் வந்து விட்டால் அந்த நேரத்தில் நமக்கு ஆறுதலாக சொல்லும் நல் வார்த்தைகள் துன்பத்தை நீக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும். அது போன்று நமக்கு ஆறுதல் சொல்ல நினைக்கும் நண்பர்களோ உறவினர்களோ வேண்டும். 6. தன்னுடன் கூட உள்ளவர்களின் நடுவில் பெருமையாக வாழுதல். - நமக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து அதுவும் சொந்த ஊரில் கிடைத்து விட்டால் அது நமக்கு ஆனந்தத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அதுவே நம்மை யாரும் தெரியாத ஒரு ஊரில் பெரிய உத்தியோகத்தில் இருந்தால் நமக்கு பணம் கிடைக்குமே ஒழிய பெருமை கிடைக்காது. 7. நாம் நினைத்தது நடந்தால் - நினைத்தது நடக்கும் போது அது வெண்ணை சாப்பிட்டது போன்ற சந்தோஷத்தைக் கொடுக்கும். 8. நம்மை சுத்தி உள்ள மக்களிடையே பூஜிக்க தகுந்தவர்களாக வாழ்வது - நமது தொழில், செயல் பிறருக்கு நன்மை தருவதாக இருந்தால் அதனால் மக்கள் நம்மை பூஜித்துக் கொண்டு இருப்பார்கள். அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். இவ்வாறு அந்த காலத்திலேயே எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய விஷயங்களை அழகாக எடுத்துரைத்திருக்கிறார் விதுரர். மேற்கொண்டு ஒன்பது பற்றி என்ன தெரிவித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர_நீதி_13 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் நவத்துவாரம் கொண்ட பட்டினம் நமது உடம்பு - விதுர நீதி தொடர்ச்சி மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆதமாவிர்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகாபாரதம் என்று அழைக்கப்படுகிறது. இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும். நாம் நமது பிறவிப் பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம். விதுரர் தொடர்ந்து செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம். நமது உடம்பை ஒன்பது துவாரங்கள் (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்கு துவார ங்கள் வாய்,மல ஜல துவாரங்கள்) கொண்ட பட்டினம் ஆக தெரிந்து கொள்ளவேண்டும். இது ரஜோ தமோ மற்றும் சத்துவ குணம் அல்லது வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று தூண்களால் கட்டப் பட்டது ஆகும். இந்த மூன்று தூண்களை வைத்து ஐந்து புலன்களை சாட்சியாக வைத்து நல்ல விளை நிலமாக கொண்டு இதில் நல்ல பயிர்களை (குணங்களை) வளர்ப்பவனே சிறந்த ஆத்மா. உடம்பு விளைநிலம், ஆத்மாதான் உழவன். இதில் நல்ல பயிரை விளைவிப்பவனே நல்ல உழவன். இதில் நல்ல பயிரை வளர்த்தால் தான் லாபம். இதில் கெட்ட குணம் போன்ற கள்ளி செடியை வளர்த்து என்ன லாபம்? எனவே இதில் நல்ல குணங்களை வளர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்கொண்டு என்ன உபதேசித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் .🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுரநீதி_14 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் இந்த பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி மஹா பாரதத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. ராமாயணம் மற்றும் மஹா பாரதத்தை நாம் இரண்டு இதிகாசங்களாக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆதமாவிர்க்கு நன்மை பயப்பதாய் சத் விஷயங்களை காட்டி கொடுப்பதாக மஹா பாரதம் விளங்குகிறது. அது பெரியதாக இருப்பதாலும் உயர்ந்ததாக இருப்பதாலும் தான் அது மகாபாரதம் என்று அழைக்கப்படுகிறது. இதை தினமும் ஒரு சிறு பகுதியாவது நாம் படித்தால் நமக்கு நன்மைகள் பல கிட்டும். நாம் நமது பிறவிப் பயனைப் பெற்று பிரம்மத்தை அடைவோம் என்பது நிச்சயம். விதுரர் தொடர்ந்து செய்த போதனைகளை மேற்கொண்டு பார்ப்போம். கீழ்க் கண்ட பத்து பேர்களை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்கிறார்: 1. கள் குடித்து போதையில் வெறி பிடித்தவன். 2. எதையுமே கவனமின்மையால் தப்பு தப்பாகவே செய்பவன். 3. பைத்தியம் - இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. 4. களைத்தே காணப்படுபவன் - எந்த வேலை சொன்னாலும் கை சரியில்லை, கால் சரியில்லை என்று ஏதாவது காரணம் சொல்லுபவன். இவனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. 5. கோபப்படுபவன். - எதற்கெடுத்தாலும் கோபம் அடைவதால் எந்த நன்மையையும் கிடைக்காது. மூளைதான் மழுங்கிப் போகும். 6. பெரும் பசியாளன் - எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன். இவனாலும் ஒரு நன்மையும் இல்லை. 7. பதட்டத்தில் அவசரமாக எந்த செயலையும் செய்பவன். இவன் செய்த வேலையில் சுத்தம் எப்போதுமே இருக்காது. 8. எதையும் யாருக்கும் கொடுக்காமல் தானே அனுபவிப்பவன். - இவனுக்கு பிறவி விமோசனமே கிடைக்காது. 9. எல்லாவற்றிற்கும் ஆசைப்படுபவன். - இவனது கவனம் ஏதாவது பொருட்களின் மீதே இருக்கும். 10. எதற்கெடுத்தாலும் பயப்படுபவன். - எந்த செயலையும் செய்ய மாட்டான். பயந்து கொண்டே இருப்பான். இவனாலும் ஒரு பிரயோஜனமும் கிடையாது. ஆக இந்த பத்து பேரையும் தள்ளி வைக்க வேண்டும் என்று விதுரர் கூறியுள்ளார். மேற்கொண்டு உபதேசித்ததை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்‌. ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர_நீதி_15 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம் சிறந்த ஆசிரியன் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி மஹா பாரதத்தில் நமக்கு வேண்டிய அரிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் உத்தியோக பர்வத்தில் உள்ள விதுர நீதியை பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசித்தது நமக்கு இன்றும் உபயோகமுள்ளது ஆகும். மேற்கொண்டு சிறந்த ஆசிரியனாக விளங்க கீழ்க் கண்ட குணங்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். (விதுர நீதியில் இதுவரை சொல்லப்பட்டதை பழைய பதிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.) 1. யார் ஒருவன் அடங்கிப் போன சண்டையை மூட்டிவிடாமல் இருப்பானோ அவன் சிறந்த ஆசிரியன். - இந்த காலத்தில் நமது பகையை மறந்து இருக்கும்போது நமக்கு அதை நினைவூட்டி பகையை ஞாபகமூட்டி சண்டையை மூட்டி விடுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். நாம்தான் கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும். 2. யாரிடம் கர்வம் இல்லையோ அவன் சிறந்த ஆசிரியன் - ஆசிரியனிடம் கர்வம் சிறிதளவும் இருக்கக் கூடாது. எல்லாம் தெரிந்திருப்பதால்தான் அவன் ஆசிரியன் ஆவான். தனக்கு தெரிந்து இருப்பதை கர்வமாக நினைப்பவன் சிறந்த ஆசிரியன் ஆக மாட்டான். 3. தனது வறிய நிலையை சொல்லாதவனே சிறந்த ஆசிரியன் - ஆசிரியன் தனது கஷ்டத்தப் பற்றி மாணவர்களிடம் சொல்லக் கூடாது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கொடது. இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம் இருந்தாலும் அவர்கள் இன்னும் கிடைக்கவேண்டும் என்று நினைத்தால் அதை வறிய நிலை என்று எடுத்துக் கொள்ளலாம். 4. எந்த துன்பத்தில் இருந்தாலும் செய்ய கூடாத காரியத்தை செய்யாதவனே சிறந்த ஆசிரியன். - ஆசிரியன் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும். தனக்கு எதாவது கஷ்டம் வந்தால் அதிலிருந்து தப்பிக்க எந்த கெட்ட காரியத்தையும் செய்து விடக் கூடாது. பகவான் நம்மை சோதிக்கலாம். நாம்தான் மன தைரியத்துடன் எந்த கஷ்டத்தையும் தாங்கிக்கொள்பவராக இருக்க வேண்டும். இவ்வாறு ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய குணங்களை விதுர நீதியில் கூறியுள்ளார். மேற்கொண்டு என்ன சொன்னார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி_16 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் உணவு பழக்கம் எப்படி இருக்க வேண்டும் - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் திருதராஷ்டிரன், மற்றும் பாண்டுவிற்கு தம்பி ஆவார். அவர் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்தது விதுரநீதி ஆகும். இந்த நீதியில் அரிய பல விஷயங்கள் கூறப் பட்டுள்ளன. நாம் ஒவ்வொரு நீதியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்து உணவுப் பழக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதைப் பற்றி நாம் இப்போது, இங்கு, காண்போம். சத்வகுணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஒரு குணம் ஒருவனுக்கு அதிகமாக இருக்கும். இந்த மூன்று குணங்களில் சத்வ குணமே நல்ல குணமாகும். ரஜோ குணம் உள்ளவன் கோபக்காரனாகவும் தமோ குணம் உள்ளவன் மந்த புத்தி உள்ளவனாகவும் இருப்பான். சத்துவ குணம் வளர பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உணவுப் பழக்கம் ஆகும். முதலில் நாம் சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து சாப்பிட வேண்டும். எப்படி தூண்டிலில் உள்ள தீனியை நினைக்காத மீனும் பொறியில் உள்ள உணவைப் பற்றி நினைக்காத எலியும் மாட்டிக் கொள்ளுமோ அவ்வாறு பார்த்தது எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு மாட்டிக் கொள்ளக் கூடாது. எது செரிக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு செரித்தாலும் எது உடம்புக்கு ஆரோக்கியம் கொடுக்குமோ அதைத்தான் சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கின்றது என்று எண்ணி சாப்பிட்டு விட்டு அது உடம்புக்கு கெடுதல் செய்யுமானால் அதை சாப்பிடக் கூடாது. பகவானுக்கு நைவேத்தியம் செய்து விட்டுத்தான் நாம் சாப்பிட வேண்டும். அப்போது தான் நமக்கு சத்வ குணம் வளரும். குளிக்காமலும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யாமலும் சாப்பிடக் கூடாது. (ஆனால் இவ்வாறு பிற இடத்தில் செய்யப் பட்ட உணவுப் பற்றி தெரியாததால் [சமைக்கும்போது உள்ள குணம், பெருமானுக்கு நிவேதனம் செய்ததா இல்லையா என்பது பற்றி ] ) சாப்பிட தவிர்ப்பவர்களைப் பற்றி ஒரு சாரர் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். அடுத்து அதிக காரம், சூடு, உப்பு, கார்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இவ்வாறு சாப்பிட்டால் நமக்கு ரஜோ குணம் தான் வளரும். அடுத்து மிச்சத்தை சாப்பிடக் கூடாது. எச்சில் படாத உணவைத் தான் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் நமக்கு தமோ குணமே வளரும். அடுத்து எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி. இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி. மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி. அதற்கு மேல் அதாவது நான்கு, ஐந்து வேளைகளைப் பற்றி அவர் கூறவில்லை. அவ்வாறு சாப்பிடுவோம் என்று நினைக்க வில்லை போலும். சத்வ குணம் இருந்தால்தான் பகவானைப் பற்றி சிந்தனை வரும். இல்லை என்றால் சிந்தனையே வராது. இவ்வாறு சத்துவ குணம் வளர சாப்பிட வேண்டிய உணவுப் பழக்கத்தைப் பற்றி விதுர நீதியில் கூறியுள்ளார். அடுத்து வரும் நீதியில் என்ன சொன்னார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 17 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் தர்மபடி தான் நீதி சொல்ல வேண்டும், உறவாக இருந்தாலும் நீதியையே சொல்ல வேண்டும். - விதுர நீதி தொடர்ச்சி மகாபாரத்தில் அரிய பல கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன. அதில் நாம் விதுர நீதியைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து நீ சுவராஸ்யமான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கிராயே நன்மை தரும் பல விஷயங்களை மேலே சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். விதுரர் தொடர்கிறார். திருதராஷ்டிரா எல்லா ஜீவ ராசிகளிடம் நேர்மை யாக நடந்துக் கொண்டாலே சகல தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். எனவே எப்போதும் நியாமாக நடந்து கொள் என்று கூறுகிறார். மேலும் உதராணமாக பிரகலாதன் எப்படி நியாமாக நடந்து கொண்டான் என்பது பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஒரு கதையை ஆரம்பிக்கிறார். பிரகலாதனுக்கு விரோச்சணன் என்று ஒரு மகன் இருந்தான். (பிரகலாதன் தந்தை ஹிரண்ய கசிபு, பிரகலாதன் மகன் விரோச்சணன் மற்றும் விரோச்சணன் மகன் மகாபலி ஆவார்கள். ) பிரகலாதனுக்கு வயதாகிற்று. விரோச்சணன் வாலிபத்தை அடைந்தான். அப்போது சுதன்வா என்ற பிரமாணனும் அந்த ராஜ்யத்தில் இருந்தான். அங்கு கேசினி என்ற அழகிய பெண்ணும் இருந்தாள். கேசினியை மணக்க விரோச்சணனும் சுதன்வாவும் ஆசைப் பட்டார்கள். எனவே கேசினிக்கு குழப்பம் ஆயிற்று. எனவே இரண்டு பேரில் ஒருவனை தேர்ந்தெடுக்க முடிவெடுத்தாள். கேசினியை விரோச்சணன் சந்தித்தான். நாங்கள் தேவர்கள், பிராமணர்கள் மற்றும் அனைவரையும் வென்றாயிற்று. நான்தான் சுதன்வாவை விட உயர்ந்தவன். என்னை மணந்து கொள் என்று கேட்டுக் கொண்டான். கேசிநியோ உனக்கு மட்டும் தான் என்னை மணக்க தகுதியோ! சுதன்வாவுக்கு ஏன் தகுதி கிடையாது. நாளை இரண்டு பேரும் வாருங்கள் நான் எனக்கு பிடித்தமானவரை தேர்ந்தெடுக்கிறேன் என்று கூறினாள். மறு நாள் விரோச்சணன் முதலில் வந்தான். கேசினியின் அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். பிறகு சுதன்வா அங்கு வந்தான். கேசினி சுதன்வாவை நமஸ்கரித்தாள். அவனுக்கு தர வேண்டிய மரியாதையை தந்தாள். பிறகு விரோச்சணன் சுதன்வாவைப் பார்த்து நீயும் இங்கு அமர்ந்து கொள் என்று கூறினான். சுதன்வாவோ தகப்பனார் பக்கத்தில் பிள்ளை அமர்ந்து கொள்ளலாம். ஒரு சத்திரியன் அருகில் மற்றொரு சத்திரியன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு பிராமணன் அருகில் மற்றொரு பிராமணன் அமர்ந்து கொள்ளலாம். ஒரு உயர்ந்தவன் ஒருகில் மற்றொரு உயர்ந்தவன் அமர்ந்து கொள்ளலாம். நான் உனது அருகில் அமர மாட்டேன் என்று கூறினான். அதற்கு விரோச்சணன் ஆமாம் நீ கீழேயே தர்ப்பத்தை விரித்து அமர்ந்து கொள் என்று கேலி செய்தான். அதற்கு சுதன்வா விரோச்சனனைப் பார்த்து நான் உன்னவிட உயர்ந்தவன். நான் உட்கார்ந்திருந்தால் உனது தந்தை எனக்கு சமமாக உட்காரமாட்டார். எனவே நான்தான் உயர்ந்தவன் என்று கூறினான். இரண்டு பேருக்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி உண்டாயிற்று. விரோச்சணன் என்னிடம் உள்ள சொத்து அனைத்தையும் பந்தயம் வைக்கிறேன், நீ உயர்ந்தவன் என்று தெரிந்தால் அத்தனையையும் கொடுத்து விடுகிறேன் என்று கூறினான். அதற்கு சுதன்வா, வேண்டும் என்றால் உயிரை பணயமாக வைப்போம் மற்ற எந்த சொத்தும் எனக்கு தேவை இல்லை என்று கூறினான். இருவருக்கும் நீதியை சொல்ல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமே. எனவே சுதன்வா விரோச்சனனைப் பார்த்து இந்த தேசத்து ராஜாவும் உனது தந்தையும் ஆகிய பிரகலாதனுக்கு அந்த தகுதி இருக்கிறது. அவர் நியாயத்தை சரியாக சொல்வார். அவரிடம் செல்வோம் என்று கூறினான். விரோச்சணனும் ஒத்துக் கொண்டு பிரகலாதனிடம் செல்ல முடிவு செய்தனர். இருவரும் ராஜாவிடத்தில் சென்றார்கள். இருவரும் சேர்ந்து வருவதை பார்த்து விரோச்சனிடம், சுதன்வா உனக்கு நண்பனா என்று கேட்டார். அதற்கு விரோச்சணன் நாங்கள் இருவரும் நேர் விரோதம் கொண்டவர்கள் யார் உயர்ந்தவர் என்று தெரிந்து கொள்ள வந்துள்ளோம் என்று கூறினான். ராஜாவும் நடந்ததை கேட்டு உயிரைப் பணயமாக வைத்துள்ளதுப் பற்றியும் அறிந்துக் கொண்டார். பிறகு ராஜா சுதன்வாவை நமஸ்கரித்து பருத்த வெள்ளைப் பசுவை தானமாக கொடுத்தார். சுதன்வா, இந்த தானத்தை விட உன்னிடம் சத்யத்தை எதிர்ப் பார்க்கிறேன். எனவே சத்யத்தை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். ராஜாவோ நீ பிரம்மத் ஞாநி அவனோ எனது பிள்ளை, நான் என்ன கூற வேண்டும் என்று சுதன்வாவைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார். சுதன்வா உனது சொத்தையும் ராஜ்யத்தையும் உனது மகனுக்கு கொடு. நீ சத்யத்தை மட்டும் சொல். எங்களில் யார் உயர்ந்தவர் என்று கூறு என்று கேட்டுக் கொண்டான். ராஜா இந்த தர்ம சங்கடாமான சூழ்நிலையில் நான் பொய் சொல்லிவிட்டால் என்ன ஆகும் என்று கூறு என்று கேட்டுக் கொண்டார். சுதன்வா பொய் சொல்பவர்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றி கூறினான். நீ ஒரு வேளை பொய் சொல்லிவிட்டால் - 1. அக்னி முன்பு கை பிடித்த மனைவியை வேறு பெண்ணிற்க்காக கை விட்டு விட்டால் முதல் மனைவிக்கு ஏற்படும் துன்பத்தை அனுபவிப்பாய். 2. சூதாட்டத்தில் மொத்த சொத்தையும் இழந்து விட்டவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய். 3. தலை முழுக்க அதிக பாரத்தை ஏற்றி விட்டு அவனை வெய்யிலில் விட்டால் அவன் எவ்வாறு தவிப்பானோ அவ்வாறு தவிப்பாய். மேலும் பொய் சொல்பவர்கள் என்ன தண்டனைக்கு உள்ளாவர்கள் என்றும் சுதன்வா கூறினான். 1. பிராநிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஐந்து தலை முறை கெட்டுப் போவான். 2. பசுவுக்காக பொய் சொன்னால் அவன் பத்து தலை முறை கெட்டுப் போவான். 3. ஒருவன் குதிரைக்காக பொய் சொன்னால் அவன் நூறு தலை முறை கெட்டுப் போவான். 4. ஒருவன் ஒரு பெண் விஷயத்திற்காக பொய் சொன்னால் அவன் ஆயிரம் ஜென்மம் கெட்டுப் போவான். 5.தங்கத்திற்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் ஒரு தலை முறை முன்பும் ஒரு தலை முறை பின்பும் கெட்டுப் போவான். ஆனால் பூமிக்காக ஒருவன் பொய் சொன்னால் அவன் எத்தனை தலை முறை உண்டோ அதனை தலை முறையும் கெட்டுப் போவன். கேசினி பூமிக்கு சமம். அவள் விஷயத்தில் பொய் சொல்லக் கூடாது. எனவே எங்களில் யார் உயர்ந்தவர் என்று சரியாக சொல் என்று கேட்டுக் கொண்டான். பிரகலாதன் நறுக்கு தெரித்தார் போல தனது தீர்ப்பை சொன்னார் தனது மகனைப் பார்த்து. சுதன்வா தந்தை உனது தந்தையை விட உயர்ந்தவர். சுதன்வா தாய் உனது தாயை விட உயர்ந்தவர். விரோச்ச்சனா நீ அகங்காரம் கொண்டு உள்ளாய். உன்னைவிட சுதன்வாவே உயர்ந்தவன் என்று கூறி முடித்தார். பிறகு சுதன்வாவை நமஸ்கரித்து எனது மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடு என்றும் கேட்டுக் கொண்டார். சுதன்வா எனக்கு உனது மகனின் உயிர் வேண்டாம். கேசினியும் எனக்கு வேண்டாம். நீ சத்யம் தவறாது பேசினாயே அது போதும் என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இவ்வாறு கதையை முடித்து விட்டு விதுரர் அமைதி காத்தார். பிறகு பாண்டவர்களுக்கு சேர வேண்டிய ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்துவிடு என்று திருதராஷ்டிரனிடம் கூறினார். திருதராஷ்டிரனோ கேட்பதாக இல்லை. மேலும் தனது உரையை விதுரர் தொடர்ந்தார். மேற்கொண்டு என்ன தெரிவித்தார் என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி_18 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) ஏன் நம்மை கடவுளே தர்ம வழியில் நடத்தக் கூடாது ? திருதராஷ்டிரனுக்கு விதுரர் உபதேசம் செய்து வருகிறார். அப்போது ஒரு சந்தேகம் திருதராஷ்டிரனுக்கு எழுகிறது. நம்மை ஏன் கடவுளே தர்ம வழியில் நடத்தக் கூடாது, நாம் செய்யும் செயல் தர்மத்தின் வழியில் இல்லை என்றால் உடனே நம்மை ஏன் கடவுள் தடுக்கக் கூடாது என்ற சந்தேகம் எழுவதாகவும் அதற்கு பதிலும் விதுர நீதியில் கொடுக்கப் பட்டுள்ளது. நம்மை காக்க தேவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டை மேய்க்கும் இடையன், ஆடு பின்பு நின்று கொண்டு அதை ஓட்டுவது போல, நம்மை நடத்துவதாக நினைத்துக் கொள்வோம். நமக்கு அது பிடிக்காமல் போகும். மேலும் நாம் செய்யும் செயல் தவறாக இருந்தால் உடனே அவ்வாறு செய்யக் கூடாது என்று தேவர்கள் தடுப்பார்கள். அது நமது சுதந்திரத்திற்கு தடையாகவும் இருக்கும். அதுவும் நமக்கு நிச்சயம் பிடிக்காது. எனவே தான் நமக்கு யோசிக்க புத்தி கொடுத்துள்ளார்கள். நாம்தான் புத்தியை பயன்படுத்தி எது பாவம் எது புண்ணியம் என்று தெரிந்து கொண்டு அதன் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார். மேலும் நாம் தர்மம் எவை என்று தெரிந்து கொள்ளவும் நமக்கு உறுதுணையாக இருப்பதற்கும் மகான்கள் தோன்றி உள்ளார்கள். சாஸ்திர புஸ்தகங்கள் அவர்களால் எழுதப் பட்டுள்ளன. நமக்கு புத்தி கொடுக்கப் பட்டுள்ளது. நாம்தான் நல்ல வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று விதுரர் கூறி உள்ளார். மேலும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், நமக்கு நல்ல புத்தியை கொடுத்து விடுவார்கள். நாம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவிக்கிறார். ஆனால் சிலர், தேகமும், ஆத்மாவும் ஒன்று என்று நினைக்கிறார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதையே உண்மை என்றும் கண்களுக்கு தெரியாததை நம்பவும் மாட்டார்கள் . அப்படி நினைப்பது சரி என்றால் நாம் பார்க்காத விஷயங்கள் இல்லை என்று கூற முடியாது. நமது எல்லை சிறியது என்றும் நமது அறிவு அவ்வளவுதான் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சுவற்றிற்கு பின்னால் உள்ளதை நாம் பார்க்க முடியாது என்றாலும் அங்கு உள்ள வஸ்துக்கள் இல்லை என்று கூற முடியாது. அப்படி எதுவும் இல்லை என்று நினைத்தால் அது முட்டாள் தனம் ஆகும். ஆத்மாவும் உடம்பும் ஒன்று என்றே நினைப்பவர்கள் உடம்பு சுகத்திற்க்காக எதையும் செய்து விடுவார்கள். உதாரணத்திற்கு பிறரது பொருளை ஒருவர் பிடுங்கி அனுபவித்தால் அது உடம்பிற்கு சுகம் தரும். ஆனால் அது ஆதமாவிற்கு பாவத்தை சேர்த்து விடும் என்று கூறியுள்ளார். எனவே நமக்கு ஆத்ம சிந்தனை முதலில் வர வேண்டும் என்று கூறி உள்ளார். மேற்கொண்டு விதுரர் தெரிவித்ததை அடுத்த அத்தியாத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுரநீதி 19 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) யாருடைய ரூபம் எப்போது வெளிப்படும்? - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் தனது உபதேசத்தை தொடர்கிறார். திருதராஷ்டிரன் எதையும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இருப்பினும் தனது உபதேசத்தை தொடர்கிறார். யார் ரூபம் எப்போது வெளிப்படும் என்று தனது அடுத்த உபதேசத்தில் விளக்குகிறார்:- தங்கத்தின் தன்மை - நாம் வைத்திருக்கும் தங்கம் உண்மையான தங்கமா என்று அதை காய்ச்சும்போதுதான் தெரியும் அதுவரை தெரியாது. சத் புருஷன் - ஒருவான் சத்புருஷன் என்றால் அவனது ஆச்சார அனுஷ்டானத்தில் தான் தெரியும். அவன் தான் சத் புருஷன் என்று தெரிவித்துக் கொண்டாலும் உண்மையான சத் புருஷன் என்பது அவனது நடத்தையில் தெரிய வந்து விடும். சாது - ஒருவன் சாது என்று சொல்லிக் கொண்டாலும் சாது போன்று உடை அணிந்துக் கொண்டாலும் அவரது பேச்சில் அவர் சாதுவா சாது இல்லையா என்று தெரிந்து விடும். உடையில் சாதுவாக இருந்தாலும் அவர் பேச்சு வேறுமாதிரி இருந்தால் அவர் சாது இல்லை என்று தெளிவாக தெரிந்து விடும். சூரன் - ஒருவன் தன்னை சூரன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவனுக்கு பயம் வந்தால் அவன் சூரன் இல்லை என்பது வெளி உலகிற்கு தெரிந்து விடும். தைரியமிக்கவன் - தன்னை தைரியசாலி என்று சொல்லிகொள்பவன் உண்மையான தைரியசாலி இல்லை என்றால் அவனது காசு தொலைந்து விட்டால் உண்மை வெளிப்பட்டு விடும். தைரியசாலி என்றால் தனது சொத்து தொலைந்தாலும் அதை மீண்டும் சம்பாதிக்கும் வரை தைரியாமாகவே இருப்பான். நமக்கு வேண்டியவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் - நமக்கு ஆபத்து வந்தால் நமக்கு யார் வேண்டியவன் யார் வேண்டதாவன் என்ற உண்மை வெளிப் பட்டுவிடும். நம்மிடம் காசு தொலைந்து விட்டாலோ, நமக்கு ஆபத்து வந்து விட்டாலோ, நம்மிடம் ஒட்டிக் கொண்டு இருந்தவர்கள் நாம் அருகில் இருந்து உதவி புரியா விட்டால் அவர் நம்மிடம் ஏன் இருந்தார் என்ற உண்மை தெரிந்து விடும். இவ்வாறு யார் ரூபம் எப்போது வெளிப்படும் என்று அழகாக விவரித்தார். மேற்கொண்டு உபதேசித்ததை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 20 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) எது வந்தால் எது நம்மிடம் இருந்து விலகி விடும். - விதுர நீதி தொடர்ச்சி மகா பாரத்தில் அரிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன. நாம் நல்ல கதிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மகான்கள் நமக்கு பல நல்ல விஷயங்களை அருளி உள்ளனர். நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் நமக்காக அருளிச் சென்றதை கேட்டு தர்ம வழியில் நடப்போம். விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கப் பட்டுள்ளது. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய சொத்தை கொடுக்க மனம் இல்லை. அவர்களுக்கு பிரித்து கொடுத்து விடு என்று தனது உபதேசத்தை மேலும் தொடர்கிறார். எது வந்தால் எது பறி போகும் என்றும் அஹங்காரம் வந்தால் அத்தனையும் போய் விடும் என்றும் அழகாக கீழ் வருமாறு, விதுரர் விவரிக்கிறார். முதுமை, உருவத்தின் அழகைப் பறித்து விடும். - இளமையில் இருக்கும் அழகு, முதுமை வந்து விட்டால் போய் விடும். ஆசை தைரியத்தை பறித்து விடும். - ஆசை நமக்கு வந்து விட்டால் நம்மிடம் உள்ள தைரியம் போய் விடும். உதராணத்திற்கு நாம் தனியாக செல்வதாக நினைத்துக் கொள்வோம். நம்மிடம் பொருளோ அல்லது நகையோ இருந்து அதன் மீது ஆசையும் இருந்தால் அதை நம்மிடம் இருந்து யாரும் அபகரித்து விடுவார்களோ என்ற எண்ணம் நமது தைரியத்தை பறித்து விடும். ம்ருத்யு (மரணம்) வந்தால் பிராணன் போய் விடும். பொறாமை வந்தால் அது நம்மை தர்ம மார்க்கத்தில் இருந்து விலக்கி விடும். நமக்கு பொறாமை இல்லாமல் இருந்தால் நாம் தர்ம மார்க்கத்திலேயே இருப்போம். எப்போது மற்றவரைப் பார்த்து நமக்கு பொறாமை வருகிறதோ உடனேயே நாமும் அவர் போல இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவோம். அவ்வாறு நாமும் இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம். எனவே பொறாமை தர்ம மார்க்கத்தை பறித்து விடும். கோபம் வந்தால் செல்வம் போய் விடும். - விசுவாமித்திரருக்கு தவ வலிமையே செல்வமாகும். அவருக்கு கோபம் வந்தவுடன் எவ்வாறு அவரது தவ வலிமை குறைந்து விட்டதோ அது போல நமக்கு கோபம் வந்தால் நம்மிடம் உள்ள செல்வம் சென்று விடும். ஒழுக்கம் கெட்டவனுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் பறி போகும். நாம் நல்லவர்களுக்கு தொண்டு புரியலாம். ஆனால் சுய லாபத்திற்காக ஒழுக்கம் கெட்டவர்களுக்கு தொண்டு புரிந்தால் நமது ஒழுக்கமும் போய் விடும் என்பது உறுதி. காமம் வந்தால் வெட்கம் போய் விடும். மேல் சொன்னவைகள் எதாவது ஒன்று வந்தால் ஒன்று போய் விடும். ஆனால் அஹங்காரம் வந்து விட்டால் அத்தனையும் தொலைந்து போகும் என்று அழகாக விதுரர் எடுத்துரைக்கிறார். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 *விதுர நீதி 21* *(விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்)* *பேசுவதில் எது சிறந்தது - விதுர நீதி தொடர்ச்சி* மஹா பாரதத்தில் அரிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அதில் நம்மால் பின்பற்ற முடியாதது என்று எதுவும் கிடையாது. அவ்வாறு இருந்திருந்தால் மகா பாரதம் எப்போதோ காணாமல் போய் இருக்கும். எனவே முயற்சித்தால் நம்மால் கண்டிப்பாக பின்பற்ற முடியும். மகான்கள் பலர் அவதரித்து நமக்காக அவ்வாறு நடந்து காண்பித்து இருக்கிறார்கள். நாம் நம்மால் முடிந்தவரை அவர்கள் சொன்ன வழியில் நடக்க முயற்சிப்போம். விதுரர் எம தர்மரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு விருப்பமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும். அடுத்து விதுர நீதியில் என்ன தெரிவித்தார் என்று காண்போம். நம்மை யாரும் வசவு பாடினாலோ நம்மை யாரும் நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை யாரும் வசவு பாடினால் நாம் அதற்காக வருத்தமோ, மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும். மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார் விதுரர். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம்மீது அம்பு விடுவதாக நினைத்து நாம் ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். அவ்வாறு சண்டை ஏற்பட்டால் நாமும் சண்டை போடுவதற்கு தயார் ஆகி விட்டோம் என்று அர்த்தம் ஆகி விடும். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும். அடுத்து எது உத்தமம் என்று கூறுகிறார். பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது என்றும், பேசுவதில் எது சிறந்தது என்று,மிக அருமையாக கூறியுள்ளார். மேற்கொண்டு விதுரர் சொன்னதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 22 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) இந்த 17 பேரும் நரகத்துக்கு செல்வார்கள் - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் கீழ்கண்ட ஐந்து இன்றியமையாத விஷயங்களை நன்றாக அறிந்த ஞானி ஆவார். பரமாத்ம சொரூபம் - இறைவனை பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல். ஜீவாத்ம சொரூபம் - ஜீவாத்மாவைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளுதல் உபாய சொரூபம் - ஜீவாத்மா, பரமாத்மாவை அடைய உள்ள வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். பரமாத்மாவை அடைய ஜீவாத்மா கர்ம யோகத்தையோ, ஞான யோகத்தையோ அல்லது பக்தி யோகத்தையோ பின் பற்றலாம். இந்த வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல். புருஷார்த்த சொரூபம் - இறைவனை அடைந்தபின் நாம் செய்வது - அதாவது ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முயர்ச்சிக்கும்போது மேற்கொள்ளும் பயணம் மற்றும் அங்கு சென்றவுடன் இறைவனுடன் கலந்து இருப்பது பற்றிய ஞானம். விரோதி சொரூபம் - இவ்வளவு நெருக்கமான ஜீவாத்மாவையும் பரமாத்வையும் சேர விடாமல் தடுக்கும் சாதனங்களைப் பற்றி தெரிந்து கொள்வது ஆக மேல்சொன்ன ஐந்து விஷயங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டு அதனை நடைமுறைப் படுத்தியவர் விதுரர் ஆவார். அவர் திருதராஷ்டிரனுக்கு செய்த உபதேசத்தில் கீழ் கண்ட 17 பேர்களும் நரகத்திற்குத்தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார். அவற்றைப் பற்றிக் காண்போம். 1. ஆகாயத்தை நோக்கி வீணே முஷ்டியால் குத்துபவன். அதாவது தமக்கோ, சமூகத்திற்கோ பிரயோஜனம் இல்லாமல் வெற்று காரியம் செய்பவன். 2. தன்னை விட வலிமை உள்ளவனிடம் விரோதம் கொண்டு அவனை முறியடிக்க முயற்சி செய்பவன். அதாவது வானத்தை வில்லாக வளைக்க முயற்சிப்பவன். 3. ஒரு விஷயத்தை பற்றி ஏற்றுகொள்ளாதவனிடம் அதைப் பற்றி சொல்பவன். ஒரு விஷயத்தை யாரிடம் சொல்ல வேண்டுமோ அவனிடம் தான் சொல்ல வேண்டும். புரிந்து கொள்ளும் சக்தி இல்லாதவனிடம் ஞானத்தை பற்றி உபதேசிப்பது இதற்கு உதாரணமாகும். 4. தர்மத்தை மீறி நடந்து விட்டு அவ்வாறு நடந்து கொண்டதை பெருமையாக சொல்லிக் கொள்பவன். 5. விரோதியை வணங்கி அவனது வீட்டில் உணவு அருந்துபவன். 6. யார் ஒருத்தன் பெண்களை காப்பாற்றி அவர்களை உழைக்க வைத்து அதன் வருமானத்தில் தனது வாழ்கையை நடத்துகிறானோ அவன். 7. யாரிடத்தில் பிச்சை கேட்கக் கூடாதோ - அவனிடம் பிச்சை எடுப்பவன். மேலும் அவனிடம் பிச்சை பெறுவதற்காக அவனைப் பற்றி புகழ்ந்து பேசுபவன். 8. யார் ஒருவன் சிறந்த குலத்தில் பிறந்து விட்டு அவனது குல தர்மத்தை காக்காமல் குலத்தை தாழ்த்தும் செயலை செய்பவன். 9. நல்ல பலம் பொருந்தியவனுடன் விரோதம் கொண்டு தேவை இல்லாமல் அவனிடம் வம்புக்கு செல்பவன். 10. செய்யும் வேலை பற்றி சிரத்தை இல்லாதவனிடம் அந்த வேலையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொள்பவன். 11. எந்த பொருளில் ஆசை வைக்கக் கூடாதோ அந்த பொருள் மீது ஆசை கொள்பவன். 12. மருமகளிடம் பேசக் கூடாத வார்த்தை அல்லது பரிகாசம் செய்பவன். 13. எந்த பெண்ணிடம் கூடக் கூடாதோ அந்த பெண்ணிடம் உறவு கொள்பவன் மற்றும் அவளை கர்ப்பம் தரிக்க வைப்பவன். 14.பெண்களை நிந்திப்பவன். 15. வாங்கிய பொருளை திருப்பி தர மறுப்பவன். 16. தானம் என்று கொடுத்து விட்டு கொடுத்ததைப் பற்றி தம்பட்டம் அடிப்பவன். 17. ஒரு பொய்யை மெய்யாக்க சாதுர்யமாக பேசுபவன். ஆகிய மேல் சொன்ன 17 பேர்களும் நரகத்துக்குத் தான் செல்வார்கள் என்று விதுரரர் விதுர நீதியில் கூறியுள்ளார். மேற்கொண்டு அவர் சொன்ன அரிய பல விஷயங்களை அடுத்த அத்தியாத்தில் காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 23 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) இந்த எட்டு பேரும் சொர்க்கத்திற்கு போவர்கள் - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் தர்மத்தின் அம்சம் ஆவார். அவர் சொன்ன கருத்துக்கள் லோக ஷேமத்திற்கு சொன்னது ஆகும். விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசித்ததாக இருந்தாலும், சனாதன தர்மத்திற்கு சொன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். கீழே சொல்லப்பட்ட பதினேழு பேரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் சொர்க்கத்திற்கு எட்டு பேர் தான் செல்வார்கள் என்று கூறியுள்ளார். ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள இயலாது. மனிதர்களின் குணங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப் பட்டுள்ளது. ரஜோ குணம், தமோ குணம் மற்றும் சத்துவ குணம். இதில் சத்துவ குணம் உள்ளவர்கள் மட்டும் தான் இறைவனை அறிந்து கொள்ள முடியும். ஆக மூன்றில் ஒரு பங்கு மனிதர்களுக்குத்தான் சத்துவ குணம் உள்ளது. எனவே சொர்கத்திற்கு செல்ல எட்டு வகை மனிதர்களே தகுதியானவர்கள் என்று சொன்னார் போலும். சொர்க்கத்துக்கு செல்லும் எட்டு பேர்கள். 1. பெரியோர் உபதேசத்தை கேட்பவர்கள். 2. நீதி தெரிந்தவர்கள். 3. கொடுக்கும் குணம் உள்ளவர்கள். 4. நைவேத்தியம் செய்யப்பட்ட உணவையே உண்பவர்கள். அதாவது பெருமாளுக்கு உணவை அர்ப்பணித்து விட்டு உண்பவர்கள். 5. பிறரை ஹிம்சிக்காதிருப்பவர்கள். பிறரை மனத்தாலோ, உடம்பாலோ அல்லது சொல்லாலோ ஹிம்சிக்காதவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். 6. உலகத்தில் ஒருத்தருக்கும் தீங்கு செய்யாதவர்கள். 7. செய்நன்றி மறக்காதவர்கள். 8. சத்தியமே பேசுபவர்கள். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 24 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) இந்த ஆறும் ஆயுசை குறைக்கும் கத்திகள் - விதுர நீதி தொடர்ச்சி விதுரர் அடுத்ததாக கீழ் கண்ட ஆறும் கத்தி போல் வெட்டி ஆயுசை குறைத்து விடும் கூறியுள்ளார். 1 செருக்கோடு வாழ்தல். 2 அதிகம் பேசுதல் (சத் விஷயங்களைத் தவிர ) 3 பிரர்த்தியாருக்கு ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் இருத்தல். கொஞ்சம் கூட தியாக மனப்பான்மை இல்லாதிருத்தல். 4 . கோபப்படுதல். 5 . நண்பனுக்கு துரோகம் செய்தல். 6 பிரர்த்தியாரை கெடுத்தல். ஆகிய ஆறும் நமது ஆயுசை குறைத்து விடும். எனவே இவற்றை ஒழித்து விட வேண்டும் என கூறியுள்ளார். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 25 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்யலாம் - விதுர நீதி தொடர்ச்சி மகா பாரதத்தில் கிடைக்காத விஷயங்களே கிடையாது. அவ்வளவு விஷயங்கள் அவற்றில் அடங்கியுள்ளன. அதில் உள்ள விதுர நீதியில் விதுரர் சொன்னதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்ததாக அவர் சொன்னதை மேற்கொண்டு காண்போம். ஒரு குலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு ஆளை தியாகம் செய்து விடலாம். ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்தை தியாகம் செய்து விடலாம். ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு கிராமத்தையே தியாகம் செய்து விடலாம். ஒரு ஆத்மாவின் நன்மைக்காக லோகத்தையே தியாகம் செய்து விடலாம் என்று அடுத்ததாக கூறி உள்ளார். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 26 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) வேலைக்காரன் பற்றி விதுரர் கூறியுள்ளது என்ன - விதுர நீதி தொடர்ச்சி இந்த காலத்தில் நல்ல வேலைக்காரர்கள் கிடைப்பதே அரிது. பெரிய நிறுவனமாய் இருந்தாலும் சரி, சின்ன நிறுவனம் இருந்தாலும் சரி அல்லது தனி நபராக இருந்தாலும் சரி, நல்ல ஆள் கிடைப்பதே அரிதாகி விட்டது. மகாபாரத்தில் விதுரர் அப்போதே வேலை காரரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று கூறி விட்டார். வேலைக்கு ஆளை அமர்த்தும் முன் அவர் செய்ய வேண்டிய வேலை பற்றி முதலிலேயே கூறி விட்டு வேலைக்கு அமர்த்த வேண்டும். வேலைக்கு அமர்த்தி விட்டு அதிக வேலை கொடுத்தால் பிரச்சினை தான் வரும். மேலும் வேலைக்கு வைப்பதற்கு முன் சம்பளம் பற்றி பேசி தீர்த்து விட வேண்டும். சம்பளத்தை குழப்பமாக பேசக் கூடாது. வேலைக்கு ஆள்வந்தவுடன் அதிகம் வேலை கொடுக்கலாம் என்றும், சம்பளத்தை குறைத்துக் கொடுக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு வேலைக்காரனை வைத்தால் அது பிரச்சினையில் கொண்டு போய் முடியும். வேலைக்காரன் நம் மீது விருப்பம் உடையவனாய் இருந்தால் அவன் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. அவனை வசவு பாடாமல் இருக்க வேண்டும். ஆபத்தில் அவனை கை விட்டு விடக் கூடாது. மேலும் ஒரு கஷ்டமான வேலையை வேலைக் காரர்களைக் கொண்டுதான் சாதிக்க முடியும். தனியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது. எனவே வேலை காரனை நீக்கும் போது நிதானமாக யோசிக்க வேண்டும். காலத்தை தாழ்த்தாமல் முதலாளிக்கு எது பிடிக்குமோ அதை தாங்களாகவே செய்பவர்கள் நல்ல வேலைக்காரர்கள். மேலும் முதலாளி தப்பு செய்யும் பொது அதைத்தாழ்ந்த குரலிலாவது சொல்பவர்கள் நல்ல வேலைக்காரர்கள் என்று வேலைகாரர்களின் குணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த குணம் உள்ள வேலைக்காரனை உடனடியாக வேலையிலிருந்து எடுத்து விடும்படியும் விதுர நீதியில் கீழ் வருமாறு கூறியுள்ளார்: எந்த வேலை ஆள் நாம் சொன்னதை செய்ய மறுக்கிறானோ எந்த வேலை கொடுத்தாலும் அதை நாளை செய்வேன் என்று காலம் தாழ்த்துகிறானோ எவன் ஒருவன் தனக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறானோ இவ்வாறு வேலைக் காரர்களை பற்றி அழகாகக் கூறி உள்ளார். மேலும் விதுர நீதியில் உள்ள சமாச்சாரங்களை நாளை காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 [6:41 AM, 10/5/2023] Mohan SriRaghavendrar Kulithalai: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 26 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) வேலைக்காரன் பற்றி விதுரர் கூறியுள்ளது என்ன - விதுர நீதி தொடர்ச்சி இந்த காலத்தில் நல்ல வேலைக்காரர்கள் கிடைப்பதே அரிது. பெரிய நிறுவனமாய் இருந்தாலும் சரி, சின்ன நிறுவனம் இருந்தாலும் சரி அல்லது தனி நபராக இருந்தாலும் சரி, நல்ல ஆள் கிடைப்பதே அரிதாகி விட்டது. மகாபாரத்தில் விதுரர் அப்போதே வேலை காரரை எப்படி தேர்வு செய்ய வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று கூறி விட்டார். வேலைக்கு ஆளை அமர்த்தும் முன் அவர் செய்ய வேண்டிய வேலை பற்றி முதலிலேயே கூறி விட்டு வேலைக்கு அமர்த்த வேண்டும். வேலைக்கு அமர்த்தி விட்டு அதிக வேலை கொடுத்தால் பிரச்சினை தான் வரும். மேலும் வேலைக்கு வைப்பதற்கு முன் சம்பளம் பற்றி பேசி தீர்த்து விட வேண்டும். சம்பளத்தை குழப்பமாக பேசக் கூடாது. வேலைக்கு ஆள்வந்தவுடன் அதிகம் வேலை கொடுக்கலாம் என்றும், சம்பளத்தை குறைத்துக் கொடுக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு வேலைக்காரனை வைத்தால் அது பிரச்சினையில் கொண்டு போய் முடியும். வேலைக்காரன் நம் மீது விருப்பம் உடையவனாய் இருந்தால் அவன் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. அவனை வசவு பாடாமல் இருக்க வேண்டும். ஆபத்தில் அவனை கை விட்டு விடக் கூடாது. மேலும் ஒரு கஷ்டமான வேலையை வேலைக் காரர்களைக் கொண்டுதான் சாதிக்க முடியும். தனியாக இருந்து எதையுமே சாதிக்க முடியாது. எனவே வேலை காரனை நீக்கும் போது நிதானமாக யோசிக்க வேண்டும். காலத்தை தாழ்த்தாமல் முதலாளிக்கு எது பிடிக்குமோ அதை தாங்களாகவே செய்பவர்கள் நல்ல வேலைக்காரர்கள். மேலும் முதலாளி தப்பு செய்யும் பொது அதைத்தாழ்ந்த குரலிலாவது சொல்பவர்கள் நல்ல வேலைக்காரர்கள் என்று வேலைகாரர்களின் குணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த குணம் உள்ள வேலைக்காரனை உடனடியாக வேலையிலிருந்து எடுத்து விடும்படியும் விதுர நீதியில் கீழ் வருமாறு கூறியுள்ளார்: எந்த வேலை ஆள் நாம் சொன்னதை செய்ய மறுக்கிறானோ எந்த வேலை கொடுத்தாலும் அதை நாளை செய்வேன் என்று காலம் தாழ்த்துகிறானோ எவன் ஒருவன் தனக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறானோ இவ்வாறு வேலைக் காரர்களை பற்றி அழகாகக் கூறி உள்ளார். மேலும் விதுர நீதியில் உள்ள சமாச்சாரங்களை நாளை காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 [6:43 AM, 10/5/2023] Mohan SriRaghavendrar Kulithalai: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 27 (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) தானம் செய்வது எப்படி- விதுர நீதி தொடர்ச்சி மகாபாரதத்தில் உள்ள விதுர நீதியில் பல விஷயங்கள் சொல்லப் பட்டுள்ளன. விதுர நீதி திருதராஷ்டிரனுக்காக விதுரர் சொன்னது ஆகும். விதுரர் மகா ஞானி. அவர் தர்மத்தின் அம்சம் ஆவார். உபதேசங்கள் தர பலர் இருந்தாலும் உபதேசங்களை உபதேசிப்பவர்கள் முதலில் பின்பற்ற மாட்டார்கள். ஆனால் விதுரர் அப்படி இல்லை. அவர் பின்பற்றியதையே உபதேசித்துள்ளார். மஹாபாரத்தில் விதுரரும் சஞ்சயனும் பல உபதேசங்களை தந்துள்ளனர். அவற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு பிறகு பின்பற்ற முயற்சிக்கலாம். விதுர நீதியை பின்பற்ற நாம் சத்துவ குணம் உடையவராக இருக்க வேண்டும். தானம் எவற்றை தானமாக கொடுக்க வேண்டும்? நாம் நேர்மையாக சம்பாதித்த பொருளையே தானமாக கொடுக்க வேண்டும். நேர்மையற்ற வழியில் வந்ததை கொடுத்தால் அது தானம் ஆகாது. அந்த காலத்தில் ராஜாக்கள் தானம் கொடுக்கும் போது தானமாக கொடுக்கப் படும் பொருள் நேர்மையாக சம்பாதித்தது என்று பிரதிக்ஞை செய்தால் தான் ஞானிகள் பெற்றுக் கொள்வார்களாம். எனவே தானம் கொடுக்கும் பொருள் நேர்மையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும். அடுத்து தானம் கொடுத்தபின் அந்த பொருள் நமது இல்லை என்ற எண்ணம் வந்து விட வேண்டும். அந்த பொருள் மீது நாம் உரிமை கூறக் கூடாது. கோவிலுக்கு ஒரு விளக்கை போட்டு விட்டு அதில் இன்னார் உபயம் என்று எழுதுவது விதுரர் நீதி படி தானம் ஆகாது. நாம் எந்த நோக்கத்தில் ஒரு காரியம் செய்கிறோமோ அந்த நோக்கம்தான் நிறைவேறும். உதாரணத்திற்கு நாம் நமது பெருமைக்காக தானம் கொடுத்தால் பெருமை நிச்சயம் கிட்டும். ஆனால் தானம் செய்ததற்கான புண்ணியம் கிடைக்காது. (தான் ஒருவனுக்கு ஒரு பொருளை கொடுத்து விட்டு அதை நான்தான் கொடுத்தேன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு நரகம் தான் கிட்டும் என்று ஏற்கனவே விதுரர் கூறி உள்ளார். ) இவ்வாறு தானம் கொடுப்பது பற்றி விதுரர் தெரிவித்து உள்ளார். விதுர நீதியில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை பிறகு காண்போம். ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 [6:44 AM, 10/5/2023] Mohan SriRaghavendrar Kulithalai: ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏 விதுர நீதி 28 நிறைவு பகுதி (விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்) நமக்கு பிடித்தவர்கள் செய்வது எல்லாம் சரி ஆகாது. அது போல் பிடிக்காதவர்கள் செய்வது எல்லாம் தவறு ஆகாது. - விதுர நீதி தொடர்ச்சி. மகா பாரதத்தில் விதுரர் திருதராஷ்டிரனுக்கு, பாண்டவர்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுத்து விடும்படி பல வழிகளில் உபதேசிக்கிறார். மகாபாரதம் கதையாக சொல்லப் பட்டிருந்தாலும் அதில் அரிய பல விஷயங்கள் உள்ளன. விதுர நீதி திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கப் பட்டிருந்தாலும், அது எப்போதும் நாம் கடைப் பிடிப்பதற்காகவும் சொல்லப்பட்டது என்றே எடுத்துக் கொள்ளலாம். தனது மகன் துரியோதனன் செய்தது தவறு என்று தெரிந்தும், திருதராஷ்டிரன், துரியோதனன் செய்த அத்தனை கெட்ட காரியங்களையும் ஆமோதித்து வந்தான். துரியோதனன் தனக்கு பிடித்தவன் என்பதால் அவன் செய்தது எல்லாம் சரி என்றே எடுத்துக் கொண்டான். அதுவே துரியோதனனுக்கு அழிவு ஆகியது. மேலும் பாண்டவர்களை தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் செய்வது தவறு என்றே எடுத்துக் கொண்டான். எனவே அவ்வாறு செய்வது சரி அல்ல என்றும் திருதராஷ்டிரனை நல்ல வழிக்கு வா என்றும் விதுரர் உபதேசித்தார். சுபம் ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏 -------------------------------------------------------------------------------------------------

No comments: